என் மலர்tooltip icon

    கணினி

    சாம்சங் நிறுவனத்தின் QLED தொழில்நுட்பம் கொண்ட கேமிங் மாணிட்டர் சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பார்க்க தொலைக்காட்சி போன்று காட்சியளிக்கும் புதிய மானிட்டர் விலை, விற்பனை தேதி உள்ளிட்டவற்றை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    சாம்சங் நிறுவனத்தின் 49-இன்ச் QLED கேமிங் மாணிட்டர் சர்வேதச சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பார்க்க டிவி போன்றே காட்சியளிக்கும் CHG90 மாணிட்டர் எச்டிஆர் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இதனால் கேம்கள் உருவாக்கப்படும் தரம் குறையாமல் துல்லியமாக காட்சியளிக்கும். 

    சாம்சங் நிறுவனத்தின் QLED குவாண்டம் டாட் தொழில்நுட்பத்தினை ஜனவரி மாதம் நடைபெற்ற சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 1800ஆர் கர்வேச்சர் மற்றும் 178 டிகிரி வியூவிங் ஆங்கிள் கொண்டுள்ளதால் சிறிய மாணிட்டர்களை ஒருங்கிணைக்கும் போது கிடைக்கும் தரம் கிடைக்கும்.

    அதிக தரமுள்ள கேம்களை விளையாட ஏதுவாக புதய மாணிட்டர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக சாம்சங் தெரிவித்துள்ளது. இதன் விலை 1499 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.96,520 விலையில் முன்பதிவு செய்யப்படுகிறது. 32 இன்ச் மற்றும் 27 இன்ச் மாணிட்டர்கள் முறையே 699 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.45,002 மற்றும் 599 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.38,569 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
    தாய்வானை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான அசுஸ் சர்வதேச சந்தையில் புதிய க்ரோம்புக் பிளிப் சி213 எனும் லேப்டாப் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. விலை மற்றும் விற்பனை தேதி அறிவிக்கப்படாத நிலையில் இதன் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி: 

    தாய்வானை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான அசுஸ் புதிய லேப்டாப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. க்ரோம்புக் ப்ளிப் சி213 என அழைக்கப்படும் புதிய சாதனத்தில் 360 ஹின்ஜ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் லேப்டாப் திரை இரண்டாக மடித்து வைத்தும் பயன்படுத்த முடியும். 

    கூகுளின் க்ரோம் இயங்குதளம் கொண்டு இயங்கும் க்ரோம்புக்கில் கூகுள் செயலிகளான ஜி சூட், கூகுள் கிளாஸ்ரூம் மற்றும் கூகுள் கிளவுட் உள்ளிட்டவை ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளன. தவறுதலாக கீழே விழுந்தாலும் அதிக சேதாரம் ஏற்படாத வகையில் ரப்பர் பம்ப்பர் வழங்கப்பட்டுள்ளது. 

    புதிய அசுஸ் லேப்டாப் 1.2 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்தாலும் பழுதாகாது என்றும் இதில் வழங்கப்பட்டுள்ள 360 டிகிரி மெட்டல் ஹின்ஜ் சுமார் 40,000 முறை லேப்டாப்பை திறந்து மூடலாம் என அறிவித்துள்ளது. இதேபோல் லேப்டாப் கீபோர்டில் நீர் சிந்தினால் எதுவும் ஆகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    11.6 இன்ச் டச் ஸ்கிரீன் கொண்டுள்ள அசுஸ் க்ரோம்புக் ப்ளிப் சி213 இரண்டு மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு மாடலில் கார்னிங் கொரில்லா கிளாஸ் கொண்டுள்ளது, மற்றொரு மாடல் ஸ்டைலஸ் வசதி கொண்டுள்ளது. இத்துடன் 5 எம்பி பிரைமரி கேமரா மற்றும் வீடியோ கால்களுக்கு என எச்டி தரம் கொண்ட முன் பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது. 46 வாட் திறன் கொண்ட பேட்டரி கொண்டுள்ள அசுஸ் க்ரோம்புக் ப்ளிப் சி213 சுமார் 12 மணி நேரத்திற்கு பேட்டரி பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த வாரம் அசுஸ் நிறுவனத்தின் விவோபுக் மேக்ஸ் X541 லேப்டாப் ரூ.31,990 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஏழாம் தலைமுரை இன்டெல் கோர் i3 பிராசஸர், 4 ஜிபி ரேம், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டது. புதிய லேப்டாப்பில் கேமிங் கிரேடு கொண்ட கீபோர்டு வழங்கப்பட்டுள்ளது. 
    ஆப்பிள் சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் அறிமுகம் செய்யப்பட்ட 10.5 இன்ச் மற்றும் 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ மாடல்களுக்கான இந்திய விலை ஆப்பிள் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    அமெரிக்காவின் சான் ஜோஸ் நகரில் நடைபெற்ற சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் ஆப்பிள் நிறுவனத்தின் 10.5 இன்ச் ஐபேட் ப்ரோ மற்றும் 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்நிலையில் புதிய ஆப்பிள் சாதனங்களுக்கான இந்திய விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இதற்கான அறிவிப்பு ஆப்பிள் இணையத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய 10.5 இன்ச் 64 ஜிபி வை-பை ஐபேட் ப்ரோ மாடல்களின் விலை ரூ.52,900 முதல் துவங்குகிறது. அதிகப்டசமாக 12.9 இன்ச் ஆப்பிள் ஐபேட் 512ஜிபி, வை-பை+ செல்லுலார் மாடல் ரூ.1,00,900 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    புதிய ஐபேட் ப்ரோ மாடல்களில் ரெட்டினா டிஸ்ப்ளே, ஆப்பிளின் A10X ஃபியூஷன் சிப்செட் மூலம் இயங்குகிறது. இவை அதிவேக சிபியு திறன் கொண்டிருப்பதோடு, 40% வேகமான ஜிபியு திறன் கொண்டுள்ளது.  



    ஆப்பிள் ஐபேட் ப்ரோ 10.5 இன்ச் சிறப்பம்சங்கள்:

    * 10.5 இன்ச் 2224x1668 பிக்சல் ட்ரூ டோன் ரெட்டினா டிஸ்ப்ளே
    * A10X ஃபியூஷன் சிப்செட் M10 மோஷன் கோபிராசஸர் 
    * 64 ஜிபி / 256 ஜிபி / 512 ஜிபி மாடல்கள் 
    * ஐ.ஒ.எஸ் 10, புதிய ஐ.ஒ.எஸ் 11 அப்கிரேடு செய்யும் வசதி
    * டச் ஐடி கைரேகை ஸ்கேனர் 
    * 12 எம்பி ஐசைட் கேமரா, ட்ரூ டோன் பிளாஷ், 
    * 4K வீடியோ பதிவு செய்யும் வசதி
    * 7 எம்பி எச்டி செல்ஃபி கேமரா, 1080 பிக்சல் வீடியோ பதிவு செய்யும் வசதி
    * 4ஜி எல்டிஇ, வை-பை, ப்ளூடூத், ஜிபிஎஸ்
    * 30.4‐ வாட் லித்தியம் பாலிமர் பேட்டரி

    புதிய 10.5 இன்ச் ஐபேட் ப்ரோ 2017 இந்திய விலை:

    10.5 இன்ச் ஐபேட் ப்ரோ 64 ஜிபி வை-பை மாடல் ரூ.52,900
    10.5 இன்ச் ஐபேட் ப்ரோ 256 ஜிபி வை-பை மாடல் ரூ.60,900
    10.5 இன்ச் ஐபேட் ப்ரோ 512 ஜிபி வை-பை மாடல் ரூ.76,900
    10.5 இன்ச் ஐபேட் ப்ரோ 64 ஜிபி வை-பை + செல்லுலார் மாடல் ரூ.63,900
    10.5 இன்ச் ஐபேட் ப்ரோ 256 ஜிபி வை-பை + செல்லுலார் மாடல் ரூ.71,900
    10.5 இன்ச் ஐபேட் ப்ரோ 512 ஜிபி வை-பை + செல்லுலார் மாடல் ரூ.87,900



    ஆப்பிள் ஐபேட் ப்ரோ 12.9 இன்ச் சிறப்பம்சங்கள்:

    * 12.9 இன்ச் 2732x2048 பிக்சல் ட்ரூ டோன் ரெட்டினா டிஸ்ப்ளே
    * A10X ஃபியூஷன் சிப்செட் M10 மோஷன் கோபிராசஸர்
    * 64 ஜிபி / 256 ஜிபி / 512 ஜிபி மாடல்கள் 
    * ஐ.ஒ.எஸ் 11
    * டச் ஐடி கைரேகை ஸ்கேனர்
    * 12 எம்பி ஐசைட் கேமரா, ட்ரூ டோன் பிளாஷ், 
    * 4K வீடியோ பதிவு செய்யும் வசதி
    * 7 எம்பி எச்டி செல்ஃபி கேமரா, 1080 பிக்சல் வீடியோ பதிவு செய்யும் வசதி
    * 4ஜி எல்டிஇ, வை-பை, ப்ளூடூத், ஜிபிஎஸ்
    * 41 வாட் லித்தியம் பாலிமர் பேட்டரி

    புதிய 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ இந்திய விலை:

    12.9 இன்ச் ஐபேட் ப்ரோ 64 ஜிபி வை-பை மாடல் ரூ.65,900
    12.9 இன்ச் ஐபேட் ப்ரோ 256 ஜிபி வை-பை மாடல் ரூ.73,900
    12.9 இன்ச் ஐபேட் ப்ரோ 512 ஜிபி வை-பை மாடல் ரூ.89,900
    12.9 இன்ச் ஐபேட் ப்ரோ 64 ஜிபி வை-பை + செல்லுலார் மாடல் ரூ.76,900
    12.9 இன்ச் ஐபேட் ப்ரோ 256 ஜிபி வை-பை + செல்லுலார் மாடல் ரூ.84,900
    12.9 இன்ச் ஐபேட் ப்ரோ 512 ஜிபி வை-பை + செல்லுலார் மாடல் ரூ.1.00,900

    10.5 இன்ச் ஐபேட் ப்ரோ ஸ்பேஸ் கிரே, ரோஸ் கோல்டு, கோல்டு மற்றும் சில்வர் நிறங்கழளிலும், 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ ஸ்பேஸ் கிரே, கோல்டு மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் புதிய ஐபேட் ப்ரோ மாடல்களின் விற்பனை ஜூன் மாத இறுதியில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    ஆப்பிள் சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டின் முதல் நாளில் ஆப்பிள் சிஇஒ டிம் குக் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐ.ஒ.எஸ் 11 பதிப்பும் இதில் இடம்பெற்றிருந்தது. அதன்படி புதிய ஒ.எஸ்-இன் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    சான் ஜோஸ்:
      
    ஆப்பிள் சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டின் (WWDC) முதல் நாளில் ஆப்பிள் இயங்குதளங்களின் புதிய பதிப்பு, ஐபேட், மேக் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களின் அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. அந்த வகையில் ஆப்பிள் அறிவிப்புகளில் ஐ.ஒ.எஸ். 11 முக்கிய இடம் பிடித்துள்ளது. 

    ஐ.ஒ.எஸ். 11 பீட்டா பதிப்பு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில், இதில் வழங்கப்பட்டுள்ள சில முக்கிய அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ஸ்மார்ட் சிரி:

    ஆப்பிள் சாதனங்களில் பிரபலமான சிரி வாய்ஸ் அசிஸ்டண்ட் புதிய ஐ.ஒ.எ.ஸ். 11-இல் மேலும் இயற்கையாக ஒலிக்கும் குரல் மற்றும் மேம்படுத்தப்பட்ட புதிய இன்டர்ஃபேஸ் கொண்டுள்ளது. இத்துடன் மொழிமாற்றம் செய்யும் வசதிகளையும் சிரி வழங்குகிறது. இத்துடன் மற்ற நிறுவனங்களின் செயலியை இயக்கும் வசதிகள் மற்றும் திரையில் இருக்கும் எழுத்துக்களையும் சிரி வாசிக்கும். 

    முதற்கட்டமாக சைனீஸ், பிரென்ச், ஜெர்மன், இத்தாலியன் மற்றும் ஸ்பெயின் மொழிகளை மொழிமாற்றம் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் பல்வேறு இதர மொழிகளுக்கான வசதியும் வழங்கப்படும். 



    ஐமெசேஜ்:

    ஐ.ஒ.எஸ் 11 பதிப்பில் ஐகிளவுட் சின்கிங் வசதி வழங்கப்பட்டுள்ளதால், உங்களது ஐடி கொண்டு மற்ற சாதனங்களில் சைன்-இன் செய்யும் போது நீங்கள் அனுப்பிய குறுந்தகவல்கள் சைன்-இன் செய்த சாதனத்திலும் இருக்கும். ஐ.ஒ.எஸ் 10-இல் அறிமுகம் செய்யப்பட்ட ஐமெசேஜஸ் இம்முறை அழகாய் வடிவமைக்கப்பட்டுள்ளது.



    ஐ.ஒ.எஸ். 11 ஆப்பிள் பே:

    ஆப்பிள் பே சேவையை கொண்டு ஐமெசேஜ் மூலம் மற்றவர்களுக்கு பணம் அனுப்பலாம். இதற்கென ஆப்பிள் பே கேஷ் கார்டு ஒன்றும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனினும் இந்த வசதி முதற்கட்டமாக அமெரிக்காவில் மட்டும் வழங்கப்படும் என்றும் அதன்பின் மற்ற சந்தைகளில் வெளியிடப்படுவது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்.



    ஆப்பிள் மேப்ஸ்:

    ஆப்பிளின் சொந்த மேப்ஸ் செயலி ஐ.ஒ.எஸ் 11 பதிப்பில் பிரபலமான விமான நிலையங்கள் மற்றும் மால்களினுள் சென்று வரவும் வழி காட்டும் வசதி வழங்கப்பட்டுள்ளது. வழி காட்டுவதுடன் எவ்வளவு வேகத்தில் பயணிக்க வேண்டும், எந்த வழித்தடத்தில் பயணிக்க வேண்டும் என்பது போன்ற தகவல்களை வழங்கும். இத்துடன் நீங்கள் வாகனத்தில் செல்வதை ஐபோன் தானாக அறிந்து கொண்டு திரையை ஆஃப் செய்து, நோட்டிபிகேஷன்களையும் அமைதிப்படுத்தும்.  



    போர்ட்ரெயிட் மோட்:

    புதிய ஐ.ஒ.எஸ் 11-இல் அழகிய புகைப்படங்களை எடுக்க உதவும் போர்ட்ரெயிட் மோடில் புதிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. லைவ் போட்டோக்களுக்கு புதிய லூப் மற்றும் லாங் எக்ஸ்போஷர் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இவை புகைப்படங்களை நேர்த்தியாக பிரதிபலிக்க உறுதுணையாக இருக்கும். மேலும் இதில் வழங்கப்பட்டுள்ள புதிய போட்டோ ஃபார்மேட்கள் புகைப்படங்களின் தரத்தை குறைக்காமல் அதன் மெமரி அளவை குறைக்கும்.  



    ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி:

    ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி வசதியை வழங்க ஆப்பிள் புதிய ஏ.ஆர்.கிட் ஒன்றை டெவலப்பர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. இதனால் டெவலப்பர்கள் பில்ட்-இன் கேமரா, பிராசஸர் மற்றும் மோஷன் சென்சார்களை இயக்க வழி செய்து சிறப்பான ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி அனுபவங்களை வழங்கும். ஆப்பிளின் புதிய ஏ.ஆர்.கிட் டெவலப்பர்களை அதிசிறந்த விர்ச்சுவல் ரியாலிட்டி தரவுகளை தயாரிக்க வழி செய்யும்.
    ஹூவாய் நிறுவனத்தின் மீடியாபேட் எம்3 லைட் 8.0 டேப்லெட் சாதனம் சீன சந்தையில் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் இதன் விலை மற்றும் விற்பனை தேதி குறித்து எவ்வித தகவலும் இல்லை.
    பீஜிங்:

    ஹூவாய் மீடியாபேட் எம்3 லைட் 10 சாதனத்தைத் தொடர்ந்து மீடியாபேட் எம்3 லைட் 8.0 டேப்லெட் சாதனத்தை ஹூவாய் நிறுவனம் வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக சீனாவில் வெளியிடப்பட்டுள்ள புதிய டேப்லெட் மற்ற சந்தைகளில் வெளியிடப்படுவது குறித்து எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.  

    முன்பு வெளியிடப்பட்ட மீடியாபேட் எம்3 லைட் 10 போன்றே புதிய மீடியாபேட் எம்3 லைட் 8.0 டேப்லெட்டிலும் ஹார்மன் கார்டன் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளது. புதிய டேப்லெட்டில் எல்டிஇ மற்றும் வைபை வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.  

    சிறப்பம்சங்களை பொருத்த வரை மீடியாபேட் எம்3 லைட் 8.0 டேப்லெட்டில் 8.0 இன்ச் ஃபுல் எச்டி 1920x1200 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே, 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 435 பிராசஸர், மற்றும் இரண்டு வித ரேம் பதிப்புகளை கொண்டிருக்கும். 

    அதன்படி 3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. மெமரியை நீட்டிப்பது குறித்து எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. ஹூவாய் மீடியாபேட் எம்3 லைட் 8.0 டேப்லெட் 4800 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. 

    புகைப்படங்களை எடுக்க 8 எம்பி பிரைமரி மற்றும் செல்ஃபி கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் சார்ந்த EMUI 5.1 மற்றும் ஜெஸ்ட்யூர் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.
    அசுஸ் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட க்ரோம்புக் ப்ளிப் சாதனம் சமீபத்தில் நடைபெற்ற கம்ப்யூடெக்ஸ் 2017 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2015-இல் வெளியிடப்பட்ட க்ரோம்புக் ப்ளிப் மேம்படுத்தப்பட்ட மாடலின் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    தைபே:

    அசுஸ் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட க்ரோம்புக் ப்ளிப் சாதனம் தைபேவில் நடைபெற்ற கம்ப்யூடெக்ஸ் 2017 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக 2015-இல் அறிமுகம் செய்யப்பட்ட க்ரோம்புக் ப்ளிப் லேப்டாப்பில் இம்முறை யுஎஸ்பி டைப்-சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது. 

    புதிய மாடல் அசுஸ் க்ரோம்புக் ப்ளிப் சி101 என அழைக்கப்படுகிறது, 10.0 இன்ச் டிஸ்ப்ளே ARM-சார்ந்த ராக்சிப் 3288-சி பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு யுஎஸ்பி டைப்-சி போர்ட், மைக்ரோ எஸ்டி ஸ்லாட் கொண்டுள்ள க்ரோம்புக் சாதனத்தில் ஹெட்போன் ஜாக் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய க்ரோம்புக் சாதனங்களில் கூகுள் பிளே ஸ்டோர் வசதியும் வழங்கப்படும் என கூறப்படும் நிலையில், இதன் விலை மற்றும் விற்பனை சார்ந்து எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. முன்னதாக வெளியான க்ரோம்புக் போன்றே புதிய மாடல்களும் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் சர்வதேச டெலப்பர் கான்பெரன்ஸ் அடுத்த வாரம் துவங்குகிறது. இந்நிகழ்வில் ஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக் ப்ரோ, மலிவு விலை மேக்புக் சாதனங்கள் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    சான்பிரான்சிஸ்கோ:

    ஆப்பிள் நிறுவனத்தின் சர்வதேச டெவலப்பர் கான்பெரன்ஸ் நிகழ்வு (WWDC) அடுத்த வாரம் துவங்குகிறது. புதிய மென்பொருள் மற்றும் புதிய செயலிகளை ஆப்பிள் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மென்பொருள் மட்டுமின்றி வன்பொருள் சார்ந்த சாதனங்களையும் ஆப்பிள் நிறுவனம் வெளியிட இருப்பதாக கூறப்படுகின்றது.

    ஜூன் 5-ந்தேதி நடைபெற இருக்கும் சர்வதேச டெவலப்பர் கான்பெரன்ஸ் நிகழ்ச்சியில் ஆப்பிள் நிறுவனம் புதிய மேக்புக் மற்றும் மேக்புக் ப்ரோ சாதனங்களை வெளியிடும் என கூறப்படுகிறது. இத்துடன் ஆப்பிள் மேக் ஒ.எஸ். மற்றும் ஐ.ஒ.எஸ். இயங்குதளங்களை அறிமுகம் செய்யவுள்ளது. 

    ஆப்பிள் நிறுவனம் 15-இன்ச் மேக்புக் ப்ரோ ஒன்றையும், புதிய லேப்டாப் பார்க்க பழைய மாடலை போன்றே காட்சியளிக்கும் என்றும், இதில் கேபி லேக் பிராசஸர் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஆப்பிள் வெளியிட்ட 12 இன்ச் மேக்புக் சாதனத்தின் மேம்படுத்தப்பட்ட மாடலை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 



    இத்துடன் புதிய மேக்புக் ஏர் சாதனத்தை வெளியிட உள்ளதாகவும் புதிய லேப்டாப்பில் ரெட்டினா டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் மேக் மற்றும் ஐபேட் சாதனங்களுக்கு கடந்த சில காலாண்டுகளில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் காரணமாக அந்நிறுவனம் மேக்புக் சாதனங்களில் அதிக கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்தியாவில் மேக்புக் ஏர் லேப்டாப்களின் துவக்க விலை ரூ.55,000 முதல் துவங்குகிறது. இந்நிலையில் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள ஆப்பிள் லேப்டாப்பின் புதிய மாடல் விலை சரியாக நிர்ணயம் செய்யப்படும் பட்சத்தில் நல்ல வரவேற்பை பெறும் என்றே ஆப்பிள் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
    ஹூவாய் நிறுவனம் தனது டேப்லெட் சாதனங்களில் புதிய மாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது. மீடியாபேட் எம்3 லைட் 10 என அழைக்கப்படும் புதிய டேப்லெட் சாதனத்தின் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ஹூவாய் நிறுனவம் மீடியாபேட் எம்3 லைட் 10 டேப்லெட் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. ஹார்மன் கார்டன் ஆடியோ லேப் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ள புதிய டேப்லெட் சாதனத்தில் மேம்படுத்தப்பட்ட புதிய ஆடியோ அனுபவம் கிடைக்கும் என ஹூவாய் தெரிவித்துள்ளது.  

    இத்துடன் SWS 3.0 சவுண்டு அமைப்பு கொண்ட குவாட்-ஸ்பீக்கர்கள், EMUI 5.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. மென்பொருள் மேம்படுத்தல்களை பொருத்த வரை சிறப்பான மல்டி டாஸ்கிங் அனுபவத்தை வழங்கும் ஸ்ப்லிட்-ஸ்கிரீன் வசதி கொண்டுள்ளது. 

    மற்ற சிறப்பம்சங்களை பொருத்த வரை மீடயாபேட் எம்3 லைட் 10 டேப்லெட்டில் 10.1 இன்ச் ஃபுல் எச்டி 1920x1200 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 435 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. 



    மூன்று வித ரேம் மாடல்களில் கிடைக்கும் மீடியாபேட் எம்3 லைட் 10, 3ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரி, 3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி, 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. 

    8 எம்பி பிரைமரி மற்றும் செல்ஃபி கேமராக்களை கொண்டுள்ள மீடியாபேட் எம்3 லைட் 10 டேப்லெட் 6660 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் மூன்று நிறங்களில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதன் விலை மற்றும் விற்பனை தேதி குறித்த தகவல்களை ஹூவாய் வழங்கவில்லை.
    சாம்சங் நிறுவனத்தின் நோட்புக் 9 சாதனம் கம்ப்யூடெக்ஸ் 2017 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் எஸ் பென் சாதனமும் வழங்கப்படுகிறது. சாம்சங் நோட்புக் 9 ப்ரோ லேப்டாப்பில் வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி: 

    சாம்சங் நிறுவனத்தின் எஸ் பென் ஸ்டைலஸ் ஃபேப்லெட் மற்றும் டேப்லெட் சாதனங்களுக்கு மட்டும் வாடிக்கையாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், முதன் முறையாக லேப்டாப்புடன் எஸ் பென் ஸ்டைலஸ் வழங்கப்பட்டுள்ளது. 

    தற்சமயம் நடைபெற்று வரும் கம்ப்யூடெக்ஸ் 2017 விழாவில் சாம்சங் நிறுவனம் நோட்புக் 9 இரண்டு லேப்டாப்களை அறிமுகம் செய்துள்ளது. இவற்றின் விலை, விற்பனை குறித்து சாம்சங் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

    13.3 இன்ச் மற்றும் 15 இன்ச் என இரண்டு வித டிஸ்ப்ளே அளவுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நோட்புக் 9 ப்ரோ என அழைக்கப்படுகிறது. சாம்சங் நோட்புக் 9 ப்ரோ விண்டோஸ் 10 இயங்குதளம் மற்றும் இன்டெல் கோர் i7 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. 



    இதுதவிர இரு லேப்டாப்களிலும் ஃபுல் எச்டி 1080x1920 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, எச்டி கிராபிக்ஸ் 620 சிப் வழங்கப்பட்டுள்ளது. பெரிய திரை கொண்ட மாடலில் ஏ.எம்.டி ரேடியான் RX 540 கிராபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. 

    13.3 இன்ச் மாடல் நோட்புக் 9 ப்ரோ, 8 ஜிபி ரேம், மற்றும் 15 இன்ச் மாடலில் 16 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. இரு மாடல்களிலும் 256 ஜிபி எஸ்.எஸ்.டி. ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. சாம்சங் நோட்புக் 9 ப்ரோ, புதிய எஸ் பென் ஸ்டைலஸ் 0.7 எம்எம் டிப் கொண்டு சுமார் 4000-க்கும் அதிகமான அழுத்தங்களை உணரும் திறன் கொண்டது என சாம்சங் தெரிவித்துள்ளது. 

    இத்துடன் எஸ் பென் சாதனத்தில் வழங்கப்பட்டள்ள ஏர் கமாண்ட் வசதியின் மூலம் குறிப்பு எடுத்தல், தரவுகளை எடிட் செய்வது மற்றும் வரையவும் முடியும். இத்துடன் புதிய எஸ் பென் விண்டோஸ் இன்க் வொர்க்-ஸ்பேஸ்-உடன் இயக்க முடியும். 

    எந்நேரமும் ஆன் செய்யப்பட்டிருக்கும் பென் ஸ்டைலஸ் சாதனத்தை சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது என சாம்சங் தெரிவித்துள்ளது. சாம்சங் நோட்புக் 9 ப்ரோ இரண்டு யுஎஸ்பி 3.0 போர்ட், ஒரு யுஎஸ்பி டைப்-சி போர்ட், எச்.டி.எம்.ஐ. போர்ட் மற்றும் மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
    அசுஸ் நிறுவனம் கம்ப்யூடெக்ஸ் 2017 விழாவில் ஐந்து லேப்டாப்கள், மானிட்டர் மற்றும் டூ-இன்-ஒன் கணினிகளை அறிமுகம் செய்துள்ளது. இவை குறித்த விரிவான தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி: 

    அசுஸ் நிறுவனம் கம்ப்யூடெக்ஸ் 2017 விழாவில் புதிய லேப்டாப், கணினி மற்றும் மானிட்டர் சாதனங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்புக் பிளிப் S (UX370), சென்புக் ப்ரோ (UX550), சென்புக் 3 டீலக்ஸ் (UX490), விவோபுக் ப்ரோ 15 (N580), விவோபுக் S15 (S510), டிசைனோ MZ27AQ மானிட்டர், விவோ V241 AiO மற்றும் சென் ZN242 AiO உள்ளிட்ட சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. 

    அந்த வகையில் 10.9 எம்.எம். தடிமனாக இருக்கும் சென்புக் பிளிப் S (UX370) அந்நிறுவனத்தின் மெல்லிய லேப்டாப் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் 10 இயங்குதளம், ஆழாம் தலைமுறை இன்டெல் கோர் i7-7500U சிபியு மற்றும் 1000 ஜிபி எஸ்.எஸ்.டி ஸ்டோரேஜ் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4K மல்டி-டச் நானோஎட்ஜ் டிஸ்ப்ளே, ஸ்டைலஸ் வசதி கொண்டுள்ளதோடு $1099 இந்திய மதிப்பில் ரூ.71,053 என்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 



    அசுஸ் இதுவரை வெளியிட்டுள்ள சென்புக் சாதனங்களில் மிகவும் மெல்லிய, எடை குறைவான மற்றும் சக்திவாய்ந்த சாதனமாக சென்புக் ப்ரோ (UX550) உள்ளது. 15.6 இன்ச் 4K UHD நானோஎட்ஜ் டிஸ்ப்ளே, ஏழாம் தலைமுறை இன்டெல் கோர் i7 குவாட் கோர் சிபியு கொண்டுள்ளது. 16 ஜிபி ரேம் மற்றும் 1000 ஜிபி எஸ்எஸ்டி வழங்கப்பட்டுள்ளது. இதன் விலை $1299 அதாவது இந்திய மதிப்பில் ரூ.83,983 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    அசுஸ் சென்புக் 3 டீலக்ஸ் (UX490) 14-இன்ச் நானோஎட்ஜ் டிஸ்ப்ளே, இன்டெல் கோர் i7 சிப்செட், 16 ஜிபி ரேம், 1000 ஜிபி எஸ்எஸ்டி வழங்கப்பட்டுள்ளது. விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்டுள்ள சென்புக் 3 டீலக்ஸ் விலை $1199 அதாவது இந்திய மதிப்பில் ரூ.77,518 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 



    விவோபுக் ப்ரோ 15 N580 லேப்டாப்பில் 15.6-இன்ச் 4K UHD டிஸ்ப்ளே இன்டெல் கோர் i7-7700HQ சிபியு, 16 ஜிபி ரேம், 2000 ஜிபி ஹார்டு டிரைவ் கொண்டுள்ளது. இதன் விலை $799 அதாவது இந்திய மதிப்பில் ரூ.51,657 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    விவோபுக் S15 (S510), 15.6 இன்ச் திரை, நானோஎட்ஜ் டிஸ்ப்ளே, இன்டெல் கோர் i7-7500U பிராஸர், 16 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. லேப்டாப்கள் மட்டுமின்றி அசுஸ் நிறுவனத்தின் டிசைனோ MZ27AQ மானிட்டர் ஒன்றும், இரண்டு ஆல்-இன்-ஒன் கணினிகள் வெளியிடப்பட்டுள்ளது. 

    விவோ V241 டெஸ்க்டாப்பில் 23.8 இன்ச் ஃபுல் எச்டி நானோஎட்ஜ் மல்டி டச் டிஸ்ப்ளே, விண்டோஸ் 10 இயங்குதளம், இன்டெல் கோர் i5 சிபியு வழங்கப்பட்டுள்ளது. சென் AiO ZN242 உயர் ரக கணினியில் 23.8 இன்ச் நானோ எட்ஜ் டிஸ்ப்ளே, இன்டெல் கோர் i7-7700HQ குவாட்கோர் பிராசஸர், 32ஜிபி ரேம்,  512 ஜிபி எஸ்.எஸ்.டி வழங்கப்பட்டுள்ளது.
    மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சர்பேஸ் ப்ரோ லேப்டாப் வெளியிடப்பட்டது. ஷாங்காய் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய சர்பேஸ் ப்ரோவில் வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சர்பேஸ் ப்ரோ 2 இன் 1 லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த வாரம் இவற்றின் முன்பதிவு துவங்கவுள்ள நிலையில், விலை 799 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.52,000 முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    சிறப்பம்சங்களை பொருத்த வரை சர்பேஸ் ப்ரோ லேப்டாப்பில் 12.3 இன்ச் பிக்சல்சென்ஸ் டிஸ்ப்ளே, விண்டோஸ் 10 ப்ரோ இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4ஜி எல்டிஇ கனெக்டிவிட்டி, மைக்ரோ சிம் ஸ்லாட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. எனினும் எல்டிஇ மாடல்களின் விலையை மைக்ரோசாப்ட் நிறுவனம் இதுவரை வெளியிடப்படவில்லை. 



    புதிய சர்பேஸ் ப்ரோவுடன் அந்நிறுவனத்தின் அடுத்த தலைமுறை சர்பேஸ் பென் சாதனமும் வெளியிடப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட அம்சங்களை கொண்டுள்ள சர்பேஸ் பென் முந்தைய மாடலை விட துல்லியமாக இருக்கும் என்றும் மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. இத்துடன் 8 எம்பி பிரைமரி ஆட்டோஃபோகஸ் கேமராவும், 5 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. 

    புதிய சர்பேஸ் ப்ரோ இன்டெல் நிறுவனத்தின் ஏழாம் தலைமுறை கேபி லேக் பிராசஸர், சர்பேஸ் டயல் உள்ளிட்ட அம்சங்களுடன் 13.5 மணி நேர பேட்டரி பேக்கப் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.



    புதிய மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ விலையை பொருத்த 799 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.52,000 முதல் துவங்குகிறது, அனைத்து அக்சசிரீகளையும் கொண்டுள்ள மாடல் 2500 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.1,63,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    புதிய சர்பேஸ் ப்ரோ லேப்டாப் மாடல்களின் விற்பனை ஜூன் 15-ந்தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 27 நாடுகளில் விற்பனை துவங்க உள்ள நிலையில், புதிய சர்பேஸ் ப்ரோ லேப்டாப்பின் இந்திய விற்பனை குறித்து மைக்ரோசாப்ட் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.
    ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஒ.எஸ். இயங்குதளத்தின் 10.3.2 பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. புதிய அப்டேட் செய்தவர்கள் மற்ற ஐபோன் வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளனர்.
    சான்பிரான்சிஸ்கோ:

    ஆப்பிள் நிறுவனம் ஐ.ஒ.எஸ். இயங்குதளத்திற்கு 10.3.2 அப்டேட் வழங்கியுள்ளது. இந்த அப்டேட் ஐபோன் 5, நான்காம் தலைமுறை ஐபேட் மற்றும், ஆறாம் தலைமுறை ஐபாட்களுக்கு இந்த அப்டேட் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் பிழைகளை மாற்றம் செய்யும். 

    ஆப்பிள் செக்யூரிட்டி பக்கத்தின் படி ஐ.ஓ.எஸ். 10.3.2 அப்டேட் சஃபாரி, AVEவீடியோ என்கோடர், கோர்ஆடியோ, ஐபுக்ஸ், ஐஓசர்ஃபேஸ், கெர்னல், நோட்டிபிகேஷன் உள்ளிட்டவற்றில் பிழைகள் சரி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   



    ஆப்பிள் ஐபோன் வைத்திருப்பவர்கள், புதிய அப்டேட்டினை டவுன்லோடு செய்ய செட்டிங்ஸ் மெனுவில் உள்ள சாப்ட்வேர் அப்டேட் பட்டனை கிளிக் செய்ய வேண்டும். அப்டேட் செய்யும் முன் உங்களது ஐபோன் தரவுகளை ஐகிளவுடில் பேக்கப் எடுத்துக் கொள்வது அவசியம் ஆகும். இத்துடன் ஐபோன் வைபை இணைப்பில் இருப்பதையும், சார்ஜ் 50 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருக்க வேண்டும்.

    புதிய அப்டேட்டினை ஐடியூன்ஸ் மூலமாகவும் இன்ஸ்டால் செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ஏற்கனவே புதிய அப்டேட்டினை இன்ஸ்டால் செய்தவர்கள், ஆப்பிள் அதிகாரப்பூர்வ தளம் மற்றும் சமூக வலைத்தளத்தில் தங்களது சாதனங்களில் பேட்டரி சீக்கிரம் பாழாகி விடுவதாக குறிப்பிட்டு வருகின்றனர். இது குறித்து வெளியாகியுள்ள தகவல்களில் புதிய அப்டேட் ஐபோன் மட்டுமின்றி ஐபேட் மற்றும் ஐபாட் டச் சாதனங்களையும் பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    ×