என் மலர்
செய்திகள்

அதிநவீன பயனுள்ள அம்சங்கள் நிறைந்த ஐ.ஒ.எஸ். 11
ஆப்பிள் சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டின் முதல் நாளில் ஆப்பிள் சிஇஒ டிம் குக் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐ.ஒ.எஸ் 11 பதிப்பும் இதில் இடம்பெற்றிருந்தது. அதன்படி புதிய ஒ.எஸ்-இன் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
சான் ஜோஸ்:
ஆப்பிள் சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டின் (WWDC) முதல் நாளில் ஆப்பிள் இயங்குதளங்களின் புதிய பதிப்பு, ஐபேட், மேக் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களின் அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. அந்த வகையில் ஆப்பிள் அறிவிப்புகளில் ஐ.ஒ.எஸ். 11 முக்கிய இடம் பிடித்துள்ளது.
ஐ.ஒ.எஸ். 11 பீட்டா பதிப்பு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில், இதில் வழங்கப்பட்டுள்ள சில முக்கிய அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஸ்மார்ட் சிரி:
ஆப்பிள் சாதனங்களில் பிரபலமான சிரி வாய்ஸ் அசிஸ்டண்ட் புதிய ஐ.ஒ.எ.ஸ். 11-இல் மேலும் இயற்கையாக ஒலிக்கும் குரல் மற்றும் மேம்படுத்தப்பட்ட புதிய இன்டர்ஃபேஸ் கொண்டுள்ளது. இத்துடன் மொழிமாற்றம் செய்யும் வசதிகளையும் சிரி வழங்குகிறது. இத்துடன் மற்ற நிறுவனங்களின் செயலியை இயக்கும் வசதிகள் மற்றும் திரையில் இருக்கும் எழுத்துக்களையும் சிரி வாசிக்கும்.
முதற்கட்டமாக சைனீஸ், பிரென்ச், ஜெர்மன், இத்தாலியன் மற்றும் ஸ்பெயின் மொழிகளை மொழிமாற்றம் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் பல்வேறு இதர மொழிகளுக்கான வசதியும் வழங்கப்படும்.

ஐமெசேஜ்:
ஐ.ஒ.எஸ் 11 பதிப்பில் ஐகிளவுட் சின்கிங் வசதி வழங்கப்பட்டுள்ளதால், உங்களது ஐடி கொண்டு மற்ற சாதனங்களில் சைன்-இன் செய்யும் போது நீங்கள் அனுப்பிய குறுந்தகவல்கள் சைன்-இன் செய்த சாதனத்திலும் இருக்கும். ஐ.ஒ.எஸ் 10-இல் அறிமுகம் செய்யப்பட்ட ஐமெசேஜஸ் இம்முறை அழகாய் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஐ.ஒ.எஸ். 11 ஆப்பிள் பே:
ஆப்பிள் பே சேவையை கொண்டு ஐமெசேஜ் மூலம் மற்றவர்களுக்கு பணம் அனுப்பலாம். இதற்கென ஆப்பிள் பே கேஷ் கார்டு ஒன்றும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனினும் இந்த வசதி முதற்கட்டமாக அமெரிக்காவில் மட்டும் வழங்கப்படும் என்றும் அதன்பின் மற்ற சந்தைகளில் வெளியிடப்படுவது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்.

ஆப்பிள் மேப்ஸ்:
ஆப்பிளின் சொந்த மேப்ஸ் செயலி ஐ.ஒ.எஸ் 11 பதிப்பில் பிரபலமான விமான நிலையங்கள் மற்றும் மால்களினுள் சென்று வரவும் வழி காட்டும் வசதி வழங்கப்பட்டுள்ளது. வழி காட்டுவதுடன் எவ்வளவு வேகத்தில் பயணிக்க வேண்டும், எந்த வழித்தடத்தில் பயணிக்க வேண்டும் என்பது போன்ற தகவல்களை வழங்கும். இத்துடன் நீங்கள் வாகனத்தில் செல்வதை ஐபோன் தானாக அறிந்து கொண்டு திரையை ஆஃப் செய்து, நோட்டிபிகேஷன்களையும் அமைதிப்படுத்தும்.

போர்ட்ரெயிட் மோட்:
புதிய ஐ.ஒ.எஸ் 11-இல் அழகிய புகைப்படங்களை எடுக்க உதவும் போர்ட்ரெயிட் மோடில் புதிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. லைவ் போட்டோக்களுக்கு புதிய லூப் மற்றும் லாங் எக்ஸ்போஷர் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இவை புகைப்படங்களை நேர்த்தியாக பிரதிபலிக்க உறுதுணையாக இருக்கும். மேலும் இதில் வழங்கப்பட்டுள்ள புதிய போட்டோ ஃபார்மேட்கள் புகைப்படங்களின் தரத்தை குறைக்காமல் அதன் மெமரி அளவை குறைக்கும்.

ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி:
ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி வசதியை வழங்க ஆப்பிள் புதிய ஏ.ஆர்.கிட் ஒன்றை டெவலப்பர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. இதனால் டெவலப்பர்கள் பில்ட்-இன் கேமரா, பிராசஸர் மற்றும் மோஷன் சென்சார்களை இயக்க வழி செய்து சிறப்பான ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி அனுபவங்களை வழங்கும். ஆப்பிளின் புதிய ஏ.ஆர்.கிட் டெவலப்பர்களை அதிசிறந்த விர்ச்சுவல் ரியாலிட்டி தரவுகளை தயாரிக்க வழி செய்யும்.
Next Story






