என் மலர்
கணினி
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய சர்பேஸ் ப்ரோ டேப்லெட் சாதனம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அதன் புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது.
புதுடெல்லி:
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வன்பொருள் சார்ந்த அறிமுக விழா மே 23-ந்தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய சர்ஃபேஸ் ப்ரோ டேப்லெட்டின் புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது. புதிய சாதனத்தில் அதிகப்படியான மேம்படுத்தல்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்சமயம் வெளியாகியுள்ள புகைப்படங்கள் ஏற்கனவே வெளியிடப்பட்ட சர்ஃபேஸ் ப்ரோ 4 போன்றே காட்சியளிக்கிறது. முன்னதாக வெளியான தகவல்களை கொண்டு வடிவமைக்கப்பட்டதை போன்றே புதிய சர்ஃபேஸ் ப்ரோ புகைப்படமும் அமைந்துள்ளது.

புதிய மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் ப்ரோ டேப்லெட்டில் 7th-gen கேபி லேக் பிராசஸர், மேம்படுத்தப்பட்ட ரேம் மற்றும் இன்டெர்னல் மெமரி அம்சங்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. சர்ஃபேஸ் ப்ரோ 5 என்ற சாதனம் வெளியிடப்படாது என சர்ஃபேஸ் பிரான்டினை உருவாக்கிய பனோஸ் பனேய் ஏற்கதனவே தெரிவித்தார்.
மேலும் ஏற்கனவே வெளியிடப்பட்ட சாதனம் வன்பொருள் ரீதியாக மேம்படுத்தப்பட்டு மீண்டும் வெளியிடப்படும் என அவர் தெரிவித்தார். இத்துடன் புதிய டேப்லெட் சாதனம் நான்கு நிறங்களில் வெளியிடப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சர்ஃபேஸ் டேப்லெட் சாதனம் விண்டோஸ் 10 எஸ் இயங்குதளம் மற்றும் விண்டோஸ் செயலிகளை மட்டும் இயக்கும் வசதி வழங்கப்படும்.
டெல் நிறுவனத்தின் புதிய கேமிங் லேப்டாப்கள் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. ஏலியன்வேர் 15 மற்றும் ஏலியன்வேர் 17 என பெயரிடப்பட்டுள்ள புதிய லேப்டாப்களின் முழு தகவல்களை இங்கு பார்ப்போம்.
புதுடெல்லி:
டெல் நிறுவனத்தின் கேமிங் கணினி மற்றும் லேப்டாப் சாதனங்கள் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. ஏலியன்வேர் 15, ஏலியன்வேர் 17 லேப்டாப் மற்றும் ஏலியன்வேர் ஔரா டெஸ்க்டாப், இன்ஸ்பிரான் 15 5000 கேமிங், இன்ஸ்பிரான் 15 7000 கேமிங் என இரண்டு டெஸ்க்டாப் மற்றும் இரண்டு லேப்டாப்கள் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.
ஏலியன்வேர் 15 சிறப்பம்சங்கள்:
ஏலியன்வேர் 15 லேப்டாப்பில் விண்டோஸ் 10 64-பிட் இயங்குதளம், 15.6 இன்ச் 1920x1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே, இன்டெல் கோர் i7-7700HQ பிராசஸர், இன்டெல் எச்டி கிராஃபிக்ஸ் 530, என்விடியா ஜீஃபோர்ஸ் GTX 1060, 6ஜிபி GDDR5 வீடியோ மெமரி, 8ஜிபி DDR4 2133MHz ரேம், 1000 ஜிபி ஹார்டு டிரைவ் 7,200RPM மற்றும் 68wh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

ஏலியன்வேர் 17 சிறப்பம்சங்கள்:
ஏலின்வேர் 17 லேப்டாப்பில் விண்டோஸ் 10 64-பிட் இயங்குதளம், 17.3 இன்ச் 1920x1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, இன்டெல் கோர் i7-7700HQ பிராசஸர், இன்டெல் எச்டி கிராஃபிக்ஸ் 530, என்விடியா ஜீஃபோர்ஸ் GTX 1060, 6ஜிபி GDDR5 வீடியோ மெமரி, 8ஜிபி DDR4 2133MHz ரேம், 1000 ஜிபி ஹார்டு டிரைவ் 7,200RPM வழங்கப்பட்டுள்ளது.
இரண்டு லேப்டாப்களிலும் டாபி ஐ-டிராக்கிங் மென்பொருள் கொண்டுள்ளது.

ஏலியன்வேர் டெஸ்க்டாப் சிறப்பம்சங்கள்:
ஏலியன்வேர் ஔரா டெஸ்க்டாப்களின் பேசிக் மாடல் விண்டோஸ் 10 64-பிட் இயங்குதளம், கோர் i5-7400 பிராசஸர், 3.5 ஜிகாஹெர்ட்ஸ் என்விடியா ஜீஃபோர்ஸ் GTX 1050Ti, 4ஜிபி GDDR5 வீடியோ மெமரி, 8ஜிபி DDR4 2400MHz மற்றும் 1000 ஜிபி 7,200RPM ஹார்டு டிரைவ் வழங்கப்பட்டுள்ளது.
டெல் இன்ஸ்பிரான் 15 5000 கேமிங் மாடலில் விண்டோஸ் 10 64-பிட் இயங்குதளம், 15.6 இன்ச் ஃபுல் எச்டி 1920x1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டச் டிஸ்ப்ளே, இன்டெல் மற்றும் ஏ.எம்.டி. பிராசஸர்களில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளும் வசதி, என்விடியா ஜீஃபோர்ஸ் GTX 1050, 4ஜிபி GDDR5 வீடியோ மெமரி, 32ஜிபி DDR4 2400MHz ரேம், 512 ஜிபி ஹார்டு டிரைவ் மற்றும் 74Whr 6-செல் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
டெல் இன்ஸ்பிரான் 15 7000 கேமிங் மாடலில் விண்டோஸ் 10 64-பிட் இயங்குதளம், 15.6 இன்ச் ஃபுல் எச்டி 1920x1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, இன்டெல் கோர் i5-7300HQ பிராசஸர், என்விடியா ஜீஃபோர்ஸ் GTX 1050, 4ஜிபி GDDR5 வீடியோ மெமரி, 8ஜிபி DDR4 2400MHz ரேம், 1000 ஜிபி 5,400RPM ஹார்டு டிரைவ், 8 கேச்சி மற்றும் 74Whr 6-செல் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

டெல் கேமங் சீரிஸ் விலை:
டெல் ஏலியன்வேர் 15 இந்தியாவில் ரூ.1,64,990, ஏலின்வேர் 17 ரூ.2,14,990, ஏலின்வேர் ஔரா டெஸ்க்டாப் ரூ.1,79,990, இன்ஸ்பிரான் 15 5000 கேமிங் ரூ.74,490, இன்ஸ்பிரான் 15 7000 ரூ.82,490 முதல் துவங்குகிறது.
இவற்றின் பெரும்பாலான மாடல்கள் இந்த ஆண்டு நடைபெற்ற வாடிக்கயாளர் மின்சாதன விழாவிற்கு முன் வெளியிடப்பட்டன.
உலகின் சுமார் 150-க்கும் அதிகமான நாடுகளில் நடந்த ரான்சம்வேர் தாக்குதலில் வட கொரியாவை சேர்ந்த ஹேக்கர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என இந்திய வம்சாவெளி ஆராய்ச்சியாளர் வெளியிட்டுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை உருவாக்கிய இணையவழி தாக்குதல் கருவிகள் மூலம் உலகம் முழுக்க 150-க்கும் அதிகமான நாடுகளை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களின் கணினிகளை ‘ரான்சம்வேர்’ வைரஸ் தாக்கியது. உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள ரான்சம்வேர் வைரஸ் பாதிப்பினால் பல்வேறு நிறுவனங்கள் முடங்கியுள்ளன.
உலகம் முழுக்க பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள ரான்சம்வேர் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து எவ்வித தகவலும் வெளியாகாமல் இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது பாதிப்பை ஏற்படுத்தியுள்ள ரான்சம்வேர் சைபர் குற்றவாளிகள் வட கொரியாவை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என கூகுளில் பணியாற்றி வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆராய்ச்சியாளர் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வடகொரியர்கள் சார்பில் இயங்கி வரும் லசாரஸ் குரூப் புதிய ரான்சம்வேர் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என இந்திய வம்சாவளியை சேர்ந்த கூகுள் ஆராய்ச்சியாளரான நீல் மேத்தா தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே நடத்தப்பட்ட வானாகிரிப்ட் (WannaCrypt) தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட கோடிங் தான் இம்முறை நடத்தப்பட்டுள்ள வானாகிரை (WannaCry) தாக்குதலிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரு தாக்குதல்களிலும் ஒரே மாதிரியான மென்பொருள் தான் மைக்ரோசாப்ட் இயங்குதளத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவை சேர்ந்த லசாரஸ் குரூப், முன்னதாக 2014 ஆம் ஆண்டு சோனி பிக்சர்ஸ் மற்றும் 2016-இல் வங்கதேசத்தை சேர்ந்த வங்கியை ஹேக் செய்ததும் குறிப்பிடத்தக்கது.

எனினும் கேஸ்பர்ஸை லேப் வெளியிட்டுள்ள தகவல்களின் படி வானாகிரிப்ட் தாக்குதலின் முந்தைய பதிப்புகளை நன்கு ஆய்வு செய்த பின்னரே, ஹேக்கிங் செய்த குழு சார்ந்த தகவல்களை கண்டறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று உலகின் மற்ற ஆராய்ச்சியாளர்களும் தாக்குதலை நடத்தியது யார் என்ற விவரத்தை வழங்க வேண்டும் என கேஸ்பர்ஸ்கை தெரிவித்துள்ளது.
சோனி பிக்சர்ஸ் ஹேக் சார்ந்து வடகொரியா எவ்வித தகவலையும் வெளியிடாத போதும், பாதுகாப்பு வல்லுநர்கள் மற்றும் அமெரிக்க அரசாங்கம் உள்ளிட்டவை வடகொரியாவிற்கு தொடர்புண்டு என்பதையே தெரிவித்தன.
இந்த தாக்குதல் பார்க்க வடகொரியாவை சேர்ந்தவர்களின் செயலாக தெரியும்படி கைதேர்ந்த ஹேக்கர்கள் இந்த வேலையைச் செய்திருக்கலாம் என பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மைக்ரோசாபட் நிறுவனத்தின் EDU விழாவில் புதிய சர்பேஸ் ப்ரோ, விண்டோஸ் ஓஎஸ் உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இங்கு பார்ப்போம்.
புதுடெல்லி:
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் MicrosoftEDU நிகழ்வு நேற்று இரவு நடைபெற்றது. ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போன்று மைக்ரோசாப்டின் புதிய சர்பேஸ் லேப்டாப், புதிய இயங்குதளம் மற்றும் கல்வி சார்ந்த பல்வேறு சேவைகள் மற்றும் மென்பொருள்கள் இந்த விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி ஆப்பிளின் மேக்புக் ஏர் சாதனத்திற்கு போட்டியாக புதிய சர்ஃபேஸ் லேப்டாப் ஒன்றை மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ளது. மைக்ரோசாப்டின் பாரம்பரிய கிளாம்ஷெல் வடிவமைப்பு மாற்றப்படவில்லை எனினும், சர்பேஸ் பெயரில் அறிமுகமான ஹைப்ரிட் டேப்லெட்-லேப்டாப் வடிவமைப்பு மட்டும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் லேப்டாப்:

புதிய சர்ஃபேஸ் லேப்டாப்பில் இன்டெல் கோர் i5 சிபியு, 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஹார்டு டிரைவ் மற்றும் 14 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 13 இன்ச் அளவு கொண்ட புதிய சர்ஃபேஸ் ப்ரோ மேக்புக் ப்ரோவை விட எடை குறைவாகவும், தொடுதிரை டிஸ்ப்ளே மற்றும் சர்ஃபேஸ் பென் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப் சில்வர், கோல்டு, பர்கண்டி மற்றும் கிரே நிறங்களில் கிடைக்கிறது.
மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் லேப்டாப்புடன் புதிய விண்டோஸ் 10S இயங்குதளமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதிவேகமாக இயங்குவதோடு பாதுகாப்பானதாகவும் இருக்கும் என மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. முந்தைய சர்ஃபேஸ் லேப்டாப்களை விட அதிவேகமாக லோடு ஆவதோடு, நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் புதிய சர்பேஸ் லேப்டாப் 999 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.64,080 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விண்டோஸ் 10S:

விண்டோஸ் 10S இயங்குதளத்தில் மைக்ரோசாப்ட் செயலிகளை மட்டுமே பயன்படுத்த முடியும், இத்துடன் மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஸ்டோரில் கிடைக்கும் செயலிகளை மட்டும் இன்ஸ்டால் செய்ய முடியும். கல்வியை மையமாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள புதிய லேப்டாப்பில் கிளாஸ்ரூம் சாட் குரூப், அசைன்மென்ட் சப்மிஷன்கள் மற்றும் மாடரேஷன் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
விண்டோஸ் 10S இயங்குதளம் வைத்திருப்போர் முழுமையான விண்டோஸ் ப்ரோ பதிப்பிற்கு அப்டேட் செய்ய முடியும், ஒருமுறை அப்டேட் செய்தால் மீண்டும் பின்செல்ல முடியாது. அப்டேட் செய்ய 49 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.3,143 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் ப்ரோ தவிர ஏசர் மற்றும் எச்பி உள்ளிட்ட சாதனங்களிலும் புதிய விண்டோஸ் 10S இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.
மைன்கிராஃப்ட்:

மாணவர்களிடையே கோடிங் பாடத்தை எளிமையாக்க மைக்ரோசாஃப்டின் மைன்கிராஃப்ட் பயனுள்ளதாக இருக்கும் என்றும், கோடிங் மற்றும் கேம்களை உருவக்க வழி செய்யும் என்றும் தெரிவித்துள்ளது. இத்துடன் டின்க்கர், ஸ்கிராட்ச்X உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. மைக்ரோசாப்டின் மேக்கோடு (makecode) எனும் தளம் கொண்டு ஜாவா ஸ்கிரிப்ட்களை கற்பிக்க முடியும். மாணவர்களுக்கு ஒரு ஆண்டிற்கு இலவச சந்தா வழங்கப்படும் என்றும் மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.
மிக்சட் ரியாலிட்டி:

மைக்ரோசாப்டின் மிக்சட் ரியாலிட்டி மூலம் மாணவர்களுக்கு விர்ச்சுவல், ஆக்மென்ட்டெட் மற்றும் மிக்சட் ரியாலிட்டிக்களை வகுப்பறைகளில் கொண்டு சேர்க்க முடியும். 3D பொருள்களை நிஜத்தில் உருவாக்கி அவற்றை மிக்சட் ரியாலிட்டி அல்லது திரையில் நேரடியாக பார்க்க முடியும்.
இதற்கென மைக்ரோசாப்ட் நிறுவனம் பியர்சன் எட்யூகேஷனுடன் இணைந்து 3D மற்றும் மிக்சட் ரியாலிட்டி சாதனங்களை விரைவில் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இவற்றில் வரலாறு, அறிவியில், கணிதம் மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பாடங்கள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ லேப்டாப்பின் அறிமுக வீடியோவை இங்கு பார்ப்போம்..,
ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபேட் ப்ரோ 2 சாதனத்தை அடுத்த மாதம் நடைபெற இருக்கும் டெவலப்பர் கான்ஃபெரென்ஸ் நிகழ்வில் அறிமுகம் செய்யலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுடெல்லி:
ஆப்பிள் நிறுவனத்தின் சர்வதேச டெவலப்பர் கான்ஃபெரென்ஸ் நிகழ்ச்சி (WWDC) அடுத்த மாதம் (ஜூன்) நடைபெறவுள்ளது. தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட ஐபேட் ப்ரோ சாதனத்தை வெளியிடலாம் என கூறப்படுகிறது.
அதன்படி ஆப்பிள் நிறுவனம் ஐபேட் ப்ரோ 2 மற்றும் மூன்று ஐபேட் சாதனங்களை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ 2 சாதனத்துடன் 10.5 இன்ச் ஐபேட், 10.0 இன்ச் மாடல் மற்றும் 9.7 இன்ச் ஐபேட் மினி 5 சாதனங்கள் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.
ஐபேட் ப்ரோ 2 சாதனத்தில் AX10 சிப்செட், 12 எம்பி பிரைமரி கேமரா, ட்ரூ-டோன் பிளாஷ் மற்றும் ஐஓஎஸ் 11 இயங்குதளம் கொண்டு இயங்கும் என கூறப்படுகிறது. சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் ரெட்டினா டிஸ்ப்ளே கொண்ட 9.7 இன்ச் கொண்ட ஐபேட் சாதனம் ஒன்றை வெளியிட்டது.
2014 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஐபேட் மாடலின் மேம்படுத்தப்பட்ட மாடலாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய மாடலில் மேம்படுத்தப்பட்ட பிராசஸர், கேமரா மற்றும் புதுவகை ஐஓஎஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
சில்வர், கோல்டு மற்றும் ஸ்பேஸ் கிரே நிறங்களில் கிடைக்கும் ஐபேட் 9.7 மாடலில் அலுமினியம் யுனிபாடி என்குளோஷர் மற்றும் ரெட்டினா டிஸ்ப்ளே 2048x1536 பிக்சல் ரெசல்யூஷன் ஆப்பிள் A9 சிப்செட் M9 மோஷன் கோ-பிராசஸர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
8 எம்பி ஆட்டோஃபோகஸ் பிரைமரி கேமரா மற்றும் f/2.4 அப்ரேச்சர், 5P லென்ஸ் மற்றும் பல்வேறு கேமரா மோட்களும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் வீடியோக்களை ஃபுல் எச்டி தரத்தில் பதிவு செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. 9.7 இன்ச் மாடலிலும் 1.2 எம்பி ஃபேஸ்டைம் எச்டி கேமரா, f/2.4 அப்ரேச்சர் மற்றும் எச்டி வீடியோ பதிவு செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
புதிய ஐபேட்களில் வை-பை, ப்ளுடூத், GPS, GLONASS மற்றும் எல்டிஇ பேண்ட் மற்றும் ஹோம் பட்டனுடன் கைரேகை ஸ்கேனரும் வழங்கப்பட்டுள்ளது.
ஹூவாய், கூகுள், ஏஆர்எம் மற்றும் பலர் இணைந்து சிங்கில்-போர்டு டெவலப்மென்ட் போர்டு ஒன்றை வெளியிட்டுள்ளன. இது கிட்டத்தட்ட ராஸ்ப்பெரி பை போன்ற சாதனம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
ஹூவாய், கூகுள் மற்றும் ஏஆர்எம் மற்றும் சில நிறுவனங்கள் இணைந்து ராஸ்ப்பெரி பை போன்ற சாதனத்தை வெளியிட்டுள்ளன. ஹைகீ 960 என பெயரிடப்பட்டுள்ள இந்த சாதனம் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் மே மாத வாக்கில் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஹைகீ 960 ஆக்டாகோர் ஹைசிலிகான் கிரின் 960 சிப்செட், 2.4 ஜிகாஹெர்ட்ஸ் கார்டெக்ஸ்-A-73 கோர், 1.8 ஜிகாஹெர்ட்ஸ் கார்டெக்ஸ் A-53 கோர் 4K கிராஃபிக்ஸ் மற்றும் 3ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 32 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் மைக்ரோ எஸ்டி ஸ்லாட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
கனெக்டிவிட்டியை பொருத்த வரை எச்டிஎம்ஐ 1.2a போர்ட், வை-பை, ப்ளூடூத், இரண்டு யுஎஸ்பி 3.0 இரண்டு டைப் A போர்ட் மற்றும் ஒரு யுஎஸ்பி 2.0 டைப்-சி போர்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கேமராவை இணைக்கும் கனெக்டர்களும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் வை-பைக்களுக்கான எல்இடி மற்று்ம ப்ளூடூத், நான்கு எல்இடி மற்றும் பவர் பட்டன் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளது.
ராஸ்ப்பெரி பை 35 டாலர்கள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஹூவாய் ஹைகீ 960 239 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ,15,361 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எச்பி நிறுவனத்தின் ZBook மாடல்களில் மேம்படுத்தப்பட்ட லேப்டாப்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன, ZBook 17, ZBook 15, ZBook ஸ்டூடியோ G4 மற்றும் ZBook 14u சாதனங்களின் விரிவான அம்சங்களை இங்கு பார்ப்போம்.
புதுடெல்லி:
எச்பி நிறுவனம் தனது ZBook மாடல் லேப்டாப்களில் நான்கு புதிய சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. ZBook 17, ZBook 15, ZBook ஸ்டூடியோ G4 மற்றும் ZBook 14u என நான்கு மாடல்களின் அதிகபட்ச விலை 1519 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.97,550 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்களை பொருத்த வரை ZBook 17 மாடலில் 17.3 இன்ச் டிஸ்ப்ளே, இன்டெல் Xeon அல்லது கோர் சிபியு, மற்றும் GPU-வை மாற்றியமைக்கும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இதில் குவாட்ரோ P4000 அல்லது குவாட்ரோ P5000 பொறுத்திக் கொள்ளலாம். இவை விர்ச்சுவல் ரியாலிட்டி தரவுகளை நொடிக்கு 90 ஃபிரேம் (90fps) என்ற வேகத்தில் இயக்கும் திறன் கொண்டுள்ளது. எச்பி ZBook 17 விலை 1519 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.97,550 முதல் துவங்குகிறது.
எச்பி ZBook 15 G4 சிறப்பம்சங்களை பொருத்த வரை 15.6-இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே மற்றும் இன்டெல் கோர் i5 சிப்செட் மற்றும் 8 ஜிபி ரேம் மற்றும் 500 ஜிபி ஹார்டு டிரைவ் வழங்கப்பட்டுள்ளது. இதன் விலை 1,419 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.91,128 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில்AMD GPU,அல்லது Nvidia பொறுத்தும் வசதியும், மெமரியை 3TB (3000 ஜிபி) வரை நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

எச்பி ZBook ஸ்டூடியோ G4-இல் 15.6-இன்ச் 4K ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே 16.5 மணி நேர பேட்டரி பேக்கப், இன்டெல் Xeon அல்லது கோர் சிபியு வசதி மற்றும் 2TB (2000 ஜிபி) ஹார்டு டிரைவ் வசதியுடன் இதன் விலை 1,399 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.89,844 விலையில் துவங்குகிறது.
எச்பி ZBook 14u 14.0 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, AMD ஃபயர்ப்ரோ GPU, 2ஜிபி அளவு கிராஃபிக்ஸ் மெமரி மற்றும் 2TB (2000 ஜிபி) மெமரி வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் விலை இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை. கடந்த மாதம் எச்பி புதிய வகை எலைட் டெஸ்க்டாப்களை வெளியிட்டது. எலைட் டெஸ்க் 800 சீரிஸ் டெஸ்க்டாப் மற்றும் எலைட்ஒன் 800 AIO என இவை அழைக்கப்படுகின்றன.
ஆப்பிள் நிறுவனம் தனது ஐமேக் சாதனங்களில் புதிய வகை வன்பொருள் மற்றும் சிறப்பம்சங்களை வழங்கி விரைவில் அறிமுகம் செய்யலாம் என ஆப்பிள் வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுடெல்லி:
ஆப்பிளின் ஐமேக் சாதனங்கள் வாடிக்கையாளர்களை மையமாக கொண்டதாக இருக்கிறது. மிகப்பெரிய திரை, அழகாக வழங்கப்பட்டுள்ள நிலையில் இதன் வன்பொருள் அதிக சக்திவாய்ந்ததாக இருக்காது. இவற்றில் குறைந்த மின்அளவு கொண்ட சிபியு மற்றும் மொபைல்-கிரேடு கிராபிக் பிராசஸர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சமீபத்தில் வெளியான தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் சர்வர்-கிரேடு ஹார்டுவேர் வழங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து இந்த சாதனத்தில் ECC RAM வழங்கப்படலாம் என்றும் இவை தகவல்களை ரேடியோஆக்டிவ் சிதைவுகளில் இருந்தும், மின்சார இடைமறிப்பு மற்றும் காஸ்மிக் கதிர்களில் இருந்தும் பாதுகாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர இன்டெல் Xeon E3-1285 பிராசஸர், 16-64 ஜிபி ரேம் மற்றும் 2000 ஜிபி PCIe SSD வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இத்தகைய வன்பொருள் கொண்டு அதிக சக்திவாய்ந்த பணிகளை தாங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் வரை இதன் கிராஃபிக்ஸ் சார்ந்து எவ்வித தகவலும் இல்லை. எனினும் இதில் AMD FirePro அல்லது Nvidia Quadro யுனிட்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதோடு புதிய ஐமேக் சாதனங்களின் கனெக்டிவிட்டி ஆப்ஷன்களில் பெரும்பாலும் அதிகளவு மாற்றம் இருக்காது என்றும் அதிகபட்சம் தன்டர்போல்ட் 3 மற்றும் யுஎஸ்பி-சி போர்ட் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் மேக்புக் ப்ரோவிலேயே டச்பார் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
கூகுள் குரோம் இயங்குதளத்திற்கு போட்டியாக புதிய இயங்குதளத்தை அறிமுகம் செய்ய மைக்ரோசாஃப்ட் முடிவு செய்துள்ளதாகவும், மே 2-ந்தேதி புதிய இயங்குதளம் அரிவிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:
கூகுள் குரோம் இயங்குதளத்திற்கு போட்டியாக மைக்ரோசாஃப்ட் புதிய இயங்குதளத்தை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மே 2-ந்தேதி நியூ யார்க் நகரில் மைக்ரோசாஃப்ட் திட்டமிட்டுள்ள நிகழ்ச்சியில் புதிய இயங்குதளம் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 S என அழைக்கப்படவுள்ள புதிய இயங்குதளம் மைக்ரோசாஃப்டின் விண்டோஸ் 10 இயங்குதள பதிப்பாக இருக்கும். இதுகுறித்து வெளியான தகவல்களில் விண்டோஸ் 10 S கூகுளின் குரோம் இயங்குதளம் போன்றே இயங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய விண்டோஸ் 10 S இயங்குதளத்தை இயக்க குறைந்தபட்ச தேவைகளாக பத்து மணி நேரத்திற்கும் அதிகமான பேட்டரி பேக்கப், குவாட்கோர் பிராசஸர், 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருப்பதோடு, eMMC/SSD ஸ்டோரேஜ் மற்றும் ஸ்டைலஸ் பென் அல்லது டச் டிஸ்ப்ளே வசதி கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விண்டோஸ் 10 S இயங்குதளத்தில் அதிகப்படியான மேம்படுத்தல்கள் வழங்கப்படலாம் என்றும் இதில் சர்வதேச விண்டோஸ் செயலிகளுக்கான மாற்றியமைக்கப்பட்ட புதிய பிளே ஸ்டோர் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சமீபமாக இயங்குதள அம்சங்களில் மைக்ரோசாப்ட் அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில் அந்நிறுவனம் விண்டோஸ் 10 கிரியேட்டர்ஸ் அப்டேட் ஒன்றையும் வெளியிட்டது.
இயங்குதளம் தவிர விண்டோஸ், சிஸ்டம் சென்டர் கான்பிகரேஷன் மேனேஜர் மற்றும் ஆஃபீஸ் சேவைகளுக்கான முக்கிய அப்டேட்களை வழங்கும் என்றும் கூறப்படுகிறது. ஆண்டிற்கு இருமுறை அப்டேட்டகளை வழங்கும் நிலையில் இந்த ஆண்டின் முதல் வெளியீட்டு நிகழ்ச்சி மே மாதம் நடைபெற இருக்கிறது.
லெனோவோ நிறுவனத்தின் புதிய Miix 510 லேப்டாப் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. அமேசான் தளத்தில் மட்டும் விற்பனை செய்யப்பட இருக்கும் லேப்டாப்கள் இரண்டு மாடல்களில் கிடைக்கின்றன.
புதுடெல்லி:
லெனோவோ நிறுவனம் இந்தியாவில் புதிய வகை லேப்டாப்களை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. தொழில்நுட்பத்தை புதிய வடிவில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் விதமாக புதிய ரக Miix 510 எனும் டூ-இன்-ஒன் லேப்டாப்களை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.
லெனோவோ Miix 510 பிரத்தியேகமாக அமேசான் தளத்தில் மட்டும் கிடைக்கும் இந்த சாதனம் i3 மற்றும் i5 என இரண்டு மாடல்களில் வழங்கப்படுகிறது. இவற்றின் விலை முறையே ரூ.53,390 மற்றும் ரூ.79,890 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்டு இயங்கும் இந்த லேப்டாப் கழற்ற கூடிய கீபோர்டு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டால்பி ஸ்டீரியோ ஸ்பீக்கர் மற்றும் லெனோவோ ஆக்டிவ் பென் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 880 கிராம் எடை கொண்ட Miix 510 எங்கும் எளிதில் எடுத்து செல்லக் கூடியதாகவும் இருக்கிறது. எல்டிஇ வசதி கொண்டுள்ள லேப்டாப் 7.5 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

i5 பிராசஸர் கொண்ட மாடலில் 8ஜிபி LPDDR4 ரேம் மற்றும் i3 பிராசஸர் கொண்ட மாடலில் 4ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. 12.2 இன்ச் 1920x1200 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, ப்ளூடூத், யுஎஸ்பி 3.0 டைப்-சி, மைக்ரோ சிம் ஸ்லாட் உள்ளிட்டவை இரு மாடல்களிலும் சமமாமக வழங்கப்பட்டுள்ளது.
இரண்டு மாடல்களிலும் இன்டெல் எச்டி கிராஃபிக்ஸ் 520 வசதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் i3 மாடலில் 128ஜிபி SSD மற்றும் i5 மாடலில் 256ஜிபி SSD வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 5எம்பி பிரைமரி கேமரா மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள 2 எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது.
வை-பை மூலம் சக்தியூட்டப்படும் டேட்டா பேக் திட்டங்களை மிகவும் குறைந்த விலையில் வாங்க முடியும் என டெலிமாடிக்ஸ் வளர்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
மத்திய டெலிமாட்டிக்ஸ் வளர்ச்சி அமைப்பு உருவாக்கியுள்ள புதிய திட்டத்தின் கீழ் சில்லறை வணிகர்கள் மூலம் பொது மக்கள் வை-பை டேட்டா பேக்களை மலிவு விலையில் பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொது தரவு அலுவலகம் (public data office) மூலம் குறைந்தபட்சம் ரூ.10 என்ற விலையில் வை-பை டேட்டா பெற முடியும்.
இந்த சேவையை மளிகை கடை உட்பட அனைத்து சில்லறை விற்பனை கடைகளிலும் வழங்க முடியும்.வை-பை சேவைகளை அனைவருக்கும் வழங்கும் இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 10 ரூபாய்க்கு வழங்க முடியும். மேலும் இந்த சேவையை வழங்க எவ்வித உரிமமும் பெற வேண்டிய அவசியம் கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதிய திட்டம் மூலம் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இணைய வசதி மலிவு விலையில் வழங்க முடியும். விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ள இந்த திட்டத்தில் வன்பொருள் மற்றும் மென்பொருள் சாதனங்கள் மூலம் e-KYC கொண்ட வை-பை இயக்க முடியும்.
இத்துடன் ஒரு முறை பயன்படுத்தக் கூடிய கடவுச்சொல் கொண்டு பாதுகாக்கப்படுகிறது. இதன் கட்டண வழிமுறைகள் மின்சாதனம் மூலம் இயங்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பெரும்பாலானோருக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹூவாய் நிறுவனம் இரண்டு புதிய டேப்லெட் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி புதிய சாதனங்கள் விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
புதுடெல்லி:
ஹூவாய் நிறுவனம் மீடியாபேட் T3 மற்றும் மீடியாபேட் T3 7 என இரண்டு புதிய டேப்லெட் சாதனங்களை வெளியிட்டுள்ளது. இரண்டு புதிய சாதனங்களும் ஹூவாய் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள நிலையில் இவற்றின விலை மற்றும் விற்பனை தேதி குறித்து எவ்வித தகவலும் இல்லை.
ஹூவாய் மீடியாபேட் T3 சாதனத்தை பொருத்த வரை 8 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 1280x800 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டுள்ளது. இத்துடன் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 சிப்செட், 2ஜிபி அல்லது 3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் EMUI 5.1 சார்ந்த மீடியாபேட் T3 டேப்லெட்டில் 5 எம்பி ஆட்டோஃபோகஸ் பிரைமரி கேமரா மற்றும் 2 எம்பி ஃபிக்சடு போகஸ் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. GPS/ A-GPS, GLONASS, மற்றும் வை-பை போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் 4800 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது. ஸ்பேஸ் கிரே மற்றும் லக்சூரியஸ் கோல்டு நிறங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹூவாய் மீடியாபேட் T3 7 சிறப்பம்சங்களை பொருத்த வரை 7 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 1024x600 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர், 1ஜிபி ரேம், 8ஜிபி இன்டெர்னல் மெமரியும், 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி இன்டெர்னல் மெமரியும் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் EMUI 4.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம், 2 எம்பி பிரைமரி மற்றும் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளதோடு 3100 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. விலை அறிவிக்கப்படாத நிலையில் 8.0 இன்ச் மாடல் இந்திய மதிப்பில் ரூ.15,000 மற்றும் 7 இன்ச் மாடல் இந்திய மதிப்பில் ரூ.9,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.






