என் மலர்
கணினி
பேஸ்புக் நிறுவனத்தின் F8 டெவலப்பர் கான்ஃபெரென்ஸ் நிகழ்வில் பேசிய மார்க் சூக்கர்பர்க் வரும் காலத்தில் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்த இருப்பதாக தெரிவித்தார்.
கலிபோர்னியா:
பேஸ்புக் நிறுவனத்தின் டெவலப்பர் கான்ஃபெரென்ஸ் நிகழ்ச்சி அமெரிக்காவின் சான் ஜோஸ் நகரில் நேற்று துவங்கியது. நிகழ்வின் முதல் நாளான நேற்று டெவலப்பர்கள் மத்தியில் உரையாற்றிய பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க், பேஸ்புக்கின் அடுத்த பத்தாண்டு திட்டங்களைப் பற்றி விரிவாக பேசினார். இதில் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பம் சார்ந்த திட்டங்களில் அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் என மார்க் தெரிவித்தார்.
ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகரிக்கும் திட்டத்தின் கீழ், 'பேஸ்புக் எஃபெக்ட்ஸ் பிளாட்ஃபார்ம்' (Camera Effects platform ) என்ற தளம் நேற்று நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த தளத்தை பயன்படுத்தி டெவலப்பர்கள் தங்களுக்கான பிரத்தியேகமான ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி செயலிகளை உருவாக்க முடியும். இந்த செயலிகள் பேஸ்புக்கின் கேமராவில் இயக்கும் வசதியும் வழங்கப்பட இருக்கிறது.

பேஸ்புக்கின் புதிய தளம் ஏற்கனவே வெளியான 'போக்கிமான் கோ' கேம் போன்ற தளத்தை பேஸ்புக் வெளியிட வாய்ப்பை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுடன் நேரடியாக மோதும் வகையில் பேஸ்புக் செயலிகள் ஸ்மார்ட்போன்களுக்கான சந்தைகளில் சாராமல் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக் நிறுவனரின் புதிய அறிவிப்பு மற்றும் திட்டங்கள் முழுமையாய் நிறைவேற பத்து ஆண்டுகள் ஆகும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் இவை மேலும் விசித்திரமான மற்றும் புதுமையான அம்சங்களின் வெளியீட்டிற்கு வழி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வில் பேஸ்புக்கின் எதிர்கால திட்டங்கள் சார்ந்த அறிவிப்பு, முன்னோட்டம், மற்றும் அறிமுகம் உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தது. எனினும், அடுத்த பத்து ஆண்டுகளில் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை வழங்க அதிக முக்கியத்துவம் அளிக்க பேஸ்புக் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் நான்காம் தலைமுறை ஐபேட் சாதனங்களை மாற்ற விரும்புவோருக்கு அந்நிறுவனம் புதிய ஐபேட் ஏர் 2 சாதனத்தை வழங்க முடிவு செய்துள்ளது.
நியூ யார்க்:
ஆப்பிள் ஐபேட் நான்காம் தலைமுறை மாடல் பயன்படுத்துவோர் தங்களது சாதனத்தை மாற்ற விரும்பினால் புத்தம் புதிய ஐபேட் ஏர் 2 சாதனம் வழங்க ஆப்பிள் முடிவு செய்துள்ளது. புதிய சாதனத்தை வாடிக்கையாளர்கள் ஆப்பிள் ஸ்டோர்களில் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழைய ஆப்பிள் ஐபேட் சாதனம் இருப்பு இல்லாத காரணத்தினால் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக இது குறித்து வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஆப்பிள் வாடிக்கையாளர்களுக்கு இது குறித்த அறிவிப்பை வழங்க ஆப்பிள் ஊழியர்களிடம் அந்நிறுவனம் கேட்டு கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஐபேட் ஏர் 2 புதிய கோல்டு நிறத்தில் வெளியிடப்பட்டது. 32 ஜிபி மற்றும் 128 ஜிபி மெமரி வழங்கப்பட்ட இந்த சானத்தின் 16 ஜிபி மற்றும் 64 ஜிபி மாடல்கள் நிறுத்தப்பட்டு விட்டன. இதனால் பழைய சாதனத்தை வழங்கும் போது கூடுதல் மெமரியை பெற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிறப்பம்சங்களை பொருத்த வரை ஐபேட் ஏர் 2 சாதனத்தில் 9.7 இன்ச் ரெட்டினா டிஸ்ப்ளே, 64-பிட் ஆப்பிள் A9 சிப்செட், ஐஓஎஸ் 10 இயங்குதளம், 8 எம்பி பிரைமரி கேமரா, ஃபேஸ்டைம் எச்டி கேமரா, டச் ஐடி தொழில்நுட்பம் கொண்ட கைரேகை ஸ்கேனர், வை-பை, 4ஜி எல்டிஇ உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 10 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்கும் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
சோனி நிறுவனத்தின் E Ink டேப்லெட் DPT-RP1 சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்டைலஸ் பென் கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய டேப்லெட்டில் வழங்கப்பட்டுள்ள அம்சங்களை இங்கு பார்ப்போம்.
புதுடெல்லி:
ஜப்பானை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான சோனி E Ink எனும் டேப்லெட்-ஐ வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த டேப்லெட் 13.3 இன்ச் 1650x2220 ரெசல்யூஷன், டிஸ்ப்ளே மற்றும் ஸ்டைலஸ் பேனா வழங்கப்பட்டுள்ளது.
மொத்தமாக முப்பது காகிதங்கள் அளவு தடிமனான புதிய டேப்லெட் முந்தைய மாடல்களை விட மெலிதாகவும், எடை குறைவாகவும் இருக்கிறது. PDF ஃபைல்களை மட்டும் படிக்க வழி செய்யும் புதிய டேப்லெட் டிஜிட்டல் பேப்பர் எனும் செயலியை கொண்டுள்ளது.
இந்த செயலி இணையத்தளங்கள் மற்றும் இதர தரவுகளை PDF ஃபைலாக மாற்றி அவற்றை டேப்லெட்டில் எளிமையாக பார்க்க வழி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் வழங்கப்பட்டுள்ள பேட்டரி ஒரு முறை சார்ஜ் செய்தால் ஒரு மாத காலத்திற்கு பேட்டரி பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோனி E Ink டேப்லெட் குவாட்கோர் மார்வெல் IAP140 64-பிட் பிராசஸர் மற்றும் 16 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது. 349 கிராம் எடை கொண்டுள்ள புதிய டேப்லெட்டில் வை-பை, ப்ளூடூத் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளது. சோனி E Ink டேப்லெட் DPT-RP1 jpy 80000 அதாவது இந்திய மதிப்பில் ரூ.47,119 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக சோனி XA1 ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டது. 5.0 இன்ச் 720x1280 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட எச்டி டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ P20 சிப்செட் மற்றும் 3 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 32 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
2300 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் இந்த ஸ்மார்ட்போனில் கைரேகை ஸ்கேனர், 4ஜி எல்டிஇ, வை-பை, ப்ளூடூத் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 23 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், 4K வீடியோ பதிவு செய்யும் வசதி மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
சியோமி நிறுவனத்தின் Mi பேட் 3 டேப்லெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதிக சக்திவாய்ந்த பேட்டரி வழங்கப்பட்டுள்ள புதிய டேப்லெட்டின் முழு சிறப்பம்சங்களை இங்கு பார்ப்போம்.
புதுடெல்லி:
சியோமி நிறுவனம் தனது புதிய டேப்லெட் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. Mi பேட் 3 என பெயரிடப்பட்டுள்ள புதிய டேப்லெட் 1499 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.14,139 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சீனாவில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த டேப்லெட் விரைவில் மற்ற சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக சியோமியின் முதல் டேப்லெட் சாதனம் 2014 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்சமயம் வெளியிடப்பட்டுள்ள Mi பேட் 3 டேப்லெட்டில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சிறப்பம்சங்களை பொருத்த வரை 2.1 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் MT8176 பிராசஸர், ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டு இயங்கும் என்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரியும், 4ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் 6100 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை 4ஜி எல்டிஇ, வை-பை டிஸ்ப்ளே, வை-பை டைரக்ட், ப்ளூடூத் 4.1, ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
சீனாவில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள Mi பேட் 3 இந்தியாவில் வெளியாவது குறித்து சியோமி சார்பில் எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை.
இந்தியாவில் அசுஸ் நிறுவனத்தின் அதி-நவீன கேமிங் லேப்டாப் வெளியிடப்பட்டுள்ளது. புக்கிங் செய்வோருக்கு மட்டும் விற்பனை செய்யப்பட இருக்கும் புதிய கேமிங் லேப்டாப் விலை ரூ.7,97,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
அசுஸ் நிறுவனத்தின் அதி-நவீன உயர் ரக கேமிங் லேப்டாப் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. அசுஸ் ROG GX800 என பெயரிடப்பட்டுள்ள புதிய லேப்டாப், முன்பதிவு செய்வோருக்கு மட்டும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய அசுஸ் மாடல்- விலையை பற்றி கவலையில்லை, உயர் ரக அதிநவீன லேப்டாப் மட்டும் போதும் என்பவர்களுக்காகவே பிரத்தியேகமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அசுஸ் புதிய GX800 ரக லேப்டாப் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட GX700 மாடலின் மேம்படுத்தப்பட்ட மாடல் ஆகும். மிகப்பெரிய திரை, அசாத்திய சிறப்பம்சங்கள் கொண்டிருந்த GX700 ரூ.4,12,990 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. தற்சமயம் இதே போன்ற மாடல் ROG GX800 இந்தியாவில் இருமடங்கு விலையில் அதாவது ரூ.7,97,000 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இத்தகைய விலையில் புதிய அசுஸ் கேமிங் லேப்டாப்பை வாங்குவோருக்கு 2.9 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் கோர் i7-7820HK பிராசஸர், டூயல் Nvidia GeForce GTX 1080 GPU, 64ஜிபி ரேம் மற்றும் மூன்று 512ஜிபி PCIe SSD வழங்கப்பட்டுள்ளது. 18.4 இன்ச் எல்இடி பேக்லிட் 4K திரை வழங்கப்பட்டுள்ளது, இதனால் அதிக மெமரி கொண்ட கேம்களை விளையாடும் போது லேப்டாப் ஹேங் ஆகாது.
புதிய அசுஸ் லேப்டாப்களுக்கென மெக்கானிக்கல் கீபோர்டு வழங்கப்பட்டுள்ளதால், இவை டைப்பிங் மற்றும் கேமிங் பயன்பாடு உள்ளிட்டவற்றையும் சிரமமின்றி கையாள முடியும். இத்துடன் நான்கு ஸ்பீக்கர்கள், மைக் மற்றும் ஹெட்போன்களுக்கென ESS Sabre DAC வழங்கப்பட்டுள்ளது. மேலும் தன்டர்போல்ட் 3.0 மற்றும் 10Gbps யுஎஸ்பி 3.1 வழங்கப்பட்டுள்ளதால் அதிவேக கனெக்டிவிட்டி மற்றும் இரண்டாவது டிஸ்ப்ளேக்களுடன் இணைத்து கொள்ளவும் முடியும்.

இது தவிர கூடுதலாக மூன்று சாதாரண யு.எஸ்.பி. 3.0 போர்ட், ஜிகாபிட் ஈத்தர்நெட் மற்றும் எச்டிஎம்ஐ மற்றும் மினி டிஸ்ப்ளே போர்ட் வீடியோ அவுட்புட்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய லேப்டாப்பின் முக்கிய சிறப்பம்சமாக திரவ கூலிங் ரேடியேட்டர்கள் கொண்ட ஹைட்ரோ ஓவர்கிளாக்கிங் டாக் உள்ளது. லேப்டாப் இணைக்கப்பட்டதும், கூலண்ட் சிபியு மற்றும் ஜிபியு-வினுள் செலுத்தப்படும். இதனால் லேப்டாப் வேகம் மிக வேகமாக இருக்கும்.
5.7கிலோ எடை கொண்ட அசுஸ் ROG GX800 லேப்டாப்புடன் டாக் கூடுதலாக 4.6 கிலோ எடையுள்ளது. இதனால் இதை எடுத்து செல்ல சக்கரம் கொண்ட சூட்கேஸ் மற்றும் பேக்-பேக் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு அசுஸ் வெளியிட்ட ROG GX700 மாடல் லேப்டாப்கள் குறைந்த எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டிருந்தாலும், ROG GX800 மாடல் வெளியிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் சமீபத்தில் அறிமுகம் செய்த S8 ஸ்மார்ட்போன்களை கம்ப்யூட்டர் போன்று பயன்படுத்த அந்நிறுவனம் சாம்சங் டெக்ஸ் என்ற சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.
நியூ யார்க்:
சாம்சங் கேலக்ஸி S8 மற்றும் S8+ ஸ்மார்ட்போன்களுடன் அந்நிறுவனம் சில புதிய சாதனங்களையும் நேற்று அறிமுகம் செய்தது. அவ்வாறு சாம்சங் அறிவித்த சாதனம் தான் சாம்சங் டெக்ஸ். டெஸ்க்டாப் எக்ஸ்டென்ஷன் என்ற வார்த்தையின் சுருக்கமாக டெக்ஸ் என்ற பெயர் சூட்டுப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்டின் காண்டினியம் போன்று, சாம்சாங் டெக்ஸ் உங்களது ஸ்மார்ட்போனை கம்ப்யூட்டருடன் இணைத்து பயன்படுத்த வழி செய்கிறது. இதை கொண்டு ஸ்மார்ட்போன் செயலி, டாக்குமென்ட்களை எடிட் செய்வது, வீடியோக்களை பார்ப்பது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெரிய திரையில், கீபோர்டு மற்றும் மவுஸ் கொண்டு பயன்படுத்தலாம்.
சாம்சங் டெக்ஸ் பெரிய திரை, கீபோர்டு மற்றும் மவுஸ் கொண்டு பயன்படுத்துவதற்கென பிரத்தியேக ஆண்ட்ராய்டு UI வடிவமைக்கப்பட்டுள்ளதாக சாம்சங் தெரிவித்துள்ளது. சாம்சங் டெக்ஸ் உருவாக்குவதற்கு மைக்ரோசாப்ட் மற்றும் அடோப் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்துள்ளது. இதனால் அந்நிறுவன சேவைகளையும் பயன்படுத்த முடியும்.

புதிய சாதனம் எச்டிஎம்ஐ போர்ட் மூலம் திரையில் இணைந்து கொண்டு, யுஎஸ்பி அல்லது ஆர்எஃப் கேபிள் கொண்டு கீபோர்டு மற்றும் மவுஸ் கொண்டு பயன்படுத்தலாம். இத்துடன் யுஎஸ்பி 2.0, ஈத்தர்நெட், யுஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் கூலிங் ஃபேன் உள்ளிட்டை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
சில சந்தைகளில் சாம்சங் டெக்ஸ் S8 ஸ்மார்ட்போன்களுடன் இலவசமாக வழங்கப்படலாம் என கூறப்பட்டாலும், தனியே வாங்கும் போது இதன் விலை ரூ.10,500 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சீனாவின் தென்மேற்கு நகரத்தில் மக்கள் விபிஎன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி அங்கு விபிஎன் பயன்படுத்துவோருக்கு அபராதம் மற்றும் தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பீஜிங்:
சீனாவில் இருந்து குறிப்பிட்ட நகரத்தில் இண்டர்நெட் பயன்படுத்தும் போது அந்நாட்டின் மிகவும் பாதுகாப்பான கிரேட் ஃபயர்வால் தடுப்பை கடந்து விர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க் (virtual private networks -VPNs) பயன்படுத்துவோருக்கு அபராதம், மற்றும் தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிரேட் ஃபயர்வால் மூலம் அந்நாட்டில் இண்டர்நெட் மூலம் குற்றசம்பவங்களை ஊக்குவிக்கும் தரவுகள் சென்சார் செய்யப்பட்டு வருகின்றது.
சீனாவின் தென்மேற்கு பகுதியான சாங்கிங் நகராட்சியின் புதிய விதிமுறைகளின் படி சீனாவின் கிரேட் ஃபயர்வால் கடந்து விபிஎன் பயன்படுத்துவோர் தண்டிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் சட்டம் மற்றும் சைபர்-ஸ்பேஸ் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டுப்பாடுகளின் படி சட்டவிரோத சேனல்கள் மற்றும் விதிமுறைகளை மீறும் சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு 15,000 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.1,41,259 வரை அபராதம் விதிக்கப்படும் என சாங்கிங் நகராட்சியின் பொது பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் புதிய கட்டுப்பாடுகள் சீனா முழுக்க விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
சீனாவின் கிரேட் ஃபயர்வால் நெட்வொர்க் கட்டமைக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக சீனா முழுக்க பல்வேறு இண்டர்நெட் பயன்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உலகின் பிரபல சமூக வலைத்தளங்களான கூகுள், பேஸ்புக், ட்விட்டர் மற்றும் யூடியூப் உள்ளிட்டவை அங்கு தடை செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
கணினிகளை தற்போது இருப்பதை விட பல மடங்கு வேகமாக இயக்க உதவும் சாதனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது எவ்வாறு வேலை செய்கிறது என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
சான்பிரான்சிஸ்கோ:
கம்ப்யூட்டர்களின் வேகம் எந்நேரமும் ஒரே மாதிரி இருக்காது. பல்வேறு காரணங்களால் கணினிகளின் வேகம் குறையும். இந்த பிரச்சனையை எதிர்கொண்டு கணினிகளை அதிவேகமாக இயக்க இன்டெல் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு தான் ஆப்டேன்.
ஆப்டேன் என்பது இன்டெல் நிறுவனத்தின் சமீபத்திய மெமரி மாட்யூல் ஆகும். ஆப்டேன் சாதனம் ரேம் மற்றும் பிளாஷ் மெமரியை இணைத்து கணினியின் வேகத்தை அதிகரிக்கும். எதுவானாலும் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கினாலே போதும் என்பவர்களுக்கு புதிய மெமரி மாட்யூல் சிறப்பானதாக இருக்கும்.
கம்ப்யூட்டர்களின் மென்பொருளுடன் இணைந்து வேலை செய்யும் ஆப்டேன், கேச்சி மெமரிக்களை இயக்கி கணினியின் வேகத்தை குறையாமல் பார்த்து கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்டேன் இருந்தால் கம்ப்யூட்டர் ஆன் ஆகும் நேரமும் அதிகமாக எடுத்து கொள்ளாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கணினியை வேகமாக இயக்க ஆப்டேன் மெமரி மாட்யூல்களில் பிரத்தியேக பொருள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் கம்ப்யூட்டரின் வேகம் இதுவரை இருப்பதை விட 28% அதிகமாக இருக்கும் என இன்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆப்டேன் இருந்தால் வழக்கமாக கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படும் மென்பொருள்களும் வழக்கத்தை விட வேகமாக இயங்கும் என இன்டெல் தெரிவித்துள்ளது.
ஆப்டேன் மெமரி மாட்யூல் இன்டெல் கோர் i7 சிபியுக்களுடன் வேலை செய்யும் என்றும் இவற்றின் விநியோகம் ஏப்ரல் மாதம் முதல் துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விலையை பொருத்த வரை 16 ஜிபி 44 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ. 2,863 மற்றும் 32 ஜிபி 77 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.5,010 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆப்டேன் மெமரி மாட்யூல்களை பயன்படுத்த ஆப்டேன் சப்போர்ட் செய்யும் மதர்போர்டு அவசியமாகும். இவை ஏற்கனவே சந்தையில் கிடைக்கின்றது.
டேட்டாவிண்ட் நிறுவனத்தின் புதிய பேப்லெட் சாதனம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 6.0 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ள புதிய சாதனத்தின் முழு சிறப்பம்சங்களை இங்கு பார்ப்போம்.
புதுடெல்லி:
டேட்டாவிண்ட் நிறுவனத்தின் புதிய பேப்லெட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மலிவு விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய பேப்லெட் மோர்ஜிமேக்ஸ் 3G6 (MoreGMax) என அழைக்கப்படுகின்றது. இந்த சாதனத்துடன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருடத்திற்கு இலவச இண்டர்நெட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இண்டர்நெட் வசதியினை வழங்க டேட்டாவிண்ட் நிறுவனம் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. சிறப்பம்சங்களை பொருத்த வரை 6.0 இன்ச் டிஸ்ப்ளே, 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர், 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், 2 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. டூயல் சிம் ஸ்லாட் கொண்டுள்ள இந்த பேப்லெட்டில் 3ஜி கனெக்டிவிட்டி வசதி வழங்கப்பட்டுள்ளது. இதில் வழங்கப்பட்டுள்ள பேட்டரி திறன் குறித்து எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.
டேட்டாவிண்ட் மோர்ஜிமேக்ஸ் 3G6 கருப்பு நிறம் கொண்டுள்ளது. இதன் விலை இந்தியாவில் ரூ.5,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விற்பனை தேதி குறித்தும் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.
ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட்களை அறிமுகம் செய்துள்ளது. இவை அந்நிறுவனம் இதுவரை வெளியிட்டதில் மிகவும் குறைந்த விலையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சான்பிரான்சிஸ்கோ:
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபேட் சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐபேட் மினி 4, இரண்டு ஐபேட் ப்ரோ சாதனங்கள் மற்றும் புதிய ஐபேட் உள்ளிட்ட சாதனங்களை வெளியிட்டுள்ளது. புதிய ஐபேட் சாதனங்கள் மார்ச் 24 ஆம் தேதி முதல் முன்பதிவு செய்யப்படுகின்றது.
ஆப்பிள் அறிமுகம் செய்துள்ள புதிய ஐபேட் 9.7 இன்ச் திரை கொண்ட மாடல் 329 டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ. 21,528 என இதுவரை இல்லாத அளவு குறைந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
9.7 இன்ச், 32 ஜிபி மெமரி, வை-பை கொண்ட ஐபேட் ஏப்ரல் மாதம் விற்பனைக்கு வரும் என்றும் இதன் விலை ரூ.28,900 என்றும், 32ஜிபி, வை-பை மற்றும் செல்லுலார் மாடல் ரூ.39,900 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 128 ஜிபி மெமரி கொண்ட ஐபேட் மினி 4 விலை 399 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.34,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய ஐபேட் சாதனங்களில் அதிவேக A9 சிப் மற்றும் பிரகாசமான திரை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஏற்கனவே வெளியிடப்பட்ட ஐபேட் ஏர் 2-வை விட சற்றே பெரியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் மாடல்களின் சிவப்பு நிற ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் ஒன்றும் வெளியிடப்பட்டது. இதே போல் ஐபோன் SE மாடல் 32 மற்றும் 128 ஜிபி மெமரிக்களில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
புதிய சாதனங்களுடன் வீடியோக்களை உருவாக்கி, அதனை ஐஓஎஸ் சாதனங்களை பயன்படுத்தும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதியை வழங்கும் செயலியையும் ஆப்பிள் அறிமுகம் செய்துள்ளது.
கிளிப்ஸ் (clips) என பெயரிடப்பட்டுள்ள புதிய செயலியில் வீடியோக்களை அழகாக்க பல்வேறு வசதிகளும், இவற்றை பேஸ்புக், இன்ஸ்டாகிராம் அல்லது ஆப்பிளின் சொந்த குறுந்தகவல் செயலிகளில் பகிர்ந்து கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஸ்மார்ட்போன்களின் வரிசையில் இந்த ஆண்டு புதிய சாதனம் ஒன்று வெளியாக இருக்கிறது. அதன்படி பெரிய திரை கொண்ட பிக்சல் ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
சான்பிரான்சிஸ்கோ:
கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட பிக்சல் மற்றும் பிக்சல் XL ஸ்மார்ட்போன்களின் அடுத்த தலைமுறை மாடல்கள் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மஸ்கீ மற்றும் வேலீ என்ற பெயரில் இவை தயாரிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில் கூகுள் நிறுவனம் மூன்றாவது சாதனம் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கூகுள் உருவாக்கி வரும் மூன்றாவது சாதனம் தய்மீன் என்ற பெயரில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. தய்மீன் என்பது பெரிதாக இருக்கும் மீன் ஆகும். இதனால் கூகுள் உருவாக்கி வரும் தய்மீன் ஸ்மார்ட்போனில் பெரிய திரை வழங்கப்படும் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.
பெரும்பாலும் இது டேப்லெட் சாதனமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த சாதனத்திற்கு பிக்சல் பிரான்டிங் வழங்கப்பட மாட்டாது என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் வரை பெரிய கூகுள் சாதனம் குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை.
முன்னதாக வெளியான தகவல்களில் பிக்சல் 2017 சாதனங்களின் டிஸ்ப்ளே மற்றும் கேமரா உள்ளிட்ட அம்சங்கள் அதிகம் மேம்படுத்தப்படலாம் என கூறப்பட்டது. இத்துடன் இவற்றில் தூசு மற்றும் தண்ணீர் மூலம் பாதிக்காத படி வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிளே ஸ்டேஷன் சாதனம் இன்றி விண்டோஸ் கணினிகளிலும் பிளே ஸ்டேஷன் கேம்களை விளையாட புதிய சேவை துவங்கப்பட்டுள்ளது. பிளே ஸ்டேஷன் நௌ என பெயரிடப்பட்டுள்ள இந்த சேவையின் முழு தகவல்களை பார்ப்போம்.
சான்பிரான்சிஸ்கோ:
சோனியின் பிளே ஸ்டேஷன் சாதனத்தை வாங்காமல் அதன் கேம்களை விண்டோஸ் கணினியில் விளையாட பிளே ஸ்டேஷன் நௌ எனும் சேவை துவங்கப்பட்டுள்ளது. பிளே ஸ்டேஷன் நௌ பயன்படுத்தி பிளே ஸ்டேஷன் 4 கேம்களை விண்டோஸ் இயங்குதளம் கொண்ட கணினிகளில் விளையாட முடியும்.
தற்சமயம் பிளே ஸ்டேஷன் நௌ சேவைக்கான சோதனை நடைபெற்று வரும் நிலையில் இதன் வெளியீட்டு தேதி குறித்து எவ்வித தகவலும் இல்லை. பிளே ஸ்டேஷன் நௌ சந்தா சோதனை அடிப்படையில் ஏழு நாட்களுக்கு மட்டும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதை தொடர்ந்து மாதம் 19.99 டாலர்கள் அதாவது ரூ. 1322, மூன்று மாதங்களுக்கு 44.99 டாலர்கள் அதாவது ரூ. 2976 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பிளே ஸ்டேஷன் நௌ சேவையில் பிரத்தியேக கேம்கள் மற்றும் பல்வேறு புதிய கேம்களும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையின் கீழ் கேம்களை விளையாட குறைந்த பட்சம் 5 எம்பி (5 mbps) அல்லது அதற்கும் அதிகமான இண்டர்நெட் வேகம் தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளே ஸ்டேஷன் நௌ சேவையின் கீழ் பிளே ஸ்டேஷன் 3, பிளே ஸ்டேஷன் 4 கன்சோல் கேம், கன்சோல்களுக்கு வழங்கப்படும் பிரத்தியேக கேம் உள்ளிட்ட பல்வேறு தரவுகளை பயன்படுத்த முடியும். கேமிங் சாதனங்களை தவிர்த்து கணினியில் கேமிங் விளையாடுவோருக்கு இந்த புதிய சேவை பயனுள்ளதாக இருக்கும்.






