என் மலர்
கணினி
சான்டிஸ்க் நிறுவனம் புதிய-ரக பிளாஷ் டிரைவ் மற்றும் மெமரி கார்டு சாதனங்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் இவற்றின் விற்பனை தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
பிளாஷ் தொழில்நுட்பத்திற்கான அடுத்தக்கட்ட சாதனங்களை சான்டிஸ்க் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதன் படி எக்ஸ்ட்ரீம் ப்ரோ மற்றும் எக்ஸ்ட்ரீம் கோ யுஎஸ்பி பிளாஷ் டிரைவ் மற்றும் சான்டிஸ்க் அல்ட்ரா 256 ஜிபி மைக்ரோ எஸ்டி கார்டு உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
எக்ஸ்ட்ரீம் ப்ரோ 128 ஜிபி மாடல் விலை ரூ.8,490, 256 ஜிபி மாடல் ரூ.13,990, எக்ஸ்ட்ரீம் கோ 64 ஜிபி விலை ரூ.3,990, 128 ஜிபி ரூ.5,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதே போல் சான்டிஸ்க் அல்ட்ரா 256 ஜிபி மைக்ரோ எஸ்டி கார்டு ரூ.18,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த சாதனங்கள் ஆன்லைனில் அமேசான் தளத்திலும், தேர்வு செய்யப்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களிலும் விற்பனை செய்யப்படும் என்றும் விற்பனை ஏப்ரல் 1 ஆம் தேதி துவங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
64 ஜிபி மற்றும் 128 ஜிபி என இரு மாடல்களில் கிடைக்கும் புதிய சான்டிஸ்க் எக்ஸ்ட்ரீம் கோ யுஎஸ்பி 3.1 முறையே நொடிக்கு 200 எம்பி மற்றும் 150 எம்பி வேகத்தில் தகவுகளை பரிமாற்றம் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் எக்ஸ்ட்ரீம் ப்ரோ யுஎஸ்பி 3.1 128 மற்றும் 256 ஜிபி மாடல்களில் கிடைக்கிறது. இவை முறையே நொடிக்கு 420 எம்பி மற்றும் 380 எம்பி வேகத்தில் தரவுகளை பரிமாற்றம் செய்யும் வல்லமை கொண்டவையாகும்.
ஆப்பிள் நிறுவனத்தின் புத்தம் புதிய ஐபேட் சாதனங்கள் மிக விரைவில் அறிமுகம் மற்றும் இவற்றின் அறிமுக தேதி உள்ளிட்ட தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
சான்பிரான்சிஸ்கோ:
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபேட் சாதனங்கள் மிக விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சமீபத்தில் இது குறித்து வெளியாகியுள்ள தகவல்களில் புதிய ஐபேட் சாதனங்கள் ஏப்ரல் 4 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டுள்ளது.
ஏப்ரல் 4 ஆம் தேதி வரை 12.9 இன்ச் கொண்ட ஐபேட் ப்ரோ சாதனம் விற்பனைக்கு வராது என்ற தகவலை தொடர்ந்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்சமயம் 12.9 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட ஐபேட் ப்ரோ விற்பனைக்கு இருப்பு இல்லை என்ற தகவல் இடம்பெற்றுள்ளது.
நடைபெற இருப்பதாக கூறப்படும் ஆப்பிள் அறிமுக விழா, மிகவும் பிரம்மாண்டமாக கட்டமைக்கப்பட்டு வரும் புத்தம் புதிய ஆப்பிள் வளாகத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விழாவிற்கான அழைப்பிதழ்கள் விரைவில் ஆப்பிள் சார்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

புதிய ஐபேட்களை பொருத்த வரை 10.5 இன்ச் ஐபேட் ஒன்றும் புதிய 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ மற்றும் 9.7 இன்ச் ஐபேட் ப்ரோ உள்ளிட்டவை வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களிலும் இரண்டு அல்லது மூன்று ஐபேட்கள் வெளியிடப்படலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆப்பிளின் 9.7 இன்ச் ஐபேட் ப்ரோவிற்கான பாகங்களை இரண்டாம் நிலை விநியோகஸ்தர்களும், எல்இடி மாட்யூல்களை கொரியாவை சேர்ந்த நிறுவனமும் விநியோகம் செய்ய இருப்பதாக கூறப்படுகின்றது. 10.5 இன்ச் அல்லது 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ சாதனத்தில் A10X பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகின்றது. 9.7 இன்ச் ஐபேட் மாடல் ஆப்பிளின் A9 சிப் கொண்டிருக்கும் என கூறப்படுகின்றது.
தற்சமயம் கிடைத்துள்ள தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் ஆப்பிள் பார்க் 2 வளாகத்தின் துவக்க நிகழ்ச்சி மற்றும் ஐபேட் ப்ரோ அறிமுகம் என ஒரே விழாவில் இரண்டு நிகழ்ச்சிகளை ஆப்பிள் நடத்தலாம்.
மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது சேவையில் பிழைகளை எடுத்துரைக்கும் ஹேக்கர்களுக்கு இதுவரை வழங்கி வந்த சன்மானத்தை குறிப்பிட்ட காலத்திற்கு இருமடங்கு வரை உயர்த்தியுள்ளது.
சான்பிரான்சிஸ்கோ:
மைக்ரோசாப்ட் நிறுவனம் உலகம் முழுக்க வழங்கி வரும் சேவைகளில் பிழைகளை கண்டறிந்து தகவல் வழங்கும் ஹேக்கர்களுக்கு அந்நிறுவனம் குறிப்பிட்ட அளவு சன்மானம் வழங்கி வருகிறது. குறைந்த பட்சம் 500 டாலர்கள் முதல் அதிகபட்சம் 15000 டாலர்கள் வரை வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் மார்ச் 1 முதல் மே 1 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் வரை ஹேக்கர்கள் மைக்ரோசாப்ட் சேவைகளில் கண்டறியும் பிழைகளில் உண்மையென மைக்ரோசாப்ட் உறுதி செய்யும் பட்சத்தில் இருமடங்கு சன்மானம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக உறுதி செய்யப்படும் பிழைகளின் மூலம் ஹேக்கர்கள் அதிகபட்சம் 30,000 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.19,99,395 வரை சன்மானமாக பெற முடியும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. எனினும் மைக்ரோசாப்ட் வழங்கும் சன்மானம் ஹேக்கர் தெரிவிக்கும் பிழையை பொருத்தது ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
லெனோவோ நிறுவனத்தின் புதிய நோட்புக் சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. லெனோவோ யோகா 520 மற்றும் யோகா 720 மற்றும் Miix 320 லேப்டாப்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
பார்சிலோனா:
இரண்டு யோகா நோட்புக்களிலும் ஏழாம் தலைமுறை இன்டெல் சிப்செட் மற்றும் விண்டோஸ் 10 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. லெனோவோ யோகா 720 மாடலில் 13.0 இன்ச் மற்றும் 15.0 இன்ச் டிஸ்ப்ளே என இருவித அளவுகளில் வழங்கப்படுகிறது. பிளிப் டிஸ்ப்ளே கொண்டுள்ளதால் இவற்றை நோட்புக்கினை நார்மல் மோடு, டெண்ட் மோடு மற்றும் டேப்லெட் மோட்களில் பயன்படுத்த முடியும்.
15.0 இன்ச் யோகா 720 பிரீமியம் மாடலில் Nvidia GeForce GTX 1050 பிராசஸர் வழங்கப்படுகிறது. 13 இன்ச் மாடலில் இன்டெல் சிபியு மற்றும் கிராபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இரு லேப்டாப்களிலும் 16 ஜிபி ரேம் மற்றும் 1TB HDD அல்லது 512GB எஸ்எஸ்டி ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. இத்துடன் மூன்று தன்டர்போல்ட் போர்ட் வழங்கப்படுகிறது. இதே போர்ட் சார்ஜிங் போர்ட் மற்றும் கைரேகை ஸ்கேனர் வசதிகளையும் வழங்குகிறது.
15.0 இன்ச் மற்றும் 13.0 இன்ச் மாடல்களும் 4K ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே கொண்டுள்ளதாகவும் இவை 7 மற்றும் 7 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும் என்றும் கூறப்படுகிறது. இத்துடன் 1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட மாடலும் கிடைக்கிறது, இதில் 1 மணி நேரம் பேட்டரி கூடுதலாக கிடைக்கும்.

13.0 இன்ச் லெனோவோ யோகா 720 மாடல் விலை 999 யூரோ அதாவது இந்திய மதிப்பில் ரூ.71,000, 15.0 இன்ச் 1,099 யூரோ அதாவது இந்திய மதிப்பில் ரூ.78,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை ஏப்ரல் மாதம் விற்பனைக்கு வருகிறது.
புதிய யோகா 520 பட்ஜெட் விலையில் 14.0 இன்ச் மற்றும் 15.0 இன்ச் மாடல்களில் கிடைக்கிறது. இதில் 14.0 இன்ச் மாடலில் ஃபுல்எச்டி ரெசல்யூஷனும் 15.0 இன்ச் மாடலில் 4K ரெசல்யூஷன் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. 720 சீரிஸ் போன்றே இதிலும் 16 ஜிபி ரேம் மற்றும் 1TB HDD அல்லது 512GB எஸ்எஸ்டி ஸ்டோரேஜ் மற்றும் புதிய கேபி-லேக் பிராசஸர் வழங்கப்படுகிறது. இத்துடன் யுஎஸ்பி டைப்-சி, எச்டிஎம்ஐ போர்ட், கைரேகை ஸ்கேனர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இதன் விலை 599 யூரோ அதாவது இந்திய மதிப்பில் ரூ.43,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இத்துடன் Miix 320 என்ற பெயரில் புதிய நோட்புக்கினை அறிமுகம் செய்துள்ளது. 10.1 இன்ச் டிஸ்ப்ளே, இன்டெல் Atom X5 பிராசஸர் மற்றும் இன்டெல் எச்டி கிராபிக்ஸ் மற்றும் 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. இதன் விலை 269 யூரோ அதாவது இந்திய மதிப்பில் ரூ. 19,000 என்றும் எல்டிஇ கொண்ட மாடல் விலை 399 யூரோ அதாவது இந்திய மதிப்பில் ரூ.28,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி டேப் S3 சாதனத்தின் புகைப்படம் இணையத்தில் கசிந்தது. அதில் புதிய சாம்சங் டேப்லெட்டில் வழங்கப்பட இருக்கும் சில சிறப்பம்சங்களும் வெளியாகின.
சியோல்:
சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் புதிய சாம்சங் கேலக்ஸி டேப் S3 அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த சாதனத்தின் புதிய புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இம்முறை வெளியான புகைப்படமும் ஏற்கனவே வெளியான புகைப்படத்தில் காணப்பட்ட சாதனம் போன்றே இருக்கிறது. இத்துடன் கூடுதலாக கீபோர்டு ஒன்றும் காணப்படுகிறது.
புதிய புகைப்படத்தில் சாம்சங் டேப்லெட்டுடன் காணப்படும் கீபோர்டு சர்பேஸ் கவர் அல்லது ஐபேட் ப்ரோ ஸ்மார்ட் கீபோர்டு போன்று காட்சியளிக்கிறது. எனினும் இந்த சாதனம் ஐபேட் ப்ரோ போன்று ஸ்மார்ட் கனெக்டர் கொண்டிருக்குமா அல்லது ப்ளூடூத் வசதி வழங்கப்படுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

இத்துடன் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போனில் முதலில் வழங்கப்பட்ட சாம்சங் நோட்ஸ் ஆப் இந்த டேப்லெட்டில் வழங்கப்படுவதை புதிய புகைப்படம் தெரியப்படுத்தியுள்ளது. மேலும் இந்த டேப்லெட்டுடன் சாம்சங் S-பேனா வழங்கப்படும் என்றும், இதில் எல்டிஇ வசதி கொண்ட மாடலும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சாதனத்தின் திரையில் ஏப்ரல் 4 என்ற தேதி இடம் பெற்றுள்ளது. இது பெரும்பாலும் விற்பனை தேதியாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் சாம்சங் நிறுவனத்தின் அறிமுக விழா பார்சிலோனாவில் வரும் ஞாயிற்று கிழமை நடைபெற இருக்கிறது.
இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் சார்ந்த பயன்பாடு அதிகரித்து வருவதால், இணைவாசிகள் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் புதிய இயங்குதளம் ஒன்றை கேஸ்பர்ஸ்கை அறிமுகம் செய்துள்ளது.
சான்பிரான்சிஸ்கோ:
சைபர் பாதுகாப்பு சார்ந்த பிரபல நிறுவனமான கேஸ்பர்ஸ்கை புதிய இயங்குதளம் ஒன்றை வெளியிட்டுள்ளது. கேஸ்பர்ஸ்கை ஓஎஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த இயங்குதளம் இண்டர்நெட் ஆஃப் திங்ஸ், நெட்வொர்க் சாதனங்களில் வேலை செய்யும் படியும், தொழில்துறை இயக்கம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியும்.
கேஸ்பர்ஸ்கை அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களில் இந்த இயங்குதளத்தை 14 ஆண்டுகளாக பணியாற்றி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 11-11 என பெயரிடப்பட்டிருந்தது. நவம்பர் 11 ஆம் தேதி இந்த இயங்குதள பணிகள் எடுக்கப்பட்டதால் இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பற்ற சாதனங்களின் பாதுகாப்பை அதிகபடுத்தவே இந்த இயங்குதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கேஸ்பர்ஸ்கை ஓஎஸ் அல்லது கேஸ்பர்ஸ்கை இயங்குதளம் விண்டோஸ், மேக் ஓஎஸ் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களில் வேலை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சர்ஃபேஸ் புக் சாதனத்துடன் மோதும் நோக்கில் புதிய கேலக்ஸி புக் சாதனத்தை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சியோல்:
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் சாம்சங் சத்தமில்லாமல் உருவாக்கி வரும் புதிய சாதனம் சார்ந்த தகவல்கள் வெளியாகியுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சர்பேஸ் புக் சாதனத்துடன் மோதும் நோக்கில் கேலக்ஸி புக் என்ற சாதனத்தை சாம்சங் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி புக் விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்டு இயங்கும் என கூறப்படுகிறது. இத்துடன் கான்பிகரேஷன் செட்டிங்ஸ்களை இயக்க பிரத்தியேக செயலி ஒன்றும் வழங்கப்படலாம். மற்ற கணினிகளில் இந்த செயலியை டவுன்லோடு செய்ய முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கேலக்ஸி புக் சாதனம் மைக்ரோசாப்ட் டேப்லெட்டிற்கு போட்டியாக அமையும் என விண்டோஸ் ஸ்டோர் செயலியின் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலி விண்டோஸ் கணினி, சர்பேஸ் ஹப் மற்றும் ஹோலோ லென்ஸ் உள்ளிட்டவற்றில் இயங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனாலேயே இந்தசாதனம் சர்பேஸ் புக்கிற்கு போட்டியாக இருக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது.
புதிய கேலக்ஸி புக் சாதனத்தின் செட்டிங்ஸ் ஆப்ஷன்களில் ஸ்கிரீன் மோடு, யூசர் மேனுவல், பேட்டரி லைஃப் எக்ஸ்டென்டர், பேட்டன் லாக்-இன் மற்றும் பல்வேறு இதர சாம்சங் அம்சங்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இது தவிர இந்த சாதனத்தில் வழங்கப்பட இருக்கும் மற்ற சிறப்பம்சங்கள் குறித்து எவ்வித தகவல்களும் தற்சமயம் வரை வெளியாகவில்லை.
பிரபல வன்பொருள் பிரான்டான ரேசர், தனது கேமிங் லேப்டாப்களை மேம்படுத்தியுள்ளது. அதன் படி லேப்டாப்களுக்கு புதிய வகை பிராசஸர்கள் வழங்கப்பட்டுள்ளது.
கலிபோர்னியா:
ரேசர் பிளேடு கேமிங் லேப்டாப்கள் மீண்டும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இம்முறையும் கடந்த ஆண்டை போன்றே மெல்லிய வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பரில் ஸ்கைலேக் பிராசஸர்கள் வழங்கப்பட்ட நிலையில் இம்முறை கேபிலேக் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.
ரேசர் பிளேடு லேப்டாப் சிறப்பம்சங்களை பொருத்த வரை 14.0 இன்ச் 1920x1800 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, 2.8 ஜிகாஹெர்ட்ஸ் கோர் i7-7700 கேபிலேக் சிப்செட், 16ஜிபி ரேம், Nvidia GTX 1060 GPU மற்றும் 6ஜிபி VRAM மற்றும் 256ஜிபி, 512 ஜிபி மற்றும் 1000 ஜிபி ஸ்டோரேஜ் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.
ரேசர் பிளேடு புதிய அப்டேட்களுக்கு ரூ.6,700 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை யுஎஸ்பி டைப்-சி போர்ட் தன்டர்போல்ட் 3 மற்றும் மூன்று யுஎஸ்பி 3.0 போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் HDMI 2.0 ஆடியோ மற்றும் வீடியோ அவுட்புட், 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 4K UHD 3840x2160 ரெசல்யூஷன் கொண்ட டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே. அமெரிக்காவில் ரேசர் பிளேடு விற்பனை பிப்ரவரி 20 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏசர் நிறுவனம் தனது ஸ்பின் ரக லேப்டாப்களில் புதிய மாடல் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதன் படி ஏசர் ஸ்பின் 3 லேப்டாப் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.
புதுடெல்லி:
விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்டு இயங்கும் ஏசர் ஸ்பின் 3 லேப்டாப்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. டூ-இன்-ஒன் ரக கன்வெர்டிபிள் லேப்டாப்கள் இந்தியாவில் அனைத்து வர்த்தகர்களிடமும் விற்பனைக்கு வந்துள்ளது. 15.6 இன்ச் 768x1366 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட எச்டி டிஸ்ப்ளே IPS வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ.42,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்களை பொருத்த வரை 2.3 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் கோர் i3 பிராசஸர், 4ஜிபி ரேம் மற்றும் 500ஜிபி ஹார்டு டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது. 10 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும் இந்த லேப்டாப்பில் வசதியாக டைப் செய்ய ஏதுவாக 1.6 எம்எம் கீஸ்டிரோக் கீபோர்டு வழங்கப்பட்டுள்ளது.
யுஎஸ்பி 3.1 டைப்-சி போர்ட் கொண்டுள்ள ஏசர் ஸ்பின் 3 லேப்டாப் மூலம் தரவுகளை வேகமாக டிரான்ஸ்ஃபெர் செய்யும் வசதி, கூடுதல் டிஸ்ப்ளேவுடன் இணைக்கும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டால்பி ஆடியோ வசதியும், எச்டி தரம் கொண்ட வெப்கேமரா, வை-பை போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
ஏசர் ஸ்பின் 3 லேப்டாப்பினை மூன்று விதமாக பயன்படுத்த முடியும். அதன் படி லேப்டாப், டேப்லெட், டிஸ்ப்ளே மற்றும் டென்ட் என வாடிக்கையாளர்கள் தங்களின் வசதிக்கு ஏற்ப ஏசர் ஸ்பின் 3 லேப்டாப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் S2 சாதனத்திற்கு விரைவில் ஆண்ட்ராய்டு நௌக்கட் அப்டேட் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சியோல்:
தொழில்நுட்ப சாதனங்கள் குறித்த தகவல்களை வழங்குவது குறித்து கிட்டத்தட்ட உறுதியான தகவல்களை வழங்குவதில் பென்ச்மார்க்கிங் இணையத்தளங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றன. இவை வழங்கும் சிறப்பம்சங்கள் பெரும்பாலும் நம்பத் தகுந்தவையாகவே இருந்து வருகின்றன.
அந்த வகையில் பென்ச்மார்க்கிங் தளத்தில் இருந்து வெளியாகியுள்ள புதிய தகவல்களில் சாம்சங் கேலக்ஸி டேப் S2 சாதனம் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன் படி கேலக்ஸி டேப் S2 சாதனத்தில் 8.0 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது.
தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் இந்த சாதனம் SM-T719 என்ற மாடல் நம்பர் கொண்டுள்ளது. எனினும் தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களில் இது 2016-இல் வெளியான கேலக்ஸி டேப் சாதனத்தின் அப்டேட் செய்யப்பட்ட மாடல் என்பதை வெளிப்படுத்துகிறது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட இந்த சாதனம், குவால்காம் ஸ்னாப்டிராகன் 652 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ இயங்குதளம் வழங்கப்பட்டது. இதே போல் ஐஓஎஸ் இயங்குதளத்திற்கும் அப்டேட் வழங்கப்பட இருக்கிறது. அதன்படி சாம்சங் கேலக்ஸி டேப் S2 ஆண்ட்ராய்டு நௌக்கட் 7.0 இயங்குதளம் கொண்டு இயங்குவதாக கூறப்படுகிறது.
கிங்ஸ்டன் நிறுவனத்தின் டேட்டா டிராவெல்லர் 2000 யுஎஸ்பி 3.1 டிரைவ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் தரவுகளை பாஸ்வேர்டு கொண்டு பாதுகாக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
கலிஃபோர்னியா:
கிங்ஸ்டன் நிறுவனம் டேட்டா டிராவெல்லர் 2000 யுஎஸ்பி 3.1 டிரைவினை அறிமுகம் செய்துள்ளது. ஆல்ஃபாநியூமெரிக் கீபேட் கொண்டுள்ள இந்த டிரைவ் அதனுள் இருக்கும் தரவுகளை பாஸ்வேர்டு கொண்டு பாதுகாக்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் XTS மோடு AES 256-பிட் டேட்டா என்க்ரிப்ஷன் வசதி கொண்ட வன்பொருள் வழங்கப்பட்டுள்ளது.
என்க்ரிப்ஷன் செய்யப்படுவதால் இந்த டிரைவினுள் வைக்கப்படும் தரவுகள் பாதுகாப்பாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. என்க்ரிப்ஷன் வசதி மூலம் ஆபத்து நேரத்தில் முழுமையான தகவல்களும் எவ்வித சுவடுகளும் இன்றி அழிக்கப்பட்டு விடுகிறது.
FIPS 197 சான்று பெற்றிருப்பதால் உயர் ரக என்க்ரிப்ஷன் செய்யப்படுகிறது. மேலும் இதன் வடிவமைப்பு இதனை தூசு மற்றும் நீர் மூலம் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெமரியை பொருத்த வரை கிங்ஸ்டன் யுஎஸ்பி 3.1 டிரைவில் 16 ஜிபி, 32 ஜிபி மற்றும் 64 ஜிபி வரை வழங்கப்பட்டுள்ளன. இவற்றின் விலை முறையே ரூ.10,000, ரூ.14,000 மற்றும் ரூ.18,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கிடைக்கும் தலைசிறந்த லேப்டாப்களின் டாப் 5 பட்டியலில் இடம் பிடித்துள்ளவை எவை என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
புதுடெல்லி:
மலிவு விலையில் லேப்டாப் வாங்க வேண்டுமா? இந்திய சந்தையில் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் போன்றே மலிவு விலையில் லேப்டாப்களும் கிடைக்கின்றன. அதிக மாடல்கள் கிடைக்கவில்லை என்றாலும் குறைந்த விலையில் வாங்க சில மாடல்கள் கிடைக்கின்றன.
இங்கு ரூ.15,000 விலையில் கிடைக்கும் டாப் 5 லேப்டாப்களை இங்கு பார்ப்போம்.
ஆர்டிபி தின்புக் (RDP ThinBook):
ஆகஸ்டு 2016-ல் அறிமுகமான ஆர்டிபி தின்புக் 14-இன்ச் லேப்டாப் ரூ.9,999 என்ற விலையில் கிடைக்கின்றது.
விண்டோஸ் 10 இயங்குதளம், 2ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி வரை மெமரியை நீட்டிக்கும் வசதி மற்றும் 10,000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.
லெனோவோ ஐடியாபேட் 100S (Lenovo IdeaPad 100S):
இந்தியாவில் ரூ.14,999 விலையில் கிடைக்கும் இந்த லேப்டாப் விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.
11.6 இன்ச் எச்டி டிஸ்ப்ளே, 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி வரை மெமரியை நீட்டிக்கும் வசதியும் 2-செல் 39Whr பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.
ஐபால் எக்செம்ப்ளேர் காம்ப்புக் (iBall Exemplaire CompBooK):
ஐபால் எக்செம்ப்ளேர் லேப்டாப் 14 இன்ச் 1366x768 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது. விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்டுள்ள இந்த லேப்டாப் 10,000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
இந்தியாவில் ஐபால் எக்செம்ப்ளேர் காம்ப்புக் லேப்டாப் விலை ரூ.13,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் LT666 லேப்டேப் (Micromax Canvas LT666 LapTab):
இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் LT666 லேப்டேப் ரூ.14,999 விலைக்கு கிடைக்கிறது.
இந்த லேப்டாப் 10.1 இன்ச் எச்டி டிஸ்ப்ளே, 2ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி வரை மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும், 2 எம்பி பிரைமரி மற்றும் 2 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
ஐபால் எக்செலன்ஸ் காம்ப்புக் (iBall Excellence CompBook):
இந்தியாவில் வெளியான மலிவு விலை விண்டோஸ் 10 லேப்டாப்களில் ஒன்றான ஐபால் எக்செலன்ஸ் காம்ப்புக் ரூ.9,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
சிறப்பம்சங்களை பொருத்த வரை 11.6 இன்ச் எச்டி டிஸ்ப்ளே, குவாட் கோர் பிராசஸர், 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி வரை மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் 10,000 எம்ஏஎச் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது.






