என் மலர்
கணினி
சாம்சங் நிறுவனம் இந்தியாவின் முதல் வளைந்த கேமிங் மானிட்டர் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. கேமர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்க பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் முதல் வளைந்த கேமிங் மானிட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. 1800 எம்எம் ஆரம் கொண்டுள்ள இந்த மானிட்டர் கேமர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்கும் என சாம்சங் தெரிவித்துள்ளது. இந்த மானிட்டரில் 144Hz ரீபிரெஷ் ரேட், 1 ms ரெஸ்பான்ஸ் டைம் மற்றும் குவாண்டம் டாட் தொழில்நுட்பம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
கேமர்களுக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள புதிய சாம்சங் மானிட்டர்கள் LC24FG70 மற்றும் LC27FG70 என பெயரிடப்பட்டுள்ளன. மேம்படுத்தப்பட்ட மோஷன் பிளர் ரிடக்ஷன் தொழில்நுட்பம் மற்றும் VA பேனல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இவை சிறப்பான வீடியோ அனுபவத்தை ஒவ்வொரு விதமான ஃபிரேம்களிலும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு மாடல்களிலும் AMD FreeSync தொழில்நுட்பம் சார்ந்த HDMI வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் திரையின் ரீபிரெஷ் ரேட் AMD கிராஃபிக்ஸ் கார்டுகளுடன் இணைந்து சிறப்பான அனுபவத்தை வழங்கும். இத்துடன் இதன் கனெக்டிவிட்டி படங்கள் உடைவதை நிறுத்தி, எவ்வித தடங்களும் இன்றி காட்சிகளை பிரதிபலிக்கும்.
சாம்சங் இன் வளைந்த மானிட்டர் LC24FG70 மற்றும் LC27FG70 இந்தியாவில் ரூ.35,000 மற்றும் ரூ.42,000 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் நிறுவனம் புதிய டேப்லெட் சாதனம் பிப்ரவரி 26 ஆம் தேதி நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சியோல்:
இம்மாத இறுதியில் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் சாம்சங் நிறுவனம் களமிறங்க இருப்பதை உறுதி செய்துள்ளது. அதன் படி பிப்ரவரி 26 ஆம் தேதி புதிய சாதனத்தை வெளியிட இருப்பதை சாம்சங் பத்திரிக்கை அழைப்புகளின் மூலம் தெரியப்படுத்தியுள்ளது.
சாம்சங் அழைப்பிதழின் படி வெளியாக இருக்கும் சாதனம் டேப்லெட் தான் என்பதை உறுதி செய்துள்ளது. சாம்சங் இணையத்திளத்தில் நேரலை செய்யப்பட இருக்கும் இந்த விழா பிப்ரவரி 26 ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு துவங்க இருக்கின்றது. வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் சாம்சங் சாதனத்தில் ஹோம் பட்டன் இருப்பது மற்றும் டேப்லெட் சாதனம் தான் எனப்தும் தெரியவந்துள்ளது.
அழைப்பிதழ் வெளியானதில் இருந்து சாம்சங் நிறுவனம் கேலக்ஸி டேப் S3 சாதனத்தை வெளியிடும் என கூறப்பட்டு வருகின்றது. இந்த சாதனம் கேலக்ஸி டேப் S2 சாதனத்தின் மேம்படுத்தப்பட்ட மாடலாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.
சிறப்பம்டங்களை பொருத்த வரை சாம்சங் டேப்லெட்டில் 9.7 இன்ச் 2048x1536 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 820 சிப்செட், 4ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் வழங்கப்படும் என்றும் கூறப்படுகின்றது. இத்துடன் 12 எம்பி பிரைமரி கேமரா மற்றும் வை-பை மற்றும் எல்டிஇ மாடல்களிலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் விலை 600 டாலர்கள் அகாவகது இந்திய மதிப்பில் ரூ.41,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகின்றது.
முன்னதாக வெளியான சாம்சங் கேலக்ஸி டேப் S2 சாதனத்தில் 8.0 இன்ச் மற்றும் 9.7 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டது. இரு மாடல்களும் மெலியதாகவும் எடை குறைவாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

சோனி நிறுவனத்தின் புதிய டேப்லெட் சாதனம் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
டோக்கியோ:
சோனி நிறுவனம் பல்வேறு புதிய ஸ்மார்ட்போன்களை, விரைவில் துவங்க இருக்கும் சர்வதேச விழாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் புதிய ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து டேப்லெட் சாதனங்களை சற்றே தாமதமாக வெளியிட சோனி நிறுவனம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகின்றது.
கடந்த ஆண்டின் இறுதியில் சோனி நிறுவனம் Z5 சாதனத்தை வெளியிட்டது. இந்நிலையில் அந்நிறுவனம் Z6 சாதனத்தை விரைவில் வெளியிட தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இந்த சாதனம் சோனியின் புதிய ஃபிளாக்ஷிப் சாதனமாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.
சோனி புதிய டேப்லெட் சாதனம் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டின் செப்டம்பர் மாத வாக்கில் வெளியிடப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது.
சிறப்பம்சங்களை பொருத்த வரை சோனி எக்ஸ்பீரியா Z6 டேப்லெட்டில் முந்தைய பதிப்புகளை விட அதிநவீன உயர் ரக அம்சங்கள் வழங்கப்படும். மேலும் பல்வேறு புதிய வசதிகளும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. எக்ஸ்பீரியா போன்களை போன்று இந்த டேப்லெட்டிலும் அதிநவீன கேமரா வழங்கப்படும் என கூறப்படுகின்றது.
விலையை பொருத்தவரை வழக்கமான சோனி சாதனங்களை போன்றே இதன் விலையும் அதிகமாகவே இருக்கும் என கூறப்படுகின்றது. தற்சமயம் சோனி Z4 டேப்லெட் 670 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.45,472 விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.
சோனியின் புதிய Z6 டேப்லெட் விலை 785 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.53,277 விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சாம்சங் நிறுவனத்தின் புதிய டேப்லெட் சாதனத்தின் சிறப்பம்சங்கள் ஜிஎஃப்எக்ஸ்பென்ச் (GFXbench) தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சியோல்:
சாம்சங் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் டேப்லெட்டான ‘கேலக்ஸி டேப் S3’ சார்ந்த தகவல்கள் ஜிஎஃப்எக்ஸ்பென்ச் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த டேப்லெட் சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து இம்முறை வெளியாகியிருக்கும் தகவல்களில், இந்த சாதனத்தின் முக்கிய சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன் படி புதிய டேப்லெட்டில் 2.1 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 820 சிப்செட் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் எக்சைனோஸ் 7420 சிப்செட் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இத்துடன் 9.6 இன்ச் 2048x1536 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்படலாம்.
மெமரியை பொருத்த வரை 4ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படலாம் என கூறப்படுகின்றது. மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி குறித்து எவ்வித தகவலும் இல்லை. இத்துடன் புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.
சாம்சங் கேலக்ஸி S3 டேப்லெட்டில் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் கொண்டிருக்கும் என கூறப்படுகின்றது. தற்சமயம் வரை இந்த சாதனத்தின் வெளியீட்டு தேதி குறித்து எவ்வித தகவலும் இல்லை. சாம்சங் சார்பில் புதிய டேப்லெட் சாதனம் வெளியிடுவது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
தற்சமயம் வரை சாம்சங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக கூறப்படுகின்றது. அதன் படி சாம்சங் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போன் மார்ச் மாதம் விற்பனைக்கு வரும் என இதுவரை வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

டெல் நிறுவனத்தின் புதிய லேப்டாப்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கென பிரத்தியேக பதிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
சான்பிரான்சிஸ்கோ:
டெல் நிறுவனத்தின் புதிய Latitude மற்றும் குரோம்புக் நோட்புக் சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பிரத்தியேக பதிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய சாதனங்களில் 2 இன் 1 ஸ்டான்டர்டு நோட்புக் மற்றும் Latitude சீரிஸ் குரோம்புக் உள்ளிட்டவை அடங்குகின்றது.
டெல் Latitude 11 கன்வேர்டிபில் மற்றும் குரோம்புக் 11 கன்வேர்டிபில் சாதனங்கள் டெல் நிறுவனத்தின் புதிய மாடல்கள் ஆகும். இந்த லேப்டாப்களை மடித்து டேப்லெட் போன்றும் பயன்படுத்தக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பயன்படுத்த ஏதுவாக கடினமானதாகவும், கீறல் விழாத கிளாஸ் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளது.
மற்ற சிறப்பம்சங்களை பொருத்த வரை செல்ஃபி கேமரா, வீடியோ பதிவு செய்யும் வசதி, Latitude மாடலில் இன்டெல் கேபி லேக் செலரான் அல்லது பென்டியம் பிராசஸர் மற்றும் குரோம்புக் மாடலில் 6 ஆம் தலைமுறை இன்டெல் செலரான் சிபியு வழங்கப்படுகிறது.
புதிதாய் அறிமுகம் செய்யப்பட்டுள்ள டெல் சாதனங்களில் MIL-STD-810g தர வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. 1366x768 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, வை-பை, ப்ளூடூத், எச்டிஎம்ஐ மற்றும் யுஎஸ்பி போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளன.
விலையை பொருத்த வரை 11 இன்ச் கன்வேர்டபில் லேப்டாப் விண்டோஸ் மாடல் $579 அதாவது இந்திய மதிப்பில் ரூ.39,400, குரோம் இயங்குதளம் கொண்ட பதிப்பு $349 அதாவது இந்திய மதிப்பில் ரூ.24,800 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஸ்டான்டர்டு மாடல்களான Latitude 11 $349 அதாவது இந்திய மதிப்பில் ரூ.24,800, குரோம்புக் 11 $219 அதாவது இந்திய மதிப்பில் ரூ.15,000 மற்றும் Latitude 13 $299 அதாவது இந்திய மதிப்பில் ரூ.21,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஐபால் நிறுவனத்தின் புதிய 4ஜி டேப்லெட் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்களை விரிவாக பார்ப்போம்.
புதுடெல்லி:
ஐபால் நிறுவனம் இந்தியாவில் புதிய டேப்லெட் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. Slide Nimble 4GF என பெயரிடப்பட்டுள்ள இந்த டேப்லெட் இந்தியாவில் ரூ.9,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோஸ் கோல்டு நிறத்தில் கிடைக்கும் இந்த டேப்லெட்டில் 4ஜி வோல்ட்இ தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்களை பொருத்த வரை ஐபால் Slide Nimble 4GF 8 இன்ச் 12800x800 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் சிப்செட் மற்றும் 3ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 16ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டுள்ள Slide Nimble 4GF டேப்லெட் 5 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் 2 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4ஜி வோல்ட்இ, 3ஜி, வை-பை, ப்ளூடூத் மற்றும் ஜிபிஎஸ் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளது. 21 மொழிகளை இயக்க வழி செய்யும் கீபோர்டு வழங்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஐபால் நிறுவனத்தின் Slide Q27 4G டேப்லெட் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இந்த டேப்லெட் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் சிப்செட் மற்றும் 2ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 16ஜிபி இன்டெர்னல் மெமரியும் மெமரியை கூடுதலாக 32ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டுள்ள இந்த டேப்லெட் 5 எம்பி பிரைமரி கேமராவும் 2 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.
இதன் கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை வை-பை, ப்ளூடூத், USB OTG, வை-பை டைரக்ட் போன்றவை உள்ளன. 5500 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. டூயல்-சிம் ஸ்லாட் கொண்டுள்ள இந்த டேப்லெட் இரு ஸ்லாட்டிலும் 4ஜி வசதியை வழங்குகின்றது.
கணினியில் இருக்கும் படங்களை ஐபோனிற்கு டிரான்ஸ்ஃபெர் செய்வது எப்படி என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
புதுடெல்லி:
கணினியில் இருக்கும் புகைப்படங்களை ஐபோனிற்கு டிரான்ஸ்ஃபெர் செய்வது என்பது சற்றே கடினமானதாகும். ஐபோன் சார்ந்த பணிகள் எப்போதும் கடினமானதாகவோ அல்லது சிக்கல் நிறைந்ததாகவே இருக்கும். ஆண்ட்ராய்டு இயங்குதளத்துடன் ஒப்பிடும் போது ஐபோனில் படங்களை பரிமாற்றம் செய்வது கடினமானது ஆகும். இதே நிலை ஐபேட் மற்றும் ஐபாட்களிலும் நிலவுகிறது.
விண்டோஸ் கணினி அல்லது மேக் கணினியில் இருந்து ஐபோனிற்கு படங்களை பரிமாற்றம் செய்ய முடியும். இதை செயல்படுத்த உங்களது கணினியில் ஐடியூன்ஸ் (iTunes) இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்க வேண்டும். இங்கு கணினியில் இருந்து ஐபோனிற்கு படங்களை பரிமாற்றம் செய்வது எப்படி என பார்ப்போம்.
ஐகிளவுட் (iCloud):
ஐகிளவுட் சேவையில் கணக்கினை (அக்கவுண்ட்) துவங்க வேண்டும். கூகுள் டிரைவ் மற்றும் ஒன்டிரைவ் போன்று இல்லாமல் ஐகிளவுட் சேவையில் 5ஜிபி மெமரி மட்டுமே வழங்கப்படும். அதிக மெமரி வேண்டும் என்போருக்கு இந்த சேவை அதிகளவு பயன் தராது என்றால் மற்ற சேவைகளை பயன்படுத்தலாம்.
கூகுள் டிரைவ்:
முதலில் கணினியில் இருக்கும் படங்களை கூகுள் டிரைவில் பதிவேற்றம் (அப்லோடு) செய்ய வேண்டும். பின் ஐபோனில் கூகுள் டிரைவ் இன்ஸ்டால் செய்து படங்களை தரவிறக்கம் (டவுன்லோடு) செய்து கொள்ளலாம்.
கூகுள் போட்டோஸ்:
படங்களை ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் இயக்க கூகுள் போட்டோஸ் (Photos) நல்ல சேவையாக இருக்கின்றது. கூகுள் போட்டோஸ் சேவையினை பல்வேறு சாதனங்களில் பயன்படுத்த முடியும் என்பதால் படங்களை டிரான்ஸ்ஃபெர் செய்வது எளிமையாக முடிந்து விடும்.
ஐடியூன்ஸ்:
வழக்கமான முறைகளை பின்பற்றி படங்களை கணினியில் இருந்து ஐடியூன்ஸ்-ல் அனுப்பலாம், எனினும் இதே பணியை செய்ய சின்க் (Sync) வசதியும் வழங்கப்படுகிறது.
காப்பி டிரான்ஸ்ஃபெர் (Copy Transfer):
கணினியில் இருக்கும் படங்களை ஐபோனிற்கு பரிமாற்றம் செய்ய உதவும் மூன்றாம் தரப்பு செயலியாக காப்பி டிரான்ஸ்ஃபெர் (Copy Transfer) இருக்கிறது. இந்த செயலி பழைய மற்றும் புதிய ஐஓஎஸ் இயங்குதளங்களிலும் வேலை செய்கிறது. இதனால் படங்களை பரிமாற்றம் செய்வது எளிமையாகி விடுகிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபேட் சாதனங்களின் வெளியீடு மேலும் தாமதமாக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சான்பிரான்சிஸ்கோ:
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபேட் சாதனம் குறித்த தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வந்தது. இந்நிலையில் புதிய ஐபேட் சாதனங்களின் வெளியீடு தாமதமாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய ஐபேட் சாதனங்கள் 10.5 இன்ச் அல்லது 10.9 இன்ச் திரை கொண்டிருக்கும் என கூறப்பட்டது.
தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் ஆப்பிள் ஐபேட் சாதனங்கள் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலத்தில் வெளியாகலாம் என கூறப்படுகின்றது. இதுவரை இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் புதிய ஐபேட் சாதனங்கள் வெளியாகலாம் என கூறப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இதோடு அனைவரும் வாங்கக் கூடிய விலையில் 9.7 இன்ச் திரை கொண்ட ஐபேட் சாதனத்தை ஆப்பிள் வெளியிடலாம் என கூறப்படுகின்றது. இத்துடன் 10.5 இன்ச் மற்றும் 12.9 இன்ச் திரை கொண்ட மாடல்களை வெளியிடும் என்றும் கூறப்படுகின்றது. தற்சமயம் வரை திட்டமிடப்பட்டு வரும் நிலையில் மூன்று மாடல்களும் வெளியிடப்படுமா என்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது.
ஆப்பிளின் 9.7 இன்ச் ஐபேட் சாதனங்களுக்கான பாகங்கள் இரண்டாம் நிலை விநியோகஸ்தர்களும், எல்இடி மாட்யூல்களை கொரியாவை சேர்ந்த நிறுவனமும் விநியோகம் செய்ய இருப்பதாக கூறப்படுகின்றது. 10.5 இன்ச் அல்லது 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ சாதனத்தில் A10X பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகின்றது. 9.7 இன்ச் ஐபேட் மாடல் ஆப்பிளின் A9 சிப் கொண்டிருக்கும் என கூறப்படுகின்றது.
புதிய ஐபேட்களின் தயாரிப்பு பணிகள் இம்மாதமே துவங்குவதாக கூறப்பட்டது. இதோடு புதிய ஐபேட் 9.7 இன்ச் அளவு கொண்ட ஐபேட் ப்ரோ போன்று இருக்கும் என கூறப்படுகின்றது.
நோக்கியா ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து டேப்லெட் சாதனங்களும் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அடுத்த மாதம் துவங்க இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் நோக்கியா ஆதிக்கம் சற்று அதிகமாக இருக்கும் என்றே கூறப்படுகின்றது. சமீபத்தில் விற்பனைக்கு வந்த நோக்கியா 6 ஸ்மார்ட்போன் ஒரே நிமிடத்தில் விற்று தீர்ந்தது. இந்நிலையில் நோக்கியா P1 ஸ்மார்ட்போன் மற்றும் சில சாதனங்களை நோக்கியா அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் பெயரிடப்படாத நோக்கியா டேப்லெட் தயாராகி வருவது தெரியவந்துள்ளது. இதில் புதிய டேப்லெட் சாதனம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. எச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா டேப்லெட் சாதனத்தை அடுத்த மாதம் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகின்றது.
இதுவரை வெளியாகியுள்ள தகவல்களில் புதிய நோக்கியா டேப்லெட் 18.4 இன்ச் குவாட் எச்டி 2560x1440 பிக்சல் ரெசல்யூஷன் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
மெமரியை பொருத்த வரை 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படலாம். மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியை வழங்குவது குறித்து எவ்வித தகவலும் இல்லை. புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமரா 4K பதிவு செய்யும் வசதி, ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்ஜி நிறுவனம் ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் கொண்ட புதிய டேப்லெட் சாதனத்தை உருவாக்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சியோல்:
எல்ஜி நிறுவனம் புதிய டேப்லெட் சாதனத்தை இந்தியாவில் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன் படி புதிய டேப்லெட் சாதனத்தில் வழங்கப்பட இருக்கும் தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
ப்ளூடூத் மற்றும் வைபை தொழில்நுட்பத்திற்கான சான்றளிக்கும் இணையத்தில் காணப்பட்ட புதிய எல்ஜி டேப்லெட் குறித்த தகவல்களில் ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் வழங்கப்படலாம் என்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து வெளியான தகவல்களில் புதிய எல்ஜி டேப்லெட் LG-P451L என்ற பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த டேப்லெட் புதிய ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் கொண்டிருக்கும் என்றும் சந்தையில் ரூ.40,899 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
எல்ஜியின் புதிய டேப்லெட் சாதனத்தின் மற்ற சிறப்பம்சங்கள் அறியப்படாத நிலையில் இந்த சாதனத்தின் அறிமுக தேதியும் மறைமுகமாகவே வைக்கப்பட்டுள்ளது.
ஜிமெயில் சேவையை பயன்படுத்துவோரை குறிவைத்து புதிய மால்வேர் இணையத்தில் பரப்பப்பட்டு வருகிறது. இது குறித்த விரிவான தகவல்களை இங்கு பார்ப்போம்.
சான்பிரான்சிஸ்கோ:
உலகெங்கும் ஜிமெயில் பயன்படுத்துவோரை குறிவைத்து புதிய ஆன்லைன் திருட்டு நடத்தப்படுகிறது. ஜிமெயில் ஃபிஷிங் என அழைக்கப்படும் இந்த மால்வேர் தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்துவோரையும் பாதிக்க செய்கிறது.
வோர்டுபிரஸ் (WordPress) பாதுகாப்பு சேவை வழங்கும் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் மௌன்டர் என்பவர் இந்த மால்வேர் இருப்பதை கண்டறிந்து உறுதி செய்தார். மேலும் இந்த மால்வேர் அதிகமாக இணையம் மற்றும் தொழில்நுட்ப சேவைகளை பயன்படுத்துவோரை பாதிப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் ஆனது பயனர்களுக்கு சாதாரண மின்னஞ்சல் வடிவில் அனுப்பப்படுகிறது. இந்த மின்னஞ்சல் ஏற்கனவே அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களுடன் இணைக்கப்பட்ட தரவு (attachment) போல காட்சியளிக்கிறது. இதனை கிளிக் செய்ததும் தனி டேப் ஒன்று ஓபன் ஆகி மீண்டும் ஜிமெயிலில் லாக்-இன் செய்ய கோருகிறது.
இவ்வாறு மீண்டும் லாக்-இன் செய்யும் போது ஹேக்கர்களால் உங்களது மின்னஞ்சலை முழுமையாக பயன்படுத்த முடிகிறது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர் தனது மின்னஞ்சல் சேவையில் பதிவு செய்திருக்கும் தகவல்கள் மற்றும் முக்கிய தகவல் பரிமாற்றங்கள் உள்ளிட்டவற்றை திருட முடியும்.

இந்த தாக்குதலில் இருந்து தப்பிப்பது எப்படி?
எந்த ஒரு சேவையை பயன்படுத்தும் போதும் பிரவுஸர் முகவரியை (website link) கவனமாக பார்க்க வேண்டும். இங்கு ஹோஸ்ட்நேம் முன்பு 'https://' தவிர எவ்வித வார்த்தைகளும் இல்லாததை உறுதி செய்து கொள்ளுங்கள். மேலும் இணைய முகவரியின் துவக்கத்தில் பச்சை நிற பூட்டு சின்னம் இருப்பதை உறுதி செய்யுங்கள். இவ்வாறு இல்லாத பட்சத்தில் குறிப்பிட்ட சேவையை பயன்படுத்தாதீர்கள்.
இதே போல் நீங்கள் பயன்படுத்தும் சேவைகளுக்கு டூ-ஃபாக்டர் வெரிஃபிகேஷன் அமைப்பை செயல்படுத்தலாம். இவ்வாறு செய்யும் போது ஹேக்கர்களால் உங்களது தகவல்களை பயன்படுத்தாமலோ அல்லது அவர்களின் முயற்சியை கடினமாக்கவோ முடியும்.
ஆப்பிள் நிறுவனம் முன்னதாக வெளியிட்ட மேக்புக் ப்ரோ லேப்டாப்கள் புதிய வகை பிராசஸர் மூலம் மேம்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சான்பிரான்சிஸ்கோ:
கடந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட மேக்புக் ப்ரோ மாடல்களில் ஏழாம் தலைமுறை இன்டெல் கோர் 'கேபி லேக்' பிராசஸர் கொண்டு மேம்படுத்த இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சீனாவை சேர்ந்த ஆப்பிள் வல்லுநரான மிங்-சி கௌ இது குறித்து தனது எதிர்பார்ப்புகளை வெளியிட்டுள்ளார்.
மேம்படுத்தப்பட்ட பிராசஸர்களை தவிர 15 இன்ச் திரை கொண்ட மேக்புக் ப்ரோ 32ஜிபி ரேம் வசதி பெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக 12 இன்ச் மேக்புக் கேபி லேக் பிராசஸர்களை பெறும் என்றும் இவற்றின் தயாரிப்பு பணிகள் இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டு வாக்கில் துவங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இத்துடன் இந்த லேப்டாப்பில் 16ஜிபி ரேம் கூடுதலாக சேர்க்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
கேபி லேக் பிராசஸர்கள் கொண்டுள்ள 13 இன்ச் மற்றும் 15 இன்ச் மேக்புக் மாடல்களின் தயாரிப்பு பணிகள் இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 15 இன்ச் மேக்புக் ப்ரோ 32ஜிபி ரேம் கொண்ட மாடல் தனியே அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக ஆப்பிள் நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் பில் ஸ்கில்லர் 16ஜிபி ரேம் கொண்ட லேப்டாப் நீண்ட பேட்டரி பேக்கப் வழங்கும் என தெரிவி்த்தார்.
தற்சமயம் வரை வெளியாகியிருக்கும் தகவல்களில் தயாரிப்பு பணிகளின் தாமதம் காரணமாக மேக்புக் ப்ரோ விநியோகம் குறைந்திருக்கிறது, விரைவில் இவற்றின் விற்பனை எதிர்பார்த்ததை விட சிறப்பானதாக இருக்கும் என கூறப்படுகிறது. இதோடு டச் பார் வசதி கொண்ட மேக்புக் ப்ரோ விற்பனை மந்தமாக இருப்பதால் இதன் விலை குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.