என் மலர்
கணினி
பிலிப்ஸ் நிறுவனம் உலகின் மிகப்பெரிய 4K மானிட்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இங்கு பார்ப்போம்.
ஆம்ஸ்டர்டம்:
பிலிப்ஸ் நிறுவனம் உலகின் மிகப்பெரிய 4K மானிட்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. 40 இன்ச் அளவு கொண்ட இந்த மானிட்டர் 10-பிட் பேனல் மற்றும் 3840x2160 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கிறது. பிலிப்ஸ் அறிமுகம் செய்துள்ள இந்த மானிட்டர் BDM4037UW என பெயரிடப்பட்டுள்ளது.
பிலிப்ஸ் BDM4037UW மானிட்டர் அதிக துல்லியமான படங்களை பிரதிபலிக்க VA பேனல்களை பயன்படுபடுத்துகிறது. இத்துடன் ஆப்டிமைஸ் செய்யப்பட்ட பிக்சல் அமைப்பு தொழில்நுட்பம் 178/178 கோணத்திலும் பார்க்கும் வசதியை வழங்குகிறது. அல்ட்ரா வைடு கலர் மற்றும் 85% NTSC அம்சம் வழங்கப்பட்டுள்ளது.
மல்டி வியூ அம்சம் மூலம் நான்கு இன்புட்களை வழங்கி அனைத்திலும் ஃபுல் எச்டி தரத்தில் பயன்படுத்த முடியும். இதில் புகைப்படங்களை வரிசைப்படுத்த இரண்டு ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒன்று கட்டுப்பாட்டு அறைகளில் பயன்படுத்துவது போன்று உள்ளது. மற்றொன்று திரையின் ஒரு பகுதியில் வீடியோவையும் மற்ற இடங்களில் பணிகளையும் மேற்கொள்ளும் வகையில் உள்ளது.
ஏற்கனவே எதிர்பார்த்தை போன்று 4K மானிட்டரில் W-LED பேக்லிட் மற்றும் பிலிப்ஸ் ஃபிளிக்கர்-ஃபிரீ தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் கண் சோர்வு ஏற்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை VGA, டிஸ்ப்ளேபோர்ட் x 2, எச்டிஎம்ஐ 1.4 - MHL x1, HDMI 2.0 – MHL x1, யுஎஸ்பி 3.0x4, ஹெட்போன் அவுட் மற்றும் 5 வாட் பில்ட் இன் ஸ்பீக்கர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
அசுஸ் நிறுவனத்தின் புதிய R558UQ லேப்டாப் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த லேப்டாப் குறித்த விரிவான தகவல்களை இங்கு பார்ப்போம்.
புதுடெல்லி:
அசுஸ் நிறுவனம் தனது நோட்புக் சாதனங்களுடன் புதிய R558UQ லேப்டாப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இது 2016, ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட R558 மாடலின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு ஆகும். புதிய R558UQ இரண்டு மாடல்கள் அதாவது கோர் i7 மற்றும் கோர் i5 பிராசஸர்கள் கொண்டுள்ளது. இவற்றின் விலை முறையே ரூ.59,990 மற்றும் ரூ.48,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அசுஸ் R558 போன்றே புதிய R558UQ மாடலிலும் யுஎஸ்பி டைப்-சி போர்ட், GeForce 940MX கிராஃபிக்ஸ், 2GB DDR3 ரேம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் VGA வெப்கேமரா, 1000GB ஹார்டு டிரைவ், எஸ்டி கார்டு ரீடர் மற்றும் யுஎஸ்பி 2.0, யுஎஸ்பி 3.0 மற்றும் யுஎஸ்பி 3.1 டைப்-சி வழங்கப்பட்டுள்ளது.
மற்ற சிறப்பம்சங்களை பொருத்த வரை அசுஸ் R558UQ லேப்டாப் 15.6 இன்ச் 1920x1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, முன்பு குறிப்பிடப்பட்டுள்ளதை போன்று 2.7 ஜிகாஹெர்ட்ஸ் கோர் i7-7500U பிராசஸர் மற்றொன்று 2.5 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் கோர் i5-7200U பிராசஸர் கொண்டுள்ளது. இரண்டு மாடல்களிலும் இன்டெல் எச்டி கிராஃபிக்ஸ் 620யும் i7 பிராசஸர் கொண்ட லேப்டாப்பில் 8GB DDR4 ரேம் மற்றும் i5 பிராசஸர் கொண்ட லேப்டாப்பில் 4GB DDr4 ரேம் வழங்கப்படுகிறது.
அசுஸ் R558UQ லேப்டாப்பில் 2-cell 38Whr லி-அயன் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இதன் கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை வைபை 802.11ac, ப்ளூடூத் 4.0, ஈத்தர்நெட் ஜாக், எச்டிஎம்ஐ மற்றும் ஹெட்போன் ஜாக் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. அசுஸ் R558UQ சிக்லெட் கீபோர்டு மற்றும் அசுஸ் ஸ்மார்ட் ஜெஸ்ட்யூர் வழங்கப்பட்டுள்ளது.
சாமசங் நிறுவனத்தின் புதிய கேமிங் லேப்டாப்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நோட்புக் ஒடிசி என பெயரிடப்பட்டுள்ள இந்த லேப்டாப்களின் முழு தகவல்களை இங்கு பார்ப்போம்.
சான்பிரான்சிஸ்கோ:
சாமசங் நிறுவனத்தின் லேப்டாப் வகைகளில் புதிய கேமிங் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நோட்புக் ஒடிசி என அழைக்கப்படும் இந்த லேப்டாப்கள் இரண்டு வித மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சாம்சங் நோட்புக் ஒடிசி 15 மற்றும் ஒடிசி 17 என பெயரிடப்பட்டுள்ளது.
அதன் படி சாம்சங் ஒடிசி 15 லேப்டாப்பில் 15.6 இன்ச் திரையும் உயர் ரக ஒடிசி 17 லேப்டாப்பில் 17.3 இன்ச் திரையும் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு திரைகளிலும் 1080 பிக்சல் ரெசல்யூஷன் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆன்டி-கிளேர் சர்ஃபேஸ், மற்றும் எல்இடி லேடென் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
சாம்சங் நோட்புக் ஒடிசி 15 மற்றும் ஒடிசி 17 லேப்டாப்களும் இன்டெல் கோர் i7 பிராசஸர் கொண்டுள்ளன. ஒடிசி 15 லேப்டாப்பில் 32GB அளவு கொண்ட DDR4 ரேம் மற்றும் 256GB SSD மற்றும் 1000GB ஹார்டு டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இதன் கிராஃபிக்ஸ் திறன்களை பொருத்த வரை GTX 1050 GPU வழங்கப்பட்டுள்ளது.
ஒடிசி 17 லேப்டாப்பில் ஒடிசி 15 மாடலை விட இருமடங்கு மெமரி வழங்கப்பட்டுள்ளது. இதில் வழங்கப்பட இருக்கும் கிராஃபிக்ஸ் குறித்து எவ்வித தகவலும் இல்லை. எனினும் GTX 1070 GPU அல்லது GTX 1080 GPU வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் ஒடிசி 15 லேப்டாப்பில் 43 Wh பேட்டரி, 2.5 கிலோ எடை கொண்டுள்ளது. கருப்பு மற்றும் வெள்ளை நிறம் கொண்டுள்ள இந்த லேப்டாப்பில் யுஎஸ்பி, ஹெச்டிஎம்ஐ மற்றும் லேன் இன்புட் (Lan Input) உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இதுவே ஒடிசி 17 லேப்டாப்பில் 93 Wh பேட்டரியும் 3.8 கிலோ எடை கொண்டுள்ளது. இத்துடன் யுஎஸ்பி டைப்-சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
சாம்சங் அறிமுகம் செய்துள்ள இரண்டு லேப்டாப்களின் விலை மற்றும் சரியான விற்பனை தேதி உள்ளிட்டவை குறித்து எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.
தொடுதிரை வசதி இல்லாத லேப்டாப் திரைகளுக்கும் தொடுதிரை வசதி வழங்கும் புதிய சாதனம் குறித்து இங்கு பார்ப்போம்.
சான்பிரான்சிஸ்கோ:
தொடுதிரை வசதி மின்சாதனங்களின் பயன்பாட்டை எளிமையாக்கியுள்ளது. இன்று வெளியிடப்படும் பல்வேறு தொழில்நுட்ப சாதனங்களிலும் தொடுதிரை வசதி அத்தியாவசியமான ஒன்றாகியுள்ளது.
அந்த வகையில் தொடுதிரை வசதி இல்லாத லேப்டாப்களின் திரைகளுக்கு தொடுதிரை வசதி வழங்க புதிய சாதனம் கண்டறியப்பட்டுள்ளது. ஏர்பார் (AirBar) என பெயரிடப்பட்டுள்ள இந்த சாதனம் சிறிய பட்டை போன்று காட்சியளிக்கிறது. இதனை லேப்டாப் திரையில் பொருத்தினால் லேப்டாப் திரையில் தொடுதிரை வசதி கிடைத்து விடுகிறது.
காந்த சக்தி கொண்ட ஏர்பார் மிகவும் எளிதாக உங்களின் திரையின் கீழ் ஒட்டிக் கொள்கிறது. பின் இதனுடன் இருக்கும் யுஎஸ்பியினை லேப்டாப்பில் பொருத்த வேண்டும். இவ்வாறு செய்ததும் ஏர்பாரில் இருந்து வெளிச்சம் திரையில் பாய்கிறது. இந்த வெளிச்சம் திரையில் ஜெஸ்டர்களை வழங்குகிறது. இதனால் திரையை கிள்ளி உள்பக்கம் தள்ளினால் சூம் இன் மற்றும் வெளியே இழுக்கும் போது சூம் அவுட் செய்ய முடியும். இத்துடன் இன்றைய ஸ்மார்ட்போன்களில் கிடைப்பதை போன்ற தொடுதிரை அனுபவம் இந்த சாதனம் லேப்டாப் திரையில் வழங்குகிறது.
லேப்டாப்களுடன் இணைக்கப்பட்டாலும் விசித்திரமாக காட்சியளிக்காமல் இருக்கும் ஏர்பார், தற்சமயம் வரை 13.0 இன்ச் முதல் 15.0 இன்ச் திரை கொண்டுள்ள லேப்டாப்களுக்கு கிடைக்கிறது. ஏர்பார் சாதனத்தை நியோநோடு தளத்தில் இருந்து முன்பதிவு செய்ய முடியும். இதன் விலை 69 டாலர் முதல் துவங்குகிறது. ஏர்பார் சாதனம் மேக்புக் ஏர் லேப்டாப்களுக்கும் கிடைக்கிறது. இவற்றின் விலை 100 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஏர்பார் சாதனத்தை தயாரித்து வரும் நியோநோடு நிறுவனம் இச்சாதனம், தற்சமயம் இருப்பதை விட அதிக லேப்டாப் மற்றும் கணினிகளுடன் இணைந்து வேலை செய்வதற்கேற்ப மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
டெல் நிறுவனத்தின் புதிய வகை லேப்டாப்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில் வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்கள் குறித்து இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
சான்பிரான்சிஸ்கோ:
டெல் நிறுவனம் புதிய 2 இன் 1 லேப்டாப்களை சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த லேப்டாப்பில் உலகின் முதல் வயர்லெஸ் சார்ஜிங் கீபோர்டு கேஸ் வழங்கப்பட்டுள்ளது. ஹைப்ரிட் வகை WiTricity காந்த அதிர்வு வயர்லெஸ் சார்ஜிங் திறன் மற்றும் WiGig டாக்கிங் வசதி கொண்டுள்ளது.
சிறப்பம்சங்களை பொருத்த வரை டெல் Latitude 7285 லேப்டாப்பில் 12.0 இன்ச் 2880x1920 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இன்டெல் Kaby Lake சிப்செட் மற்றும் 8GB / 16GB ரேம் கொண்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 512GB மற்றும் கூடுதலாக மைக்ரோ எஸ்டி கார்டு சப்போர்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. விண்டோஸ் Hello வசதியுடன் IR கேமராவும் வழங்கப்படுகிறது.
புதிய 2 இன் 1 லேப்டாப் ஆனது டேப்லெட் மோடில் 6 மணி நேர பேட்டரி பேக்கப் மற்றும் கீபோர்டு கேஸ் இணைக்கப்பட்டால் 9 மணி நேர பேக்கப் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல் நிறுவனம் இரண்டு வகை கீபோர்டு பேஸ்களை வழங்கியுள்ளது. ஒன்று அதிக செயல்திறன் கொண்டதாகவும் மற்றொன்று பயணத்திற்கான கீபோர்டு ஆகும்.
டெல் நிறுவனம் மற்றும் ஓர் 2 இன் 1 லேப்டாப்பினை அறிமுகம் செய்துள்ளது. இந்த லேப்டாப் Latitude 5285 என பெயரிடப்பட்டுள்ளது. இந்த லேப்டாப் அதிக சக்திவாய்ந்ததாகவும், நாள் முழுக்க நீடிக்கும் ஒன்றாகவும் இருக்கும். விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்டிருக்கும் டெல் Latitude 5285 லேப்டாப் 12.3 இன்ச் 1920x1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட ஃபுல் எச்டி டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.
டெல் Latitude 5285 லேப்டாப் 7th-gen Intel Core சிப்செட், 16GB ரேம், 256GB M.2 SATA SSD உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஹைப்ரிட் கேமராவில் 8 எம்பி பிரைமரி கேமராவும், 5 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை வை-பை, ப்ளூடூத், யுஎஸ்பி 3.0, மைக்ரோ எஸ்டி மற்றும் சிம் கார்டு ஸ்லாட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனம் புதிய குரோம்புக் லேப்டாப்களை நடைபெற்று வரும் CES 2017 விழாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய லேப்டாப்கள் சார்ந்த அம்சங்களை இங்கு பார்ப்போம்..
சான்பிரான்சிஸ்கோ:
தென்கொரிய மின்சாதன நிறுவனமான சாம்சங் குரோம்புக் ப்ரோ மற்றும் குரோம்புக் பிளஸ் லேப்டாப்களை லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய குரோம்புக் லேப்டாப்களில் சாம்சங் 360 டிகிரி சுழலும் தொடுதிரை, பில்ட்-இன் டிஜிட்டல் பேனா, குறைந்த எடை மெட்டல் வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இரண்டு குரோம்புக்களிலும் 12.3 இன்ச் எல்இடி டிஸ்ப்ளே, 2400x1600 பிக்சல் ரெசல்யூஷன், 4GB ரேம், 32GB இன்டர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை 2 யுஎஸ்பி டைப்-சி போர்ட், 4K வீடியோ அவுட்புட், மைக்ரோ எஸ்டி கார்டு ரீடர், வைபை மற்றும் ப்ளூடூத் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் பேட்டரி 8 மணி நேரத்திற்கு பேக்கப் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு சாதனங்களுக்கும் இடையே வெவ்வேறு பிராசஸர்கள் வழங்கப்பட்டுள்ளது. சாம்சங் குரோம்புக் பிளஸ் OP1 ஹெக்சா-கோர் பிராசஸர், குரோம்புக் ப்ரோ இன்டெல் கோர் M3 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு குரோம்புக்களும் மெட்டல் பாடி மற்றும் கூகுள் கீப் உள்ளிட்ட அம்சங்கள் ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது.
சாம்சங் புதிய சாதனங்களின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் இவற்றின் விற்பனை பிப்ரவரி மாதம் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தென்கொரிய நிறுவனம் குவான்டம் டாட் வளைந்த மானிட்டர் சாதனத்தை அறிமுகம் செய்தது. இந்த மானிட்டர் 27 இன்ச் மற்றும் 31.5 இன்ச் அளவுகளில் வெளியிடப்பட்டுள்ளது.
அசுஸ் நிறுவனத்தின் புதிய கேமிங் கணினி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கணினியின் முழு அம்சங்களை இங்கு பார்ப்போம்..
சான்பிரான்சிஸ்கோ:
சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் பல்வேறு நிறுவனங்களும் தங்களின் முக்கிய சாதனங்களை அறிமுகம் செய்ய இருக்கின்றன. அந்த வகையில் அசுஸ் நிறுவனம் இன்று தனது சக்திவாய்ந்த கேமிங் கணினியை அறிமுகம் செய்துள்ளது.
அசுஸ் கேமிங் கணினிகளின் வரிசையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய கணினிக்கு ROG GT51CH என பெயரிடப்பட்டுள்ளது. இந்த கணினி விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்டிருக்கும் என்றும் 7 ஆம் தலைமுறை இன்டெல் கோர் i7 பிராசஸர் மூலம் சக்தியூட்டப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள கணினியானது NVIDIA SLI தொழில்நுட்பம் சார்ந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த கணினியில் ஒரே சமயத்தில் இரண்டு கிராஃபிக் கார்டுகளை சேர்க்க முடியும். இத்துடன் அசுஸ் ROG GT51CH கணினியில் Aegis III செயலி ROG பிரத்தியேகமாக வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கணினியின் செயல்பாட்டை அதிகரிப்பதோடு பிராசஸர் வேகத்தையும் சீராக வைக்க முடியும்.
அசுஸ் அதிகாரப்பூர்வ அறிக்கையில், இந்த கேமிங் கணினியில் XMP தொழ்ல்நுட்பம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மெமரியை கட்டுப்படுத்தி கணினியின் செயல்பாட்டை 17% வரை அதிகரிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்துடன் இன்டெக்ஸ் Z270 சிப்செட் மற்றும் கேபி லேக் இன்டெல் கோர் i7 7700K பிராசஸர், 3 tbs கொண்ட SATA 6Gbps HDD ஸ்டோரேஜ் வசதியும் வழங்கப்படுகிறது.
அசுஸ் ROG GT51CH கேமிங் கணினியில் அசுஸ் ஔரா லைட்டிங் அம்சங்கள் மூலம் கணினியில் வழங்கப்பட்டுள்ள எல்இடி விளக்குகளை மிளிர செய்கிறது. வாடிக்கையாளர்கள் இந்த எல்இடி விளக்குகளை தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றியமைத்து கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தன் புதிய சர்ஃபேஸ் ப்ரோ ஹைப்ரிட் 5 லேப்டாப் விரைவில் வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சான்பிரான்சிஸ்கோ:
மைக்ரோசாப்ட் நிறுவனம் சர்ஃபேஸ் ப்ரோ ஹைப்ரிட் 5 லேப்டாப் சாதனத்தை இந்த ஆண்டு வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி புதிய சர்ஃபேஸ் ப்ரோ 5 சாதனத்தில் 4K அல்ட்ரா எச்டி டிஸ்ப்ளே, வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்ட மாக்னெடிக் ஸ்டைலஸ் (காந்தம் சார்ந்த பேனா) உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்படுகிறது.
முந்தைய சர்ஃபேஸ் ப்ரோ சாதனங்களை போன்றே புதிய சர்ஃபேஸ் ப்ரோ 5 லேப்டாப் பெகட்ரான் மூலம் தயாரிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் புதிய சாதனத்தில் குவான்டா கம்ப்யூட்டரை கொண்டு வர மைக்ரோசாப்ட் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தற்சமயம் வரை இது குறித்த தகவல் உறுதி செய்யப்படவில்லை.
சர்ஃபேஸ் ப்ரோவுடன் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சர்ஃபேஸ் ஸ்டூடியோ AIO உள்ளிட்டவை பெகட்ரானின் செயல்திறன் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் வரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 10 இயங்குதளத்தினை கேமிங் பிரியர்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் பிரத்தியேகமாக கேமிங் மோட் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து ட்விட்டரில் வெளியான தகவல்களில் 'gamemode.dll' ஃபைல் கேமிங் மோட் சார்ந்த தகவல்களை உறுதி செய்துள்ளது. எனினும் இந்த அம்சம் தற்சமயம் வரை தயாரிப்பு பணிகளில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
விண்டோஸ் 10 இயங்குதளத்தில் வாடிக்கையாளர்கள் சிபியு பயன்பாடுகளை கேமிற்கு ஏற்றவாரு மாற்றுவதோடு, கிராஃபிக்ஸ் உள்ளிட்ட அம்சங்களையும் கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கேமிங் மோட் எக்ஸ்பாக்ஸ் ஒன் சாதனத்தில் வழங்கப்படுவதை போன்றே இருக்கும் என கூறப்படுகிறது.
அடுத்த வாரம் நடைபெற இருக்கும் சர்வதேச விழாவில் சாம்சங் நிறுவனம், விண்டோஸ் இயங்குதளம் கொண்ட சாதனத்தை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி:
சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழா இன்னும் சில தினங்களில் தினங்களில் துவங்க உள்ளது. இந்த விழாவில் சாம்சங் பல்வேறு சாதனங்களை வெளியிட இருக்கும் நிலையில் விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்டு இயங்கும் புதிய டேப்லெட் வகைகளை சாம்சங் அறிவிக்க இருப்பதாக சமீபத்தில் வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாம்சங் புதிய டேப்லெட் சாதனங்கள் SM-W720 மற்றும் SM-W620 என்ற பெயரில் வெளியிடப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த டேப்லெட் சாதனங்கள் சார்ந்த மற்ற தகவல்கள் ஏதும் வழங்கப்படவில்லை. SM-W720 டேப்லெட் சாதனம் தற்சமயம் விற்பனை செய்யப்பட்டு வரும் கேலக்ஸி டேப் ப்ரோ S (SM-W700) மாடலின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.
சாம்சங் டேப்லெட் SM-W620 மாடல் SM-W720 டேப்லெட்டின் சிறிய ரக மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. அடுத்த வாரம் நடைபெற இருக்கும் இதே விழாவில் சாம்சங் நிறுவனம் மூன்று புதிய ஸ்மார்ட் டிவி சாதனங்களை வெளியிடும் என சமீபத்தில் அறிவித்தது. இவற்றின் சேவைகள் சாம்சங் ஸ்மார்ட் ஹப் மூலம் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
விளையாட்டு பிரியர்களுக்கு விளையாட்டுக்கள் சார்ந்த நிகழ்ச்சிகளின் தகவல்கள் வழங்கப்படும் என்றும் இவை அனைத்தும் பிரத்தியேகமாக 'Sports' என்ற யூஸர் இன்டர்ஃபேஸ் கீழ் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இத்துடன் இப்பிரிவில் வழங்கப்படும் சேவைகள் நீட்டிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
விளையாட்டு போன்றே மியூசிக் பிரிவின் கீழ் லைவ் டிவியில் இருந்து பாடல்களை தேட முடியும். ஸ்மார்ட் ஹப் மூலம் பிரீவியூ ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் புதுவித இசையை தேட முடியும். தற்சமயம் வரை எட்டு இசை சார்ந்த செயலிகளின் சேவை இதில் வழங்கப்படுகிறது.
ஏசர் நிறுவனத்தின் அஸ்பையர் C சீரிஸ் கணினிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
புதுடெல்லி:
ஏசர் அஸ்பையர் C22 மற்றும் அஸ்பையர் சி24 ஆல்-இன்-ஒன் கணினிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் முறையே 21.5 மற்றும் 23.8 இன்ச் திரை வழங்கப்பட்டுள்ளன. இந்திய மதிப்பில் புதிய ஏசர் C22 AIO ரூ.30,600 மற்றும் ஏசர் C24 AIO ரூ.47,600 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
புதிய கணினிகள் 1080x1920 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளன. புதிய அஸ்பையர் C22 AIO மற்றும் அஸ்பையர் C24 AIO மாடல்களில் தொடுதிரை வசதி வழங்கப்படவில்லை. இவற்றில் விண்டோஸ் 10, ஃப்ரீடாஸ் மற்றும் லினக்ஸ் போன்ற இயங்குதளங்களை தேர்வு செய்யும் வசதி வழங்கியுள்ளது.
புதிய ஏசர் அஸ்பையர் C22 இன்டெல் செலரான் J3160 1.6 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர், C24 மாடலில் 2.30 ஜிகாஹெர்ட்ஸ் கோர் i3 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. C22 கணினியில் 500GB ஹார்டு டிஸ்க் மற்றும் 4GB ரேம், அஸ்பையர் C24 கணினியில் 1000GB ஹார்டு டிஸ்க் மற்றும் 8GB ரேம் வழங்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் புதிய ஏசர் கணினிகளின் விற்பனை தேர்வு செய்யப்பட்ட ஆன்லைன் வர்த்தகர்களிடம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன நிறுவனமான சியோமி ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போன்றே Mi நோட்புக் ஏர் சாதனங்களை இன்று அறிமுகம் செய்திருக்கிறது.
பீஜிங்:
சியோமி நிறுவனத்தின் புதிய லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Mi நோட்புக் ஏர் என பெயரிடப்பட்டிருக்கும் புதிய லேப்டாப் 4G கனெக்டிவிட்டி கொண்டுள்ளது. விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்டிருக்கும் லேப்டாப்கள் சீனா மொபைல்களுடன் இணைந்து வெளியிடப்படும். இந்த லேப்டாப்கள் தனி சிம் கார்டு இல்லாமல் டெலிகாம் நெட்வொர்க்களை இயக்குகிறது. இத்துடன் வாடிக்கையாளர்களுக்கு 4GB அளவு 4G டேட்டா ஒவ்வொரு மாதமும் வழங்கப்படுகிறது. இந்த சேவை ஒரு வருடத்திற்கு வழங்கப்படுகின்றது.
12.5 இன்ச் மற்றும் 13.3 இன்ச் என இருவித டிஸ்ப்ளே அளவுகளில் Mi நோட்புக் ஏர் 4G அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் விலை முறையே 46,500 ரூபாய் மற்றும் 69,500 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இந்த ஆண்டு ஜூலை மாதம் 4G திறன் இல்லாத Mi நோட்புக் ஏர் சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இம்முறை வெளியிடப்பட்டு இருக்கும் லேப்டாப்கள் இவற்றின் மேம்படுத்தப்பட்ட மாடலாக அமைந்துள்ளது.
12.5 இன்ச் Mi நோட்புக் ஏர் 4G சாதனத்தில் ஃபுல் எச்டி ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, மற்றும் Intel Core M3 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 4GB ரேம் மற்றும் 128GB இன்டர்னல் மெமரி வழங்கப்படுகின்றது, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. மற்ற சிறப்பம்சங்களை பொருத்த வரை வைபை, ப்ளூடூத், டூயல் ஸ்பீக்கர் மற்றும் டால்பி டிஜிட்டல் சவுண்டு மற்றும் 11.5 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
13.3 இன்ச் Mi நோட்புக் ஏர் சிறப்பம்சங்களை பொருத்த வரை Intel Core i7 பிராசஸர் வழங்கப்படுகிறது. இத்துடன் Nvidia GeForce 940MX GPU மற்றும் 1GB GDDR5 ரேம், 8GB DDR4 ரேம் மற்றும் 256GB இன்டர்னல் மெமரியும் வழங்கப்படுகின்றது. 12.5 இன்ச் மாடல் போன்றே இதிலும் மெமரியை நீட்டிக்கும் வசதி வழங்கப்படுகின்றது. இத்துடன் 9.5 மணி நேர பேக்கப் வழங்கும் பேட்டரி வழங்கப்படுகின்றது.
இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த சர்வதேச தொழில்நுட்ப விழாவில் சாம்சங் நோட்புக் 9 அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து புதிய சிறப்பம்சங்களுடன் அப்டேட் செய்யப்பட்ட புதிய நோட்புக் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
புதுடெல்லி:
2016 ஆம் ஆண்டின் துவக்கத்தில் நடைபெற்ற நுகர்வோர் மின்சாதன விழாவில் சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்த நோட்புக் 9 மாடல்கள் 13.3 இன்ச் மற்றும் 15 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருந்தன. இவை மெல்லியதாகவும், எடை குறைவாக, எங்கும் எடுத்து செல்லக் கூடிய வகையிலும் வடிவமைக்கப்பட்டிருந்ததால் அதிக பிரபலமானது.
இந்நிலையில் சாம்சங் நோட்புக் 9 மாடல்களை அந்நிறுவனம் அப்டேட் செய்து புதிய மாடல்களை அறிமுகம் செய்திருக்கின்றது. மெல்லிய பெஸல் வடிவமைப்பு மற்றும் கைரேகை ஸ்கேனர், விண்டோஸ் ஹல்லோ போன்ற அம்சங்களுடன் புதிய நோட்புக் கிடைக்கிறது. விண்டோஸ் ஹல்லோ அம்சத்தின் மூலம் ஒற்றை கிளிக் மூலம் லாக் இன் செய்யலாம். இதுவரை கடவுச்சொல் பதிவு செய்து அதன் பின் லாக் இன் செய்யும் வழக்கம் இருந்து வருகிறது.
சிறப்பம்சங்களை பொருத்த வரை 15 இன்ச் நோட்புக் 9இல் 7th Gen Intel Core i7 பிராசஸர், 15 இன்ச் 1080x1920 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, 4GB / 8GB ரேம், 256GB SSD மற்றும் கேமரா வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை யுஎஸ்பி டைப்-சி போர்ட், எச்டிஎம்ஐ, யுஎஸ்பி 3.0, ப்ளூடூத் 4.1, வைபை உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
15 இன்ச் மாடல் நோட்புக்கில் 15 மணி நேர பேட்டரி பேக்கப் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த தொழில்நுட்பம் மூலம் வெறும் 20 நிமிடங்களில் லேப்டாப்பினை முழுமையாக சார்ஜ் செய்திட முடியும். 13 இன்ச் நோட்புக் 9 சாதனத்திலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன, இதில் 7th Gen Intel Core i5 பிராசஸர் மட்டும் வித்தியாசமாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






