என் மலர்
செய்திகள்

சியோமி Mi நோட்புக் ஏர் 4G அறிமுகம் செய்யப்பட்டது
சீன நிறுவனமான சியோமி ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போன்றே Mi நோட்புக் ஏர் சாதனங்களை இன்று அறிமுகம் செய்திருக்கிறது.
பீஜிங்:
சியோமி நிறுவனத்தின் புதிய லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Mi நோட்புக் ஏர் என பெயரிடப்பட்டிருக்கும் புதிய லேப்டாப் 4G கனெக்டிவிட்டி கொண்டுள்ளது. விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்டிருக்கும் லேப்டாப்கள் சீனா மொபைல்களுடன் இணைந்து வெளியிடப்படும். இந்த லேப்டாப்கள் தனி சிம் கார்டு இல்லாமல் டெலிகாம் நெட்வொர்க்களை இயக்குகிறது. இத்துடன் வாடிக்கையாளர்களுக்கு 4GB அளவு 4G டேட்டா ஒவ்வொரு மாதமும் வழங்கப்படுகிறது. இந்த சேவை ஒரு வருடத்திற்கு வழங்கப்படுகின்றது.
12.5 இன்ச் மற்றும் 13.3 இன்ச் என இருவித டிஸ்ப்ளே அளவுகளில் Mi நோட்புக் ஏர் 4G அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் விலை முறையே 46,500 ரூபாய் மற்றும் 69,500 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இந்த ஆண்டு ஜூலை மாதம் 4G திறன் இல்லாத Mi நோட்புக் ஏர் சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இம்முறை வெளியிடப்பட்டு இருக்கும் லேப்டாப்கள் இவற்றின் மேம்படுத்தப்பட்ட மாடலாக அமைந்துள்ளது.
12.5 இன்ச் Mi நோட்புக் ஏர் 4G சாதனத்தில் ஃபுல் எச்டி ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, மற்றும் Intel Core M3 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 4GB ரேம் மற்றும் 128GB இன்டர்னல் மெமரி வழங்கப்படுகின்றது, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. மற்ற சிறப்பம்சங்களை பொருத்த வரை வைபை, ப்ளூடூத், டூயல் ஸ்பீக்கர் மற்றும் டால்பி டிஜிட்டல் சவுண்டு மற்றும் 11.5 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
13.3 இன்ச் Mi நோட்புக் ஏர் சிறப்பம்சங்களை பொருத்த வரை Intel Core i7 பிராசஸர் வழங்கப்படுகிறது. இத்துடன் Nvidia GeForce 940MX GPU மற்றும் 1GB GDDR5 ரேம், 8GB DDR4 ரேம் மற்றும் 256GB இன்டர்னல் மெமரியும் வழங்கப்படுகின்றது. 12.5 இன்ச் மாடல் போன்றே இதிலும் மெமரியை நீட்டிக்கும் வசதி வழங்கப்படுகின்றது. இத்துடன் 9.5 மணி நேர பேக்கப் வழங்கும் பேட்டரி வழங்கப்படுகின்றது.
Next Story






