search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜிமெயிலில் புதிய மால்வேர்: சிக்காமல் தப்பிப்பது எப்படி?
    X

    ஜிமெயிலில் புதிய மால்வேர்: சிக்காமல் தப்பிப்பது எப்படி?

    ஜிமெயில் சேவையை பயன்படுத்துவோரை குறிவைத்து புதிய மால்வேர் இணையத்தில் பரப்பப்பட்டு வருகிறது. இது குறித்த விரிவான தகவல்களை இங்கு பார்ப்போம்.
    சான்பிரான்சிஸ்கோ:

    உலகெங்கும் ஜிமெயில் பயன்படுத்துவோரை குறிவைத்து புதிய ஆன்லைன் திருட்டு நடத்தப்படுகிறது. ஜிமெயில் ஃபிஷிங் என அழைக்கப்படும் இந்த மால்வேர் தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்துவோரையும் பாதிக்க செய்கிறது. 

    வோர்டுபிரஸ் (WordPress) பாதுகாப்பு சேவை வழங்கும் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் மௌன்டர் என்பவர் இந்த மால்வேர் இருப்பதை கண்டறிந்து உறுதி செய்தார். மேலும் இந்த மால்வேர் அதிகமாக இணையம் மற்றும் தொழில்நுட்ப சேவைகளை பயன்படுத்துவோரை பாதிப்பதாக தெரிவித்துள்ளார். 

    இந்த தாக்குதல் ஆனது பயனர்களுக்கு சாதாரண மின்னஞ்சல் வடிவில் அனுப்பப்படுகிறது. இந்த மின்னஞ்சல் ஏற்கனவே அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களுடன் இணைக்கப்பட்ட தரவு (attachment) போல காட்சியளிக்கிறது. இதனை கிளிக் செய்ததும் தனி டேப் ஒன்று ஓபன் ஆகி மீண்டும் ஜிமெயிலில் லாக்-இன் செய்ய கோருகிறது. 

    இவ்வாறு மீண்டும் லாக்-இன் செய்யும் போது ஹேக்கர்களால் உங்களது மின்னஞ்சலை முழுமையாக பயன்படுத்த முடிகிறது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர் தனது மின்னஞ்சல் சேவையில் பதிவு செய்திருக்கும் தகவல்கள் மற்றும் முக்கிய தகவல் பரிமாற்றங்கள் உள்ளிட்டவற்றை திருட முடியும். 



    இந்த தாக்குதலில் இருந்து தப்பிப்பது எப்படி? 

    எந்த ஒரு சேவையை பயன்படுத்தும் போதும் பிரவுஸர் முகவரியை (website link) கவனமாக பார்க்க வேண்டும். இங்கு ஹோஸ்ட்நேம் முன்பு 'https://' தவிர எவ்வித வார்த்தைகளும் இல்லாததை உறுதி செய்து கொள்ளுங்கள். மேலும் இணைய முகவரியின் துவக்கத்தில் பச்சை நிற பூட்டு சின்னம் இருப்பதை உறுதி செய்யுங்கள். இவ்வாறு இல்லாத பட்சத்தில் குறிப்பிட்ட சேவையை பயன்படுத்தாதீர்கள்.   

    இதே போல் நீங்கள் பயன்படுத்தும் சேவைகளுக்கு டூ-ஃபாக்டர் வெரிஃபிகேஷன் அமைப்பை செயல்படுத்தலாம். இவ்வாறு செய்யும் போது ஹேக்கர்களால் உங்களது தகவல்களை பயன்படுத்தாமலோ அல்லது அவர்களின் முயற்சியை கடினமாக்கவோ முடியும்.
    Next Story
    ×