என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூகுளுக்கு போட்டியாக புதிய ஓ.எஸ்: மே 2-ந்தேதி மைக்ரோசாஃப்ட் அறிவிக்கிறது?
    X

    கூகுளுக்கு போட்டியாக புதிய ஓ.எஸ்: மே 2-ந்தேதி மைக்ரோசாஃப்ட் அறிவிக்கிறது?

    கூகுள் குரோம் இயங்குதளத்திற்கு போட்டியாக புதிய இயங்குதளத்தை அறிமுகம் செய்ய மைக்ரோசாஃப்ட் முடிவு செய்துள்ளதாகவும், மே 2-ந்தேதி புதிய இயங்குதளம் அரிவிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    கூகுள் குரோம் இயங்குதளத்திற்கு போட்டியாக மைக்ரோசாஃப்ட் புதிய இயங்குதளத்தை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மே 2-ந்தேதி நியூ யார்க் நகரில் மைக்ரோசாஃப்ட் திட்டமிட்டுள்ள நிகழ்ச்சியில் புதிய இயங்குதளம் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. 

    மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 S என அழைக்கப்படவுள்ள புதிய இயங்குதளம் மைக்ரோசாஃப்டின் விண்டோஸ் 10 இயங்குதள பதிப்பாக இருக்கும். இதுகுறித்து வெளியான தகவல்களில் விண்டோஸ் 10 S கூகுளின் குரோம் இயங்குதளம் போன்றே இயங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

    புதிய விண்டோஸ் 10 S இயங்குதளத்தை இயக்க குறைந்தபட்ச தேவைகளாக பத்து மணி நேரத்திற்கும் அதிகமான பேட்டரி பேக்கப், குவாட்கோர் பிராசஸர், 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருப்பதோடு, eMMC/SSD ஸ்டோரேஜ் மற்றும் ஸ்டைலஸ் பென் அல்லது டச் டிஸ்ப்ளே வசதி கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



    மேலும் விண்டோஸ் 10 S இயங்குதளத்தில் அதிகப்படியான மேம்படுத்தல்கள் வழங்கப்படலாம் என்றும் இதில் சர்வதேச விண்டோஸ் செயலிகளுக்கான மாற்றியமைக்கப்பட்ட புதிய பிளே ஸ்டோர் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சமீபமாக இயங்குதள அம்சங்களில் மைக்ரோசாப்ட் அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில் அந்நிறுவனம் விண்டோஸ் 10 கிரியேட்டர்ஸ் அப்டேட் ஒன்றையும் வெளியிட்டது. 

    இயங்குதளம் தவிர விண்டோஸ், சிஸ்டம் சென்டர் கான்பிகரேஷன் மேனேஜர் மற்றும் ஆஃபீஸ் சேவைகளுக்கான முக்கிய அப்டேட்களை வழங்கும் என்றும் கூறப்படுகிறது. ஆண்டிற்கு இருமுறை அப்டேட்டகளை வழங்கும் நிலையில் இந்த ஆண்டின் முதல் வெளியீட்டு நிகழ்ச்சி மே மாதம் நடைபெற இருக்கிறது. 
    Next Story
    ×