என் மலர்

  நீங்கள் தேடியது "Surface Pro"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் புதிய சாதனத்தின் அதிகாரப்பூர்வ அறிமுக தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் புதிய சர்ஃபேஸ் சாதனம் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #Microsoft
   


  மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் புதிய ஹார்டுவேர் நிகழ்வு அக்டோபர் 2-ம் தேதி நடைபெற இருக்கிறது. நியூ யார்க் நகரில் நடைபெற இருக்கும் விழாவில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் புதிய சர்ஃபேஸ் சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  மேலும் தற்போதைய சர்ஃபேஸ் நோட்புக் மாடல்களுக்கு புதிய சர்ஃபேஸ் ப்ரோ மற்ரும் சர்ஃபேஸ் லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. இத்துடன் டூயல் டிஸ்ப்ளே கொண்ட பாக்கெட் சர்ஃபேஸ் சாதனம் ஆன்ட்ரோமெடா என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.  முன்னதாக மலிவு விலை சர்ஃபேஸ் கோ டேப்லெட் மாடலை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிமுகம் செய்தது. மைக்ரோசாஃப்ட் வெளியிட்டு இருக்கும் அழைப்பிதழில் மற்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. எனினும் ஹார்டுவேர் சார்ந்த அப்கிரேடுகளை எதிர்பார்க்கலாம். 

  அக்டோபர் 2-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் புதிய சர்பேஸ் ப்ரோ மாடலில் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட சர்ஃபேஸ் ப்ரோ 5 மாடலை விட மேம்படுத்தப்பட்ட புதிய பிராசஸர்கள், பெரிய பேட்டரி உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் கடந்த ஆண்டு மே மாதத்தில் அறிமுகமான சர்ஃபேஸ் லேப்டாப் மாடலின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

  முன்னதாக வெளியான தகவல்களில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் டூயல்-டிஸ்ப்ளே சர்ஃபேஸ் சாதனத்தை தனது புதிய நோட்புக் மாடல்களுடன் அறிமுகம் செய்யலாம் என கூறப்பட்டிருந்தது. இரண்டு திரைகளுடன் இந்த சாதனம் மடிக்கக்கூடியதாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தது.
  ×