என் மலர்
செய்திகள்

சர்வர் கிரேடு ஹார்டுவேர் கொண்ட ஐமேக் ப்ரோ விரைவில் வெளியாகலாம் என தகவல்
ஆப்பிள் நிறுவனம் தனது ஐமேக் சாதனங்களில் புதிய வகை வன்பொருள் மற்றும் சிறப்பம்சங்களை வழங்கி விரைவில் அறிமுகம் செய்யலாம் என ஆப்பிள் வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுடெல்லி:
ஆப்பிளின் ஐமேக் சாதனங்கள் வாடிக்கையாளர்களை மையமாக கொண்டதாக இருக்கிறது. மிகப்பெரிய திரை, அழகாக வழங்கப்பட்டுள்ள நிலையில் இதன் வன்பொருள் அதிக சக்திவாய்ந்ததாக இருக்காது. இவற்றில் குறைந்த மின்அளவு கொண்ட சிபியு மற்றும் மொபைல்-கிரேடு கிராபிக் பிராசஸர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சமீபத்தில் வெளியான தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் சர்வர்-கிரேடு ஹார்டுவேர் வழங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து இந்த சாதனத்தில் ECC RAM வழங்கப்படலாம் என்றும் இவை தகவல்களை ரேடியோஆக்டிவ் சிதைவுகளில் இருந்தும், மின்சார இடைமறிப்பு மற்றும் காஸ்மிக் கதிர்களில் இருந்தும் பாதுகாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர இன்டெல் Xeon E3-1285 பிராசஸர், 16-64 ஜிபி ரேம் மற்றும் 2000 ஜிபி PCIe SSD வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இத்தகைய வன்பொருள் கொண்டு அதிக சக்திவாய்ந்த பணிகளை தாங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் வரை இதன் கிராஃபிக்ஸ் சார்ந்து எவ்வித தகவலும் இல்லை. எனினும் இதில் AMD FirePro அல்லது Nvidia Quadro யுனிட்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதோடு புதிய ஐமேக் சாதனங்களின் கனெக்டிவிட்டி ஆப்ஷன்களில் பெரும்பாலும் அதிகளவு மாற்றம் இருக்காது என்றும் அதிகபட்சம் தன்டர்போல்ட் 3 மற்றும் யுஎஸ்பி-சி போர்ட் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் மேக்புக் ப்ரோவிலேயே டச்பார் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
Next Story






