என் மலர்
செய்திகள்

கம்ப்யூடெக்ஸ் 2017: அசுஸ் நிறுவனத்தின் புதிய லேப்டாப்கள் அறிமுகம்
அசுஸ் நிறுவனம் கம்ப்யூடெக்ஸ் 2017 விழாவில் ஐந்து லேப்டாப்கள், மானிட்டர் மற்றும் டூ-இன்-ஒன் கணினிகளை அறிமுகம் செய்துள்ளது. இவை குறித்த விரிவான தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
அசுஸ் நிறுவனம் கம்ப்யூடெக்ஸ் 2017 விழாவில் புதிய லேப்டாப், கணினி மற்றும் மானிட்டர் சாதனங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்புக் பிளிப் S (UX370), சென்புக் ப்ரோ (UX550), சென்புக் 3 டீலக்ஸ் (UX490), விவோபுக் ப்ரோ 15 (N580), விவோபுக் S15 (S510), டிசைனோ MZ27AQ மானிட்டர், விவோ V241 AiO மற்றும் சென் ZN242 AiO உள்ளிட்ட சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது.
அந்த வகையில் 10.9 எம்.எம். தடிமனாக இருக்கும் சென்புக் பிளிப் S (UX370) அந்நிறுவனத்தின் மெல்லிய லேப்டாப் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் 10 இயங்குதளம், ஆழாம் தலைமுறை இன்டெல் கோர் i7-7500U சிபியு மற்றும் 1000 ஜிபி எஸ்.எஸ்.டி ஸ்டோரேஜ் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4K மல்டி-டச் நானோஎட்ஜ் டிஸ்ப்ளே, ஸ்டைலஸ் வசதி கொண்டுள்ளதோடு $1099 இந்திய மதிப்பில் ரூ.71,053 என்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அசுஸ் இதுவரை வெளியிட்டுள்ள சென்புக் சாதனங்களில் மிகவும் மெல்லிய, எடை குறைவான மற்றும் சக்திவாய்ந்த சாதனமாக சென்புக் ப்ரோ (UX550) உள்ளது. 15.6 இன்ச் 4K UHD நானோஎட்ஜ் டிஸ்ப்ளே, ஏழாம் தலைமுறை இன்டெல் கோர் i7 குவாட் கோர் சிபியு கொண்டுள்ளது. 16 ஜிபி ரேம் மற்றும் 1000 ஜிபி எஸ்எஸ்டி வழங்கப்பட்டுள்ளது. இதன் விலை $1299 அதாவது இந்திய மதிப்பில் ரூ.83,983 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அசுஸ் சென்புக் 3 டீலக்ஸ் (UX490) 14-இன்ச் நானோஎட்ஜ் டிஸ்ப்ளே, இன்டெல் கோர் i7 சிப்செட், 16 ஜிபி ரேம், 1000 ஜிபி எஸ்எஸ்டி வழங்கப்பட்டுள்ளது. விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்டுள்ள சென்புக் 3 டீலக்ஸ் விலை $1199 அதாவது இந்திய மதிப்பில் ரூ.77,518 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விவோபுக் ப்ரோ 15 N580 லேப்டாப்பில் 15.6-இன்ச் 4K UHD டிஸ்ப்ளே இன்டெல் கோர் i7-7700HQ சிபியு, 16 ஜிபி ரேம், 2000 ஜிபி ஹார்டு டிரைவ் கொண்டுள்ளது. இதன் விலை $799 அதாவது இந்திய மதிப்பில் ரூ.51,657 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விவோபுக் S15 (S510), 15.6 இன்ச் திரை, நானோஎட்ஜ் டிஸ்ப்ளே, இன்டெல் கோர் i7-7500U பிராஸர், 16 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. லேப்டாப்கள் மட்டுமின்றி அசுஸ் நிறுவனத்தின் டிசைனோ MZ27AQ மானிட்டர் ஒன்றும், இரண்டு ஆல்-இன்-ஒன் கணினிகள் வெளியிடப்பட்டுள்ளது.
விவோ V241 டெஸ்க்டாப்பில் 23.8 இன்ச் ஃபுல் எச்டி நானோஎட்ஜ் மல்டி டச் டிஸ்ப்ளே, விண்டோஸ் 10 இயங்குதளம், இன்டெல் கோர் i5 சிபியு வழங்கப்பட்டுள்ளது. சென் AiO ZN242 உயர் ரக கணினியில் 23.8 இன்ச் நானோ எட்ஜ் டிஸ்ப்ளே, இன்டெல் கோர் i7-7700HQ குவாட்கோர் பிராசஸர், 32ஜிபி ரேம், 512 ஜிபி எஸ்.எஸ்.டி வழங்கப்பட்டுள்ளது.
Next Story






