என் மலர்
கணினி
அசுஸ் நிறுவனத்தின் சென்புக் ப்ரோ 15 (UX550GD) லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
அசுஸ் நிறுவனத்தன் சென்புக் ப்ரோ 15 (UX550GD) லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் பிரீமியம் வேரியன்ட் இன்டெல் கோர் i9 பிராசஸர் மற்றும் 4K டிஸ்ப்ளே கொண்டுள்ளது. 18.9மில்லிமீட்டர் தடிமனாக இருக்கும் லேப்டாப் 1.86 கிலோ எடை கொண்டுள்ளது.
சென்புக் ப்ரோ 15 லேப்டாப் சிங்கிள் டீப் டைவ் புளு நிறத்தில் விற்பனை செய்யப்பட இருக்கும் நிலையில், இதன் விலை மற்றும் விற்பனை குறித்த அறிவிப்புகள் விரைவில் எதிர்பார்க்கப்படுகின்றன. எனினும் புதிய லேப்டாப் விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.
சென்புக் ப்ரோ 15 (UX550GD) சிறப்பம்சங்கள்:
அசுஸ் சென்புக் ப்ரோ 15 விண்டோஸ் 10 ப்ரோ / விண்டோஸ் 10 ஹோம் இயங்குதளங்களில் கிடைக்கிறது. 15.6 இன்ச் எல்இடி பேக்லிட் டிஸ்ப்ளே, ஃபுல் ஹெச்டி 1920x1080 பிக்சல் மற்றும் 4K 3840x2160 பிக்சல் பேனல்களில் ஒன்றை தேர்வு செய்யும் வசதி வழங்கப்படுகிறது.
புதிய அசுஸ் லேப்டாப் இன்டெல் கோர் i5-8300H / கோர் i7-8750H / கோர் i9-8950H பிராசஸ்ர்கள் மற்றும் 8 ஜிபி / 16 ஜிபி ரேம் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. இதன் கிராஃபிக்ஸ் அம்சங்களை என்விடியா ஜீஃபோர்ஸ் GTX 1050 GPU ( Nvidia GeForce GTX 1050 GPU) மற்றும் 4 ஜிபி ரேம் கவனித்து கொள்கிறது.

மெமரியை பொருத்த வரை 1000 ஜிபி/ 512 ஜிபி PCIe SSD மற்றும் 512 ஜிபி/ 256 ஜிபி SATA3 SSD-யுடன் வழங்கப்படுகிறது. லேப்டாப்பில் ஃபுல்-சைஸ் பேக்லிட் கீபோர்டு மற்றும் 1.5மில்லிமீட்டர் கீ டிராவல் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பிரெசிஷன் டச்பேடில் விண்டோஸ் ஹெல்லோ சப்போர்ட் கொண்ட கைரேகை சென்சார் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.
ஆடியோவை எதிர்பார்ப்போருக்கு சென்புக் ப்ரோ 15 மாடலில் சோனிக்மாஸ்டர் ஸ்டீரியோ ஆடியோ சிஸ்டம், மைக்ரோபோன் மற்றும் கார்டனா குரல் அங்கீகார வசதி, 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஹார்மன் கார்டன் பிரான்டிங் கொண்டுள்ளது. இ்துடன் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள விஜிஏ வெப்கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப்-ஐ சக்தியூட்ட 71Whr 8-செல் லித்தியம் பாலிமர் பேட்டரி வழங்கப்பட்டிருக்கிறது.
கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை அசுஸ் சென்புக் ப்ரோ 15 மாடலில் இரண்டு யுஎஸ்பி டைப் சி 3.1 ஜென் 2 (தன்டர்போல்ட்) போர்ட்கள், இரண்டு யுஎஸ்பி டைப் ஏ 3.1 ஜென் 2 போர்ட்கள், ஒரு ஹெச்டிஎம்ஐ, ஒரு காம்போ ஆடியோ ஜாக், ஒரு மைக்ரோ கார்டு ரீடர் உள்ளிட்டவையும் டூயல் பேன்ட் வைபை, ப்ளூடூத் 5.0 வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி விரைவில் Mi பேன்ட் 3 சாதனத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பீஜிங்:
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி விரைவில் Mi பேன்ட் ஃபிட்னஸ் டிராக்கரின் மூன்றாம் தலைமுறை மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சியோமி நிறுவனத்தின் எட்டாவது ஆண்டு விழாவில் புதிய சாதனங்களை அறிமுகம் செய்ய சியோமி திட்டமிட்டுள்ளது.
ஷென்சென் நகரில் நடைபெற இருக்கும் விழாவுக்கான அழைப்பிதழ்கள் ஏற்கனவே அனுப்பப்படுகின்றன. முன்னதாக வெளியான தகவல்களில் Mi பேன்ட் 3 சாதனம் இம்மாத இறுதியில் வெளியிடப்படலாம் என கூறப்பட்ட நிலையில் ஆண்டு விழா நிகழ்வில் புதிய ஃபிட்னஸ் டிராக்கர் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய Mi பேன்ட் 3 சாதனத்தில் தொடுதிரை டிஸ்ப்ளே வழங்கப்பட்டு, பட்டன்கள் நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. Mi பேன்ட் 3 சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்களை சியோமி மிகவும் ரகசியமாக வைத்திருக்கிறது. எனினும் Mi பேன்ட் 3 டீசர் அந்நிறுவன ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
2018 சியோமி ஸ்மார்ட்போனுடன் சியோமி நிறுவனம் பல்வேறு புதிய சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் துவங்க இருக்கும் சியோமி விழாவுக்கான நுழைவு சீட்டுக்களை அந்நிறுவனம் 799 முதல் 1999 யுவான் வரை கட்டணம் வசூலித்து வருகிறது. விழாவில் மொத்தம் 5000 பேர் கலந்து கொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன விழாவை தொடர்ந்து ஜூன் 7-ம் தேதி இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனினை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது. சமீபத்தில் சியோமியின் Mi கிரவுட்ஃபன்டிங் திட்டத்தின் கீழ் உருவான முதற்கட்ட சாதனங்களை வெளியிட்டது. அதன் படி Mi ப்ளூடூத் ஆடியோ ரிசீவர் மற்றும் செல்ஃபி ஸ்டிக் டிரைபாட் உள்ளிட்ட சாதனங்களை வெளியிட்டது. ப்ளூடூத் ஆடியோ ரிசீவர் விலை ரூ.999 மற்றும் செல்ஃபி ஸ்டிக் டிரைபாட் விலை ரூ.1,099 என விலை நி்ர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் செயலியில் ஃபீட் போஸ்ட்களை நேரடியாக ஸ்டோரீக்களில் ஷேர் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
இன்ஸ்டாகிராம் செயலியில் ஃபீட் போஸ்ட்களை நேரடியாக ஸ்டோரீக்களில் ஷேர் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் இந்த அம்சம் சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதிய அப்டேட் மூலம் பயனரின் ஃபீடில் வரும் போஸ்ட்களை நேரடியாக ஸ்டோரீக்களாக ஷேர் செய்ய முடியும். இனி ஃபீட் போஸ்ட்களை ஸ்டோரீக்களில் ஷேர் செய்ய போஸ்ட்-இன் கீ்ழ் காணப்படும் பேபர் ஏர்பிளேன் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் புதிய ஸ்டோரீயை உருவாக்குவதற்கான ஆப்ஷன் தெரியும்.

இன்ஸ்டாகிராமில் பீட் போஸ்ட்-ஐ ஸ்டிக்கர் வடிவில் பிரத்யேக பேக்கிரவுன்டுடன் ஷேர் செய்ய தயார் நிலையில் இருக்கும். இதனை ஷேர் செய்யும் முன் ஸ்டிக்கரை ஸ்கேல் செய்யும் ஆப்ஷன்களை இயக்கலாம். இன்ஸ்டாகிராம் ஃபீட்களில் இருந்து ஷேர் செய்யப்படும் ஸ்டோரீக்களில் குறிப்பிட்ட போஸ்ட்-ஐ உண்மையில் பதிவிட்டவரின் யூசர்நேம் இடம்பெற்றிருக்கும்.
நீங்கள் பதிவிடும் போஸ்ட்களை மற்றவர்கள் ஸ்டோரீக்களாக ஷேர் செய்யாமல் இருக்க ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. புதிய வசதிக்கான அப்டேட்கள் முதற்கட்டமாக ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் வழங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் ஐஓஎஸ் இயங்குதளத்திலும் வழங்கப்பட இருக்கிறது.
ஃபேஸ்புக் ஸ்டோரீஸ் அம்சம் இந்தியாவில் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டோரீஸ் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் வெளியிடப்பட்டு இருக்கும் புதிய அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
ஃபேஸ்புக் தளத்தில் ஸ்டோரீஸ் அம்சத்தின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் மூன்று புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ஃபேஸ்புக் தளத்தில் போட்டோ மற்றும் வீடியோக்களை பின்னர் பார்க்க சேமித்து வைக்கும் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் வாய்ஸ் போஸ்ட் மற்றும் ஸ்டோரிக்களை ஆர்ச்சிவ் செய்யும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. புதிய வசதிகள் ஏற்கனவே பயனர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது.
ஃபேஸ்புக் கேமரா கொண்டு படமாக்கப்படும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வாடிக்கையாளர்கள் சேமித்து வைக்க முடியும். இவற்றை குறிப்பிட்ட வாடிக்கையாளர் மட்டும் பார்க்க முடியும். இந்த அம்சம் வாடிக்கையாளர்கள் தங்களின் ஸ்மார்ட்போன்களில் மெமரியை சேமிக்கும் நோக்கில் வழங்கப்படுகிறது. இந்த அம்சத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் கிளவுடில் சேமிக்கப்படுகிறது. இவற்றை சேமித்து வைத்து பின்னர் பகிர்ந்து கொள்ள முடியும்.

ஃபேஸ்புக் கேமரா
ஃபேஸ்புக் கேமரா மூலம் எடுக்கப்படும் புகைப்படங்கள் மட்டும் வீடியோக்களை மட்டுமே தளத்தில் சேமிக்க முடியும். முதற்கட்டமாக இந்த அம்சம் ஃபேஸ்புக் ஆன்ட்ராய்டு செயலியில் வழங்கப்பட்டுள்ளது. என ஃபேஸ்புக் ஸ்டோரீஸ் அம்சத்திற்கான தலைவர் கானர் ஹேஸ் தெரிவித்துள்ளார்.
வாய்ஸ் போஸ்ட் அம்சத்தில் வாடிக்கையாளர்கள் ஆடியோ நோட்களை ஸ்டோரீக்களாக பதிவு செய்ய முடியும். இத்துடன் புகைப்படங்களையும் சேர்க்க முடியும். “வாய்ஸ் போஸ்ட் அம்சம் மூலம் பயனர்கள் தங்களது குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் இணைந்திருக்க அவர்கள் விரும்பும் வழிகளை பயன்படுத்த முடியும்.” என்றும் ஹேஸ் மேலும் தெரிவித்தார்.
இந்த அம்சம் குறைந்த டேட்டா அல்லது நெட்வொர்க் இருக்கும் பகுதிகளிலும் சீராக வேலை செய்யும் படி உருவாக்கப்பட்டுள்ளது. உங்களது நியூஸ் ஃபீடில் மற்றவர்களும் வாய்ஸ் போஸ்ட்களை பதிவு செய்யும் வசதி வழங்கப்படுகிறது. தற்சமயம் வாய்ஸ் போஸ்ட் செய்யும் கால அளவு 20 நொடிகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் வாய்ஸ் போஸ்ட்
இந்த அம்சம் தற்சமயம் ஃபேஸ்புக் லைட் பதிப்பில் வழங்கப்பட்டு இருந்தாலும் விரைவில் ஆன்ட்ராய்டு செயலியிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமான ஸ்டோரீ அம்சம் போன்றே இந்த போஸ்ட்களும் 24 மணி நேரத்திற்கு பின் மறைந்து விடும்.
ஃபேஸ்புக் ஸ்டோரீஸ் ஆர்ச்சிவ் அம்சம் வாடிக்கையாளர்களை தங்களது ஸ்டோரீக்களை பார்க்கவும், ஷேர் செய்ய முடியும். இந்த அம்சம் வரும் வாரங்களில் வழங்கப்பட இருக்கிறது. ஸ்டோரீக்களை ஆர்ச்சிவ் செய்வதற்கான அனுமதி கோரப்படும், இங்கு உறுதி செய்ய OK பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். ஆர்ச்சிவ் செய்ய வேண்டாமெனில் மறுக்க கோரும் ஆப்ஷனை க்ளிக் செய்யலாம்.
இதனை எப்போது வேண்டுமானலும் பார்க்கவும், அவற்றை போஸ்ட் அல்லது ஸ்டோரியாக மீண்டும் ஷேர் செய்யும் வசதிகள் வழங்கப்படுகிறது. ஸ்டோரீஸ் அம்சத்தில் வாய்ஸ் போஸ்ட் பதிவு செய்தால் குறிப்பிட்ட ஸ்டோரி 24 மணி நேரத்தில் மறைந்து விடும், எனினும் ஆர்ச்சிவ் அம்சத்தை செயல்படுத்தி இருந்தால், அவற்றை ஸ்டோரீஸ் ஆர்ச்சிவ் பகுதியில் பார்க்க முடியும்.
வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டிருக்கும் புதிய அப்டேட் அதன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அம்சங்களை வழங்குகிறது.
புதுடெல்லி:
ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கு வாட்ஸ்அப் செயலியில் புதிய அப்டேட் வழங்கப்படுகிறது. இந்த அப்டேட் வாட்ஸ்அப் க்ரூப்களுக்கு அதிக வசதிகளை வழங்குகிறது. ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் செயலியில் தற்சமயம் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய வசதிகள் முன்னதாக ஆன்ட்ராய்டு பீட்டா பதிப்பில் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய அப்டேட் இன்ஸ்டால் செய்தவர்கள் வாட்ஸ்அப் க்ரூப்களில் டிஸ்க்ரிப்ஷன் சேர்க்க முடியும், க்ரூப் அட்மின்களுக்கு கூடுதலாக புதிய வசதிகள், மென்ஷன்ஸ் அம்சம் மற்றும் க்ரூப்களில் உள்ளவர்களை தேடும் அம்சம் வழங்குகிறது.

இந்த வசதிகள் அனைத்தும் பழைய க்ரூப்களுக்கும், புதிதாய் உருவாக்கப்படும் க்ரூப்களிலும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. க்ரூப்களை உருவாக்கும் போது க்ரூப் குறித்த விவரங்களை க்ரூப் டிஸ்க்ரிப்ஷன் பகுதியில் எழுத முடியும். இதனை க்ரூப்-இல் உள்ளவர்கள் மற்றும் புதிதாய் இணைபவர்களும் பார்க்க முடியும்.
க்ரூப் டிஸ்க்ரிப்ஷன்களை க்ரூப் அட்மின்கள் மற்றும் க்ரூப்-இல் இருப்பவர்களும் மாற்றியமைக்க முடியும். மற்றவர்கள் இவ்வாறு செய்ய வேண்டாம் என நினைக்கும் க்ரூப் அட்மின்கள் இதற்கான வசதியை முடக்க முடியும். இதே போன்று க்ரூப் சப்ஜக்ட் மற்றும் ஐகானினை யார் மாற்ற வேண்டும் என்பதை க்ரூப் அட்மின்கள் முடிவு செய்ய முடியும்.
இத்துடன் க்ரூப் அட்மின்கள் மற்ற க்ரூப்களில் இருப்பவர்களின் அட்மின் அனுமதிகளை திரும்ப பெற முடியும். மேலும் க்ரூப் உருவாக்குபவரை இனி க்ரூப்-ஐ விட்டு வெளியேற்ற முடியாது. வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் க்ரூப்களில் மென்ஷன்ஸ் எனும் புதிய வசதியை பயன்படுத்த முடியும்.

இதேபோன்று க்ரூப் கேட்ச் அப் அம்சம் கொண்டு பயனர்கள் மென்ஷன் செய்யப்பட்டு இருக்கும் மெசேஜ்களை கண்டறிந்து அவற்றுக்கு பதில் அனுப்ப முடியும். இந்த அம்சத்தை இயக்க க்ரூப் பயனர்கள் @ பட்டனை க்ளிக் செய்தால் சாட் ஸ்கிரீனின் கீழே வலதுபுறமாக மென்ஷன் செய்யப்பட்ட மெசேஜ்களை பார்க்க முடியும்.
வாட்ஸ்அப் க்ரூப்களில் உள்ளவர்களை ஸ்கிரால்-டவுன் செய்து தேடாமல், நேரடியாக சர்ச் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. க்ரூப்களில் இருப்பவர்களை தேட க்ரூப் இன்ஃபோ பகுதியில் உள்ள சர்ச் ஐகானை க்ளிக் செய்தாலே போதும்.
க்ரூப் இன்விடேஷன்களில் ஸ்பேம் அளவை குறைக்கும் நோக்கில் க்ரூப்களில் இருந்து வெளியேறியவர்களை மீண்டும் சேர்ப்பது கடினமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுளின் ஜிமெயில் தளத்தில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு இயங்கும் புதிய வசதிகளை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
கூகுளின் அதிகம் பயன்படுத்தும் தளங்களில் ஒன்றான ஜிமெயில் சமீபத்தில் அதிகப்படியான அம்சங்கள் சேர்க்கப்பட்டன. கூகுள் I/O 2018 நிகழ்வுக்கு முன் இன்டர்ஃபேஸ் முழுமையாக மாற்றியமைக்கப்பட்ட நிலையில், கூகுள் விழாவில் பல்வேறு புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
புதிய அம்சங்கள் பெரும்பாலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இயங்குவதாக அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் ஜிமெயில் சமீபத்திய அப்டேட் மிகவும் முக்கியத்துவம் வாயந்ததாக பார்க்கப்படுகிறது. பெரும்பாலானோருக்கும் அதிகம் தேவைப்படும் அம்சமாக இருக்கும் ஆஃப்லைன் சப்போர்ட் ஜிமெயிலில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதனால் ஜிமெயில் சேவையை இன்டர்நெட் இல்லாமலும் பயன்படுத்த முடியும். இதனால் மின்னஞ்சல்களை படிப்பதோடு மட்டுமின்றி அவற்றை டெலீட் செய்வது, எழுதுவது, தேடுதல் மற்றும் ஆர்சிவ் போன்ற சேவைகளை இன்டர்நெட் இணைப்பின்றி பயன்படுத்த முடியும். ஆஃப்லைனில் மேற்கொள்ளப்படும் பணிகள் அனைத்தும் இன்டர்நெட் இணைப்பு கிடைத்ததும் சின்க் செய்யப்பட்டு விடும்.

இந்த அம்சத்தை பயன்படுத்த க்ரோம் பிரவுசர் 61 வெர்ஷன் தேவைப்படுகிறது. ஜிமெயிலில் ஆஃப்லைன் மோட் ஆக்டிவேட் செய்வது எப்படி என்பதை கீழே காணலாம்..,
வழிமுறை 1: கூகுள் க்ரோம் வெர்ஷன் 61 டவுன்லோடு செய்யவும்.
வழிமுறை 2: ஜிமெயிலில் செட்டிங்ஸ் ஐகானை க்ளிக் செய்யவும்.
வழிமுறை 3: டிராப்-டவுன் மெனுவில் செட்டிங்ஸ் டேப்-ஐ க்ளிக் செய்யவும்
வழிமுறை 4: மெனு பாரில் காணப்படும் ஆஃப்லைன் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
வழிமுறை 5: இனி எனேபிள் ஆஃப்லைன் மெயில் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
வழிமுறை 6: உங்களது தேவைக்கு ஏற்ப செட்டிங்-களை மாற்றியமைக்கலாம்.
மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் ஆப்ஷன்களை செயல்படுத்தியதும், ஜிமெயில் சேவையை இன்டர்நெட் இணைப்பு இல்லாமலேயே பயன்படுத்த துவங்கலாம்.
ஜிமெயில் சேவையில் ஸ்மார்ட் கம்போஸ் அம்சம் பெரும்பாலான பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த அம்சம் மின்னஞ்சல்களை டைப் செய்யும் போதே வாக்கியங்களை முழுமை செய்ய கூகுள் பரிந்துரைக்கும். இதை கொண்டு முழுமையாக டைப் செய்யாமல் டேப் பட்டனை க்ளிக் செய்து மிக எளிமையாக மின்னஞ்சலை டைப் செய்யலாம்.
ஒப்போ நிறுவனம் 5ஜி தொழில்நுட்பம் பயன்படுத்தி உலகின் முதல் வீடியோ கால் செய்திருக்கிறது. ஒப்போ நிறுவனம் 3டி ஸ்ட்ரக்சர்டு லைட் தொழில்நுட்பம் பயன்படுத்தி இதனை செயல்படுத்தியிருக்கிறது.
பீஜிங்:
ஒப்போ நிறுவனம் 5ஜி தொழில்நுட்பம் பயன்படுத்தி உலகின் முதல் வீடியோ கால் மேற்கொண்டுள்ளது. இதை செயல்படுத்த ஒப்போ நிறுவனம் 3டி ஸ்ட்ரக்சர்டு லைட் தொழில்நுட்பத்தை (3D structured light technology) பயன்படுத்தியுள்ளது.
புதிய 5ஜி தொழில்நுட்ப அறிமுகத்தின் போது குவால்காம் 5ஜி NR டெர்மினல் ப்ரோடோடைப் மற்றும் ஒப்போ போன் பிரதிபலித்த 3டி ஸ்ட்ரக்சர்டு லைட் மூலம் சேகரிக்கப்பட்ட போர்டிரெயிட் தகவல்களை கொண்டு ரிமோட் ரிசீவரில் 3டி போர்டிரெயிட் புகைப்படங்களை பிரதலிபலித்தது.

இதற்கென கஸ்டமைஸ் செய்யப்பட்டு இன்டகிரேட்டெட் ஸ்ட்ரக்சர்டு லைட் கேமரா பொருத்தப்பட்ட ஒப்போ ஆர்11எஸ் ஸ்மார்ட்போனினை ஒப்போ பயன்படுத்தியது. இது ஸ்மார்ட்போனில் உள்ள பிரத்யேக கேமரா மற்றும் ஆர்ஜிபி மூலம் குறிப்பிட்ட பொருளின் கலர் மற்றும் 3டி டெப்த்-ஐ சேகரிக்கிறது. பின் இந்த தகவல்கள் 5ஜி சூழலில் அனுப்பப்பட்டு டிஸ்ப்ளே ஸ்கிரீனுக்கு அனுப்பப்படுகிறது.
அதிவேக, அதிக திறன் மற்றும் குறைந்த லேட்டென்சி மூலம் 5ஜி தொழில்நுட்பம் ஸ்மார்ட்போன் தொலைத்தொடர்பு துறையில் புதிய துவக்கமாக பார்க்கப்படுகிறது. மொபைல் இன்டர்நெட் யநிஜ உலகிற்கும், டிஜிட்டல் உலகிற்கும் இடைய இருக்கும் எல்லைகளை குறைக்கிறது. அந்த வகையில் 3டி தரவுகள் வாடிக்கையாளர்கள் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் இருக்கும்.
புதிய 3டி ஸ்ட்ரக்சர்டு லைட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிரத்யேக செயலிகளை உருவாக்க இருப்பதாக ஒப்போ தெரிவித்துள்ளது. முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் 5ஜி பைலட் தி்ட்டத்திற்கென குவால்காம் நிறுவனத்துடன் இணைந்திருப்பதாகவும், 5ஜி தொழில்நுட்பத்தை ஸ்மார்ட்போன்களில் வழங்குவதில் முதன்மை நிறுவனமாக ஒப்போ இருக்கும் என தெரிவித்திருந்தது.
இந்தியாவில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 ([ஜிபிஎஸ் + செல்லுலார்) விற்பனை துவங்கியுள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
ஆப்பிள் ஏற்கனவே அறிவித்ததை போன்று வாட்ச் சீரிஸ் 3 (ஜிபிஎஸ் + செல்லுலார்) மாடலின் விற்பனையை இந்தியாவில் துவங்கியுள்ளது.
இந்தியாவில் மே 4-ம் தேதி முன்பதிவு துவங்கிய நிலையில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 பேஸ் மாடல் விலை ரூ.39,080 முதல் துவங்குகிறது. ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல், ஜியோ ஸ்டோர்களில் விற்பனை செய்யப்படுகிறது.
புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 இசிம் பயன்படுத்துவதால், பிரத்யேக சிம் கார்டு தேவைப்படாது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 மாடல்களில் மேம்படுத்தப்பட்ட டூயல்-கோர் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய மாடல்களை விட 70% வேகமாக இயங்கும், புதிய W2 வயர்லெஸ் சிப் 85% வேகமான வைபை, 50% சீரான ப்ளூடூத் கனெக்டிவிட்டி உள்ளிட்ட வசதிகளையும் வாட்டர் ரெசிஸ்டண்ட் பாடி கொண்டுள்ளது.

அறிமுக சலுகைகள்:
ஏர்டெல் சார்பில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது ரூ.5000 வரை கூடுதல் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ சார்பில் ஜியோ எவ்ரிவேர் கனெக்ட் (JioEverywhereConnect) சேவை வழங்கப்படுகிறது. இந்த சேவையை கொண்டு ஒரே ஜியோ நம்பரை ஐபோன் மற்றும் ஆப்பிள் வாட்ச் சாதனங்களில் பயன்படுத்த முடியும். ஜியோ எவ்ரிவேர் கனெக்ட் சேவை ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது.

பல்வேறு நாடுகளில் விற்பனை:
இந்தியா மட்டுமின்றி ஸ்வீடன், டென்மார்க் மற்றும் தாய்வான் உள்ளிட்ட நாடுகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. தற்சமயம் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 9ஜிபிஎஸ் + செல்லுலார்) ஆஸ்திரேலியா, கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், புவேர்ட்டோ ரிக்கோ, சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், ஹாங்காங், லண்டன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 இந்திய விலை:
புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 (ஜிபிஎஸ் + செல்லுலார்) மாடல் 38 மில்லிமீட்டர் சில்வர் அலுமினியம் கேஸ் ஃபாக் ஸ்போர்ட் பேன்ட் / ஸ்பேஸ் கிரே அலுமினியம் கேஸ், பிளாக் ஸ்போர்ட் பேன்ட் / கோல்டு அலுமினியம் கேஸ் மற்றும் பின்க் சேன்ட் ஸ்போர்ட் பேன்ட் / ஸ்பேஸ் கிரே அலுமினியம் கேஸ், கிரே ஸ்போர்ட் பேன்ட் விலை ரூ.39,080 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 ஆரம்ப விலை ரூ.39,080 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் பல்வேறு கேஸ்கள், மற்றும் நிறங்களுக்கு ஏற்ப விலை மாறுகிறது. ஆப்பிள் வாட்ச் எடிஷன் (ஜிபிஎஸ் + செல்லுலார்) 42 மில்லிமீட்டர் செராமிக் கேஸ், சாஃப்ட் வைட் / பெப்பிள் ஸ்போர்ட் பேன்ட் கொண்ட மாடலின் விலை ரூ.1,22,090 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஆப்பிளின் விலை உயர்ந்த் சீரிஸ் 3 வாட்ச் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஹெச்பி நிறுவனத்தின் எலைட்புக் 700 G5, ப்ரோபுக் 645 G4 லேப்டாப் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
புதுடெல்லி:
ஹெச்பி நிறுவனத்தின் எலைட்புக் 700 G5 மற்றும் ப்ரோபுக் 645 G4 லேப்டாப் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்டு இயங்கும் புதிய லேப்டாப்களில் AMD ரைசன் ப்ரோ மொபைல் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளன.
வியாபாரம் மற்றும் அலுவல் ரீதியிலான பணிகளுக்கு என உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய லேப்டாப்களில் தன்டர்போல்ட் டாக் G2 வசதி கொண்டுள்ளது.
ஹெச்பி எலைட்புக் 700 சீரிஸ் எலைட்புக் 735 G5, எலைட்புக் 745 G5, எலைட்புக் 755 G5 என மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது. இவற்றில் முறையே 13.3 இன்ச் 1366x768, 14 இன்ச் 1920x1080 மற்றும் 15.6 2560x1440 பிக்சல் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இவை 2.0 ஜிகாஹெர்ட்ஸ் AMD ரைசன் 7 ப்ரோ 2700U, ரேடியான் வீகா 10 GPU, 2 எம்பி L2 கேச்சி + 4எம்பி L3 கொண்டுள்ளது.

விண்டோஸ் 10 ப்ரோ இயங்குதளம் கொண்டு இயங்கும் புதிய லேப்டாப்களில் 802.11ac + ப்ளூடூத் வயர்லெஸ் மாட்யூல் மற்றும் 4ஜி எல்ட்இ மோடெம் வழங்கப்பட்டுள்ளது. இதன் TB3 போர்ட் ஹெப் சமீபத்தில் அறிமுகம் செய்த தன்டர்போல்ட் 3 சப்போர்ட் கொண்டுள்ளது. இத்துடன் பேங் மற்றும் லுஃப்சென் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் ஹெச்டிஎம்ஐ போர்ட், 720 பிக்சல் வெப்கேம், ஆடியோவிற்கு TRRS கனெக்டர், ஸ்பீக்கர்கள், மைக்ரோபோன், மைக்ரோ எஸ்டி கார்டு ரீடர் கொண்டுள்ளது. இதேபோன்று ஹெச்பி ப்ரோபுக் 645 G4 லேப்டாப் மாடைலில் மிலிட்டரி ஸ்டேன்டர்டு டெஸ்டிங்-ஐ விரைவில் பூர்த்தி செய்ய இருக்கிறது.
700 சீரிஸ் போன்றே இந்த லேப்டாப் மாடலிலும் AMD ரைசன் 7 ப்ரோ பிராசஸர், 15.6 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. விண்டோஸ் 10 மற்றும் கார்டனா வசதி கொண்டுள்ளது. ஹெச்பி ப்ரோபுக் 645 G4 மாடலின் விற்பனை விரைவில் துவங்கும் என்றும் இதன் விலை 759 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.51,114), ஹெச்பி எலைட்புக் 700 சீரிஸ் விலை 999 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.67,277) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கூகுள் I/O 2018 டெவலப்பர் நிகழ்வில் ஆன்ட்ராய்டு பி இயங்குதளத்தின் பீட்டா பதிப்பு பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு வெளியிடப்பட்டது.
கலிஃபோர்னியா:
கூகுள் நிறுவனத்தின் ஆன்ட்ராய்டு பி (Android P) இயங்குதளத்துக்கான டெவலப்பர் பிரீவியூ கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட நிலையில், அந்நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததை போன்று ஆன்ட்ராய்டு P பீட்டா பதிப்பினை வெளியிட்டுள்ளது.
பிராஜெக்ட் டிரெபிள் திட்டத்தினால் ஆன்ட்ராய்டு பி பீட்டா பதிப்பு சோனி, சியோமி, ஒப்போ, விவோ, எசென்ஷியல், நோக்கியா 7 பிளஸ் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் மற்றும் விரைவில் வெளியாக இருக்கும் ஒன்பிளஸ் 6 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கும் வழங்கப்பட இருக்கிறது.

ஆன்ட்ராய்டு பி பீட்டா சப்போர்ட் கொண்ட சாதனங்கள்:
கூகுள் பிக்சல்
கூகுள் பிக்சல் XL
கூகுள் பிக்சல் 2
கூகுள் பிக்சல் 2 XL
சோனி எக்ஸ்பீரியா XZ2
சியோமி Mi மிக்ஸ் 2S
நோக்கியா 7 பிளஸ்
ஒப்போ R15 ப்ரோ
விவோ X21
விவோ X21UD
ஒன்பிளஸ் 6
எசென்ஷியல் PH‑1
ஆன்ட்ராய்டு பி இயங்குதளத்தில் வைபை RTT மூல் இன்டோர் பொசிஷனிங், டிஸ்ப்ளே கட்அவுட் அல்லது நாட்ச் சப்போர்ட், மேம்படுத்தப்பட்ட மெசேஜிங் அனுபவம், மல்டி-கேமரா சப்போர்ட், ஹெச்டிஆர் VP9 வீடியோ, HEIF இமேஜ் கம்ப்ரெஷன், பிட்மேப்களுக்கு இமேஜ் டீகோடர் மற்றும் டிராயபல்ஸ், ஜாப் ஷெட்யூலரில் டேட்டா காஸ்ட் சென்சிடிவிட்டி, அடாப்டிவ் பேட்டரி, புதிய ஜெஸ்ட்யூர்கள், நேவிகேஷன் சிஸ்டம்கள், செயற்கை நுண்ணறி சார்ந்து இயங்கும் ஆப் ஆக்ஷன்கள், ஸ்லைசஸ், பேக்கிரவுன்டு ரெஸ்ட்ரிக்ஷன்கள், பயோமெட்ரிக் பிராம்ப்ட் மற்றும் பல்வேறு புதிய அம்சங்கள் புதிய இயங்குதளத்தில் வழங்கப்படுகிறது.
பிக்சல் சாதனங்களில் ஏற்கனவே ஆன்ட்ராய்டு பீட்டா திட்டத்தில் இருப்போருக்கு OTA அப்டேட் தானாக வழங்கப்படும். மற்ற ஸ்மார்ட்போன்களுக்கு ஆன்ட்ராய்டு டெவலப்பர்கள் இணையதளத்தில் இருந்து டவுன்லோடு லின்க்-களை பயன்படுத்தி கொள்ளலாம்.
ஆன்ட்ராய்டு பி இயங்குதளத்தின் அறிமுக வீடியோவை கீழே காணலாம்..,
ஐஓஎஸ் இயங்குதளத்துக்கான வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் உருவாக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கலிஃபோர்னியா:
வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வீடியோ காலிங், மூன்றாம் தரப்பு ஸ்டிக்கர்கள் என பல்வேறு புதிய அம்சங்கள் விரைவில் வழங்கப்பட இருக்கிறது. இந்நிலையில், ஐஓஎஸ் இயங்குதளத்துக்கான வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக ஆன்ட்ராய்டு இயங்குதளத்துக்கான வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் ஜனவரி மாத வாக்கில் வெளியிடப்பட்டது. சிறு நிறுவனங்கள் மற்றும் வியாபரங்களுக்கு ஏற்ற வசதிகளை வழங்கும் படி வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்திய ஆன்ட்ராய்டு பீட்டா பதிப்பில் வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் wa.me என்ற சிறிய லின்க் உருவாக்கியிருப்பது தெரியவந்துள்ளது. இது api.whatsapp.com முகவரியின் சிறிய பதிப்பாகும், இதை கொண்டு செயலியை பிரவுசரிலேயே திறக்க முடியும்.
வாட்ஸ்அப் ஐஓஎஸ் பிஸ்னஸ் செயலியை உருவாக்கும் பணிகளை வாட்ஸ்அப் ஏற்கனவே துவங்கிவிட்டதாக WABetaInfo தெரிவித்துள்ளது. ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் வெளியானது முதல் வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஐஓஎஸ் பதிப்பு பலராலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

புகைப்படம்: நன்றி wabetaInfo
அந்த வகையில் ஐஓஎஸ் இயங்குதளத்துக்கான வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் பணிகள் துவக் நிலையில் இருப்பதாகவும், இதன் வெளியாக சில காலம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் வாட்ஸ்அப் செயலியில் கிரீட்டிங் மெசேஜ் எனும் புதிய வசதியை சேர்க்க வாட்ஸ்அப் முடிவு செய்திருப்பதாகவும், இந்த அம்சம் புதிய வாடிக்கையாளர்கள் தொடர்ச்சியாக 14 நாட்களுக்கு பயன்படுத்தாத போது கஸ்டமைஸ்டு மெசேஜை தானாக அனுப்பும். ஐஓஎஸ் பிஸ்னஸ் செயலியில் லேபெல்கள் மற்றும் க்விக் ரிப்ளை உள்ளிட்ட அம்சங்கள் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் ஐஓஎஸ் இயங்குதளத்துக்கான வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியில் ஆன்ட்ராய்டு பிஸ்னஸ் செயலியில் வழங்கப்பட்ட அனைத்து அம்சங்களும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாட்ஸ்அப் புதிய பீட்டா பதிப்பில் டாப் எமோஜி எனும் புதிய வசதி வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த அம்சம் அதிகம் பயன்படுத்தப்படும் எமோஜிக்கள் எமோஜி போர்டின் மேல் வைக்கப்படும் என கூறப்படுகிறது.
பிளிப்கார்ட் தளத்தில் கனிசமான பங்குகளை அமெரிக்காவின் பிரபல வால்மார்ட் நிறுவனம் சுமார் 1600 கோடி டாலர்களை கொடுத்து வாங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:
பிளிப்கார்ட் நிறுவன பங்குகளை அமெரிக்க நிறுவனமான வால்மார்ட் வாங்க இருப்பதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
முன்னதாக பிளிப்கார்ட் தளத்தின் 40% பங்குகளையும், பின் 51% பங்குகளை வால்மார்ட் வாங்க இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் பிளிப்கார்ட் தளத்தின் 73% பங்குகளை வால்மார்ட் வாங்க இருப்பதாக கூறப்படுகிறது. பிளிப்கார்ட் நிறுவனத்தின் 73% பங்குகளின் மதிப்பு 1600 கோடி அமெரிக்க டாலர்கள் வரை இருக்கும் என கூறப்படுகிறது.
இதற்கான ஒப்பந்தம் மே 3-ம் தேதி கையெழுத்தானதாகவும், இதற்கென வால்மார்ட் 1460 கோடி டாலர்களை செலவிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பிளிப்கார்ட் மதிப்பு 2000 கோடி டாலர்கள் என்ற நிலையில் வால்மார்ட் சார்பில் பிளிப்கார்ட் மதிப்பு 2200 கோடி என கணக்கிடப்பட்டு சுமார் 1600 கோடிகளை செலவிட முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

கோப்பு படம்
இதேபோன்று கூகுளின் ஆல்ஃபாபெட் நிறுவனமும் சுமார் 300 கோடி டாலர்களை இதில் முதலீடு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. பல்வேறு விவாதங்களுக்கு பின் இரு நிறுவனங்களும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தில் ரொக்கம் மற்றும் பங்குகள் என இரண்டும் கலந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 55% மதிப்புடைய ரொக்கம் மூலம் பிளிப்கார்ட் தளத்தின் முக்கிய முதலீட்டாளர்கள் வெளியேறுவர் என கூறப்படுகிறது.
டென்சென்ட், மைக்ரோசாஃப்ட், டைகர் குளோபல் போன்ற முதலீட்டாளர்கள் முழுமையாக வெளி்யேறமாட்டார்கள் என கூறப்படுகிறது. பிளிப்கார்ட் தளத்தில் 20% பங்குகளை வைத்திருக்கும் சாஃப்ட்பேங்க் 400 கோடி டாலர்களை பெற்று கொண்டு பிளிப்கார்ட்-இல் இருந்து முழுமையாக வெளியேறலாம் என கூறப்படுகிறது.
வால்மார்ட் பேங்கர்-ஆK ஜெ.பி. மோர்கன், சட்ட வல்லுநர் குழுவில் அமர்சந்த் மங்கள்தாஸ் மற்றும் நிர்வாக ஆலோசகராக பெயின் & கோ இடம்பெற்றிருக்கின்றன. இரு நிறுவனங்களின் ஒப்பந்தம் குறித்த கேள்விகளுக்கு எந்த நிறுவனம் சார்பிலும் தகவல் வழங்கப்படவில்லை.






