என் மலர்tooltip icon

    கணினி

    சோனி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட X9000F சீரிஸ் 4K ஹெச்டிஆர் டிவிக்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
    புதுடெல்லி:

    சோனியின் புதிய X9000F சீரிஸ் 4K ஹெச்டிஆர் டிவிக்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இந்த டிவி மாடல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    புதிய சோனி டிவி மாடல்களில் X1 எக்ஸ்ட்ரீம் பிராசஸர் கொண்டிருக்கிறது. இவற்றில் ஸ்டிரைக்கிங் ஹைலைட்கள், டீப்பர் டார்க் மற்றும் வைப்ரன்ட் கலர்களை பிரதிபலிக்கிறது. இத்துடன் ஆப்ஜக்ட் சார்ந்த ஹெச்டிஆர் ரீமாஸ்டர், சூப்பர்பிட் மேப்பிங் 4K ஹெச்டிஆர் மற்றும் டூயல் டேட்டாபேஸ் பிராசஸிங் கொண்டுள்ளது. 

    ஆன்ட்ராய்டு டிவி வெர்ஷன் 7.0 மற்றும் சோனியின் பிரத்யேக யூசர் இன்டர்ஃபேஸ் (UI) மற்றும் க்ரோம்காஸ்ட் பில்ட்-இன் வசதியை வழங்குகிறது. இதன் டிரைலூமினஸ் டிஸ்ப்ளே சிவப்பு, பச்சை மற்றும் நீல நிறங்களை மிகவும் கச்சிதமாக பிரதிபலிக்கிறது. X டென்ட் செய்யப்பட்ட டைனமிக் ரேஞ்ச் PRO ஹெச்டிஆர் மற்றும் ஹெச்டிஆர் அல்லாத தரவுகளை தனியே வித்தியாசப்படுத்தி, பின்னணி நிறங்களை தானாக மாற்றியமைத்து XDR கான்ட்ராஸ்ட் தரத்தில் வீடியோக்களை வழங்குகிறது.

    சோனியின் டைரக்ட் எல்இடி லோக்கல் டிம்மிங் மற்றும் பேக்லைட் பூஸ்டிங் அல்காரிதம் கொண்டு X-மோஷன் கிளேரிட்டி அம்சம் வேகமான ஆக்ஷன் படங்களை மிகவும் நேர்த்தியாகவும், தெளிவாகவும் காட்சிப்படுத்துகிறது. இதனால் புகைப்படங்கள் அதிக தரம் பெறுவதோடு பிரைட்னஸ் அளவில் எவ்வித இழப்பும் ஏற்படாது.



    சோனி பிரேவியா X9000F சிறப்பம்சங்கள்:

    - 55/65/85-இன்ச் 3840x2160 பிக்சல் 4K HDR TRILUMINOS டிஸ்ப்ளே
    - X-மோஷன் கிளேரிட்டி
    - 4K ஹெச்டிஆர் பிராசஸர் X1 எக்ஸ்ட்ரீம்
    - டைனமிக் கான்ட்ராஸ்ட் என்ஹான்சர்
    - ஆப்ஜக்ட் சார்ந்த ஹெச்டிஆர் ரீமாஸ்டர்
    - X-டென்ட் செய்யப்பட்ட டைனமிக் ரேஞ்ச் ப்ரோ
    - 4K X-ரியாலிட்டி ப்ரோ
    - 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - ஆன்ட்ராய்டு டிவி 7.0
    - க்ரோகாஸ்ட் மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் பில்ட் இன் வசதி
    - வாய்ஸ் சர்ச் வசதி
    - வைபை, ப்ளூடூத், யுஎஸ்பிx3, 1xஈத்தர்நெட்
    - 10 W+10 W ஸ்பீக்கர், டால்பி டிஜிட்டல்
    - டால்பி டிஜிட்டல் பிளஸ், டால்பி பல்ஸ்
    - டிடிஎஸ் டிஜிட்டல் சரவுன்ட்

    55 இன்ச் சோனி பிரேவியா X9000F (KD-55X9000F) விலை ரூ.2,39,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே விற்பனை நடைபெற்று வருகிறது. இதன் 65 இன்ச் (KD-65X9000F) மற்றும் 85-இன்ச் (KD-85X9000F) மாடல்களின் விற்பனை விரைவில் துவங்க இருக்கிறது. இவற்றின் விலை குறித்து எவ்வித தகவலும் இல்லை.
    அசுஸ் நிறுவனத்தின் விவோபுக் 15 X507 லேப்டாப் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய லேப்டாப் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    அசுஸ் நிறுவனத்தின் விவோபுக் 15 X507 லேப்டாப் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய லேப்டாப் 15.6 இன்ச் எல்இடி பேக்லிட் டிஸ்ப்ளே, 6-த் ஜென் இன்டெல் கோர் i3 பிராசஸர் கொண்டு இயங்குகிறது. புதிய லேப்டாப் எடை 1.68 கிலோ ஆகும். அசுஸ் நிறுவனத்தின் எடை குறைந்த மாடல்களில் இதுவும் ஒன்றாக இணைந்துள்ளது.

    அசுஸ் X507 மாடலில் 15.6 இன்ச் ஃபுல் ஹெச்டி மெல்லிய பெசல் நானோ எட்ஜ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இத்துடன் 6-த் ஜெனரேஷன் இன்டெல் கோர் i3 பிராசஸர் மற்றும் NVIDIA ஜீஃபோர்ஸ் MX110 2ஜிபி GDDR5 விரேம் வழங்கப்பட்டுள்ளது. இதன் லே-என்ட் மாடலில் இன்டெல் பென்டியம் சில்வர் N5000 அல்லது இன்டெல் செலரான் N4000 பிராசஸர் மற்றும் இன்டகிரேட் செய்யப்பட்ட இன்டெல் சிபியு கொண்டுள்ளது.



    புதிய அசுஸ் லேப்டாப் விண்டோஸ் 10 ஹோம் எடிஷன் இயங்குதளம், 1000 ஜிபி SATA HDD ஹார்டு டிரைவ் மற்றும் பெரிய 1000 ஜிபி HDD, டூயல் பேன்ட் 802.11ac வைபை கொண்டுள்ளது. இத்துடன் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளதால் விண்டோஸ் ஹெல்லோ மூலம் அதிவேகமாக லாக்-இன் செய்ய முடியும். மேலும் புதிய லேப்டாப் மாடலில் VGA வெப் கேமரா வழங்கப்பட்டுள்ளது. 

    இத்துடன் அசுஸ் சோனிக்மாஸ்டர் தொழில்நுட்பம் கொண்டிருக்கும் புதிய லேப்டாப் சர்வதேச சந்தையில் என்ட்ரி-லெவல் பிரிவில் வெளியிடப்பட்டுள்ளது. X507 லேப்டாப் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் கொண்டிருப்பதால் வெறும் 50 நிமிடங்களில் லேப்டாப் 60% சார்ஜ் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் அசுஸ் விவிபுக் 15 X507 லேப்டாப் மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது. பேடிஎம் மால் தளத்தில் புதிய லேப்டாப் விலை ரூ.21,990 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ரூ.2000 பேடிஎம் மால் கேஷ்பேக் சலுகையும் அடங்கும்.
    மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 10 ஏப்ரல் 2018 அப்டேட்கள் வெளியிடப்பட்டு வருவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
    சான்ஃபிரான்சிஸ்கோ:

    உலகமெங்கும் விண்டோஸ் 10 பயன்படுத்துவோருக்கு ஏப்ரல் 2018 அப்டேட்களை வழங்க துவங்கியுள்ளதாக மைக்ரோசாஃப்ட் அறிவித்துள்ளது. 

    ஏப்ரல் 30-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வரும் ஏப்ரல் 2018 அப்டேட் சர்வதேச வெளியீடு மே 8-ம் தேதி துவங்குகிறது. எனினும் மேனுவலாகவும் இந்த அப்டேட்-ஐ டவுன்லோடு செய்ய முடியும். புதிய விண்டோஸ் 10 அப்டேட் மேம்படுத்தப்பட்ட ஃபோகஸ் அசிஸ்ட், புதிய டைம்லைன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 

    புதிய டைம்லைன் அம்சம் நீங்கள் ஏற்கனவே பயன்படுத்திய செயலிகளை கொண்டிருக்கிறது. இத்துடன் மைக்ரோசாஃப்ட் எட்ஜ், விண்டோஸ் இன்க், விண்டோஸ் மிக்சட் ரியாலிட்டி, விண்டோஸ் ஹெல்லோ, மைக்ரோசாஃப்ட் போட்டோஸ், விண்டோஸ் 10 இல் 3D, கார்டனா, கேமிங், டச் கீபோர்டு, ஹேன்ட்ரைட்டிங், விண்டோஸ் டிஃபென்டர் செக்யூரிட்டி சென்டர், வி்ண்டோஸ் 10 எஸ் மோட் மேலும் பல்வேறு வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.



    புதிய இயங்குதளத்தை அப்டேட் செய்ய சர்ச் டேப் சென்று செட்டிங்ஸ் -- அப்டேட் மற்றும் செக்யூரிட்டி -- விண்டோஸ் அப்டேட் உள்ளிட்ட ஆப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும்.

    இனி செக் ஃபார் அப்டேட்ஸ் அம்சத்தை கிளிக் செய்து புதிய விண்டோஸ் 10, வெர்ஷன் 1803 டவுன்லோடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு செய்ததும் டவுன்லோடு துவங்கி, பின்னணியில் இன்ஸ்டால் ஆகும். விண்டோஸ் 10 அப்டேட் ஆகும் போது கணினி ரீஸ்டார்ட் ஆகும்.

    கம்ப்யூட்டர் கான்ஃபிகரேஷன் மற்றும் இன்டர்நெட் இணைப்புக்கு ஏற்ப அப்டேட் நேரம் மாறுபடும். 
    இந்தியாவில் பழைய டாங்கிள்களை அப்கிரேடு செய்து புதிய ஜியோஃபை போர்டபிள் ஹாட்ஸ்பாட் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரிலையன்ஸ் புதிய சலுகையை அறிவித்துள்ளது.
    மும்பை:

    இந்தியாவில் பழைய டாங்கிள்களை வழங்கி புதிய ஜியோஃபை போர்டபிள் ஹாட்ஸ்பாட் பெறுவோருக்கு ரிலையன்ஸ் புதிய சலுகைகளை வழங்குகிறது.

    அந்த வகையில் பழைய டாங்கிள்களை கொடுத்து புதிய ஜியோஃபை போர்டபிள் ஹாட்ஸ்பாட் வாங்குவோருக்கு புதிய வைபை ரவுட்டர் மற்றும் ரூ.2200 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. 

    ஜியோஃபை எக்ஸ்சேஞ்ச் குறுகிய கால சலுகையை பெற என்ன செய்ய வேண்டும்?

    - ஜியோஃபை போர்டபிள் வைபை ரவுட்டரை ரூ.999 செலுத்தி வாங்க வேண்டும்

    - ஜியோ பிரைம் ரூ.99 மற்றும் ரூ.198 அல்லது ரூ.299 செலுத்தி சிம் கார்டினை ஆக்டிவேட் செய்ய வேண்டும்

    - உங்களின் பழைய ஜியோ அல்லாத டாங்கிளை ஏதேனும் ஜியோஸ்டோர் அல்லது ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோரில் வழங்க வேண்டும்

    - பழைய ஜியோ அல்லாத டாங்கிள் அல்லது மோடெமின் சீரியல் நம்பரை வழங்கி, புதிய ஜியோஃபை MSISDN நம்பரை பெற வேண்டும்

    - உங்களுக்கான கேஷ்பேக் உடனடியாக மைஜியோ கணக்கில் சேர்க்கப்பட்டு விடும்



    ரூ.2200 மதிப்புடைய கேஷ்பேக் ரூ.50 மதிப்புடைய மொத்தம் 44 வவுச்சர்களாக வழங்கப்படும், இவற்றை ரூ.198 மற்றும் ரூ.299 ரீசார்ஜ் செய்ய மட்டும் பயன்படுத்தலாம்.

    கடந்த ஆண்டு அறிமுகமான ஜியோஃபை ரவுட்டர் அதிக வரவேற்பை பெற்றது. கடந்த ஆணஅடு செப்டம்பரில் வெளியான தகவல்களில் டேட்டா கார்டு சந்தையில் ஏப்ரல் - ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் ஜியோஃபை மட்டும் 91% பங்குகளை பெற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

    இலவச டேட்டா வழங்கியதன் மூலம் அதிக பிரபலமான ரிலையன்ஸ் ஜியோ ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தி வருகிறது. 

    போர்டபிள் ஹாட்ஸ்பாட் சாதனம் 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஒரே சமயத்தில் வைபை வசதி கொண்டு பத்து சாதனங்களிலும், ஒரு சாதனத்திற்கு யுஎஸ்பி மூலம் இணைத்து பயன்படுத்தும் வசதியை ஜoியோஃபை ஹாட்ஸ்பாட் வழங்குகிறது.

    இதில் உள்ள OLED டிஸ்ப்ளே நெட்வொர்க் சிக்னல், பவர், வைபை ஸ்டேட்டஸ் மற்றும் இதர தகவல்களை வழங்குகிறது. இந்த சாதனம் கொண்டு அதிவேக 4ஜி இன்டர்நெட் பயன்படுத்த முடியும். இத்துடன் வைபை ஹாட்ஸ்பாட்களை உருவாக்க முடியும். மேலும் ஹெச்டி வாய்ஸ் கால், வீடியோ கால், மெசேஜிங் உள்ளிட்ட வசதிகளும் வழங்குகிறது.
    ஃபேஸ்புக் மெசன்ஜர் கிட்ஸ் செயலியில் வழங்கப்பட்டிருக்கும் புதிய அப்டேட் பெற்றோருக்கு பல்வேறு புதிய அம்சங்களை வழங்குகிறது.
    வாஷிங்டன்:

    மெசன்ஜர் கிட்ஸ் செயலியில் பெற்றோருக்கு கூடுதல் கன்ட்ரோல் வழங்கும் நோக்கில் ஸ்லீப் மோட் எனும் புதிய வசதியை ஃபேஸ்புக் வழங்கியுள்ளது. இந்த அம்சம் கொண்டு குழந்தை பயன்படுத்தும் சாதனத்தில் ஆஃப்டைம்களை குறிக்க முடியும். இவ்வாறு செய்ததும் ஆப் ஸ்லீப் மோடிற்கு சென்று விடும். 

    ஸ்லீப் மோடில் இருக்கும் போது குழந்தைகளால் குறுந்தகல்களை அனுப்பவோ, பெறவோ, வீடியோ கால், கேமரா அல்லது நோட்டிஃபிகேஷன் என எதையும் பார்க்க முடியாது. செயலியை திறக்க முயன்றால், செயலி ஸ்லீப் மோடில் உள்ளது, பின்னர் முயற்சிக்கவும் என்ற தகவலை மட்டும் காண்பிக்கும்.

    "குறிப்பி்ட்ட நேரத்திற்கு செயலியை இயக்க முடியாத படி செய்யும் வசதியை வழங்க பெற்றோர்கள் கேட்டிருந்தனர். இந்த சமயத்தில் உணவு, வீட்டுப்பாடம், உறக்கம் உள்ளிட்டவற்றுக்கு செலழிக்க செய்ய வேண்டும் என அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். பெற்றோர் கோரிக்கைக்கு ஏற்ப இந்த அம்சத்தை வழங்கி இருக்கிறோம்," என ஃபேஸ்புக் சேவை பிரிவு மேளாலர் தருன்யா கோவிந்தராஜன் ஃபேஸ்புக் போஸ்ட் மூலம் தெரிவித்துள்ளார்.

    ஸ்லீப் மோட் மூலம் குழந்தைகள் மற்ற வேலைகளை செய்ய அதிக நேரம் ஒதுக்க முடியும். ஒவ்வொரு நாளும், செயலியில் செட் செய்யப்படும் நேரத்திற்கு செயலி ஸ்லீப் மோடில் தானாக வைக்கப்பட்டு, குழந்தைகள் பயன்படுத்தாத நிலைக்கு மாற்றப்படும். இந்த அம்சத்தை பெற்றோர் தங்களின் ஃபேஸ்புக் அக்கவுன்ட் மூலம் இயக்க முடியும்.


    கோப்பு படம்

    பெற்றோரின் ஃபேஸ்புக் கணக்கில் இருக்கும் பேரன்ட் கன்ட்ரோல் சென்டர் ஆப்ஷனில் காணப்படும் ஆஃப் டைம்ஸ் (offtimes) ஆப்ஷனை தேர்வு செய்து நேரத்தை செட் செய்து விடும்.

    இது எவ்வாறு வேலை செய்கிறது?

    - ஃபேஸ்புக் செயலியில் உள்ள மெசன்ஜர் கிட்ஸ் கன்ட்ரோல் பக்கத்திற்கு செல்ல வேண்டும். குழந்தையின் பெயரை தேர்வு செய்து ஸ்லீப் மோட் ஆப்ஷனை ஆப் கன்ட்ரோல்ஸ் பகுதியில் இருந்து தேர்வு செய்ய வேண்டும்.

    - குழந்தைகளுக்கு செயலியை ஸ்விட்ச் ஆஃப் செய்ய வேண்டிய நேரத்தை செட் செய்ய வேண்டும். வாரநாள் மற்றும் வாரயிறுதி நாட்கள் என வெவ்வேறு நேரத்தை செட் செய்யலாம். நேர அளவை குறிப்பிடத்தகும், நீங்கள் செட் செய்த நேரத்தில் குழந்தைகளால் செயலியை பயன்படுத்த முடியாது என கோவிந்தராஜன் குறிப்பிட்டிருக்கிறார்.

    ஃபேஸ்புக் செயலியை கொண்டு மெசன்ஜர் கிட்ஸ் செயலியின் அனைத்து ஆப்ஷன்களையும் பெற்றோர் இயக்க முடியும். ஸ்லீப் மோட் மட்டுமின்றி கான்டாக்ட்களை சேர்ப்பது, அழிப்பது உள்ளிட்டவற்றையும் பெற்றோர் புதிய கன்ட்ரோல் பேனலில் இருந்து இயக்க முடியும்.
    இந்திய டிவி சந்தையில் டிசிஎல் மல்டிமீடியா நிறுவனம் புதிய ஸ்மார்ட் டிவிக்களை குறைந்த விலையில் அறிமுகம் செய்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்திய டிவி சந்தையில் சியோமி வரவுக்கு பின் பல்வேறு பிரான்டுகளும் தொலைகாட்சி சந்தையில் கால்பதிக்க திட்டமிட்டுள்ளன. அந்த வரிசையில் இணைந்திருக்கும் புதுவரவு நிறுவனமாக டிசிஎல் மல்டிமீடியா இருக்கிறது.

    சீனாவை சேர்ந்த டிசிஎல் நிறுவனம் புதிய ரக iFFALCON ஸ்மார்ட் டிவி மாடல்களை இந்தியாவில் பிரத்யேகமாக வெளியிட்டுள்ளன. புதிய ஸ்மார்ட் டிவிக்கள் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகின்றன.

    மூன்று புதிய ஸ்மார்ட் டிவிக்கள்: iFFALCON 55K2A, iFFALCON 40F2 மற்றும் iFFALCON 32F2 என அழைக்கப்படுகின்றன. இவை முறையே ரூ.45,999, ரூ.19,999 மற்றும் ரூ.13,499 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஜியோஃபை டேட்டா கார்டுடன் வாங்கும் போது பிளிப்கார்ட் சார்பில் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.



    பொழுதுபோக்கு தரவுகளை வழங்க ஜியோ டிஜிட்டல், நெட்ஃப்ளிக்ஸ், கூகுள் பிளே மூவிஸ் மற்றும் டிவி, யூடியூப், இரோஸ் நௌ உள்ளிட்டவற்றுடன் டிசிஎல் இணைந்துள்ளது. சிறப்பம்சங்களை பொருத்த வரை iFFALCON 55K2A மாடலில் 4K UHD டிஸ்ப்ளே, 3840x2160 பிக்சல் ரெசல்யூஷன் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய ஸ்மார்ட் டிவியில் மைக்ரோ டிம்மிங் தொழில்நுட்பம், வெள்ளை நிற எல்இடி ஹெச்டி பேக்லிட் வழங்கப்பட்டுள்ளது. இதனால் தொலைகாட்சியின் நிறங்கள் பிரகாசமாகவும், துல்லியமாகவும், அதிக கான்ட்ராஸ்ட் வழங்கும் என டிசிஎல் தெரிவித்துள்ளது. ஆடியோ அனுபவத்தை சிறப்பானதாக்க டிவி மாடலில் டால்பி 5.1 சரவுன்டு சவுன்டு, மேம்படுத்தப்பட்ட DTS போஸ்ட்-பிராசஸிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் ஸமார்ட் வால்யூம் அம்சம் வழங்கப்பட்டுள்ளதால் திடீரென ஏற்படும் சவுன்டு ஃபிளக்சுவேஷன்களிலும் தானாக ஆடியோவை மாற்றியமைக்கும். ஆன்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம், டாஸ்க் ஸ்விட்சிங், பிக்சர் இன் பிக்சர், இன்பில்ட் கூகுள் க்ரோம்காஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    மற்ற இரண்டு மாடல்களை பொருத்த வரை 40 இன்ச் மற்றும் 32 இன்ச் திரை அளவில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இரண்டு மாடல்களிலும் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே, டால்பி டீகோடர் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கூடுதலாக டி-காஸ்ட் எனும் கூடுதல் அம்சம் வழங்கப்பட்டிருக்கிறது. இதை கொண்டு ஸ்மார்ட்போன் மூலம் தொலைகாட்சியை இயக்க முடியும்.
    இந்தியாவில் ஆப்பிள் வாட்ச் 3 (ஜிபிஎஸ் மற்றும் செல்லுலார்) மாடல் மே 11-ம் தேதி இந்தியா வரும் என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    ஆப்பிள் வாட்ச் 3 சீரிஸ் (ஜிபிஎஸ் மற்றும் செல்லுலார்) மாடல் மே மாதம் 11-ம் தேதி இந்தியாவில் வெளியாகும் என ஆப்பிள் அறிவித்துள்ளது.

    முன்னதாக ஆப்பிள் வாட்ச் 3 சீரிஸ் ஸ்டான்டர்டு வெர்ஷன் வெளியான நிலையில் தற்சமயம் செல்லுலார் மாடல் வெளியிடப்பட இருக்கிறது. ஏர்டெல் வலைத்தளத்தில் புதிய ஆப்பிள் வாட்ச் 3 சீரிஸ் சாதனத்தை மே 4-ம் தேதி முதல் முன்பதிவு செய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஏர்டெல் மட்டுமின்றி ரிலையன்ஸ் ஜியோ வலைத்தளத்திலும் மே 4-ம் தேதி முதல் ஆப்பிள் வாட்ச் 3 முன்பதிவு துவங்குகிறது. இதன் விற்பனை ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் ஜியோ ஸ்டோர்களில் மே 11-ம் தேதி முதல் துவங்குகிறது.



    புதிய ஆப்பிள் வாட்ச் 3 குறித்து இதெல்லாம் தெரியுமா?

    - ஆப்பிள் வாட்ச் 3 செல்லுலார் கனெக்டிவிட்டி அம்சம் ஐபோன் 6 மற்றும் அதன்பின் வெளியிடப்பட்ட ஐபோன் மாடல்களுடன் மட்டுமே வேலை செய்யும். இசிம் தொழில்நுட்பம் கொண்டிருப்பதால் வாட்ச் 3 எந்நேரமும் அருகில் இருக்கும் ஐபோனுடன் இணைந்திருக்கும்.

    ஐபோனினை வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டால், புதிய வாட்ச் 3 கொண்டு அழைப்புகள், மியூசிக் உள்ளிட்ட சேவைகளை வாட்ச் - கொண்டே பயன்படுத்த முடியும். இசிம் கனெக்டிவிட்டி கொண்டிருப்பதால் புதிய வாட்ச் 3 கையில் மினி ஐபோன் போன்று வேலை செய்யும்.

    - ஜியோவின் இந்த சேவை ஐபோன் பயனர்களுக்கும் எவ்வித கூடுதல் கட்டணமின்றி வழங்கப்படுகிறது. இத்துடன் முன்பதிவு செய்வோருக்கு முதல் நாளிலேயே விநியோகம் செய்வதாகவும் ஜியோ அறிவித்துள்ளது.

    - ஏர்டெல் சார்பிலும் சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் வாட்ச் 3 செல்லுலார் மாடலில் ஏர்டெல் சேவைகளை ஆக்டிவேட் செய்ய முதலில் தங்களது ஐபோனினை ஐஓஎஸ் 11.3 மற்றும் வாட்ச் ஓஎஸ் 4.3 இயங்குதளங்களுக்கு அப்டேட் செய்ய வேண்டும்.  இனி ஐபோனின் செட்டிங்ஸ் -- ஜெனரல், -- அபவுட் சென்று புதிய கேரியர் செட்டிங்களை தேர்வு செய்ய வேண்டும்.



    ஆப்பிள் வாட்ச் 3 இ-சிம் பயன்படுத்தும் என்பதால், தனியாக பிரத்யேக சிம் தேவைப்படாது. ஜியோ அறிவித்திருக்கும் ஜியோஎவ்ரிவேர்கனெக்ட் (JioEverywhereConnect) சேவையை கொண்டு ஒரே ஜியோ நம்பரை கொண்டு ஐபோன் மற்றும் ஆப்பிள் வாட்ச் சாதனங்களில் பயன்படுத்த முடியும். 

    ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 சாதனத்தில் அப்கிரேடு செய்யப்பட்ட டூயல் கோர் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இந்த சிப்செட் 70% வரை வேகமாக இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய W2 வயர்லெஸ் சிப் 85% வரை வேகமான வைபை இணைப்பை வழங்கும். இத்துடன் 50% வரை சீரான ப்ளூடூத் கனெக்டிவிட்டி, வாட்டர் ரெசிஸ்டண்ட் பாடி, 18 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும்.

    இந்தியாவில் புதிய ஆப்பிள் வாட்ச் 3 செல்லுலார் மாடலின் விவை அறிவிக்கப்படாமல் உள்ளது. வெளியீட்டுக்கு முன் இதன் விலை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது.
    பீஜிங்:

    ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஹானர் மேஜிக்புக் எனும் நோட்புக் சாதனத்தை ஹானர் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்துள்ளது. 

    புதிய ஹானர் மேஜிக்புக் வடிவமைப்பு ஆப்பிள் மேக்புக் சீரிஸ் போன்று காட்சியளிக்கிறது. குறைந்த எடை கொண்ட லேப்டாப் கிளேசியர் சில்வர், ஸ்டார் கிரே மற்றும் நெபுளா வைலடன் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. 

    அலுமினியம் மூலம் உருவாக்கப்பட்டிருக்கும் ஹானர் மேஜிக்புக் 323x221x15.8 மில்லிமீட்டர் அளவில் 1.47 கிலோ எடை கொண்டுள்ளது. யுஎஸ்பி டைப்-சி போர்ட் தவிர ஹானர் மேஜிக்புக் சாதனத்தில் யுஎஸ்பி டைப்-ஓ 2.0, ஹெச்டிஎம்ஐ போர்ட், 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது.



    ஹானர் மேஜிக்புக் சிறப்பம்சங்கள்:

    - 14.0 இன்ச் ஃபுல் ஹெச்டி 1920x1080 பிக்டல் டிஸ்ப்ளே
    - 8-த் ஜென் இன்டெல் கோர் i5 (i5-8250u) அல்லது i7 (i7-8550u) பிராசஸர்
    - 8 ஜிபி ரேம்
    - 256 ஜிபி எஸ்எஸ்டி
    - 2 ஜிபி என்விடியா ஜீஃபோர்ஸ் MX150 கிராஃபிக்ஸ்
    - 57.4Wh பேட்டரி

    புதிய மேஜிக்புக் சாதனத்தை யுஎஸ்பி டைப்-சி மூலம் சார்ஜ் செய்ய முடியும் என்பதோடு, ஒரு மணி நேரத்தில் 0-70% சார்ஜ் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    நான்கு டால்பி அட்மோஸ் ஸ்பீக்கர்கள், டூயல் மைக் கொண்டிருக்கும் ஹானர் மேஜிக்புக் கைரேகை சென்சார் பாதுகாப்பும் கொண்டுள்ளது. ஹானர் மேஜிக்புக் கோர் i7 மாடல் விலை CNY5699 (இந்திய மதிப்பில் ரூ.60,000), கோர் ர5 மாடல் விலை CNY4999 (இந்திய மதிப்பில் ரூ.52,600) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதி ஹானர் மேஜிக்புக் சர்வதேச வெளியீடு குறித்து அந்நிறுவனம் எவ்வித தகவலையும் வழங்கவில்லை.
    வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா செயலியில் இரண்டு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    வாட்ஸ்அப் செயலியில் பயனர்களுக்கு புதிய அம்சங்கள் தொடர்ச்சியாக சேர்க்கப்பட்டு வருகிறது. சமீபத்திய ஆன்ட்ராய்டு பீட்டா அப்டேட்டில் புதிய அம்சம் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துளது.

    வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா 2.18.117 பதிப்பில் ஹை ப்ரியாரிட்டி நோட்டிஃபிகேஷன் மற்றும் டிஸ்மிஸ் அட்மின் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. புதிய அம்சங்கள் ஐஓஎஸ் மற்றும் வெப் வெர்ஷனிலும் வழங்கப்படுகிறது.

    WABeta Info மூலம் வெளியாகி இருக்கிறது. ஹை ப்ரியாரிட்டி அம்சம் புஷ் நோட்டிபிகேஷன்களை சிறப்பாக இயக்க வழி செய்கிறது. இந்த அம்சம் செயல்படுத்தப்பட்டால் பயனர்களுக்கு வரும் நோட்டிபிகேஷன்கள் நோட்டிபிகேஷன் திரையின் மேல் பின் செய்யப்பட்டிருக்கும். இது பிரைவேட் சாட் மற்றும் க்ரூப் உள்ளிட்டவற்றுக்கும் பொருந்தும். இதனை நோட்டிபிகேஷனின் செட்டிங்ஸ் மெனுவில் இருந்து செயல்படுத்த வேண்டும்.


    புகைப்படம்: நன்றி WABetaInfo

    டிஸ்மிஸ் அட்மின் எனும் மற்றொரு அம்சம் வாட்ஸ்அப் க்ரூப்களுக்கானது ஆகும். இந்த அம்சம் க்ரூப் அட்மின்கள் குறிப்பிட்ட க்ரூப் மற்ற அட்மின் பொறுப்பாளர்களை க்ரூப்பில் இருந்து நீக்காமல் அட்மின் பொறுப்பை மட்டும் நீக்கும் வசதியை வழங்குகிறது. இந்த அம்சம் க்ரூப் இன்ஃபோ பகுதியில் இருந்து இயக்க முடியும்.

    இந்த அம்சம் டிஸ்மிஸ் அட்மின் என்ற பெயரில் ஐஓஎஸ் மற்றும் வெப் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. இதனை 2.18.41 வெர்ஷனில் இருந்து 2.18.116 வெர்ஷனில் மாறும் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது.

    ஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் தனது பீட்டா செயலியில் புதிய அம்சங்களை சோதனை செய்கிறது. இவ்வாறு சோதனை செய்யப்படும் அம்சங்களில் சில அ்மசங்கள் அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படும், சில அம்சங்கள் வழங்கப்படாது. சில நாட்களுக்கு முன் வாட்ஸ்அப் பேமென்ட்ஸ் அம்சம் மேம்படுத்தப்பட்டது. 

    அதன் படி கியூ ஆர் கோடு அல்லது யுபிஐ ஐடி மூலம் மட்டுமே பேமென்ட் அம்சத்தை பயன்படுத்த முடியும். இந்த அம்சத்தை செட்டிங் -- பேமென்ட் -- சென்ட் பேமென்ட் -- சென்ட் டு யுபிஐ ஐடி போன்ற அம்சங்களை கிளிக் செய்ய வேண்டும். 
    கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் பெரும்பாலான செயலிகள் குழந்தைகளின் தனியுரிமை சட்ட விதிகளை மீறுவது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
    கலிபோர்னியா:

    கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் பெரும்பாலான செயலிகள் குழந்தை தனியுரிமை விதிகளை மீறுவதாக சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    ஏழு பேர் அடங்கிய ஆராய்ச்சியாளர்கள் குழு குழந்தைகளுக்கான சுமார் 6000 செயலிகளை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். ஆய்வு செய்யப்பட்டதில் பெரும்பாலான செயலிகள் குழந்தைகளின் ஆன்லைன் தனியுரிமை பாதுகாப்பு சட்ட விதியை மீறுவது கண்டறியப்பட்டுள்ளது.

    ஆயிரக்கணக்கான செயலிகள் பெற்றோர் அனுமதியின்றி 13 வயதுக்கு உட்ப்பட்ட குழந்தைகளின் தனிப்பட்ட தகவல்களை சேகரித்து இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

    ஆய்வு செய்யப்பட்டதில் ஆயிரக்கணக்கான செயலிகள் டிராக்கிங் மென்பொருள் கொண்டு குழந்தைகளிடம் இருந்து தகவல்களை சேகரித்து இருக்கின்றன. மேலும் 50% செயலிகள் விதிகளுக்கு உட்பட்ட பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றவில்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 



    ஆய்வு செய்யப்பட்ட ஆறு ஆயிரம் செயலிகளில் 5855 செயலிகள் சுமார் 7.5 லட்சத்திற்கும் அதிகமானோர் இன்ஸ்டால் செய்துள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் குழு குறிப்பிட்ட நேரத்தில் செயலிகள் எதுபோன்ற தகவல்களை சேகரிக்கின்றன என்பதை அறிந்து கொண்டனர். இது தொடர்பாக டிஸ்னி, கேம்லாஃப்ட் மற்றும் டியோலிங்கோ உள்ளிட்ட நிறுவனங்கள் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.

    குழந்தைகளுக்கான செயலிகளை உருவாக்கும் டெவலப்பர்கள் முறையான சட்ட விதிகளை பின்பற்றுவதை கூகுள் உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. எனினும் ஆய்வு முடிவுகளில் இதுபோன்ற விதிமுறைகள் பின்பற்றப்படுவதாக தெரியவில்லை என ஆராயாச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    கூகுள் தரப்பில் இதுகுறித்த கருத்து தெரிவிக்கப்படவில்லை. கூகுள் மற்றும் ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் டேட்டா டிராக்கிங் தொழில்நுட்பம் மூலம் அதிகளவு லாபம் ஈட்டியிருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
    இந்திய டெலிகாம் சந்தையை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ குறிவைக்கும் சேவை குறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளது.
    மும்பை:

    இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ வரவு பல்வேறு அதிரடி மாற்றங்களுக்கு வித்திட்டுள்ளது. விலை குறைப்பு, கூடுதல் சலுகை என டெலிகாம் சந்தையில் ஒவ்வொரு நிறுவனமும் போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்து வருகின்றன. இவை அனைத்திற்கும் காரணமான ரிலையன்ஸ் ஜியோ அடுத்த அதிரடிக்கு தயாராகி விட்டது.

    ஜியோ ஹோம் என்ற பெயரில் ஜியோ வழங்க இருப்பதாக கூறப்படும் புதிய சேவை அந்நிறுவனத்தின் அடுத்த பெரிய திட்டம் என்றும் கூறப்படுகிறது. இந்திய டிடிஹெச் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த சேவை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜியோ ஹோம் டிவி சேவையில் எஸ்டி (ஸ்டான்டர்டு டெஃபனிஷன்) சேனல்களுக்கு மாதம் ரூ.200 மற்றும் எஸ்டி மற்றும் ஹெச்டி சேனல்களுக்கு மாதம் ரூ.400 என கட்டணம் நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த சேவை என்ஹான்ஸ்டு மல்டிமீடியா பிராட்கேஸ்ட் மல்டிகேஸ்ட் சர்வீஸ் (Enhanced Multimedia Broadcast Multicast Service) என கூறப்படுகிறது. 

    அந்த வகையில் இந்த சேவையானது விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படும் ஜியோ டிடிஹெச் சேவை கிடையாது. இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் ரிலையன்ஸ் ஜியோ விரைவில் ஜியோ ஹோம் டிவி சேவையை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த சேவை ஜியோ பிராட்கேஸ்ட் செயலியின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த செயலியில் தேர்வு செய்யப்பட்ட சாதனங்களில் ஹெச்டி தரவுகளை சோதனை சமீபத்தில் நடைபெற்றது. ரிலையன்ஸ் ஜியோவின் புதிய சேவை அனைத்து ஜியோ பயனர்களுக்கும் வழங்கப்படும் என்றும் இந்த சேவை ஜியோ ஹோம் டிவி என்ற பெயரில் பிரான்டிங் செய்யப்படும் என கூறப்படுகிறது.
    இந்தியாவில் தாம்சன் நிறுவனம் அறிவித்தப்படி மூன்று புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.
    புதுடெல்லி:

    தாம்சன் நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததை போன்று இந்தியாவில் தனது ஸ்மார்ட் டிவி மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மூன்று புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் இந்திய சந்தையின் அனைத்து பட்ஜெட் பிரிவுகளுக்கு ஏற்றவாரு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    தாம்சன் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களில் ஜிமெயில், யூடியூப், ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் உள்ளிட்ட செயலிகள் ஏற்கனவே பிரீ இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கிறது. ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்கும் ஸ்மார்ட் டிவியில் ஆப்டோய்டு ஸ்டோர் மூலம் செயலிகளை டவுன்லோடு செய்ய முடியும்.



    தாம்சன் எல்இடி ஸ்மார்ட் டிவி 32 இன்ச் (32M3277) சிறப்பம்சங்கள்:

    - 32 இன்ச் 1366x768 பிக்சல் ஹெச்.டி. எல்இடி டிஸ்ப்ளே
    - ARM கார்டெக்ஸ் A53 64-பிட் பிராசஸர்
    - மாலி-450MP3 GPU
    - 1 ஜிபி ரேம்
    - 8 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - ஆன்ட்ராய்டு 4.4.4 கிட்காட்
    - வைஃபை, 3 x HDMI, யுஎஸ்பி 2.0 x 2, ஈத்தர்நெட்
    - AVI, MPG, DAT, VOB, DIV, MOV, MKV, RM வீடியோ ஃபார்மேட் வசதி
    - 2 x 10W ஸ்பீக்கர்



    தாம்சன் எல்இடி ஸ்மார்ட் டிவி 40-இன்ச் (40TM4099) சிறப்பம்சங்கள்:

    - 40 இன்ச் 192x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. எல்இடி டிஸ்ப்ளே
    - ARM கார்டெக்ஸ் A53 64-பிட் பிராசஸர்
    - மாலி-450MP3 GPU
    - 1 ஜிபி ரேம்
    - 8 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - ஆன்ட்ராய்டு 4.4.4 கிட்காட்
    - வைஃபை, 3 x HDMI, யுஎஸ்பி 2.0 x 2, ஈத்தர்நெட்
    - AVI, MPG, DAT, VOB, DIV, MOV, MKV, RM வீடியோ ஃபார்மேட் வசதி
    - 2 x 10W ஸ்பீக்கர்



    தாம்சன் எல்இடி ஸ்மார்ட் டிவி 43-இன்ச் (43TM4377) சிறப்பம்சங்கள்:

    - 43 இன்ச் 3840x2160 பிக்சல் அல்ட்ரா ஹெச்.டி. எல்இடி டிஸ்ப்ளே
    - ARM கார்டெக்ஸ் A53 64-பிட் பிராசஸர்
    - மாலி-T720 GPU
    - 1 ஜிபி ரேம்
    - 8 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - ஆன்ட்ராய்டு 4.4.4 கிட்காட்
    - வைஃபை, 3 x HDMI, யுஎஸ்பி 2.0 x 2, ஈத்தர்நெட்
    - AVI, MPG, DAT, VOB, DIV, MOV, MKV, RM வீடியோ ஃபார்மேட் வசதி
    - 2 x 10W ஸ்பீக்கர்

    தாம்சன் 32 இன்ச் ஸ்மார்ட் டிவி (32M3277) விலை ரூ.13,490
    தாம்சன் 40 இன்ச் ஃபுல் ஹெச்டி ஸ்மார்ட் டிவி (40TM4099) விலை ரூ.19,990
    தாம்சன் 43 இன்ச் UHD 4K ஸ்மார்ட் டிவி (43TM4377) விலை ரூ.27,999

    தாம்சன் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் இந்தியாவில் பிளிப்கார்ட் தளத்தில் ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்படுகின்றன.
    ×