search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்
    X

    ஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்

    ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது.
    பீஜிங்:

    ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஹானர் மேஜிக்புக் எனும் நோட்புக் சாதனத்தை ஹானர் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்துள்ளது. 

    புதிய ஹானர் மேஜிக்புக் வடிவமைப்பு ஆப்பிள் மேக்புக் சீரிஸ் போன்று காட்சியளிக்கிறது. குறைந்த எடை கொண்ட லேப்டாப் கிளேசியர் சில்வர், ஸ்டார் கிரே மற்றும் நெபுளா வைலடன் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. 

    அலுமினியம் மூலம் உருவாக்கப்பட்டிருக்கும் ஹானர் மேஜிக்புக் 323x221x15.8 மில்லிமீட்டர் அளவில் 1.47 கிலோ எடை கொண்டுள்ளது. யுஎஸ்பி டைப்-சி போர்ட் தவிர ஹானர் மேஜிக்புக் சாதனத்தில் யுஎஸ்பி டைப்-ஓ 2.0, ஹெச்டிஎம்ஐ போர்ட், 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது.



    ஹானர் மேஜிக்புக் சிறப்பம்சங்கள்:

    - 14.0 இன்ச் ஃபுல் ஹெச்டி 1920x1080 பிக்டல் டிஸ்ப்ளே
    - 8-த் ஜென் இன்டெல் கோர் i5 (i5-8250u) அல்லது i7 (i7-8550u) பிராசஸர்
    - 8 ஜிபி ரேம்
    - 256 ஜிபி எஸ்எஸ்டி
    - 2 ஜிபி என்விடியா ஜீஃபோர்ஸ் MX150 கிராஃபிக்ஸ்
    - 57.4Wh பேட்டரி

    புதிய மேஜிக்புக் சாதனத்தை யுஎஸ்பி டைப்-சி மூலம் சார்ஜ் செய்ய முடியும் என்பதோடு, ஒரு மணி நேரத்தில் 0-70% சார்ஜ் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    நான்கு டால்பி அட்மோஸ் ஸ்பீக்கர்கள், டூயல் மைக் கொண்டிருக்கும் ஹானர் மேஜிக்புக் கைரேகை சென்சார் பாதுகாப்பும் கொண்டுள்ளது. ஹானர் மேஜிக்புக் கோர் i7 மாடல் விலை CNY5699 (இந்திய மதிப்பில் ரூ.60,000), கோர் ர5 மாடல் விலை CNY4999 (இந்திய மதிப்பில் ரூ.52,600) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதி ஹானர் மேஜிக்புக் சர்வதேச வெளியீடு குறித்து அந்நிறுவனம் எவ்வித தகவலையும் வழங்கவில்லை.
    Next Story
    ×