என் மலர்tooltip icon

    கணினி

    ஆப்பிள் நிறுவனம் விரைவில் புத்தம் புதிய 6K டிஸ்ப்ளேவினை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Apple



    ஆப்பிள் நிறுவனம் புதிதாக 6K டிஸ்ப்ளே ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது புரோபஷனல் கிரேடு தரத்தில் உருவாகி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    புதிய டிஸ்ப்ளே 31.6 இன்ச் அளவில் இருக்கும் என்றும் இதில் வைடு கலர் கமுட் மற்றும் அதிக கான்டிராஸ்ட் இருக்கும் என்றும் தெரிகிறது. புதிய டிஸ்ப்ளேவினை கொண்டு ஆப்பிள் மினி-எல்.இ.டி. பேக்லிட் தொழில்நுட்பத்திற்கு மாறுவதை வெளிப்படுத்த பயன்படுத்திக் கொள்ளும் என கூறப்படுகிறது. 

    இதே தொழில்நுட்பம் எதிர்கால மேக்புக் மற்றும் ஐபேட்களிலும் பயன்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஆப்பிள் டிஸ்ப்ளேவில் குவாசி மினி எல்.இ.டி. பயன்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது. இது வழக்கமான மினி-எல்.இ.டி.க்களில் பயன்படுத்தப்படுவதை விட பெரியதாகும்.



    ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை விட இந்த டிஸ்ப்ளேக்கள் முன்கூட்டியே அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் புதிய டிஸ்ப்ளேவினை ஆப்பிள் தனது WWDC 2019 நிகழ்வில் அறிமுகம் செய்யலாம். இந்நிகழ்வு இந்த ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் தேதி துவங்குகிறது.

    புதிய ஐபேட் மற்றும் மேக்புக் ப்ரோ மாடல்களில் ஆப்பிள் மினி-எல்.இ.டி. தொழில்நுட்பத்தையே பயன்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது. இவை முந்தைய ஆப்பிள் சாதனங்களில் இருந்ததை விட புதிய சாதனங்களின் டிஸ்ப்ளே தரத்தை அதிகளவு மேம்படுத்தும்.

    இதுமட்டுமின்றி புதிய வகை டிஸ்ப்ளே வழக்கமான எல்.இ.டி. டிஸ்ப்ளேக்களை விட சாதனத்தின் பேட்டரி செயல்திறனை மேம்படுத்தும் என கூறப்படுகிறது.
    குவால்காம் நிறுவனம் புதிதாக மொபைல் பிராசஸர்களை அறிமுகம் செய்துள்ளது. இவற்றில் ஏ.ஐ., கேமரா மற்றும் கேமிங் வசதிகள் அதிகளவு மேம்படுத்தப்பட்டிருக்கின்றன. #Qualcomm



    குவால்காம் நிறுவனம் புதிய வகை மொபைல் பிராசஸர்களை அறிமுகம் செய்துள்ளது. இவை ஸ்னாப்டிராகன் 665, ஸ்னாப்டிராகன் 730 மற்றும் ஸ்னாப்டிராகன் 730ஜி என அழைக்கப்படுகின்றன.

    புதிய ஸ்னாப்டிராகன் மொபைல் பிராசஸர்கள் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.), கேமரா மற்றும் கேமிங் உள்ளிட்ட அம்சங்களில் அதிகளவு மேம்படுத்தப்பட்டுள்ளன. ஸ்னாப்டிராகன் 665 மற்றும் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர்கள் அதிகளவு பயன்பாட்டிற்கென உருவாக்கப்பட்டிருக்கிறது. 



    ஸ்னாப்டிராகன் 730ஜி கேமிங் வசதியை வழங்கும் நோக்கில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. புதிய ஸ்னாப்டிராகன் 665, ஸ்னாப்டிராகன் 770 மற்றும் ஸ்னாப்டிராகன் 730ஜி உள்ளிட்டவற்றில் ஏ.ஐ. வசதி குவால்காம் ஏ.ஐ. என்ஜின் வேரியன்ட் மற்றும் ஹெக்சகன் வெக்டார் எக்ஸ்டென்ஷன்களின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

    புதிய பிராசஸர்களில் குவால்காம் நிறுவனம் மல்டி-கேமரா வசதி மற்றும் பல்வேறு இதர கேமரா ஆப்ஷன்களும் சேர்க்கப்படுகிறது. ஸ்னாப்டிராகன் 665, ஸ்னாப்டிராகன் 730 மற்றும் ஸ்னாப்டிராகன் 730ஜி உள்ளிட்டவை ஏற்கனவே வணிக ரீதியில் தயாராகி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் புதிய குவால்காம் பிராசஸர்கள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் 2019 அரையாண்டு காலத்தில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சாம்சங் நிறுவனம் இந்தியாவில் அன்பாக்ஸ் மேஜிக் ஸ்மார்ட் டி.வி. சீரிஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. #SmartTV



    சாம்சங் நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. அன்பாக்ஸ் மேஜிக் சீரிஸ் மாடலின் கீழ் அறிமுகமாகி இருக்கும் புதிய ஸ்மார்ட் டி.வி.யில் பெர்சனல் கம்ப்யூட்டர், மியூசிக் சிஸ்டம், ஹோம் கிளவுட், லைவ் காஸ்ட் மற்றும் டு-வே ஷேரிங் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.

    புதிய ஸ்மார்ட் டி.வி.க்களில் இதுவரை சாம்சங் தனது டி.வி.க்களில் வழங்கிடாத வசதிகளை வழங்கியிருப்பதால் பயனருக்கு முற்றிலும் புதுவித அனுபவம் கிடைக்கும் என சாம்சங் தெரிவித்துள்ளது. இவை ஹை டெஃபனிஷன் டிஸ்ப்ளேக்களில் அல்ட்ரா பிக்ஸ் தொழில்நுட்பம் முதல் அல்ட்ரா ஹை டெஃபனிஷன் 4K மாடல்களில் கிடைக்கிறது. 

    பெர்சனல் கம்ப்யூட்டர்: புதிய ஸ்மார்ட் டி.வி. முழு கம்ப்யூட்டர் போன்று பயன்படுத்தலாம். இதனால் பிரவுசிங் மட்டுமின்றி கிளவுட் சேவையில் இருந்து நேரடியாக டாக்யூமென்ட்களை உருவாக்குவது போன்றவற்றை மேற்கொள்ளலாம். இத்துடன் லேப்டாப்பை ஸ்மார்ட் டி.வி.யில் இணைய வசதியின்றி வயர்லெஸ் முறையில் மிரர் செய்யலாம்.



    மியூசிக் சிஸ்டம்: இந்த வசதியை கொண்டு டி.வி.யை விர்ச்சுவல் மியூசிக் சிஸ்டம் போன்று பயன்படுத்தலாம். இதனுடன் தனியே ஸ்பீக்கர் இணைத்து ஆடியோ அனுபவத்தை மேலும் மேம்படுத்தலாம். 

    இத்துடன் ஹோம் கிளவுட் சேவையை கொண்டு ஸ்மார்ட்போனில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வயர்லெஸ் முறையில் இணைய வசதியின்றி  டி.வி.யில் இருக்கும் யு.எஸ்.பி. டிரைவில் பரிமாற்றம் செய்து கொள்ளலாம். 

    இதுமட்டுமின்றி புதிய ஸ்மார்ட் டி.வி.யில் லைவ் காஸ்ட், சாம்சங் ஸ்மார்ட் ஹப் உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்படுகிறது. இந்தியாவில் புதிய ஸ்மார்ட் டி.வி. 32 இன்ச் விலை ரூ.24,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய டி.வி. மாடல்கள் அதிகபட்சம் 82-இன்ச் வரை கிடைக்கிறது. 
    அமேசான் நிறுவனம் செயற்கைகோள் உதவியுடன் மலிவு விலையில் இணைய வசதியை வழங்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Amazon



    அமேசான் நிறுவனம் பிராஜெக்ட் குய்பர் என்ற திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் உலகம் முழுக்க அதிவேக இணைய வசதியை வழங்க அமேசான் முடிவு செய்துள்ளது.

    அதிவேக இணைய வசதியை வழங்க அமேசான் 3000 செயற்கைக்கோள்களை அமேசான் பயன்படுத்த இருக்கிறது. இவற்றின் உதவியுடன் உலகம் முழுக்க இடையூறின்றி இணைய சேவையை வழங்க முடியும் என அமேசான் நினைக்கிறது. 3000 செயற்கைக்கோள் மூலம் உலக மக்கள் தொகையின் 95 சதவிகிதம் பேருக்கு இணைய வசதியை வழங்க முடியும் என கூறப்படுகிறது.

    இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை அமேசான் ஆண்ட்ராய்டு போலீஸ் நிறுவனத்திற்கு வழங்கியிருக்கிறது. புதிய திட்டத்தின் மூலம் உலகம் முழுக்க செயற்கைக்கோள்களை நிறுவ அமேசான் திட்டமிட்டுள்ளது. குய்பர் நீண்ட கால திட்டம் ஆகும். இத்திட்டத்தின் கீழ் திட்டத்தட்ட ஒரு கோடி பேருக்கும் அதிகமாக இணைய வசதியை வழங்க முடியும்.



    அனைவருக்கும் இணைய வசதியை வழங்கும் நோக்கம் கொண்ட மற்ற பிராண்டுகளுடன் கைகோர்க்கவும் அமேசான் திட்டமிட்டுள்ளது. அமேசான் நிறுவனம் மொத்தம் 3236 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி உலக மக்கள் தொகையில் 95 சதவிகிதம் பேருக்கு இணைய வசதியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்த திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும் இத்திட்டத்தை வெற்றியடைய வைக்க அமேசான் நிறுவனம் பெரும் தொகையை முதலீடு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் அமேசான் நிறுவனம் துவக்கத்தில் இணைய கட்டணத்தை குறைவாக நிர்ணயம் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.

    இதேபோன்று ரிலையன்ஸ் ஜியோவும் தனது ஜிகாஃபைபர் திட்டத்தை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இவை நாடு முழுக்க அதிவேக பிராட்பேண்ட் இணைய வசதியை மலிவு விலையில் வழங்க இருக்கிறது. 
    தென் கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் 5ஜி சிப்செட் மற்றும் மோடெம்களை உருவாக்கும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. #Samsung



    சாம்சங் எலெக்டிராணிக்ஸ் நிறுவனம் 5ஜி மோடெம் மற்றும் சிப்செட்களை உருவாக்கும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. இவை சமீபத்திய பிரீமியம் மொபைல் சாதனங்களில் வழங்கப்பட இருக்கின்றன.

    5ஜி சிப்செட்கள் - எக்சைனோஸ் மோடெம் 5100, எக்சைனோஸ் ஆர்.எஃப். 5500 மற்றும் எக்சைனோஸ் எஸ்.எம். 5800 என அழைக்கப்படுகின்றன. இவை மொபைல் போன் உற்பத்தியாளர்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை சப்போர்ட் செய்யும் திறன் கொண்டிருக்கின்றன.



    முன்னதாக சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எஸ்10 5ஜி வேரியண்ட் தென்கொரியாவில் ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என அறிவித்திருந்தது. சாம்சங் இந்த ஸ்மார்ட்போனின் விலையை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், இதன் விலை 1332 டாலர்கள் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.

    5ஜி தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை முழுமையாக வழங்கும் திறன் கொண்ட நிறுவனமாக இருக்கும் சாம்சங் அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தை மக்களிடையே கொண்டு செல்லும் முன்னணி நிறுவனமாக பார்க்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதலே தென் கொரியாவில் வணிக ரீதியிலான 5ஜி சேவை வழங்கப்பட்டு விட்டது. இவற்றுக்கும் சாம்சங்கின் 5ஜி நெட்வொர்க் கோர் மற்றும் ரேடியோ சாதனங்களே பயன்படுத்தப்படுகின்றன.
    ஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் ஐ.ஓ.எஸ். தளத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்சமயம் இந்த செயலி உலகம் முழுக்க அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #WhatsAppBusiness



    ஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் நிறுவனம் வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியை ஐ.ஓ.எஸ். தளத்தில் அறிமுகம் செய்திருக்கிறது. முதற்கட்டமாக இந்த செயலி உலகின் சில நாடுகளில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட சில நாடுகளில் மட்டும் இந்த செயலி அறிமுகமானது.

    ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. உலகம் முழுக்க பல்வேறு வியாபாரங்கள் வாட்ஸ்அப் பிஸ்னஸ் பதிப்பை பயன்படுத்தி வருகின்றனர்.

    வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியில் சிறு வியாபாரங்கள் மற்றும் வாடிக்கையாளர்களை இணைக்கும் தளமாக விளங்குகிறது. இந்த செயலியில் பிஸ்னஸ் ப்ரோஃபைல் அம்சம் வியாபாரம் செய்யும் பயனரை வியாபார விவரங்களை விரிவாக பதிவிட வழி செய்கிறது. அதன் மூலம் பயனர்கள் வியாபார விவரம், வலைதளம், முகவரி, தொடர்பு முகவரி உள்ளிட்ட தகவல்களை பதிவிடலாம்.



    இதுமட்டுமின்றி வியாபாரம் செய்வோர் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பதில் அனுப்ப ஏதுவாக மெசேஜிங் டூல்ஸ் அம்சம் வழங்கப்படுகிறது. இதனை கொண்டு பயனர்கள் உடனடியாக பதில் அளிப்பது, வாழ்த்து குறுந்தகவல் மற்றும் பல்வேறு சேவைகளை இயக்க முடியும்.

    இன்று முதல் வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் ஆப் ஸ்டோரில் டவுன்லோடு செய்ய கிடைக்கிறது. முதற்கட்டமாக இந்தியா, பிரேசில், ஜெர்மனி, இந்தோனேசியா, மெக்சிகோ, பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் கிடைக்கும் என்றும் அதன் பின் வரும் வாரங்களில் மற்ற நாடுகளில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    அமேசானின் கிளவுட் சர்வெர்களின் பொதுவெளியில் இருந்து பல லட்சம் பயனர் விவரங்களை நீக்கியிருப்பதாக ஃபேஸ்புக் அறிவித்துள்ளது. #Facebook



    அமேசானின் கிளவுட் சர்வெர்களில் பொதுப்படையாக சேமிக்கப்பட்டு இருந்த பல லட்சம் பயனரின் தனிப்பட்ட தகவல்களை அதிரடியாக நீக்கியதாக ஃபேஸ்புக் அறிவித்துள்ளது. 

    சைபர்செக்யூரிட்டி நிறுவனமான அப்கார்டு முதலில் இதுபற்றிய தகவல்களை வெளியிட்டது. இந்நிறுவனம் வெளியிட்ட தகவல்களில் மெக்சிகோ சார்ந்த செய்தி வலைதளம் ஒன்று ஃபேஸ்புக் பயன்படுத்தும் சுமார் 54 கோடி பேரின் விவரங்களை அமேசானின் கிளவுட் சர்வெர்களில் பொதுவாக சேமித்து வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    இந்த தகவல்களில் பயனர்களின் நோட்டிஃபிகேஷன் நம்பர்கள், கமென்ட்கள், ரியாக்‌ஷன்கள் மற்றும் அக்கவுண்ட் பெயர்கள் இடம்பெற்றிருந்ததாக அப்கார்டு தெரிவித்தது. மற்றொரு தகவல்களில் அட் தி பூல் எனும் செயலி பயனரின் பெயர்கள், மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல் உள்ளிட்டவற்றை அம்பலப்படுத்தியதாக அப்கார்டு தெரிவித்திருக்கிறது.



    இத்தகவலைத் தொடர்ந்து ஃபேஸ்புக் அமேசான் சர்வெர்களில் இருந்த தகவல்களை அதிரடியாக நீக்கிவிட்டதாக தெரிவித்துள்ளது. பயனர் விவரங்களை நீக்க அமேசானுடன் இணைந்து பணியாற்றியதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. ஃபேஸ்புக் தகவல்கள் பொது தளங்களில் சேமிக்கப்படுவது ஃபேஸ்புக் விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

    சமீப காலங்களில் பயனர் தகவல்களின் பாதுகாப்பு சார்ந்து ஃபேஸ்புக் நிறுவனம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. கடந்த ஆண்டு கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் ஃபேஸ்புக் ப்ரோஃபைல்களில் இருந்து தகவல்களை ரகசியமாக சேகரித்தது அம்பலமானது ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியது.
    ரிலையன்ஸ் ஜியோ டிஜிட்டல் சேவைகள் நிறுவனம் ஹேப்டிக் எனும் ஏ.ஐ. நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை வாங்கியிருப்பதாக அறிவித்துள்ளது. #RelianceJio



    ரிலையன்ஸ் ஜியோ டிஜிட்டல் சர்வீசஸ் லிமிட்டெட் ஹேப்டிக் இன்ஃபோடெக் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் பெரும்பான்மை (87 சதவிகிதம்) பங்குகளை வாங்கியிருப்பதாக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் அறிவித்துள்ளது.

    ஹேப்டிக் நிறுவனத்தில் பெரும்பான்மை பங்குகள் தவிர மீதம் இருக்கும் பங்குகளை அதன் நிறுவனர்கள் மற்றும் ஊழியர்கள் பங்குகள் அடிப்படையில் வைத்திருப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஹேப்டிக் இடையேயான வியாபார ஒப்பந்த மதிப்பு ரூ.700 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

    இதில் முதற்கட்ட தொகை ரூ.230 கோடியாக இருக்கும் என கூறப்படுகிறது. பெரும்பான்மை பங்குகள் கைமாறியிருந்தாலும், ஹேப்டிக் நிறுவனம் துவங்கப்பட்டதன் நோக்கம் மற்றும் குறிக்கோளை எட்ட தொடர்ந்து பணியாற்றும் என ஹேப்டிக் தெரிவித்துள்ளது. 2013 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஹேப்டிக் நிறுவனம் டிஜிட்டல் அசிஸ்டண்ட் சேவையை மேம்படுத்துவதில் தொடர்ந்து கவனம் செலுத்தும் என தெரிவித்துள்ளது.



    ரிலையன்ஸ் ஜியோ பல்வேறு சாதனங்கள் மற்றும் துறைகளில் ஹேப்டிக் திறமைகளை பயன்படுத்திக் கொள்ளும் என தெரிகிறது. முதலீட்டின் முக்கிய நோக்கம் தளத்தை மேம்படுத்துவது தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஹேப்டிக்கின் தற்போதைய சர்வதேச வியாபாரம் மேலும் ஊக்குவிக்கப்படும் என்றும் இந்நிறுவனம் தொடர்ந்து உலகளவில் ஏ.ஐ. சேவைகளை உருவாக்கும் என்றும் கூறப்படுகிறது.

    ரிலையன்ஸ் ஜியோவுடனான ஒப்பந்தம் காரணமாக 2016 ஆம் ஆண்டு ஹேப்டிக் நிறுவத்தில் முதலீடு செய்த டைம்ஸ் இண்டர்நெட் ஹேப்டிக் வியாபாரங்களில் இருந்து வெளியேறும் என ஹேப்டிக் தெரிவித்துள்ளது.
    வாட்ஸ்அப் செயலியில் புதிய பிரைவசி செட்டிங் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் க்ரூப்களில் சேர்வதை அவரவர் தானாக முடிவு செய்து கொள்ளலாம். #WhatsApp



    வாட்ஸ்அப் செயலியில் சமீப காலங்களில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாட்ஸ்அப் பயன்பாடு மிகமுக்கிய அங்கமாக மாறியுள்ள நிலையில், தற்சமயம் இதன் பிரைவசி செட்டிங்கில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

    அதன்படி புதிய செட்டிங்களை செயல்படுத்தும் போது யார் உங்களை க்ரூப்களில் சேர்க்க வேண்டும் என்பதை தீர்மானிக்க முடியும். இதனை செயல்படுத்த அக்கவுண்ட் -- பிரைவசி -- க்ரூப்ஸ் ஆப்ஷன்களை தேர்வு செய்து நோபடி (Nobody), மை காண்டாக்ட்ஸ் (My Contacts) அல்லது எவ்ரிவொன் (Everyone) என மூன்று ஆப்ஷன்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.



    இவற்றில் நோபடி ஆப்ஷனை தேர்வு செய்யும் போது நீங்கள் இணைக்கப்படும் க்ரூப்களில் நீங்கள் அனுமதியளித்தால் சேர்ந்து கொள்ளலாம். மை காண்டாக்ட்ஸ் ஆப்ஷன் உங்களது காண்டாக்ட்களில் இருப்பவர் மட்டுமே உங்களை க்ரூப்களில் சேர்க்கும் வசதியை வழங்கும்.

    இதுபோன்ற சமயங்களில் உங்களை க்ரூப்பில் சேர்க்க முயன்றவருக்கு, தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுக்கக் கோரப்படும். பயனருக்கு வரும் இன்வைட்களுக்கு பதில் அளிக்க மூன்று நாட்கள் கால அவகாசம் வழங்கப்படுகிறது. அதன் பின் இன்வைட் காலாவதியாகிவிடும்.

    புதிய அம்சங்களின் மூலம் பயனர் அவர்களுக்கு வரும் க்ரூப் மெசேஞ்களை கட்டுக்குள் வைக்க முடியும். புதிய பிரவைசி செட்டிங் சில பயனர்களுக்கு இன்று முதல் வழங்கப்படும் என்றும் உலகம் முழுக்க வரும் வாரங்களில் படிப்படியாக வழங்கப்படுகிறது.
    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 8110 4ஜி மொபைல் போனில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவதற்கான வசதி வழங்கப்படுகிறது. #WhatsApp



    ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோபோனில் வாட்ஸ்அப் வசதி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அக்டோபர் மாதத்தில் நோக்கியா 8110 4ஜி மொபைல் போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

    நோக்கியா 8110 4ஜி போனில் வாட்ஸ்அப் வசதி வழங்கப்படுகிறது. வாட்ஸ்அப் செயலியை பயனர்கள் சோஷியல் டேபில் இருக்கும் ஆப் ஸ்டோர் சென்று டவுன்லோடு செய்து கொள்ளலாம். இந்த செயலி கை ஓ.எஸ். தளத்துக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் ஃபீச்சர் போன்களுக்கென உருவாக்கப்பட்டிருப்பதால், இந்த செயலி சீராக இயங்கும்.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை நோக்கியா 8110 4ஜி மொபைலில் 2.4 இன்ச் QVGA வளைந்த டிஸ்ப்ளே, இன்ட்யூட்டிவ் டேக்டைல் மெக்கானிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு அழைப்புகளை ஏற்கவும், நிராகரிக்கும் ஸ்லைடரை பயன்படுத்தலாம்.



    நோக்கியா 8110 4ஜி மொபைலில் 1.1 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 205 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கூகுள் அசிஸ்டன்ட், கூகுள் சர்ச், கூகுள் மேப்ஸ், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற செயலிகள் வழங்கப்பட்டுள்ளது. நோக்கியாவின் பிரபல ஸ்னேக் கேம் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் இந்த மொபைலில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது.

    இந்தியாவில் நோக்கியா 8110 4ஜி போன் ரூ.5,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டு தற்சமயம் ரூ.4,999 விலையில் நோக்கியா இந்தியா ஆன்லைன் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. 
    கூகுளின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலில் மேம்பட்ட ஸ்மார்ட் கம்போஸ் மற்றும் மின்னஞ்சல்களை ஷெட்யூல் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. #Gmail



    கூகுளின் ஜிமெயில் சேவை துவங்கி 15 ஆண்டு கொண்டாட்டத்தின் அங்கமாக புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ஜிமெயில் சேவையின் ஸ்மார்ட் கம்போஸ் அம்சம் முன்பை விட மேம்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன் மின்னஞ்சலை பின்னர் அனுப்ப ஷெட்யூல் செய்யும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. 

    கூடுதலாக ஸ்மார்ட் கம்போஸ் அம்சம் பயனரின் எழுத்து முறைகளை கற்றுக் கொண்டு, மின்னஞ்சல்களை எழுதும் போது அவர்களுக்கு ஏற்றவாரு பரிந்துரைகளை வழங்கும் என கூகுள் அறிவித்துள்ளது. இவற்றுடன் ஜிமெயில் தளத்தை விட்டு வெளியேறாமல் சில அம்சங்களை இயக்கும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது.

    ஜிமெயில் தளத்தின் புதிய அம்சங்களில் மின்னஞ்சலை ஷெட்யூல் வசதி மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. பெயருக்கு ஏற்றார்போல் புதிய அம்சம் கொண்டு பயனர் விரும்பும் நேரத்தில் மின்னஞ்சல்களை அனுப்ப முடியும். இதனை பயன்படுத்த மின்னஞ்சலை டைப் செய்து சென்ட் பட்டனை க்ளிக் செய்து மின்னஞ்சல் செல்ல வேண்டிய நேரத்தை தேர்வு செய்ய வேண்டும்.



    இதில் பயனர்கள் மின்னஞ்சல் செல்ல வேண்டிய நேரத்தை சரியாக நிர்ணயிக்கவோ அல்லது ஜிமெயில் பரிந்துரைக்கும் நேரத்தில் அனுப்பவோ முடியும். தற்சமயம் இந்த அம்சம் ஜிமெயில் வெப் தளத்தில் மட்டும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். மொபைல் செயலிகளில் இந்த அம்சம் வழங்குவது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

    இத்துடன் ஸ்மார்ட் கம்போஸ் அம்சம் ஒவ்வொரு பயனர் எழுதும் முறைகளை கற்றுக் கொண்டு அவர்களுக்கு ஏற்ற பரிந்துரைகளை வழங்கும். ஸ்மார்ட் கம்போஸ் அம்சம் ஆண்ட்ராய்டு தளத்தில் வழங்குவது பற்றி கூகுள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஐ.ஓ.எஸ். தளத்தில் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

    மேலும் ஸ்மார்ட் கம்போஸ் அம்சம் - ஃபிரெஞ்சு, இத்தாலி, போர்த்துக்கீசு மற்றும் ஸ்பானிஷ் உள்ளிட்ட மொழிகளுக்கான வசதியை பெற்றிருக்கிறது. இறுதியில் கூகுள் நௌ அம்சத்தில் கூகுள் டாக் கமென்ட்களுக்கு பதில் எழுதும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்ய பயனர்கள் மின்னஞ்சலை விட்டு வேறு பிரவுசர் திறக்க வேண்டிய அவசியம் கிடையாது.
    ஃபேஸ்புக் நிறுவனம் மொபைல் இண்டர்நெட் வேகத்தை அதிகப்படுத்த சிறிய ரக டிரோன்களை பயன்படுத்த திட்டமிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. #Facebook



    இண்டர்நெட் இணைப்பு சீரற்று இருக்கும் பகுதிகளில் இணைய வேகத்தை அதிகப்படுத்த ஃபேஸ்புக் சிறிய ரக டிரோன்களை பயன்படுத்த திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த டிரோன்கள் ஹை-டென்சிட்டி சாலிட் ஸ்டேட் டிரைவ்களை கொண்டு செல்லும் வகையில் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் டிரோன்கள் பயனர்களின் ஸ்மார்ட்போன்களில் அதிவேக இணைய வசதியை வழங்கும் திறன் கொண்டிருக்கும் என தெரிகிறது. கேடலினா என்ற குறியீட்டு பெயரில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது என்றும், இது ஒரு ஆண்டுக்கு முன்பே கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. 



    2017 ஆம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் சிறிய டிரோன் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவிட்டு செல்லுலார் சேவைகளில் கவனம் செலுத்தியதாக சமீபத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 2017 இல் நடைபெற்ற ஃபேஸ்புக் டெவலப்பர் நிகழ்வில் அறிவிக்கப்பட்டு பின் சில மாதங்களிலேயே இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது.

    ஆபத்து மற்றும் இயற்கை பேரிடர் ஏற்படும் பகுதிகளில் ஹெலிகாப்டர்களில் தொலைதொடர்பு சாதனங்களை வைத்து வானில் சில நூறு மீட்டர்கள் உயரத்தில் இருந்து இணைய வசதியை வழங்க ஃபேஸ்புக் திட்டமிட்டிருந்தது. 2018 ஜூன் மாதத்தில் ஃபேஸ்புக் அக்யுலா டிரோன் திட்டத்தை கைவிடுவதாக அறிவித்தது.

    அக்யுலா திட்டத்தின் நோக்கம் உலக மக்களுக்கு இணைய வசதியை அறிமுகம் செய்து அவர்களுக்கு அனைத்து வித வாய்ப்புகளை வழங்குவது தான் என ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் தெரிவித்தார். இதற்கென ஃபேஸ்புக் ஹை ஆல்டி-டியூட் பிளாட்ஃபார்ம் ஸ்டேஷன் சிஸ்டத்தை பயன்படுத்த திட்டமிட்டிருந்தது.
    ×