என் மலர்tooltip icon

    கணினி

    ஆப்பிள் நிறுவனம் தனது வயர்லெஸ் சார்ஜிங் மேட் சாதன திட்டத்தை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. #AirPower



    ஆப்பிள் நிறுவனம் தனது ஏர்பவர் வயர்லெஸ் சார்ஜிங் பேட் சாதனத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. 

    "கடும் முயற்சி செய்துவிட்டோம், ஏர்பவர் திட்டத்தை ரத்து செய்கிறோம். எங்களது தரத்திற்கு இணையாக ஏர்பவர் உருவாகவில்லை என்பதால், திட்டத்தை முழுமையாக ரத்து செய்கிறோம்," என ஆப்பிள் நிறுவனத்தின் வன்பொருள் பொறியியல் பிரிவின் மூத்த துணை தலைவர் டான் ரிகியோ தெரிவித்தார். 

    "ஏர்பவர் சாதனத்தை எதிர்பார்த்து காத்திருந்த வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்" என அவர் மேலும் தெரிவித்தார். 

    2017 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் ஏர்பவர் சாதனம் 2018 ஆம் ஆண்டு விற்பனைக்கு வரும் என அறிவித்து சாதனத்தின் விளம்பர புகைப்படங்களையும் ஆப்பிள் வெளியிட்டு வந்தது. எனினும், சாதனத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏர்பவர் சாதனம் விரைவில் விற்பனைக்கு வரும் என்ற வாக்கில் தொடர்ந்து தகவல் வெளியாகி வந்தது.



    ஆப்பிள் வயர்லெஸ் சார்ஜிங் பற்றிய அறிவிப்பை தனது வாடிக்கையாளர்களிடம் தொடர்ந்து அறிவித்து வந்தது. ஐபோன்களில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி 2017 ஆம் ஆண்டு வெளியான ஐபோன் 8 மாடலில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் ஆப்பிள் வாட்ச் மாடலிலும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

    ஆப்பிள் சாதனங்களை வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்யும் சாதனங்களை பல்வேறு மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் உருவாக்கி வருகின்றன. முன்னதாக பலமுறை வன்பொருள் சாதனங்கள் விஷயத்தில் ஆப்பிள் நிறுவனம் அதிர்ச்சியளிக்கும் முடிவுகளை எடுத்திருக்கிறது.

    ஐபோன் 4 மாடலின் ஆண்டெனா சரியாக வேலை செய்யாமல் போனது. சமீபத்தில் சில ஆப்பிள் லேப்டாப் மாடல்களில் கீபோர்டு சரிவரி இயங்காமல் போனதற்கு ஆப்பிள் தனது வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரியிருந்தது. 

    வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தின் மீது ஆப்பிள் தொடர்ந்து கவனம் செலுத்தும் என்றும் வயர்லெஸ் அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் ஆப்பிள் முயற்சி தொடரும் என ரிகியோ தெரிவித்திருக்கிறார். 
    நோபிள் ஸ்கியோடோ எனும் டி.வி. பிராண்டு இந்தியாவில் தனது புதிய ஸ்மார்ட்லைட் எல்.இ.டி. டி.வி.க்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. #SmartLite



    இந்தியாவில் தொலைகாட்சி பெட்டிகளுக்கான சந்தை சமீப காலங்களில் அதிரடி மாற்றங்களை சந்தித்து வருகிறது. சந்தையில் களமிறங்கும் புதிய டி.வி. பிராண்டுகள் தங்களது தொலைகாட்சி மாடல்களின் விலையை மிகவும் குறைவாக நிர்ணயம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றன.

    அந்த வரிசையில் புதிதாக இணைந்திருக்கும் டி.வி. பிராண்டு நோபிள் ஸ்கியோடோ. இந்தியாவில் ஸ்மார்ட்லைட் எல்.இ.டி. டி.வி.க்களை அறிமுகம் செய்திருக்கும் இந்த பிராண்டு தனது 24-இன்ச் மாடலின் விலையை ரூ.6,999 என்றும் 32-இன்ச் மாடலின் விலையை ரூ.8,999 என்றும் நிர்ணயம் செய்துள்ளது.

    புதிய டி.வி.க்களின் குறைவான கட்டணத்திலேயே ஸ்மார்ட் கனெக்டிவிட்டி, விநியோகம் மற்றும் இன்ஸ்டாலேஷன் உள்ளிட்டவையும் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் புதிய டி.வி.க்களில் வைபை, லேண் கனெக்டிவிட்டி வழங்கப்படுகிறது. இத்துடன் யூடியூப், மிராகாஸ்ட், வெப் பிரவுசர் மற்றும் ட்விட்டர் போன்ற செயலிகள் டி.வி.யில் பிரீ-இன்ஸ்டால் செய்யப்படுகின்றன.



    ஸ்மார்ட்லைட் எல்.இ.டி. டி.வி. 24 இன்ச் (NB24YT01) மற்றும் 32-இன்ச் (NB32YT01) மாடல்களில் 1280x720 பிக்சல் ரெசல்யூஷன் ஸ்கிரீன் மற்றும் 20 வாட் சவுண்ட் அவுட்புட் வழங்கும் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன. கூடுதலாக இரண்டு ஹெச்.டி.எம்.ஐ. போர்ட்கள், ஒரு யு.எஸ்.பி. போர்ட் வழங்கப்படுகின்றன.

    புதிய டி.வி.க்கள் இந்தியாவில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகின்றன. பயனர்கள் இவற்றை ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக வாங்க முடியும். இந்தியாவுக்கென உருவாக்கப்பட்டிருப்பதால் இந்த டி.வி.க்கள் மாசு மூலம் பாதிக்கப்படாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இத்துடன் புதிய டி.வி.க்கள் குறைந்தளவு மின்சக்தியை பயன்படுத்த ஏதுவாக பிரத்யேக பேக்லிட் செட்டிங் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வு மற்றும் சியோமி போன்ற பிராண்டுகள் தங்களது குறைந்த விலை டி.வி.க்களை அறிமுகம் செய்து பிரபலமாகி வரும் நிலையில், நோபிள் ஸ்கியோடோ மற்றும் ஷின்கோ போன்ற பிராண்டுகள் தங்களது புதிய டி.வி.க்களை இந்தியாவில் அறிமுகம் செய்கின்றன. முன்னதாக ஷின்கோ நிறுவனம் 39-இன்ச் டி.வி.யினை ரூ.13,990 விலையில் அறிமுகம் செய்தது. 
    சியோமி நிறுவனம் தனது Mi நோட்புக் ஏர் லேப்டாப் மாடலை அப்டேட் செய்துள்ளது. Mi நோட்புக் ஏர் 2019 மாடலில் புதிய தலைமுறை இன்டெல் கோர் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளன. #MiNotebookAir



    சியோமி நிறுவனம் தனது Mi நோட்புக் ஏர் மாடலை அப்டேட் செய்துள்ளது. புதிய லேப்டாப்பில் சியோமி 8-ஆம் தலைமுறை இன்டெல் கோர் ஐ5 அல்லது கோர் எம்3 பிராசஸர்களை வழங்கியிருக்கிறது. இத்துடன் 4 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. எஸ்.எஸ்.டி., மற்றும் ஃபுல் ஹெச்.டி. ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது.

    முழுமையான மெட்டல் சேசிஸ் கொண்டிருக்கும் Mi நோட்புக் ஏர் எடை 1.07 கிலோ ஆகும். புதிய லேப்டாப்பில் சியோமி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை வழங்கியுள்ளது. முன்னதாக சியோமி தனது லேப்டாப்களில் ஏழாம் தலைமுறை இன்டெல் கோர் ஐ5 வெர்ஷனை அறிமுகம் செய்தது. 

    இந்நிலையில், தற்சமயம் 12.5 இன்ச் Mi நோட்புக் ஏர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Mi நோட்புக் ஏர் 13.3 இன்ச் மாடலில் ஏற்கனவே 8 ஆம் தலைமுறை இன்டெல் கோர் சி.பி.யு.க்கள் வழங்கப்படுகின்றன. 



    Mi நோட்புக் ஏர் 12.5 இன்ச் (2019) சிறப்பம்சங்கள்:

    - 12.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி. 1080x1920 பிக்சல் ஸ்கிரீன்
    - 8 ஆம் தலைமுறை இன்டெல் கோர் ஐ5 / கோர் எம்3 பிராசஸர்
    - 4 ஜி.பி. ரேம்
    - 256 ஜி.பி. எஸ்.எஸ்.டி.
    - டி.டி.எஸ். சரவுண்ட் சவுண்ட்
    - யு.எஸ்.பி. டைப்-சி போர்ட்
    - ஹெச்.டி.எம்.ஐ. போர்ட்
    - யு.எஸ்.பி. 3.0 போர்ட்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
    - பேக்லிட் கீபோர்டு
    - விண்டோஸ் 10 ஹோம் எடிஷன்

    சீனாவில் Mi நோட்புக் ஏர் 12.5 இன்ச் (2019) மாடல் விலை CNY 3,599 (இந்திய மதிப்பில் ரூ.38,400) முதல் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை CNY 4,299 (இந்திய மதிப்பில் ரூ.45,900) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சீனாவில் அறிவிக்கப்பட்டுள்ள Mi நோட்புக் ஏர் மற்ற சந்தைகளில் வெளியிடுவது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
    உலகின் பல்வேறு பிரபல பத்திரிகைகளை வாசிக்கும் வசதியுடன் ஆப்பிள் நியூஸ் பிளஸ் சேவை துவங்கப்பட்டுள்ளது. #AppleEvent #AppleSpecialEvent

     

    ஆப்பிள் நிறுவனம் புதிய செய்தி சேவையை துவங்கியிருக்கிறது. ஆப்பிள் நியூஸ் பிளஸ் என அழைக்கப்படும் புதிய சேவையில் 300க்கும் அதிகமான பத்திரிகைகளை வாசிக்க முடியும்.

    ஆப்பிள் நியூஸ் பிளஸ் சேவைக்கான கட்டணம் மாதம் 9.99 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையில் உலகின் பிரபல பத்திரிகைகளை டிஜிட்டல் முறையில் வாசிக்கும் வசதி வழங்கப்படுகிறது. 



    நம் வாழ்க்கையில் ஊடகத்தின் சக்தி மற்றும் இது மேற்கொள்ளும் மாற்றத்தின் மீது எங்களுக்கு அதிகளவு நம்பிக்கை இருக்கிறது என ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்தார். அந்த வகையில் ஆப்பிள் நியூஸ் பிளஸ் சேவை வாடிக்கையாளர்கள் மற்றும் செய்தி நிறுவனங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

    ஆப்பிள் நியூஸ் பிளஸ் சேவை அமெரிக்கா மற்றும் கனடாவில் ஏற்கனவே கிடைக்கிறது. இரு நாடுகளை தொடர்ந்து பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் ஆப்பிள் நியூஸ் பிளஸ் சேவை வழங்கப்படும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.

    பயனர் விவரங்களை பாதுகாக்கும் நோக்கில் விளம்பரதாரர்களால் பயனர் நடவடிக்கைகளை டிராக் செய்ய முடியாது என ஆப்பிள் தெரிவித்துள்ளது.
    ட்விட்டர் சமூக வலைதளத்தில் லைவ் போட்டோஸ் வசதி வழங்குவதற்கான பணிகள் நடைபெறுகிறது. விரைவில் இதற்கான அப்டேட் வழங்கப்பட இருக்கிறது. #Twitter



    ஆப்பிள் நிறுவனம் 2015 ஆம் ஆண்டு லைவ் போட்டோஸ் அம்சத்தை அறிமுகம் செய்தது. ஐபோன் 6எஸ் மாடலுடன் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. இவை 1.5 நொடிகள் கொண்ட அனிமேட்டெட் புகைப்படங்கள் ஆகும். புகைப்படம் க்ளிக் செய்யும் முன் மற்றும் க்ளிக் செய்த பின் காட்சிகளை பதிவு செய்வதே லைவ் போட்டோ என அழைக்கப்படுகிறது.

    ஃபேஸ்புக் வலைதளத்தில் லைவ் போட்டோக்களை பகிர்ந்து கொள்ளும் வசதி ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த அம்சம் தற்சமயம் ட்விட்டரிலும் வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது. ஐ.ஓ.எஸ். இயங்குதளத்துக்கான ட்விட்டர் செயலியின் கோட்களில் லைவ் போட்டோக்களுக்கான வசதி வழங்குவது பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது.

    இதனை சமூக வலைதள ஆய்வாளர் மேட் நவாரா தனது ட்விட்டரில் ஸ்கிரீன்ஷாட்களுடன் பதிவிட்டிருக்கிறார். ட்விட்டர் ஐ.ஓ.எஸ். தளத்தில் லைவ் போட்டோக்களை ஜிஃப்களாக மாற்றுவதற்கான அம்சம் சோதனை செய்யப்படுவதாக நவாரா தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் ட்விட்டரில் லைவ் போட்டோக்களுக்கான வசதி வழங்கப்படலாம் என்றே தெரிகிறது.



    எனினும், ட்விட்டர் லைவ் போட்டோக்களை சாதாரண ஜிஃப்களாக கருதுமா அல்லது லைவ் போட்டோக்களாக கருதுமா இல்லை ஃபேஸ்புக் போன்று லைவ் போட்டோக்களாகவே குறிப்பிடுமா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. ஐ.ஓ.எஸ். ட்விட்டர் செயலியில் ஏற்கனவே லைவ் போட்டோக்களை பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது, எனினும் இது சற்று சிரமமான காரியமாகவே இருக்கிறது.

    இதை செய்ய தற்சமயம் போட்டோஸ் செயலியை திறந்து, லைவ் போட்டோவினை தேர்வு செய்து அதனை லூப் அல்லது பவுன்ஸ் ஆக மாற்றி, பின் அந்த போட்டோவினை ட்விட்டர் ஐ.ஓ.எஸ். செயலியில் பகிர்ந்து கொள்ளலாம். இவ்வாறு செய்யும் போது போட்டோ ஜிஃப் ஆக மாறியிருக்கும்.

    லைவ் போட்டோக்களுக்கான வசதியின் மூலம் பயனர்கள் எவ்வித சிரமமும் இன்றி நேரடியாக லைவ் போட்டோவினை தேர்வு செய்து செயலியில் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கும். இந்த அம்சம் தற்சமயம் சோதனை செய்யப்படுவதால் இது எப்போது அனைவருக்கும் வழங்கப்படும் என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. 
    ஆப்பிள் நிறுவனம் தனது ஐமேக் கம்ப்யூட்டர்களில் சக்திவாய்ந்த பிராசஸர்களுடன் அப்டேட் செய்யப்பட்டிருக்கிறது. #iMac



    ஆப்பிள் நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு பின் தனது ஐமேக் கம்ப்யூட்டர்களை சக்திவாய்ந்த பிராசஸர் மற்றும் கிராஃபிக்ஸ் உடன் அப்டேட் செய்திருக்கிறது. 

    21.5 இன்ச் ஐமேக் மாடலில் 8-ம் தலைமுறை குவாட்-கோர் 6-கோர் பிராசஸர்கள் வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஐமேக் மாடல்களை விட 60 சதவிகிதம் வேகமாக இயங்கும். 27 இன்ச் ஐமேக் மாடலில் 9-ம் தலைமுறை 6-கோர் மற்றும் 8-கோர் இன்டெல் கோர் ஐ9 பிராசஸர் வழங்கப்பட்டிருக்கிறது.

    இத்துடன் 21.5 இன்ச் ஐமேக் மாடலில் ரேடியான் ப்ரோ வீகா 48 கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இது 80 சதவிகிதம் வேகமான கிராஃபிக்ஸ் வழங்குகிறது. 27-இன்ச் ஐமேக் மற்றும் ரேடியான் ப்ரோ வீகா கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய மாடல்களை விட 50% வேகமாக இயங்குகிறது.



    27-இன்ச் ரெட்டினா 5K ஐமேக் மற்றும் 21.5 இன்ச் ரெட்டினா 4K ஐமேக் மாடல்களில் 500 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் வைடு கலர் (P3) வழங்கப்பட்டுள்ளது. 

    இந்தியாவில் 21.5 இன்ச் ஐமேக் மற்றும் ரெட்டினா 4K டிஸ்ப்ளே மாடல் விலை ரூ.1,19,900 என்றும் புதிய 27-இன்ச் ஐமேக் மற்றும் ரெட்டினா 5K டிஸ்ப்ளே மாடல் விலை ரூ.1,69,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐபேட் ஏர், ஐபேட் மினி சாதனங்கள் ஆப்பிள் பென்சில் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. #Apple



    ஆப்பிள் நிறுவனம் புதிய 10.5 இன்ச் ஐபேட் ஏர் மற்றும் ஐந்தாம் தலைமுறை ஐபேட் மினி சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. இரு சாதனங்களிலும் ஆப்பிளின் சக்திவாய்ந்த ஏ12 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய ஐபேட் மினி ஆப்பிள் பென்சில் வசதியுடன் மேம்பட்ட அதிநவீன ரெட்டினா டிஸ்ப்ளே பேனல் கொண்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளேவில் ட்ரூ டோன் தொழில்நுட்பம் மற்றும் வைடு கலர் சப்போர்ட் வழங்கப்பட்டிருக்கிறது. இரு சாதனங்களும் 8 எம்.பி. பிரைமரி கேமரா, குறைந்த வெளிச்சத்திலும் சிறப்பான புகைப்படங்களை எடுக்கும் வசதியுடன் கிடைக்கிறது.

    முன்பக்கம் 7 எம்.பி. கேமரா வழங்கப்பட்டிருக்கிறது. ஆப்பிள் பென்சில் வசதியுடன் கிடைக்கும் புதிய ஐபேட் மினி கொண்டு எந்நேரமும் ஸ்கெட்ச் அல்லது குறிப்பு எடுக்கலாம்.



    ஆப்பிள் ஐபேட் ஏர் 10.5 இன்ச் (2019) / ஆப்பிள் ஐபேட் மினி (2019) சிறப்பம்சங்கள்

    - ஐபேட் ஏர் - 10.5 இன்ச் 2224x1668 பிக்சல் ரெட்டினா டிஸ்ப்ளே
    - ஐபேட் மினி - 7.9 இன்ச் 2048x1536 பிக்சல் ரெட்டினா டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் ஏ12 பயோனிக் 7 என்.எம். பிராசஸர், எம்12 மோஷன் கோ பிராசஸர்
    - 64 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி
    - ஐ.ஓ.எஸ். 12
    - 8 எம்.பி. பிரைமரி கேமரா, f/2.4, 5P லென்ஸ், ஹைப்ரிட் ஐ.ஆர். ஃபில்ட்டர்
    - 7 எம்.பி. ஃபேஸ்டைம் ஹெச்.டி. கேமரா, f/2.2, ரெட்டினா ஃபிளாஷ்
    - டூயல் மைக்ரோபோன்
    - 4ஜி எல்.டி.இ. (வேரியன்ட்), வைபை, ப்ளூடூத் 5.0
    - டச் ஐ.டி.
    - ஐபேட் ஏர் 30.2 வாட் லித்தியம் பாலிமர் பேட்டரி
    - ஐபேட் மினி 19.1 வாட் லித்தியம் பாலிமர் பேட்டரி

    புதிய ஐபேட் ஏர் மற்றும் ஐபேட் மினி சாதனங்கள் சில்வர், ஸ்பேஸ் கிரே மற்றும் கோல்டு என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. ஐபேட் மினி வைபை மாடல் விலை ரூ.34,900, வைபை மற்றும் செல்லுலார் மாடல் விலை ரூ.45,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    ஐபேட் ஏர் 10.5 இன்ச் வைபை மாடல் விலை ரூ.44,900 என்றும் வைபை மற்றும் செல்லுலார் மாடல் விலை ரூ.55,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றுடன் ஆப்பிள் பென்சில் சாதனம் ரூ.8,500 விலையில் கிடைக்கிறது. 10.5 இன்ச் ஐபேட் ஏர் மாடலுக்கான ஸ்மார்ட் கீபோர்டு ரூ.3500 விலையில் தனியே விற்பனை செய்யப்படுகிறது.

    புதிய ஐபேட் மாடல்கள் உலகின் பல்வேறு நாடுகளில் முன்பதிவு செய்யப்பட்டு அடுத்த வாரம் முதல் விநியோகம் துவங்குகிறது. இந்தியாவில் இரு சாதனங்களும் விரைவில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    ஃபேஸ்புக் நிறுவனம் கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா விவகாரத்தை மூடிமறைக்க முயற்சித்ததாக புது தகவல் வெளியாகியுள்ளது. #Facebook



    கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா விவகாரத்தை மூடி மறைக்க ஃபேஸ்புக் முயற்சித்ததா? என்ற கோணத்தில் அமெரிக்காவின் ஃபெடரல் அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். இதற்கென ஃபேஸ்புக் பயனர் தகவல்களை சேகரிக்க தனி ஊழியர்களை நியமித்ததா என ஃபெடரல் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

    இதுகுறித்து வெளியாகியிருக்கும் தகவல்களில் ஃபேஸ்புக் நிறுவனம் கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா விவகாரத்தை முழுமையாக மறைக்க முயற்சித்ததாக ஃபெடரல் அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக ஃபேஸ்புக் நிர்வாக குழு உறுப்பினர் மற்றும் கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா விவகாரத்தில் தொடர்புடைய கிரிஸ்டோபர் வைல் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்கலாம் என ஃபெடரல் அதிகாரிகள் கருதுகின்றனர். 



    கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா விவகாரத்தில் கிட்டத்தட்ட 8.7 கோடி பேரின் தகவல்கள் ஃபேஸ்புக் மூலம் கைமாறியைது தனக்கு தெரியாது என்றவாக்கில் அந்நிறுவனம் நீண்ட காலமாக மறுத்து வருகிறது. ஃபேஸ்புக் மூலம் சேகரிக்கப்பட்ட பயனர் விவரங்களை கொண்டு அமெரிக்காவில் நடைபெற்ற 2016 அதிபர் தேர்தலில் ஃபேஸ்புக் தலையிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.

    இந்த குற்றச்சாட்டுகளுக்கு மதிப்பளித்து, விசாரணை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம் என ஃபேஸ்புக் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். கேம்ப்ரிடிஜ் அனாலிடிகா விவகாரத்தில் ஃபேஸ்புக் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மூத்த வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த விவகாரத்தில் ஃபேஸ்புக் மீது பல்வேறு அரசு துறைகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருக்கின்றன. இவற்றின் மீதான விசாரணைக்கு ஃபேஸ்புக் ஆஜராகி தன் தரப்பு வாதங்களை தெரிவித்து வருகிறது.
    சியோமி நிறுவனம் தனது 4ஏ ப்ரோ 49-இன்ச் ஃபுல் ஹெச்.டி. ஆண்ட்ராய்டு டி.வி.யின் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது. #Xiaomi



    சியோமி நிறுவனம் தனது Mi எல்.இ.டி. டியவிய 4ஏ ப்ரோ 49 இன்ச் மாடலின் விலையை ரூ.1,000 குறைப்பதாக அறிவித்துள்ளது. 

    இந்தியாவில் ரூ.31,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த டி.வி.யின் விலை முன்னதாக ஜனவரி மாதத்தில் ரூ.1000 குறைக்கப்பட்டது. அந்த வகையில் இதே டி.வி.யின் விலை தற்சமயம் இரண்டாவது முறையாக குறைக்கப்பட்டிருக்கிறது. Mi டி.வி. மாடல் அறிமுகமான ஆறு மாதங்களுக்குள் இருமுறை விலை குறைக்கப்பட்டுள்ளது.



    முன்னதாக சியோமி நிறுவனம் தனது Mi டி.வி. 4 ப்ரோ 55 இன்ச் 4K டி.வி.யின் விலையை ரூ.2000 குறைப்பதாக அறிவித்தது. இரு டி.வி. மாடல்களின் விலைகுறைப்புக்கு சாம்சங் சமீபத்தில் அறிமுகம் செய்த 4K டி.வி.க்கள் தான் காரணம் என கூறப்படுகிறது. 

    விலை குறைப்பு மூலம் வாடிக்கையாளர்களை கவர சியோமி முடிவு செய்திருக்கிறது. அந்த வகையில் வரும் வாரங்களில் சியோமி இதேபோன்ற விலை குறைப்புக்களை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவில் Mi எல்.இ.டி. டி.வி. 4ஏ ப்ரோ 49 இன்ச் மாடல் தற்சமயம் ரூ.29,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட், அமேசான், Mi வலைதளம் மற்றும் Mi ஹோம் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெறுகிறது.
    ஆப்பிள் நிறுவனம் 2019 டெவலப்பர் நிகழ்வுக்கான தேதியை அறிவித்துள்ளது. இந்த ஆண்டிற்கான டெவலப்பர் நிகழ்வு ஜூன் முதல் வாரத்தில் நடைபெறுகிறது. #Apple #WWDC2019



    ஆப்பிள் நிறுவனம் தனது 30-வது சர்வதேச டெவலப்பர் நிகழ்வுக்கான (WWDC 2019) அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் 2019 ஆண்டின் டெவலப்பர் நிகழ்வு ஜூன் 3 ஆம் தேதி துவங்கி ஜூன் 7 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிகழ்வு ஆப்பிள் நிறுவனத்தின் மெக்கன்ரி கன்வென்ஷன் சென்டரில் நடைபெறுகிறது. முந்தைய ஆண்டுகளிலும் ஆப்பிள் டெவலப்பர்கள் நிகழ்வு இதே இடத்தில் நடத்தப்பட்டது. 

    சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஆப்பிள் இயங்குதளங்களான ஐ.ஓ.எஸ். 13, மேக் ஓ.எஸ். 10.15, வாட்ச் ஓ.எஸ். 6 மற்றும் டி.வி. ஓ.எஸ். 13 உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்து அவற்றுக்கான அப்டேட்களை வழங்கும். புதிய ஐ.ஓ.எஸ். 13 இல் ஆப்பிள் டார்க் மோட் வசதியை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



    இத்துடன் புதிய ஐபேட் இன்டர்ஃபேஸ் அப்டேட்கள், புதிய ஹோம் ஸ்கிரீன், ஃபோட்டோஸ், ஃபைல்ஸ், மெயில் ஆப்ஸ், புதிய எமோஜி உள்ளிட்டவையும் வழங்கப்படலாம் என தெரிகிறது. இதுகுறித்த புதிய விவரங்கள் வரும் மாதங்களில் வெளியாகலாம்.

    ஆப்பிள் 2019 சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வில் கீநோட் மேடையில் இருந்து புதிய ஆப்பிள் தகவல்கள், இத்தனை ஆண்டுகளில் மெஷின் லெர்னிங், ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி, ஆரோக்கியம், உடல்நலம் மற்றும் பல்வேறு பிரிவுகளில் புதிய அனுபவங்களை வழங்க தொட்ந்து பணியாற்றி வரும் டெவலப்பர்களை கொண்டாட இருப்பதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது.

    இந்த ஆண்டு நிகழ்வில் தொழில்நுட்ப வகுப்புகள், ஹேண்ட்ஸ்-ஆன் லேப்கள் மற்றும் சிறப்பு பேச்சாளர்களின் கருத்தரங்கு உள்ளிட்டவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. 2019 ஆப்பிள் டெவலப்பர்கள் நிகழ்வுக்கான (WWDC 2019) டிக்கெட்கள் மார்ச் 20 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது. நுழைவு சீட்டு கட்டணம் முந்தைய ஆண்டுகளை போன்றே 1599 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,10,777) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டிற்குள் இரண்டு புதிய ஐபேட் மாடல்களை இருவித அளவுகளில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #iPad



    ஆப்பிள் நிறுவனம் இரண்டு புதிய என்ட்ரி-லெவல் ஐபேட் மாடல்களை இருவித வேரியண்ட்களில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவை 10.2 இன்ச் மற்றும் 10.5 இன்ச் என இருவித அளவுகளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

    புதிய 10.2 இன்ச் ஐபேட் தற்சமயம் விற்பனை செய்யப்படும் 9.7 இன்ச் மாடலுக்கு மாற்றாக இருக்கும் என கூறப்படுகிறது. இதுதவிர புதிய ஐபேட் ஆப்பிள் நிறுவனத்தின் ஏழாவது தலைமுறை மாடலாக என்றும் கூறப்படுகிறது. இத்துடன் ஆப்பிள் நிறுவனம் 10.5 இன்ச் அளவில் மற்றொரு ஐபேட் மாடலையும் அறிமுகம் செய்ய இருப்பதாக ததகவல் வெளியாகியுள்ளது.



    இருவித அளவுகளில் உருவாகி வருவதாக கூறப்படும் புதிய ஐபேட்கள் தனித்தனியே அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. எனினும், ஸ்கிரீன் அளவுகளை தவிர புதிய ஐபேட்களை ஆப்பிள் எவ்வாறு வித்தியாசப்படுத்தும் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. 

    முன்னதாக வெளியான தகவல்களில் ஆப்பிளின் ஏழாம் தலைமுறை ஐபேட்களில் டச் ஐ.டி. மற்றும் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. டச் ஐ.டி. வழங்கப்படுவதால், ஆப்பிள் தனது ஐபேட் மாடலில் ஃபேஸ் ஐ.டி. அம்சத்தை வழங்காது என உறுதியாகியிருக்கிறது.

    ஏற்கனவே வெளியான தகவல்களில் புதிய ஐபேட் அளவுகள் பற்றி எவ்வத விவரமும் வெளியாகவில்லை. இந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலத்திற்குள் ஆப்பிள் இரண்டு ஐபேட் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
    சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவி 55-இன்ச் எல்.இ.டி. ஸ்மார்ட் டி.வி. 4 ப்ரோ மாடலின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது. Xiaomi



    சியோமி நிறுவனம் தனது Mi டி.வி. 4 ப்ரோ 55-இன்ச் 4K ஹெச்.டி.ஆர். ஸ்மார்ட் டி.வி. மாடலின் விலை ரூ.2000 குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட் டி.வி. ரூ.49,999 விலையில் ஐந்து மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. 

    இந்நிலையில் சியோமி ஸ்மார்ட் டி.வி. மாடலின் விலை குறைப்பிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக சாம்சங் நிறுவனம் தனது 4K ரக புதிய தொலைகாட்சி மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.



    முன்னதாக ஜனவரி மாதத்தில் சியோமி தனது Mi எல்.இ.டி. ஸ்மார்ட் டி.வி. 4ஏ 32 இன்ச், Mi எல்.இ.டி. டி.வி. 4சி ப்ரோ 32 இன்ச், Mi எல்.இ.டி. டி.வி. 4ஏ ப்ரோ 49 இன்ச் மாடலின் விலையை சியோமி குறைத்தது. ஜனவரியில் தொலைகாட்சிகளுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டதால் டி.வி. விலையை குறைப்பதாக சியோமி தெரிவித்தது.

    விலை குறைப்பை தொடர்ந்து சியோமி Mi எல்.இ.டி. 4 ப்ரோ 55 இன்ச் மாடல் ரூ.47,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனை பயனர்கள் ப்ளிப்கார்ட், அமேசான், Mi அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் Mi ஹோம் ஸ்டோர்களில் வாங்கலாம்.
    ×