search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "LED TV"

    • சோனி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய அல்ட்ரா ஹெச்டி டிவி மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
    • இந்தியாவில் அறிமுகமான சோனி நிறுவனத்தின் முதல் மினி எல்இடி டிவி மாடல் ஆகும்.

    சோனி XR-85X95K அல்ட்ரா ஹெச்டி மினி எல்இடி டிவி இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய எல்இடி டிவி வில ரூ. 6 லட்சத்து 99 ஆயிரத்து 990 என துவங்குகிறது. இது இந்திய சந்தையில் அறிமுகமான முதல் மினி எல்இடி டிவிக்கள் ஆகும்.

    புதிய சோனி மினி எல்இடி டிவி XR மாடலில் காக்னிடிவ் பிராசஸர் XR வழங்கப்பட்டு இருக்கிறது. இது சோனி நிறுவனத்தின் சொந்த சிப்செட் ஆகும். மேலும் இதில் XR பேக்லிட் மாஸ்டர் டிரைவ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு உள்ளது. இது பேக்லிட்டிங் மற்றும் லோக்கல் டிமமிங் போன்ற அம்சங்களை வழங்குகிறது.

    இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கும் புதிய சோனி மினி எல்இடி டிவி மாடல் சாம்சங் மற்றும் டிசிஎல் பிராண்டு மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. அளவை பொருத்தவரை மினி டிஸ்ப்ளே தெழில்நுட்பம் கொண்ட டிவி மாடல் எல்ஜி நிறுவனத்தின் OLED டிவி மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.


    அம்சங்கள்:

    சோனி X95K சீரிஸ் டிவி 85 இன்ச் அளவில் கிடைக்கிறது. இதில் 3840x2160 பிக்சல் மினி எல்இடி டிஸ்ப்ளே பேனல் உள்ளது. இந்த டிவி காக்னிடிவ் பிராசஸர் XR மற்றும் XR பேக்லிட் மாஸ்டர் டிரைவ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது அதிநவீன மினி எல்இடி பேக்லைட்டிங் மற்றும் லோக்கல் டிம்மிங் உள்ளிட்டவைகளை கவனித்துக் கொள்கிறது. மேலும் அதில் ஹெச்டிஆர் 10 மற்றும் டால்பி விஷன், டால்பி அட்மோஸ் சவுண்ட் உள்ளது.

    இந்த டிவி ஆண்ட்ராய்டு டிவி மென்பொருள் சார்ந்த கூகுள் டிவி யுஐ கொண்டிருக்கிறது. இத்துடன் கூகுள் அசிஸ்டண்ட், பில்ட்-இன் க்ரோம்காஸ்ட், ஆப்பிள் ஏர்பிளே, ஆப்பிள் ஹோம்கிட் வசதி, HDMI 2.1, 120Hz வேரியபில் ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது.

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    சோனி X95K மினி எல்இடி டிவி சீரிஸ் ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது. இதன் உண்மை விலை ரூ. 8 லட்சத்து 99 ஆயிரத்து 990 ஆகும். ஆனால் பெஸ்ட் பை சலுகையின் கீழ் இந்த டிவி ரூ. 6 லட்சத்து 99 ஆயிரத்து 990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விற்பனை சோனி செண்டர் ஸ்டோர் மற்றும் முன்னணி சில்லறை விற்பனை கடைகளில் நடைபெறுகிறது.

    நோபிள் ஸ்கியோடோ எனும் டி.வி. பிராண்டு இந்தியாவில் தனது புதிய ஸ்மார்ட்லைட் எல்.இ.டி. டி.வி.க்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. #SmartLite



    இந்தியாவில் தொலைகாட்சி பெட்டிகளுக்கான சந்தை சமீப காலங்களில் அதிரடி மாற்றங்களை சந்தித்து வருகிறது. சந்தையில் களமிறங்கும் புதிய டி.வி. பிராண்டுகள் தங்களது தொலைகாட்சி மாடல்களின் விலையை மிகவும் குறைவாக நிர்ணயம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றன.

    அந்த வரிசையில் புதிதாக இணைந்திருக்கும் டி.வி. பிராண்டு நோபிள் ஸ்கியோடோ. இந்தியாவில் ஸ்மார்ட்லைட் எல்.இ.டி. டி.வி.க்களை அறிமுகம் செய்திருக்கும் இந்த பிராண்டு தனது 24-இன்ச் மாடலின் விலையை ரூ.6,999 என்றும் 32-இன்ச் மாடலின் விலையை ரூ.8,999 என்றும் நிர்ணயம் செய்துள்ளது.

    புதிய டி.வி.க்களின் குறைவான கட்டணத்திலேயே ஸ்மார்ட் கனெக்டிவிட்டி, விநியோகம் மற்றும் இன்ஸ்டாலேஷன் உள்ளிட்டவையும் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் புதிய டி.வி.க்களில் வைபை, லேண் கனெக்டிவிட்டி வழங்கப்படுகிறது. இத்துடன் யூடியூப், மிராகாஸ்ட், வெப் பிரவுசர் மற்றும் ட்விட்டர் போன்ற செயலிகள் டி.வி.யில் பிரீ-இன்ஸ்டால் செய்யப்படுகின்றன.



    ஸ்மார்ட்லைட் எல்.இ.டி. டி.வி. 24 இன்ச் (NB24YT01) மற்றும் 32-இன்ச் (NB32YT01) மாடல்களில் 1280x720 பிக்சல் ரெசல்யூஷன் ஸ்கிரீன் மற்றும் 20 வாட் சவுண்ட் அவுட்புட் வழங்கும் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன. கூடுதலாக இரண்டு ஹெச்.டி.எம்.ஐ. போர்ட்கள், ஒரு யு.எஸ்.பி. போர்ட் வழங்கப்படுகின்றன.

    புதிய டி.வி.க்கள் இந்தியாவில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகின்றன. பயனர்கள் இவற்றை ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக வாங்க முடியும். இந்தியாவுக்கென உருவாக்கப்பட்டிருப்பதால் இந்த டி.வி.க்கள் மாசு மூலம் பாதிக்கப்படாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இத்துடன் புதிய டி.வி.க்கள் குறைந்தளவு மின்சக்தியை பயன்படுத்த ஏதுவாக பிரத்யேக பேக்லிட் செட்டிங் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வு மற்றும் சியோமி போன்ற பிராண்டுகள் தங்களது குறைந்த விலை டி.வி.க்களை அறிமுகம் செய்து பிரபலமாகி வரும் நிலையில், நோபிள் ஸ்கியோடோ மற்றும் ஷின்கோ போன்ற பிராண்டுகள் தங்களது புதிய டி.வி.க்களை இந்தியாவில் அறிமுகம் செய்கின்றன. முன்னதாக ஷின்கோ நிறுவனம் 39-இன்ச் டி.வி.யினை ரூ.13,990 விலையில் அறிமுகம் செய்தது. 
    உத்தரபிரதேசத்தில் உள்ள ஜெயில்களில் கைதிகள் டி.வி. பார்க்க வசதியாக எல்.இ.டி. டி.வி.க்கள் வாங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கு ரூ.3½ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. #UPJails
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலத்தில் மத்திய ஜெயில்கள், மாவட்ட ஜெயில்கள் என மொத்தம் 70 ஜெயில்கள் உள்ளன. இவற்றில் 1 லட்சத்து 2 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

    இவர்களுக்கு பொழுது போக்கு வசதிகள் இல்லாததால் கைதிகள் சோர்வுடன் காணப்பட்டனர். இதனால் ஜெயிலில் பல்வேறு மறுசீரமைப்புகளை செய்ய ஜெயில் துறை முடிவு செய்துள்ளது.

    அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு ஜெயிலிலும் கைதிகள் டி.வி. பார்க்க வசதியாக எல்.இ.டி. டி.வி.க்கள் வாங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. ஜெயிலில் ஒவ்வொரு வார்டிலும் தனித்தனியாக டி.வி. அமைக்கப்படுகிறது.


    இதற்காக மொத்தம் 900 டி.வி. வாங்குகிறார்கள். இதற்கு ரூ.3½ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில வாரங்களில் அனைத்து ஜெயில்களிலும் எல்.இ.டி. டி.வி.க்கள் பொருத்தப்படும் என்று சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. சந்திரபிரகாஷ் தெரிவித்தார்.

    இந்த டி.வி.க்களில் தகவல் தொடர்பான நிகழ்ச்சிகள் மற்றும் பயனுள்ள நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும் என்றும் அவர் தெரிவித்தார். உ.பி. ஜெயில்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கைதிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது

    அதே நேரத்தில் ஜெயில் காவலர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. அங்கு 9 ஆயிரம் ஜெயில் காவலர்கள் இருக்க வேண்டும். ஆனால் 4 ஆயிரம் ஜெயில் காவலர்கள் மட்டுமே பணியில் இருக்கிறார்கள். மீதி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.  #UPJails
    ×