search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "UP Jails"

    உத்தரபிரதேசத்தில் உள்ள ஜெயில்களில் கைதிகள் டி.வி. பார்க்க வசதியாக எல்.இ.டி. டி.வி.க்கள் வாங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கு ரூ.3½ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. #UPJails
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலத்தில் மத்திய ஜெயில்கள், மாவட்ட ஜெயில்கள் என மொத்தம் 70 ஜெயில்கள் உள்ளன. இவற்றில் 1 லட்சத்து 2 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

    இவர்களுக்கு பொழுது போக்கு வசதிகள் இல்லாததால் கைதிகள் சோர்வுடன் காணப்பட்டனர். இதனால் ஜெயிலில் பல்வேறு மறுசீரமைப்புகளை செய்ய ஜெயில் துறை முடிவு செய்துள்ளது.

    அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு ஜெயிலிலும் கைதிகள் டி.வி. பார்க்க வசதியாக எல்.இ.டி. டி.வி.க்கள் வாங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. ஜெயிலில் ஒவ்வொரு வார்டிலும் தனித்தனியாக டி.வி. அமைக்கப்படுகிறது.


    இதற்காக மொத்தம் 900 டி.வி. வாங்குகிறார்கள். இதற்கு ரூ.3½ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில வாரங்களில் அனைத்து ஜெயில்களிலும் எல்.இ.டி. டி.வி.க்கள் பொருத்தப்படும் என்று சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. சந்திரபிரகாஷ் தெரிவித்தார்.

    இந்த டி.வி.க்களில் தகவல் தொடர்பான நிகழ்ச்சிகள் மற்றும் பயனுள்ள நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும் என்றும் அவர் தெரிவித்தார். உ.பி. ஜெயில்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கைதிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது

    அதே நேரத்தில் ஜெயில் காவலர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. அங்கு 9 ஆயிரம் ஜெயில் காவலர்கள் இருக்க வேண்டும். ஆனால் 4 ஆயிரம் ஜெயில் காவலர்கள் மட்டுமே பணியில் இருக்கிறார்கள். மீதி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.  #UPJails
    ×