search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    மேம்பட்ட அம்சங்களுடன் Mi நோட்புக் ஏர் 2019 அறிமுகம்
    X

    மேம்பட்ட அம்சங்களுடன் Mi நோட்புக் ஏர் 2019 அறிமுகம்

    சியோமி நிறுவனம் தனது Mi நோட்புக் ஏர் லேப்டாப் மாடலை அப்டேட் செய்துள்ளது. Mi நோட்புக் ஏர் 2019 மாடலில் புதிய தலைமுறை இன்டெல் கோர் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளன. #MiNotebookAir



    சியோமி நிறுவனம் தனது Mi நோட்புக் ஏர் மாடலை அப்டேட் செய்துள்ளது. புதிய லேப்டாப்பில் சியோமி 8-ஆம் தலைமுறை இன்டெல் கோர் ஐ5 அல்லது கோர் எம்3 பிராசஸர்களை வழங்கியிருக்கிறது. இத்துடன் 4 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. எஸ்.எஸ்.டி., மற்றும் ஃபுல் ஹெச்.டி. ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது.

    முழுமையான மெட்டல் சேசிஸ் கொண்டிருக்கும் Mi நோட்புக் ஏர் எடை 1.07 கிலோ ஆகும். புதிய லேப்டாப்பில் சியோமி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை வழங்கியுள்ளது. முன்னதாக சியோமி தனது லேப்டாப்களில் ஏழாம் தலைமுறை இன்டெல் கோர் ஐ5 வெர்ஷனை அறிமுகம் செய்தது. 

    இந்நிலையில், தற்சமயம் 12.5 இன்ச் Mi நோட்புக் ஏர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Mi நோட்புக் ஏர் 13.3 இன்ச் மாடலில் ஏற்கனவே 8 ஆம் தலைமுறை இன்டெல் கோர் சி.பி.யு.க்கள் வழங்கப்படுகின்றன. 



    Mi நோட்புக் ஏர் 12.5 இன்ச் (2019) சிறப்பம்சங்கள்:

    - 12.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி. 1080x1920 பிக்சல் ஸ்கிரீன்
    - 8 ஆம் தலைமுறை இன்டெல் கோர் ஐ5 / கோர் எம்3 பிராசஸர்
    - 4 ஜி.பி. ரேம்
    - 256 ஜி.பி. எஸ்.எஸ்.டி.
    - டி.டி.எஸ். சரவுண்ட் சவுண்ட்
    - யு.எஸ்.பி. டைப்-சி போர்ட்
    - ஹெச்.டி.எம்.ஐ. போர்ட்
    - யு.எஸ்.பி. 3.0 போர்ட்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
    - பேக்லிட் கீபோர்டு
    - விண்டோஸ் 10 ஹோம் எடிஷன்

    சீனாவில் Mi நோட்புக் ஏர் 12.5 இன்ச் (2019) மாடல் விலை CNY 3,599 (இந்திய மதிப்பில் ரூ.38,400) முதல் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை CNY 4,299 (இந்திய மதிப்பில் ரூ.45,900) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சீனாவில் அறிவிக்கப்பட்டுள்ள Mi நோட்புக் ஏர் மற்ற சந்தைகளில் வெளியிடுவது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
    Next Story
    ×