search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐ.ஓ.எஸ்."

    ஆப்பிள் நிறுவனத்தின் பழைய ஐபோன் மாடல்களில் வாட்ஸ்அப் செயலி இயங்காமல் போகும் என தகவல் வெளியாகி உள்ளது. வாட்ஸ்அப் செயலியை தொடர்ந்து பயன்படுத்த ஐ.ஓ.எஸ். வெர்ஷனை அப்டேட் செய்ய வேண்டும்.


    பிரபல குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப் அடிக்கடி தனது செயலியில் மாற்றங்களை ஏற்படுத்தி, புது அம்சங்கள் வழங்குவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறது. இதே போன்று செயலியில் அவ்வப்போது வழங்கப்படும் புது அம்சங்கள் பழைய ஓ.எஸ். கொண்ட சாதனங்களில் இயங்காமல் போகும் வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாக சீரான இடைவெளியில் பழைய ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். சாதனங்களில் வாட்ஸ்அப் இயங்குவதற்கான சப்போர்ட் நீக்கப்பட்டு வருகிறது. 

    அந்த வரிசையில், ஐ.ஓ.எஸ். 10 மற்றும் ஐ.ஓ.எஸ். 11 கொண்டு இயங்கி வரும் ஐபோன் 5 மற்றும் ஐபோன் 5C மாடல்களுக்கான சப்போர்ட் அடுத்த சில மாதங்களில் நிறுத்தப்பட இருக்கிறது. இது பற்றிய தகவலை, வாட்ஸ்அப் அப்டேட் குறித்த தகவல்களை வெளியிட்டு வரும் wabetainfo தளம் வெளியிட்டு உள்ளது. 

    வாட்ஸ்அப்
    Photo Courtesy: WABetaInfo

    அந்த வலைதள தகவல்களின்படி ஐ.ஓ.எஸ். 10 மற்றும் ஐ.ஓ.எஸ். 11 கொண்ட ஐபோன்களில் வாட்ஸ்அப் சேவை அக்டோபர் 24, 2022 முதல் நிறுத்தப்பட்டு விடும் என ஸ்கிரீன்ஷாட்டில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது பற்றிய தகவல் வாட்ஸ்அப் ஹெல்ப் செண்டர் வலைதள பக்கத்திலும் வெளியிடப்பட்டு இருக்கிறது. 

    அதன் படி, வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த ஐ.ஓ.எஸ். 12 மற்றும் அதன் பின் வெளியிடப்பட்ட வெர்ஷன்கள் சிறப்பானது, இதனை பிரந்துரைக்கிறோம் என குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனால் ஐபோன் 5S, ஐபோன் 6 அல்லது ஐபோன் 6S போன்ற மாடல்களில் வாட்ஸ்அப் செயலியை தொடர்ந்து பயன்படுத்த ஐ.ஓ.எஸ். 12 தளத்திற்கு அப்டேட் செய்வது அவசியமாகி இருக்கிறது. 
    ×