search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஆப்பிள் 2019 டெவலப்பர் நிகழ்வு தேதி வெளியானது
    X

    ஆப்பிள் 2019 டெவலப்பர் நிகழ்வு தேதி வெளியானது

    ஆப்பிள் நிறுவனத்தின் 2019 டெவலப்பர்கள் நிகழ்வுக்கான தேதி சார்ந்த விவரங்கள் வெளியாகியுள்ளது. #Apple #WWDC2019



    ஆப்பிள் நிறுவனம் 2019 ஆண்டின் முதல் அறிவிப்பை உறுதி செய்திருக்கிறது. அந்த வகையில் ஆப்பிள் மார்ச் 25 ஆம் தேதி சிறப்பு நிகழ்ச்சியை நடத்த இருக்கிறது. இந்த நிகழ்வு ஆப்பிள் பார்க் வளாகத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் ஆப்பிள் தனது புதிய செய்தி சந்தா திட்டத்தை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இத்துடன் ஆப்பிளின் வீடியோ ஸ்டிரீமிங் சேவையும் அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே வெளியான தகவல்களில் 2019 ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் தனக்கென பிரத்யேக வீடியோ ஸ்டிரீமிங் சேவையை துவங்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    வழக்கமாக ஆப்பிள் நிறுவனம் தனது டெவலப்பர்கள் நிகழ்வுக்கான அழைப்பிதழ்களை பிப்ரவரி மாத இறுதியிலோ அல்லது மார்ச் மாத துவக்கத்திலோ வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஆப்பிள் சார்பில் WWDC பேஷ் நிகழ்வு டிஸ்கவரி மீடோவில் நடத்தப்பட்டது. இதில் 2019 ஆப்பிள் நிகழ்வுகளுக்கான காலெண்டரில் ஜூன் 6 ஆம் தேதி டெவலப்பர்கள் நிகழ்வு சான் ஜோஸ் நகரில் நடைபெறும் என உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 



    2019 டெவலப்பர்கள் நிகழ்வில் 7000 பேர் வரை கலந்து கொள்வர் என்றும் இந்த நிகழ்வு ஜூன் 3 ஆம் தேதி துவங்கி ஜூன் 7 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் கீநோட் நிகழ்வு ஜூன் 3 ஆம் தேதி நடைபெறுகிறது. 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளை போன்றே இந்த ஆண்டும் டெவலப்பர் நிகழ்வு கலிபோர்னியாவின் சான் ஜோஸ் நகரில் அமைந்துள்ள மெக்கன்ரி கன்வெஷன் மையத்தில் நடைபெறும் என தெரிகிறது.

    இந்த ஆண்டு டெவலப்பர்கள் நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் ஐ.ஓ.எஸ்., ஓ.எஸ். எக்ஸ். உள்ளிட்டவற்றின் எதிர்கால பதிப்புகளான ஐ.ஓ.எஸ். 13, மேக் ஓ.எஸ். 10.15, வாட்ச் ஓ.எஸ். 6, டி.வி. ஓ.எஸ். 13 உள்ளிட்டவற்றுக்கான அப்டேட்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய ஐ.ஓ.எஸ். 13 பதிப்பில் டார்க் மோட், புதிய ஐபேட் இன்டர்ஃபேஸ், புதிய ஹோம் ஸ்கிரீன், போட்டோஸ், ஃபைல்ஸ், மெயில் ஆப் உள்ளிட்டவற்றுக்கான அப்டேட்கள் மற்றும் புதிய எமோஜி உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதுபற்றிய கூடுதல் விவரங்கள் வரும் மாதங்களில் தெரியவரும்.
    Next Story
    ×