search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    பொதுவெளியில் சேமிக்கப்பட்ட பயனர் விவரங்களை அதிரடியாக நீக்கிய ஃபேஸ்புக்
    X

    பொதுவெளியில் சேமிக்கப்பட்ட பயனர் விவரங்களை அதிரடியாக நீக்கிய ஃபேஸ்புக்

    அமேசானின் கிளவுட் சர்வெர்களின் பொதுவெளியில் இருந்து பல லட்சம் பயனர் விவரங்களை நீக்கியிருப்பதாக ஃபேஸ்புக் அறிவித்துள்ளது. #Facebook



    அமேசானின் கிளவுட் சர்வெர்களில் பொதுப்படையாக சேமிக்கப்பட்டு இருந்த பல லட்சம் பயனரின் தனிப்பட்ட தகவல்களை அதிரடியாக நீக்கியதாக ஃபேஸ்புக் அறிவித்துள்ளது. 

    சைபர்செக்யூரிட்டி நிறுவனமான அப்கார்டு முதலில் இதுபற்றிய தகவல்களை வெளியிட்டது. இந்நிறுவனம் வெளியிட்ட தகவல்களில் மெக்சிகோ சார்ந்த செய்தி வலைதளம் ஒன்று ஃபேஸ்புக் பயன்படுத்தும் சுமார் 54 கோடி பேரின் விவரங்களை அமேசானின் கிளவுட் சர்வெர்களில் பொதுவாக சேமித்து வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    இந்த தகவல்களில் பயனர்களின் நோட்டிஃபிகேஷன் நம்பர்கள், கமென்ட்கள், ரியாக்‌ஷன்கள் மற்றும் அக்கவுண்ட் பெயர்கள் இடம்பெற்றிருந்ததாக அப்கார்டு தெரிவித்தது. மற்றொரு தகவல்களில் அட் தி பூல் எனும் செயலி பயனரின் பெயர்கள், மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல் உள்ளிட்டவற்றை அம்பலப்படுத்தியதாக அப்கார்டு தெரிவித்திருக்கிறது.



    இத்தகவலைத் தொடர்ந்து ஃபேஸ்புக் அமேசான் சர்வெர்களில் இருந்த தகவல்களை அதிரடியாக நீக்கிவிட்டதாக தெரிவித்துள்ளது. பயனர் விவரங்களை நீக்க அமேசானுடன் இணைந்து பணியாற்றியதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. ஃபேஸ்புக் தகவல்கள் பொது தளங்களில் சேமிக்கப்படுவது ஃபேஸ்புக் விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

    சமீப காலங்களில் பயனர் தகவல்களின் பாதுகாப்பு சார்ந்து ஃபேஸ்புக் நிறுவனம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. கடந்த ஆண்டு கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் ஃபேஸ்புக் ப்ரோஃபைல்களில் இருந்து தகவல்களை ரகசியமாக சேகரித்தது அம்பலமானது ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியது.
    Next Story
    ×