என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    • இந்தியாவில 2023-24 நிதியாண்டில் 8 பில்லியன் டாலருக்கு ஐபோன் விற்பனை.
    • சீனாவில் 72.6 பில்லியன் டாலர் அளவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    இந்தியா 2023-2024 நிதியாண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை சுமார் 8 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய பண மதிப்பில் 66,858.92 கோடி ரூபாய்) என ப்ளூம்பெர்க் தகவல் வெளியிட்டுள்ளது. முந்தைய நிதியாண்டில் 6 பில்லியன் டாலராக இருந்தது. தற்போது மூன்றில் ஒரு மடங்கு (சுமார் 33 சதவீதம்) அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஐ-போன் விற்பனையில் உலகின் ஐந்தாவது மிகப்பெரிய சந்தையாக இந்தியா உருவாகியுள்ளது. ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளை பின்னுக்குத் தள்ளியுளள்து.

    மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் டபுள் டிஜிட் வளர்ச்சி என டிம் குக் தெரிவித்திருந்தார். மேலும் இது எங்களுக்கு மிக மிகப்பெரிய மகிழ்ச்சி எனத் தெரிவித்திருந்தார்.

    உலகளவில் ஐ-போன் விற்பனை மூலம் 383 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ள ஆப்பிள் நிறுவனத்திற்கு 8 பில்லியன் டாலர் என்பது குறைவானதுதான். சீனாவில் 72.6 பில்லியன் டாலர் அளவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இருந்த போதிலும் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் வளர்ச்சி முக்கியமானது எனக் கருதுகிறது.

    இந்தியாவுக்கு 9.2 மில்லியன் போன்களை ஏற்றுமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மூன்று ஆண்டுகள் செக்யுரிட்டி அப்டேட்களை பெறும்.
    • இந்த ஸ்மார்ட்போன் இருவித நிறங்களில் கிடைக்கிறது.

    ஐகூ நிறுவனத்தின் முற்றிலும் புதிய Z9 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 6.56 இன்ச் HD+ LCD ஸ்கிரீன், 8MP செல்பி கேமரா, மீடியாடெக் டிமென்சிட்டி 6300 பிராசயர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 6 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் கொண்டிருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போன் புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP லென்ஸ் கொண்டிருக்கிறது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கொண்டுள்ள ஐகூ Z9 லைட் 5ஜி மாடல் இரண்டு ஆண்டுகள் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் மூன்று ஆண்டுகள் செக்யுரிட்டி அப்டேட்களை பெறும்.

     


    5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ஐகூ Z9 லைட் 5ஜி மாடலில் 15 வாட் சார்ஜிங் வசதி உள்ளது. இத்துடன் டூயல் சிம் ஸ்லாட், 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.4, யுஎஸ்பி டைப் சி போன்ற வசதிகள் உள்ளன.

    ஐகூ Z9 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அக்வா ஃபுளோ மற்றும் மோச்சா பிரவுன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10,499 என துவங்குகிறது. இதன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 11,499 ஆகும்.

    புதிய ஐகூ ஸ்மார்ட்போனின் விற்பனை ஜூலை 20 ஆம் தேதி துவங்குகிறது. விற்பனை அமேசான், ஐகூ இந்தியா இ ஸ்டோர்களில் நடைபெற இருக்கிறது. 

    • அந்நிறுவனம் அதிக தொகை கொடுத்து வாங்கிய நிறுவனமாக இருக்கும்.
    • 2022-இல் 5.4 பில்லியன் டாலர்கள் கொடுத்து சைபர் செக்யூரிட்டி நிறுவனத்தை வாங்கியது.

    சைபர்செக்யுரிட்டி நிறுவனமான விஸ் (Wiz)-ஐ கூகுள் நிறுவனம் கையகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியதாகவும் கூறப்படுகிறது.

    கடந்த 2020 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட விஸ் நிறுவனம் மிக குறுகிய காலக்கட்டத்தில் அசுர வளர்ச்சியை பெற்றது. இந்நிறுவனத்திற்கு ஆசார் ராப்பப்போர்ட் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். கடந்த மே மாத வாக்கில் ஐபிஓ-வுக்கு தயாரான விஸ் நிறுவன மதிப்பீடு 12 பில்லியன் டாலர்கள் ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    உலகளவில் நிர்வாகிகள் மற்றும் சைபர் செக்யூரிட்டி வல்லுநர்களுக்கு கிளவுட் சார்ந்த சேவைகளை விஸ் வழங்கி வருகிறது. இஸ்ரேலிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்களான சைபர்ஸ்டார்ட்ஸ், இன்டெக்ஸ் வென்ச்சர்ஸ், இன்சைட் பார்ட்னர்ஸ் மற்றும் செக்யோவா கேப்பிட்டல் உள்ளிட்டவை விஸ் சேவைகளை பயன்படுத்தி வருகின்றன.

    விஸ் நிறுவனத்தை கூகுள் கைப்பற்றும் பட்சத்தில் கூகுள் நிறுவன வரலாற்றிலேயே அந்நிறுவனம் அதிக தொகை கொடுத்து வாங்கிய நிறுவனமாக விஸ் இருக்கும். கூகுள் நிறுவனம் முன்னதாக 2022 ஆம் ஆண்டு மாண்டியன்ட் என்ற சைபர் செக்யூரிட்டி நிறுவனத்தை 5.4 பில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கியது குறிப்பிடத்தக்கது.

    உலகளவில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், கூகுள் நிறுவனம் தொடர்ச்சியாக சைபர் பாதுகாப்பு துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை விலைக்கு வாங்கி வருவது பேசு பொருளாக இருக்கிறது.

    • எதையும் ஆராய்ந்தறிந்து செயல்படுவது, பிரச்சனைகளை தீர்ப்பது உள்ளிட்ட பகுத்தறியும் தன்மைகளை விஞ்ஞானிகள் கற்றுத்தந்து வருகின்றனர்.
    • Q* தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டமாக ஸ்ட்ராபெரி ஏஐ இருக்கும்.

    உலகத்தை ஆட்டிப்படைக்கத் தொடங்கியிருக்கும் ஏஐ தொழில்நுட்பம் நாளுக்கு நாள் மேம்பட்டுக்கொண்டே வருகிறது. சோசியல் மீடியா முதல் தொழில்துறை  வரை மனித வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாக மாறும் நாளை நோக்கி ஏஐ தொழில்நுட்பம் முன்னேறி வருகிறது.

    அந்த வகையில் சாட் ஜி.பி.டி.யை உருவாக்கிய முன்னணி ஓபன் ஏஐ நிறுவனம், ஸ்ட்ராபெர்ரி [Strawberry] என்ற பெயரில் பகுத்தறிவு கொண்ட ஏஐ தொழில்நுட்பத்தை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே ஏஐ தொழில்நுட்பம் குறித்து பலர் அச்சம் தெரிவித்து வரும் நிலையில் இந்த பிராஜக்ட் ஸ்ட்ராபெர்ரியை ஓபன் ஏஐ நிறுவனம் மிகவும் ரகசியமாக செய்து வருவதாக ரியூட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

     

    இந்த ஸ்ட்ராபெர்ரி திட்டத்தின் மூலம் ஏஐ மாடல்களுக்கு தன்னிச்சையாக விஷயங்களை புரிந்து கொள்ளுதல், லாஜிக்கல் ரீசனிங், எதையும் ஆராய்ந்தறிந்து செயல்படுவது, பிரச்சனைகளை தீர்ப்பது உள்ளிட்ட பகுத்தறியும் தன்மைகளை விஞ்ஞானிகள் கற்றுத்தந்து வருகின்றனர். சுருக்கமாக சங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் படத்தில் ரஜினி ரோபோட்டுக்கு உணர்வுகளையும் பகுத்தறிவையும் கற்றுத்தரும் தருணம் நிஜத்தில் நடந்து வருகிறது.

     

    கிட்டத்தட்ட மனிதனின் அறிவை பிரதி செய்யும் வகையிலான ஏஐ மாடலை உருவாக்க ஓபன் ஏஐ நிறுவனம் முயன்று வருகிறது. கூகுள்,மெட்டா, மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த முயற்சியில் பின்தங்கியுள்ள நிலையில் ஓபன் ஏஐ உருவாக்கிவரும் இந்த புதிய ஏஐ வருங்காலங்களில் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கவும், சிக்கலான சாப்டவேர்களை உருவாக்கவும் பயனுள்ளதாக இருக்கும்என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த புதிய ஸ்ட்ராபெர்ரி ஏஐ திட்டம் குறித்து ஓபன் ஏஐ இன்னும் உறுதி செய்யவில்லை.

     

    ஆனால் சமீபத்தில் ஓபன் ஏஐ பரிசோதனை செய்த Q* என்ற புதிய திட்டத்தில் மேம்படுத்தப்பட்ட ஏஐ சிக்கலான கணிதம் மற்றும் அறிவியல் கணக்குகளுக்கு எளிதில் விடை கண்டுபிடிப்பதாக தெரியவந்துள்ளது. இந்த Q* தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டமாக ஸ்ட்ராபெர்ரி ஏஐ இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். 

    • 6GB ரேம், 128GB ஸ்டோரேஜ் போகோ எம்6 பிளஸ் 5ஜி போன் 13999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
    • 8GB ரேம், 128GB ஸ்டோரேஜ் போகோ எம்6 பிளஸ் 5ஜி போன் 14999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    போகோ செல்போன் நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவில் போகோ எம்6 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த நிலையில் விரைவில் போகோ எம்6 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    6GB ரேம், 128GB ஸ்டோரேஜ் போகோ எம்6 பிளஸ் 5ஜி போன் 13999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    8GB ரேம், 128GB ஸ்டோரேஜ் போகோ எம்6 பிளஸ் 5ஜி போன் 14999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    பிளாக், பர்பிள், சில்வர் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும். ஆண்ட்ராய்டு 14 ஹைபைர்ஓஎஸ் அடிப்படையிலானது. ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 பிராசசர் கொண்டதாக இருக்கும். 120HZ ரெப்ரெஷ் ரேட் உடன் 6.79 இன்ச் எல்சிடி டிஸ்பிளே. 108 மெகாபிக்சல் சென்சார், 2-மெகாபிக்சல் சென்சார் உடன் இரண்டு கேமராவும், 16-மெகாபிக்சர் முன்பக்க கேமராவையும் கொண்டதாக இருக்கும். 5030mAh பேட்டரியுடன் 33W பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டதாகவும் இருக்கும்.

    • 1198 ரூபாய்க்கு 365 நாள் வேலிடிட்டி. 300 நிமிடங்கள் வாய்ஸ் கால் வசதியுடன் 3GB டேட்டா.
    • 1999 ரூபாய்க்கு 365 நாள் வேலிடிட்டி. 600GB டேட்டா.

    அரசு செல்போன் சேவை நிறுவனமான பிஎஸ்என்எல் 4ஜி வழங்க தயாராகி வருகிறது. நாட்டின் முக்கிய இடங்களில் 4ஜி சேவை வழங்கி வருகிறது. அடுத்த மாதத்தில் இருந்து நாடு முழுவதும் 4ஜி சேவையை விரிவுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே தனியார் செல்போன் சேவை நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. இந்த நிலையில் பிஎஸ்என்எல் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் மலிவான விலையில் வருடாந்திர பிளானை அறிவித்துள்ளது.

    1198 ரூபாய் ப்ரீபெய்டு ரீசார்ஜ் பிளான்

    365 நாள் வேலிடிட்டி

    300 நிமிடங்கள் வாய்ஸ் கால் வசதியுடன் 3GB டேட்டா.

    மாதந்தோறும் 30 இலவச எஸ்எம்எஸ்.

    1999 ரூபாய் ப்ரீபெய்டு ரீசார்ஜ் பிளான்

    365 நாள் வேலிடிட்டி.

    அன்லிமிடெட் வாய்ஸ் கால்.

    365 நாட்களுக்கு 600GB டேட்டா.

    தினந்தோறும் 100 எஸ்எம்ஸ் இலவசம்.

    2999 ரூபாய் ப்ரீபெய்டு ரீசார்ஜ் பிளான்

    365 நாள் வேலிடிட்டி.

    ஒரு நாளைக்கு 3GB டேட்டா உடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்.

    தினசரி 10 எஸ்எம்எஸ் இலவசம்.

    • அமேசான் தனது 10வது பிரைம் டே நிகழ்வை ஜூலை 16 மற்றும் 17 தேதிகளில் நடத்த இருக்கிறது.
    • அமேசான் பிரைம் உறுப்பினர்கள் இன்னும் பிரைம் கேமிங் லீட் அப் தலைப்புகளை பெறலாம்.

    அமேசான் பல நாடுகளில் பிரைம் டே விற்பனையை நடத்த தயாராக உள்ளது. அதற்கு முன்னதாக, பிரைம் டே விற்பனையின்போது பிரைம் உறுப்பினர்களுக்கு Suicide Squad: Kill the Justice League, Chivalry 2 மற்றும் பல்வேறு பிரபல டைட்டில்களை கொண்ட கம்ப்யூட்டர் கேம்களை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.

    அமேசான் பிரைமில் கூடுதல் கட்டணமின்றி இந்த கேம்களை எவ்வாறு பெறலாம் என்பதை விரிவாக பார்க்கலாம்.

    அமேசான் தனது 10வது பிரைம் டே நிகழ்வை ஜூலை 16 மற்றும் 17 தேதிகளில் நடத்த இருக்கிறது.

    இந்த விற்பனையின்போது, Suicide Squad: Kill the Justice League, Chivalry 2, and Rise of the Tomb Raider உள்ளிட்ட மூன்று கேம்களை அமேசான் பிரைம் சந்தா வைத்திருப்போர் பெற்றுக் கொள்ளலாம்.

    அமேசான் பிரைம் உறுப்பினர்கள் இந்த கேம்களை ஜூலை 16 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் 48 மணிநேரத்திற்கு இலவசமாக பெறலாம். இந்த இலவச கேம்கள் எபிக் கேம்ஸ் ஸ்டோர் (Epic Games Store) மூலம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    அமேசான் பிரைம் உறுப்பினர்கள் இன்னும் பிரைம் கேமிங் லீட் அப் தலைப்புகளை பெறலாம். இதில், Thieves of the Heart, The Invisible Hand, Forager, Heaven Dust 2, Soulstice, Wall World, Hitman Absolution, Call of Juarez: Bound in Blood, and Call of Juarez ஆகியவை தற்போது கிடைக்கின்றன.

    ஜூலை 11 முதல், பிரைம் உறுப்பினர்கள் Knights of the Old Republic II — The Sith Lords, Alex Kidd in Miracle World DX, Teenage Mutant Ninja Turtles: Shredder's Revenge, and Samurai Bringer ஆகிய கேம்களை பெறலாம்.

    • 1999 ரூபாய் பிரீபெய்டு ரிசார்ஜ் பிளான்- 365 நாள் வேலிடிட்டி கொண்டதாகும்.
    • 509 ரூபாய் பிரீபெய்டு பிளான்- 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாகும்.

    ஏர்டெல் உள்ளிட்ட செல்போன் சேவை நிறுவனங்கள் விலையை அதிரடியாக உயர்த்தின. இதனால் டேட்டா உபயோகிப்பவர்கள் முதல் பேசுவதற்காக மட்டும் போன் பயன்படுத்துபவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பெரும்பாலானோர் இரண்டு சிம் கார்டு வைத்திருப்பார்கள். ஒரு சிம் கார்டை டேட்டா, போன் பேச வைத்திருப்பார்கள். மற்றொரு சிம் கார்டை மாற்றபாக பயன்படுத்த வைத்திருப்பார்கள்.

    தற்போது விலை உயர்வு காரணமாக இரண்டிற்கும் அதிகமான தொகையை செலவிட வேண்டியுள்ளது. இந்த நிலையில் ஏர்டெல் சில திட்டங்களை அறிவித்துள்ளது.

    1999 ரூபாய் ப்ரீபெய்டு ரிசார்ஜ் பிளான்

    365 நாள் வேலிடிட்டி கொண்டதாகும். அத்துடன் 24GB டேட்டா வழங்கப்படுகிறது. அன்லிமிடெட் கால் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ப்ரீயாக அனுப்பலாம்.

    509 ரூபாய் ப்ரீபெய்டு பிளான்

    84 நாட்கள் வேலிடிட்டி. 6GB டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் 100 எஸ்எம்எஸ் ப்ரீயாக அனுப்பலாம்

    355 ரூபாய் ப்ரீபெய்டு ரீசார்ஜ் பிளான்

    30 நாட்கள் வேலிடிட்டி. 25GB டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் 100 எஸ்எம்எஸ் ப்ரீயாக அனுப்பலாம்.

    199 ரூபாய் ப்ரீபெய்டு ரீசார்ஜ் பிளான்

    28 நாட்கள் வேலிடிட்டி. 2GB டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் 100 எஸ்எம்எஸ் ப்ரீயாக அனுப்பலாம்

    219 ரூபாய் ப்ரீபெய்டு ரீசார்ஜ் பிளான்

    30 நாட்கள் வேலிடிட்டி. 3GB டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் 100 எஸ்எம்எஸ் ப்ரீயாக அனுப்பலாம்.

    609 ரூபாய் ப்ரீபெய்டு ரீசார்ஜ் பிளான்

    ஒரு மாதம் வேலிடிட்டி. 60GB டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் 300 எஸ்எம்எஸ் ப்ரீயாக அனுப்பலாம்.

    589 ரூபாய் ப்ரீபெய்டு ரீசார்ஜ் பிளான்

    30 நாட்கள் வேலிடிட்டி. 50GB டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் 300 எஸ்எம்எஸ் ப்ரீயாக அனுப்பலாம்.

    489 ரூபாய் ப்ரீபெய்டு ரீசார்ஜ் பிளான்

    77 நாட்கள் வேலிடிட்டி. 6GB டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் 600 எஸ்எம்எஸ் ப்ரீயாக அனுப்பலாம்

    • நிமிடத்திற்கான துடிப்புகள் மற்றும் கால அளவு போன்ற விரிவான அளவீடுகளுக்கான நேரடி இதயத் துடிப்பு சோதனையும் இதில் அடங்கும்.
    • கேலக்ஸி ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி இந்த ரிங்-ஐ கண்டறிவதற்கான ஃபைண்ட் மை ரிங் அம்சம் இதில் உள்ளது.

    தினசரி நாம் செய்யும் உடற்பயிற்சிகளை கணக்கில் வைத்துக்கொள்வதற்கு தற்போது பலரால் ஆப்பிள் மற்றும் சாம்சங் கைக்கடிகாரம் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு மாற்றாக ஸ்மார்ட் ரிங்கை அறிமுகம் செய்துள்ளது சாம்சங் நிறுவனம். இதன் விற்பனை வருகிற 24-ந்தேதி தொடங்குகிறது.

    தினசரி ஆரோக்கியத்திற்காக வடிவமைக்கப்பட்ட கேலக்ஸி ரிங், சாம்சங்கின் மேம்பட்ட சென்சார் தொழில்நுட்பத்தை கச்சிதமான, விவேகமான வடிவத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. டைட்டானியம் பிளாக், டைட்டானியம் சில்வர் மற்றும் டைட்டானியம் கோல்டு ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.

    இது 24 மணி நேரமும் உடல் நலன் கண்காணிப்பை வழங்குகிறது. 2.3 கிராம் மற்றும் 3.0 கிராம் வரை எடை கொண்டது. மேலும் ஒன்பது அளவுகளில் கிடைக்கிறது. 10ATM + IP68 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் வசதி கொண்டுள்ளது. இந்த ரிங்கை ஒரு முறை சார்ஜ் செய்தால் 7 நாட்கள் வரை பயன்படுத்த முடியும்.


    இதய துடிப்பு, சுவாசம், உறக்கம், உடல் வெப்ப அளவு ஆகியவற்றை கணக்கிடும் வகையில் AI அல்காரிதம் கொண்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.33,404-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சாம்சங் ஹெல்த் ஆப் மூலம் இதயத் துடிப்பு விவரங்களைப் பயனர்களுக்கு ரியல்டைமில் தெரிவிக்கும் வசசதியை கேலக்ஸி ரிங் கொண்டிருக்கிறது. நிமிடத்திற்கான துடிப்புகள் மற்றும் கால அளவு போன்ற விரிவான அளவீடுகளுக்கான நேரடி இதயத் துடிப்பு சோதனையும் இதில் அடங்கும்.



    கூடுதலாக, நடைபயிற்சி மற்றும் ஜாகிங்-ஐ கண்காணிப்பதற்கான ஆட்டோ ஒர்க்அவுட் கண்டறிதல், தினசரி உடற்பயிற்சி நினைவூட்டல்களுக்கான நோட்டிபிகேஷன் வழங்குகிறது. இதில் புகைப்படங்களை எடுப்பது அல்லது அலாரங்களை நிராகரிப்பது போன்ற செயல்பாடுகளுக்கான சைகை கட்டுப்பாடுகள் உள்ளன.

    கேலக்ஸி ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி இந்த ரிங்-ஐ கண்டறிவதற்கான ஃபைண்ட் மை ரிங் அம்சம் இதில் உள்ளது.

    • 4400 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது.
    • இதில் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி Z போல்டு 6 மற்றும் கேலக்ஸி Z ப்ளிப் 6 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. மேலும், இரு மாடல்களின் முன்பதிவு இந்திய சந்தையில் துவங்கி நடைபெற்று வருகிறது.

    அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி Z போல்டு 6 மாடலில் வெளிப்புறம் 7.6 இன்ச், உள்புறம் 6.3 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர், 12MP, 50MP மற்றும் 10MP பிரைமரி கேமரா சென்சார்கள், 10MP செல்பி கேமரா மற்றும் 4400 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

    கேலக்ஸி Z ப்ளிப் 6 மாடலில் 6.7 இன்ச் டிஸ்ப்ளே, 3.4 இன்ச் கவர் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர், 12MP+50MP பிரைமரி கேமரா, 10MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

    விலை விவரங்கள்:

    கேலக்ஸி Z ப்ளிப் 6 (12ஜிபி+256ஜிபி) ரூ. 1,09,999

    கேலக்ஸி Z ப்ளிப் 6 (12ஜிபி+512ஜிபி) ரூ. 1,21,999

    கேலக்ஸி Z போல்டு 6 (12ஜிபி+256ஜிபி) ரூ. 1,64,999

    கேலக்ஸி Z போல்டு 6 (12ஜிபி+512ஜிபி) ரூ. 1,76,999

    கேலக்ஸி Z போல்டு 6 (12ஜிபி+1டிபி) ரூ. 2,00,999

    புதிய கேலக்ஸி Z சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. விற்பனை ஜூலை 24 ஆம் தேதி துவங்குகிறது.

    • பிளேஸ் எக்ஸ் ஸ்மார்ட்போன் 6.67″ FHD+ 3D Curved Screen AMOLED டிஸ்ப்ளே 120Hz ரிப்ரெஷ் ரேட் உள்ளது.
    • லாவா பிளேஸ் எக்ஸ் ஸ்டார்லைட் பர்பிள் மற்றும் டைட்டானியம் கிரே வண்ணங்களில் கிடைக்கிறது.

    லாவா நிறுவனத்தின் புதிய பிளேஸ் எக்ஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் இன்று அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    பிளேஸ் எக்ஸ் ஸ்மார்ட்போன் 6.67″ FHD+ 3D Curved Screen AMOLED டிஸ்ப்ளே 120Hz ரிப்ரெஷ் ரேட் உள்ளது. இது இந்த பிரிவில் முதன்மையானது என்று நிறுவனம் கூறுகிறது.

    இது MediaTek Dimensity 6300 மூலம் இயக்கப்படுகிறது. 8GB ரேம் + 8GB விர்ச்சுவல் ரேம் மற்றும் 128GB மெமரி உள்ளது.

    இந்த ஸ்மார்ட்போன் விளம்பரங்கள் இன்றி ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கொண்டிருக்கிறது. மேலும் இரண்டு வருடங்களுக்கு காலாண்டு முறையில் செக்யூரிட்டி அப்டேட்களையும், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அப்டேட் வழங்குவதாக லாவா நிறுவனம் உறுதியளித்துள்ளது.

    பிளேஸ் எக்ஸ் ஸ்மார்ட்போன் சோனி சென்சார் கொண்ட 64MP மெயின் கேமரா, 2MP செகண்டரி கேமரா, 16MP முன்பக்க கேமரா, 33வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

    லாவா பிளேஸ் எக்ஸ் ஸ்டார்லைட் பர்பிள் மற்றும் டைட்டானியம் கிரே வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் விலை 4GB + 128GB மாடலுக்கு ரூ.14,999, 6GB + 128GB மாடலுக்கு ரூ.15,999 மற்றும் 8GB + 128GB மாடலின் விலை ரூ.16,999 ஆகும்.

    • புது சலுகை பல்வேறு பலன்களை வழங்குகிறது.
    • இந்த சலுகை போஸ்ட்பெயிட் பயனர்களுக்காக வழங்கப்படுகிறது.

    வோடபோன் ஐடியா நிறுவனம் தனது போஸ்ட்பெயிட் பயனர்களுக்காக புதிய சலுகையை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகை பயனர்களுக்கு சீரான கனெக்டிவிட்டி, ஓடிடி சந்தா என பல்வேறு பலன்களை வழங்குகிறது.

    ரூ. 1201 விலையில் கிடைக்கும் வோடபோன் ரெட்எக்ஸ் சலுகையில் நெட்ப்ளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சோனிலிவ் மற்றும் சன் நெக்ஸ்ட் என ஐந்து ஓடிடி தளங்களுக்கான சந்தா வழங்கப்படுகிறது.

    இத்துடன் ஸ்விக்கி ஒன் சந்தா, ரூ. 2999 மதிப்புள்ள சர்வதேச ரோமிங் பேக், 12 மாதங்களுக்கு நார்டான் மொபைல் செக்யூரிட்டி சேவை மற்றும் வோடபோன் ஐடியாவின் பிரீமியம் வாடிக்கையாளர் சேவை மைய வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    புதிய ரெட்எக்ஸ் சலுகையை தேர்வு செய்வோர் ஆறு மாதங்களுக்குள் வேறு சலுகையை தேர்வு செய்யும் பட்சத்தில் ரூ. 3 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். எனினும், பயனர்கள் பழைய ரெட்எக்ஸ் சலுகையில் இருந்து புதிய சலுகையை பயன்படுத்த எவ்வித கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

    ×