என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
மொபைல்ஸ்
இந்திய வெளியீட்டுக்கு ரெடியாகும் சியோமி லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன்
- லிமிட்டெட் எடிஷன் மாடல் இருவித நிறங்களில் கிடைக்கும் என தகவல்.
- சியோமி 14 சிவி கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டன.
சியோமி நிறுவனம் தனது சியோமி 14 ஸ்மார்ட்போனினை லெய்கா பிராண்டு கேமரா சென்சார்களுடன் குரூயிஸ் புளூ டூயல் ஸ்லைஸ் எடிஷன், மேட்சா கிரீன் நானோ-டெக் வீகன் லெதர் எடிஷன் மற்றும் ஷேடோ பிளாக் கிளாசிக் மேட் எடிஷன் போன்ற வெர்ஷன்களில் விற்பனை செய்து வருகிறது. இவை கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டன.
இந்த நிலையில், சியோமி 14 சிவி லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டை அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது. புதிய லிமிட்டெட் எடிஷன் மாடல் பான்டா டிசைன் கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போனுடன் ரெட்மி பேட் SE 4ஜி மற்றும் ரெட்மி பேட் ப்ரோ 5ஜி போன்ற சாதனங்களும் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
புதிய லிமிட்டெட் எடிஷன் மாடல் மிரர் கிளாஸ் மற்றும் வீகன் லெதர் வெர்ஷன் கொண்டிருக்கும். இத்துடன் பின்க், மோனோக்ரோம் மற்றும் புளூ எடிஷன்களும் விற்பனைக்கு கிடைக்கும். சியோமி 14 சிவி லிமிட்டெட் எடிஷன் தொடர்பாக அந்நிறுவனம் டீசர்களை வெளியிட்டு வருகிறது.
இந்திய சந்தையில் சியோமி 14 சிவி லிமிட்டெட் எடிஷன் மாடல் ப்ளிப்கார்ட், Mi வலைதளங்கள் தவிர Mi ஹோம் ஸ்டோர் மற்றும் இதர விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்பட உள்ளது.