என் மலர்
தொழில்நுட்பம்
- இந்த மாடல் அளவில் மெல்லியதாக இருக்கும்.
- சற்றே மெல்லிய டைனமிக் ஐலேண்ட் வழங்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 சீரிஸ் மாடல்களை வருகிற செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்ய இருக்கிறது. எனினும், ஐபோன் 17 சீரிஸ் பற்றிய தகவல்கள் வெளியாக துவங்கிவிட்டன. இது குறித்து வெளியான தகவல்களில் அடுத்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 17 பிளஸ் மாடலை அறிமுகம் செய்யாது என்று கூறப்படுகிறது.
புதிய பிளஸ் மாடலுக்கு பதிலாக ஐபோன் 17 ஸ்லிம் மாடலை ஆப்பிள் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாடல் அளவில் மெல்லியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இது அலுமினியம் சேசிஸ் கொண்டிருக்கும் என்றும் அதில் கேமரா சென்சார்கள் பிக்சல் மாடல்களில் உள்ளதை போன்றே பொருத்தப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது.
முன்புறமாக சற்றே மெல்லிய டைனமிக் ஐலேண்ட் வழங்கப்படுகிறது. டிசைன் அடிப்படையில் புதிய ஐபோன் 17 ஸ்லிம் மாடல் ஐபோன் X போன்றே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஸ்லிம் மாடலில் 6.55 இன்ச் ஸ்கீரன், 120Hz ஸ்கிரீன் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
- ஒன்பிளஸ் சம்மர் லாஞ்ச் நிகழ்ச்சி இத்தாலியில் நடைபெறுகிறது.
- ஒன்பிளஸ் நார்ட் 4 ஸ்மார்ட்போன் மெட்டல் டிசைன் கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் வருகிற 16 ஆம் தேதி ஒன்பிளஸ் சம்மர் லாஞ்ச் நிகழ்ச்சியை நடத்த இருக்கிறது. இந்த நிகழ்வில்- நார்டு 4, ஒன்பிளஸ் பேட் 2, ஒன்பிளஸ் வாட்ச் 2R மற்றும் நார்டு பட்ஸ் 3 ப்ரோ என மொத்தம் நான்கு சாதனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
இதில் ஒன்பிளஸ் நார்ட் 4 5ஜி ஸ்மார்ட்போன் வித்தியாசமான டிசைன் கொன்ட ஒன்பிளஸ் ஏஸ் 3V மாடலின் ரிபிரான்ட் செய்யப்பட்ட மாடல் என்று கூறப்படுகிறது. இதேபோன்று ஒன்பிளஸ் பேட் 2 மாடல் ஒன்பிளஸ் பேட் ப்ரோ மாடலின் ரிபிரான்ட் செய்யப்பட்ட வெர்ஷன் என்று கூறப்படுகிறது.
புதிய ஒன்பிளஸ் நார்ட் 4 5ஜி மாடலில் மெட்டல் யுனிபாடி டிசைன் வழங்கப்படுகிறது. பட்ஸ் 3 ப்ரோ மாடல் பட்ஜெட் பிரிவில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியை வழங்கும் என்று கூறப்படுகிறது. ஒன்பிளஸ் வாட்ச் 2R மாடல் குறைந்த எடை மற்றும் வயர் ஓ.எஸ். கொண்டிருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய சாதனங்கள் அதன் சர்வதேச அறிமுகத்தின் போதே, இந்திய சந்தையில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
- இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆம்பியன்ட் லைட் சென்சார் கொண்டுள்ளது.
- இதன் வலதுபுறத்தில் கிரவுன் வழங்கப்படுகிறது.
நத்திங் நிறுவனத்தின் துணை பிராண்ட் சிஎம்எப் இந்திய சந்தையில் தனது புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஸ்மார்ட்வாட்ச் சிஎம்எப் வாட்ச் ப்ரோ 2 என்ற பெயரில் நாளை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்த நிலையில், புதிய சிஎம்எப் வாட்ச் ப்ரோ 2 மாடலில் 1.32 இன்ச் AMOLED ஸ்கிரீன், ஆம்பியன்ட் லைட் சென்சார், ஆட்டோ பிரைட்னஸ் அட்ஜஸ்ட் வசதி வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் அலுமியினம் அலாய் பாடி கொண்டிருக்கிறது. இதன் வலதுபுறத்தில் கிரவுன் வழங்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் இந்த வாட்ச் கழற்றி மாற்றக்கூடிய பெசல்களை கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இதுவரை வெளியான டீசர்களில் இந்த ஸ்மார்ட்வாட்ச் கிளாஸி கேஸ் மற்றும் ஆரஞ்சு லெதர் ஸ்டிராப் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது.
ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட சிஎம்எப் வாட்ச் ப்ரோ மாடலின் விலை ரூ. 4 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில், புதிய சிஎம்எப் வாட்ச் ப்ரோ 2 மாடலின் விலையும் ரூ. 5 ஆயிரம் பட்ஜெட்டிலேயே நிர்ணயிக்கப்படும் என்று தெரிகிறது.
- பல்வேறு டீசர்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது.
- இந்த ஸ்மார்ட்போன் இரு நிறங்களில் கிடைக்கும்.
லாவா நிறுவனத்தின் புதிய பிளேஸ் எக்ஸ் ஸ்மார்ட்போன் ஜுலை 10 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டை ஒட்டி அந்நிறுவனம் பல்வேறு டீசர்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், தற்போது வெளியாகி இருக்கும் டீசர்களில் புதிய லாவா பிளேஸ் எக்ஸ் ஸ்மார்ட்போன் டூயல் பிரைமரி கேமரா சென்சார்கள், கிளாஸி ஃபிரேம் மற்றும் கர்வ்டு ஸ்கிரீன் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது.
இத்துடன் இந்த ஸ்மார்ட்போன் 4 ஜி.பி., 6 ஜி.பி. மற்றும் 8 ஜி.பி. ரேம் ஆப்ஷன்களிலும் பர்பில் மற்றும் சில்வர் என இரண்டு நிறங்களில் கிடைக்கும்.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி லாவா பிளேஸ் எக்ஸ் ஸ்மார்ட்போன் FHD+ ஸ்கிரீன், டிமென்சிட்டி 7050 பிராசஸர், 128 ஜி.பி., 256 ஜி.பி. மெமரி, 64MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு லென்ஸ், 32MP செல்பி கேமரா மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசசதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்தியாவில் புதிய லாவா பிளேஸ் எக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அமேசான் வலைதளத்தில் விற்பனைக்கு வரவுள்ளது.
- பிஎஸ்என்எல் தனது 4ஜி சேவைகளை விரைவில் துவங்குவதாக தனது சமூக வலைதளங்களில் டீசர் மூலம் தெரிவித்துள்ளது.
- ரீசார்ஜ் திட்டங்களில் பயனர்களுக்கான வரம்பற்ற வாய்ஸ் கால் மற்றும் டேட்டா ஆகியவை அடங்கும்.
மத்திய அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் அடுத்த மாதம் நாடு முழுவதும் அதன் 4ஜி சேவையை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனம் 10,000 மொபைல் டவர்களை 4ஜி தொழில்நுட்பத்திற்கு மேம்படுத்தி உள்ளது.
இந்தியாவில் 4ஜி சேவைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஏர்டெல், ஜியோ மற்றும் வி (வோடபோன்-ஐடியா) போன்ற முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் சேர பிஎஸ்என்எல் தயாராக உள்ளது. பிஎஸ்என்எல் தனது 4ஜி சேவைகளை விரைவில் துவங்குவதாக தனது சமூக வலைதளங்களில் டீசர் மூலம் தெரிவித்துள்ளது.
பிஎஸ்என்எல் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், வீடியோ மூலம் புதிய 4ஜி ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் பயனர்களுக்கு வரம்பற்ற வாய்ஸ் கால், 4ஜி டேட்டா உட்பட பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளை வழங்கும்.
இத்துடன் நிறுவனத்தின் உள்நாட்டு 4ஜி நெட்வொர்க்கைக் குறிப்பிடுகிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் தனது 4ஜி சேவைகளை நாடு முழுவதும் தொடங்க தயாராக உள்ளது என்று தெரிவிக்கிறது. ரீசார்ஜ் திட்டங்களில் பயனர்களுக்கான வரம்பற்ற வாய்ஸ் கால் மற்றும் டேட்டா ஆகியவை அடங்கும். கூடுதலாக, பயனர்கள் பொழுதுபோக்கு, கேமிங் மற்றும் இசை போன்ற பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளை அனுபவிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது.
PV2399: இந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூ.2,399. இது 395 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் 2ஜிபி டேட்டாவுடன் வருகிறது.
PV1999: இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் மொத்தம் 600ஜிபி டேட்டா, 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற தினசரி குரல் அழைப்புடன் 365 நாட்கள் செல்லுபடியாகும்
PV997: இந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூ.997 மற்றும் 160 நாட்கள் செல்லுபடியாகும். இது தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் 100 இலவச எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது.
STV599: இது பட்ஜெட்டுக்கு ஏற்ற திட்டமாகும், இது ஒரு நாளைக்கு 3ஜிபி டேட்டாவுடன் 84 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது.
STV347: இந்த திட்டத்தின் விலை ரூ. 347 மற்றும் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா, 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புடன் 54 நாட்கள் செல்லுபடியாகும்.
PV199: இந்த பிஎஸ்என்எல் ரீசார்ஜ் திட்டம் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் மற்றும் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா, 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது.
PV153: இந்த திட்டம் 26 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் 26ஜிபி டேட்டா, 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற தினசரி அழைப்பு ஆகியவற்றை வழங்குகிறது.
STV118: இந்த திட்டம் 20 நாட்களுக்கு செல்லுபடியாகும் மற்றும் 100 இலவச எஸ்எம்எஸ், வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 10 ஜிபி டேட்டாவை உள்ளடக்கியது.
- 98 நாட்கள் பிளான் 999 ரூபாய் கொண்டதாகும்.
- 72 நாட்கள் பிளான் 749 ரூபாய் வசதி கொண்டதாகும்.
ரிலையன்ஸின் ஜியோ செல்போன் சேவை நிறுவனம் செல்போன் சேவை கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்த நிலையில் 72 மற்றும் 98 நாட்கள் என இரண்டு ப்ரீபெய்டு பிளான்களை அறிவித்துள்ளது.
98 நாட்கள் பிளான்
98 நாட்கள் பிளான் 999 ரூபாய் கொண்டதாகும். இந்த பிளான்படி தினந்தோறும் 2GP டேட்டா பயன்படுத்திக் கொள்ள முடியும். ஒரு நாளைக்கு 2GB என்ற வகையில் 98 நாட்களுக்கு மொத்தம் 196GB டேட்டா வழங்குகிறது. தினந்தோறும் 100 எஸ்எம்எஸ் மெசேஜ்கள் இலவசமாக அனுப்பிக் கொள்ள முடியும். அன்லிமிடெட் 5G டேட்டா வசதி இடையூறு இல்லாமல் கிடைக்கும். அன்லிமிடெட் வாய்ஸ் வசதியையும் உள்ளடக்கியது.
72 நாட்கள் பிளான்
72 நாட்கள் பிளான் 749 ரூபாய் வசதி கொண்டதாகும். இந்த திட்டத்தில் தினந்தோறும் 2GB டேட்டா பயன்படுத்திக் கொள்ள முடியும். கூடுதலாக 20GB உடன் மொத்தம் 164GB டேட்டா பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் தினந்தோறும் 100 எஸ்எம்எஸ் அனுப்ப முடியும். அன்லிமிடெட் வாய்ஸ் கால் செய்ய முடியும். அன்லிமிடெட் 5G பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இந்த காலக்கட்டத்தில் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
- மெட்டல் டிசைன் கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என தகவல்.
- 5500 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் ஜூலை 16 ஆம் தேதி இத்தாலியில் நடத்தும் நிகழ்ச்சியில் தனது புதிய நார்ட் சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஒன்பிளஸ் நார்ட் 4 ஸ்மார்ட்போனின் ஸ்கெட்ச் அடங்கிய படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி உள்ளது.
புதிய புகைப்படத்தின் படி ஒன்பிளஸ் நார்ட் 4 ஸ்மார்ட்போனின் கேமரா பகுதியை தவிர மற்ற இடங்களில் மெட்டல் ஃபிரேம் வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது. இதன் மூலம் ஒன்பிளஸ் நிறுவனம் 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் மெட்டல் டிசைன் கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிலஸ் நார்ட் 4 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 பிராசஸர், 6.74 இன்ச் 1.5K 2.8D கர்வ்டு AMOLED 120Hz ஸ்கிரீன், 50MP பிரைமரி கேமரா, OIS, 8MP அல்ட்ரா வைடு கேமரா, அலர்ட் ஸ்லைடர் மற்றும் 5500 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
- 5500 mAh பேட்டரி, 100W பாஸ்ட் சார்ஜிங் கொண்டதாகவும் இருக்கும்.
- சீனாவில் ஏஸ் 3வி பெயரில் வெளியானது. இது ஒன்பிளஸ் நோர்டு 4 என மறுபெயரிட்டு இந்தியாவில் வெளியாக வாய்ப்பு.
சீனாவின் ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒன்பிளஸ் நோர்டு 3 (OnePlus Nord 3) போனை அறிமுகம் செய்தது. இந்த நிலையில் வருகிற 16-ந்தேதி இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்டு 4 (OnePlus Nord 4) செல்போனை அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு விலை 31,999 ரூபாய் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்னாப்டிராகன் 7+ ஜெனரேசன் 3 SoC பிராசசர் கொண்டதாகவும், 5500 mAh பேட்டரி, 100W பாஸ்ட் சார்ஜிங் கொண்டதாகவும் இருக்கும்.
இந்த போன் உடன் ஒன்பிளஸ் பட்ஸ் 3 ப்ரோ, ஒன்பிளஸ் வாட்ச் 2ஆர் ஆகியவையும் வெளியாக வாய்ப்புள்ளது.
சீனாவில் கடந்த மார்ச் மாதம் ஒன்பிளஸ் ஏஸ் 3வி பெயரில் செல்போன் வெளியானது. இது ஒன்பிளஸ் நோர்டு 4 என மறுபெயரிட்டு இந்தியாவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
50 மெகாபிக்சல் பிரைமரி சென்சாருடன் டுயல் ரியர் கேமரா செட்டப் கொண்டதாகவும், 16 மெகாபிக்சல் செல்பி கேமரா கொண்டதாகவும் இருக்கும்.
- பிஎஸ்என்எல் ரூ.249க்கு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
- இந்தியாவில் உள்ள எந்த நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற இலவச அழைப்பு.
ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் தங்களது செல்போன் ரீசார்ஜ் சேவை கட்டணத்தை அதிரடியாக உயர்த்திய நிலையில், பிஎஸ்என்எல் ரீசார்ஜ் கட்டணத்தை குறைத்து புதிய பிளானை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பிஎஸ்என்எல் ரூ.249க்கு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது, ஜியோ, ஏர்டெல் போன்ற தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் கட்டண உயர்வுக்கு மத்தியில், பிஎஸ்என்எல் விலையை குறைத்துள்ளது வாடிக்கையாளர்களுக்கு நிவாரணமாக உள்ளது.
அதன் நீட்டிக்கப்பட்ட வேலிடிட்டி, வரம்பற்ற அழைப்பு மற்றும் தாராளமான டேட்டா அலவன்ஸ் ஆகியவற்றுடன், அதிக மதிப்பு மற்றும் குறைந்த செலவை எதிர்பார்க்கும் பயனர்களை ஈர்க்கும் வகையில் இந்த திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக தங்கள் கட்டணங்களின் விலையை சுமார் 26 சதவீதம் உயர்த்தியுள்ளது. இது வரும் ஜூலை 3, 4ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
ஜியோ மற்றும் ஏர்டெல்: விலை உயர்வுகள் ஜூலை 3, 2024 முதல் அமலுக்கு வருகிறது.
வோடபோன் ஐடியா: புதிய விலைகள் ஜூலை 4, 2024 முதல் அமலுக்கு வருகிறது.
பிஎஸ்என்எல் திட்டத்தின் சலுகை பற்றிய விவரங்கள் இதோ:
புதிய திட்டம் 45 நாட்களுக்கு நீடிக்கும். இது வழக்கமான திட்டங்களை விட நீண்டது.
இந்தியாவில் உள்ள எந்த நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற இலவச அழைப்பு.
மொத்தம் 90ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 2ஜிபிக்கு சமம்.
ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்.
இத்தகைய விரிவான திட்டத்தை குறைந்த விலையில் வழங்குவதற்கான பிஎஸ்என்எல்-ன் நடவடிக்கை சிறந்த மதிப்பை வழங்கும் அதே வேளையில், பயனர்கள் மீதான நிதிச்சுமையை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஹானர் 200 16GB ரேம் வரையிலும், 512GB இன்டர்னர் ஸ்டோரேஜ் கொண்டதாகவும் வெளியாக உள்ளது.
- ஹானர் 200 ப்ரோ 15GB ரேம் வரை சப்போர்ட் செய்வதாகவும், 1TB இன்டர்னெல் ஸ்டோரோக் கொண்டதாகவும் இருக்கும்.
ஹானர் ஸ்மார்ட்போன் நிறுவனம் விரைவில் ஹானர் 200 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விரைவில் வெளியிட இருக்கிறது. இதற்கான தகவல்களை அமேசான் ஆன்லைன் நிறுவன இணைய தளத்தில் வெளியாகியுள்ளது. ஆனால் ரிலீஸ் ஆகும் தேதி வெளியிடப்படவில்லை.
ஹானர் 200 மற்றும் ஹானர் 200 ப்ரோ என இரண்டு சீரிஸில் வெளியாக உள்ளது. ஹானர் 200 ஸ்னாப்டிராகன் 5 ஜெனரேசன் 3 பிராசசரை கொண்டதாகவும், ஹானர் ப்ரோ ஸ்னாப்டிராகன் 5 ஜெனரேசன் 3 பிராசசரை கொண்டதாகவும் இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
6.7 இன்ச் Full HD+ கர்வ்டு OLED டிஸ்பிளே கொண்டதாகவும், ரிசொலுசன் 2664X1200 பிக்சல்ஸ் அண்டு ஸ்மூத் விசுவலுக்கான 120Hz ரெஃப்ரெஸ் ரேட் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரைட்நெஸ் 4 ஆயிரம் நிட்ஸ்க்கு அதிகமாக கொண்டதாகவும் இருக்கும் எனவும் தெரிகிறது.
ஹானர் 200 16GB ரேம் வரையிலும், 512GB இன்டர்னர் ஸ்டோரேஜ் கொண்டதாகவும் வெளியாக உள்ளது.
ஹானர் 200 ப்ரோ 15GB ரேம் வரை சப்போர்ட் செய்வதாகவும், 1TB இன்டர்னெல் ஸ்டோரோக் கொண்டதாகவும் இருக்கும்.
5200 mAh பேட்டரி கொண்டதாக இருக்கும் நிலையில் 100W பார்ஸ்ட் சார்ஜிங் மற்றும் 66W வயர்லெஸ் சார்ஜிங் வசதிகளை கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான மேஜிக் OS 8.0-ஐ கொண்டது. இரண்டு சிம்கார்டு பயன்படுத்தலாம். 5ஜி வசதி கொண்டதாகும்.
- ரியல்மி 12 ப்ரோ சீரிசின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும்.
- ப்ளிப்கார்ட் தளத்தில் மைக்ரோசைட் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
ரியல்மி நிறுவனத்தின் புதிய 13 ப்ரோ 5ஜி சீரிஸ் மாடல்கள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதையொட்டி புதிய ஸ்மார்ட்போனின் டீசர்களை ரியல்மி இந்தியா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.
புதிய ரியல்மி ஸ்மார்ட்போன்கள் எப்போது அறிமுகமாகும் என்பது பற்றி சரியான தேதி அறிவிக்கப்படவில்லை. புது ஸ்மார்ட்போன்கள் ரியல்மி ஏற்கனவே விற்பனை செய்து வரும் ரியல்மி 12 ப்ரோ சீரிசின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும் என்று தெரிகிறது.
ரியல்மி 13 ப்ரோ 5ஜி சீரிஸ் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. புது ஸ்மார்ட்போனிற்காக ப்ளிப்கார்ட் தளத்தில் மைக்ரோசைட் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் ரியல்மி 13 ப்ரோ 5ஜி சீரிஸ் இந்திய விற்பனை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் நடைபெறும் என்று தெரியவந்துள்ளது.

புதிய ப்ரோ சீரிசில் ரியல்மி 13 ப்ரோ 5ஜி மற்றும் ரயில்மி 13 ப்ரோ பிளஸ் 5ஜி மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என்று தெரிகிறது. முதற்கட்ட டீசர்களில் ரியல்மி 13 ப்ரோ சீரிஸ் மாடல்களில் ஏ.ஐ. சார்ந்து இயங்கும் கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இத்துடன் பல்வேறு முதல் முறை (இதுவரை மற்ற மாடல்களில் வழங்கப்படாத) அம்சங்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது.
ரியல்மி 13 ப்ரோ பிளஸ் மாடலில் 50MP IMX882 3x பெரிஸ்கோப் லென்ஸ் மற்றும் ஸ்னாப்டிராகன் 7s ஜென் 3 பிராசஸர் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இது ரியல்மியின் முதல் புரோஃபஷனல் ஏஐ கேமரா கொண்ட ஸ்மார்ட்போனாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இதுகுறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை.
- வெளிநாடுகளில் வாடிக்கையாளர்களுடன் பேச பெரு நிறுவனங்கள் சாட் பாட்களை பயன்படுத்தி வருகிறது.
- இந்த உரையாடலின் ஆடியோவை பகிர்ந்த அந்த நபர் தான் ஒரு ஏ.ஐயின் ஆபத்துகளை அம்பலப்படுத்தியுள்ளார்.
உலகம் டிஜிட்டல் மயமாக மாறி வருகிறது என்று கூறிவந்த நிலை வழக்கொழிந்து தற்போது உலகம் செயற்கைத் நுண்ணறிவான ஏ.ஐ மயமாக மாறி வருகிறது என்று கூறும் அளவுக்கு ஏ.ஐ மனிதர்களின் வாழ்க்கையோடு அதிகம் இணங்கத் தொடங்கியுள்ளது. இந்த இணக்கம் ஒரு படி மேலே சென்று மனிதர்களை ஆட்டிப்படைக்கும் சக்தியாக ஏ.ஐ மாறும் என்ற அச்சமும் பரவி வருகிறது.
போலியான DEEP FAKE புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை உருவாக்குவது தொடங்கி மனிதர்களின் வேலையை பறிப்பது வரை இந்த 21 ஆம் நூற்றாண்டில் மனித குலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக ஏ.ஐ மாறத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஏ.ஐ மூலம் இயங்கும் சாட் பாட்கள் [CHAT BOT] மனிதர்களின் கட்டளை இன்றியே பொய் சொல்லத் தொடங்கியுள்ளது.

வெளிநாடுகளில் வாடிக்கையாளர்களுடன் பேச பெரு நிறுவனங்கள் சாட் பாட்களை பயன்படுத்தி வருகிறது. அமரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இயங்கி வரும் நிறுவனம் ஒன்று சேல்ஸ் பிரிவில் வாடிக்கையாளர்களுடன் பேசி அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க ரோபோ கால் சர்வீஸ் மூலம் பிளான்ட் என்று அதிநவீன ஏ.ஐ சாட் பாட்டை பணியமர்த்தியுள்ளனர்.

இந்த சாட் பாட் வாடிக்கையாளர்களிடம் மனிதரைகளைப் போலவே பேசுமாம். இந்நிலையில் நிறுவனத்தின் முன்னாள் நின்றுகொண்டு விஷயம் தெரிந்த நபர் ஒருவர் அந்த நிறுவனத்தின் தொலைபேசி எண்ணுக்கு போன் செய்யவே, போனை அட்டென்ட் செய்த சாட் பாட் பெண்ணைப் போலவே அவரிடம் பேசியுள்ளது.தான் ஒரு சாட் பாட் தான் என தனது குரலில் காட்டிக்கொள்ளவில்லை.

தான் உயிருள்ள மனிதன் தான் என நம்பவைக்க நிறுவனத்துக்குள் வேலை நேர இரைச்சல் இருப்பது போன்ற சத்தங்களை உருவாக்கி அவ்வப்போது பேச்சை நிறுத்தி நிறுத்தி பேசியுள்ளது சாட் பாட். ஆனால் ஏ.ஐ சாட்பாட்டை உருவாக்கிய நிறுவனம் இது எதையும் புரோக்ராம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. ஏ.ஐ ஆகவே இவ்வாறு ஏமாற்ற கற்றுக்கொண்டுள்ளது.
இந்த உரையாடலின் ஆடியோவை பகிர்ந்த அந்த நபர் தான் ஒரு ஏ.ஐயின் ஆபத்துகளை அம்பலப்படுத்தியுள்ளார். இதனைதொடர்ந்து, இதுபோன்ற பல்வேறு ஏ.ஐ சாட் பாட் களுடன் உரையாடி வல்லுநர்கள் நடத்திய செய்து ஏஐ தொழில்நுட்ப பாட்கள் மனிதர்களின் கட்டளை இல்லாமலேயே இந்த செயல்களை செய்வதாக கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மனித குலத்துக்கு வருங்காலங்களில் ஏஐ மூலம் பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்றுஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.







