அன்லிமிட்டெட் 5ஜி வழங்கும் டேட்டா பூஸ்டர் பேக் அறிமுகம் செய்த ஏர்டெல்

டேட்டா பூஸ்டர் பேக் சலுகைகள் அன்லிமிட்டெட் 5ஜி டேட்டா வழங்குகின்றன. அதிக டேட்டா வழங்கும் சலுகைகளில் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
அன்லிமிட்டெட் 5ஜி வழங்கும் டேட்டா பூஸ்டர் பேக் அறிமுகம் செய்த ஏர்டெல்
Published on

ஏர்டெல் நிறுவனம் புதிதாக டேட்டா பூஸ்டர் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவை பயனர்களுக்கு அன்லிமிட்டெட் 5ஜி டேட்டா வழங்குகிறது.

ஏற்கனவே 5ஜி டேட்டா சலுகையை பெறாதவர்கள் கூட அன்லிமிட்டெட் 5ஜி கனெக்டிவிட்டி பெற செய்யும் வகையில், இந்த பூஸ்டர் பேக் சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. புது டேட்டா பூஸ்டர் பேக் சலுகைகள் 5ஜி மட்டுமின்றி கூடுதலாக 4ஜி டேட்டா வழங்குகின்றன.

சமீபத்தில் ஏர்டெல் நிறுவன சலுகைகளின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், புதிய டேட்டா பூஸ்டர் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விலை உயர்வு காரணமாக ஏர்டெல் அன்லிமிட்டெட் 5ஜி டேட்டா தினமும் 2 ஜிபி மற்றும் அதற்கும் அதிக டேட்டா வழங்கும் சலுகைகளில் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

புதிய டேட்டா பேக் மூலம், தினமும் 1 ஜிபி அல்லது 1.5 ஜிபி டேட்டா வழங்கும் சலுகைகளில் ரீசார்ஜ் செய்துள்ளவர்கள் ரூ. 51 விலையில் துவங்கும் டேட்டா பூஸ்டர் சலுகைகளை ரீசார்ஜ் செய்து அன்லிமிட்டெட் 5ஜி டேட்டா பெறலாம். புதிய சலுகைகளின் விலை ரூ. 51, ரூ. 101 மற்றும் ரூ. 151 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன.

இவற்றில் கூடுதலாக 3ஜிபி, 6ஜிபி மற்றும் 9ஜிபி வரை 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த பூஸ்டர் பேக் சலுகைகளின் வேலிடிட்டி, பயனர்கள் ஏற்கனவே ரீசார்ஜ் செய்துள்ள சலுகைகள் முடியும் வரை பொருந்தும். 

X

Maalai Malar
www.maalaimalar.com