என் மலர்
தொழில்நுட்பம்
- ஐகூ TWS 1e இயர்பட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.
- ஐகூ TWS 1e மாடலில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
ஐகூ நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. புதிய இயர்பட்ஸ் TWS 1e என அழைக்கப்படுகிறது. இந்த இயர்பட்ஸ் தீப்பொறியை பிரதிபலிக்கும் டிசைன் அம்சங்களை கொண்டிருக்கிறது.
இந்த இயர்பட்ஸ் 11 மில்லிமீட்டரில் அதிக ரெசல்யூஷன் கொண்ட ஸ்பீக்கர் டிரைவர் வழங்கப்பட்டுள்ளது. இதன் ஆடியோ கோல்டன் ஆடியோ இயர் அகௌஸ்டிக்ஸ் குழுவினர் டியூன் செய்துள்ளனர். இதோடு டீப் எக்ஸ் 3.0 ஸ்டீரியோ சவுண்ட் எஃபெக்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை ஒட்டுமொத்த ஆடியோ அனுபவத்தை மேம்படுத்துகின்றன.

புதிய ஐகூ இயர்பட்ஸ் மாடலில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மான்ஸ்டர் சவுண்ட் அம்சம் கேமிங் அனுபவத்தை மேம்படுத்துகிறது. இந்த இயர்பட்ஸ் லோ லேடன்சி மோட் வசதி கொண்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 42 மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப் வழங்குகிறது.
இத்துடன் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இதை கொண்டு பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் மூன்று மணி நேரம் வரை பயன்படுத்த முடியும். மேலும் டூயல் டிவைஸ் கனெக்ஷன் வசதி உள்ளது. இதில் ப்ளூடூத் 5.3, கூகுள் பாஸ்ட் பேர், கூகுள் அசிஸ்டண்ட், வியரிங் டிடெக்ஷன், பைன்ட் மை இயர்போனஸ், டச் கண்ட்ரோல் வசதி உள்ளது.
ஐகூ TWS 1e மாடலின் விலை ரூ. 1,899 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த இயர்பட்ஸ் ஃபிளேம் எல்லோ நிறத்தில் கிடைக்கிறது. இதன் விற்பனை அமேசான் தளத்தில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி துவங்குகிறது.
- எக்ஸ் தளத்தில் துப்பாக்கி எமோஜி சமீபத்தில் தான் மாற்றப்பட்டது.
- பல சமூக வலைதளங்களில் துப்பாக்கி எமோஜி மாற்றப்பட்டு இருக்கிறது.
உலகின் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவர் எலான் மஸ்க். எக்ஸ் தளத்தில் தொடர்ச்சியாக பதிவுகளை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அந்த வகையில், சமீபத்திய பதிவு ஒன்றில் எலான் மஸ்க் துப்பாக்கி எமோஜி சமூக வலைதளங்களில் எந்த அளவுக்கு மாறி இருக்கின்றன என்பதை விளக்குகிறது.
இது தொடர்பாக அவர் துப்பாக்கி எமோஜி கடந்த 2013 முதல் தற்போதைய 2024 ஆண்டு வரை எந்த அளவுக்கு மாறி இருக்கிறது என்பதை விளக்கும் படமும், அத்துடன் "துப்பாக்கி எமோஜிக்கள் மாறிக் கொண்டே வருவது தூக்கத்தை கெடுக்கும் மூளை வைரஸுடன் ஒத்துப்போகிறது, ஒரு முக்கிய கோட்பாடு போலியான தீங்கை உண்மையான தீங்குடன் சமன்படுத்துகிறது" என குறிப்பிட்டுள்ளார்.
எலான் மஸ்க்-இன் இந்த பதிவுக்கு ஒருத்தர், "துப்பாக்கி எமோஜியை நீக்கிவிட்டு, அதிபயங்கர ஆயுதங்களுடன் வெடி குண்டு எமோஜியை அவர்கள் மாற்றிய விதம் எனக்கு பிடித்திருந்தது," என குறிப்பிட்டுள்ளார். மற்றொருவவர், "நவீனத்துவத்தை தவிர்த்துவிட்டு, பழைய பாரம்பரியத்திற்கு திரும்ப வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
எக்ஸ் தளத்தில் துப்பாக்கி எமோஜி ஆரஞ்சு நிற தண்ணீர் துப்பாக்கியாக இருந்து உண்மையான கைப்பாக்கியாக கடந்த ஜூலை மாதம் தான் மாற்றப்பட்டது. திடீரென ஏன் இப்படி மாற்றப்பட்டது என்பது குறித்து எக்ஸ் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
- டாடா குழுமம் 125 மில்லியன் டாலருக்கு விஸ்ட்ரான் நிறுவனத்தை வாங்கியது.
- ஐபோன் தயாரிப்பதற்கான 6 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது டாடா குழுமம்.
டாடா எலாக்ட்ரானிக்ஸ் நிறுவனம் உலகின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் உடன் இணைந்து இந்தியாவில் ஐபோன் தயாரிக்க இருக்கிறது. இதற்காக சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாயில் முதலீடு செய்துள்ளது டாடா குழுமம். தமிழ்நாட்டில் உள்ள ஓசூரில் தொழிற்சாலை தயாராகி வருகிறது.
இந்த நிலையில் வருகிற நவம்பர் மாதத்தில் இருந்து செல்போன் உற்பத்தி இந்த தொழிற்சாலையில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
உதிரி பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு இங்கு ஐபோன் உருவாக்கப்படும் (Assembly). இதற்காக 250 ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் 50 ஆயிரம் பேர் வேலைப் பார்க்கும் வகையில் வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. பெரும்பாலும் பெண்கள்தான் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் உற்பத்தியை இந்தியாவில் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கியது. பாக்ஸ்கான் நிறுவனம் ஸ்ரீபெரும்புதூரில் ஐ-போன் செல்போன்களை உற்பத்தி (Assembly) செய்கிறது. பாக்ஸ்கான், விஸ்ட்ரான், பெகட்ரான் ஆகிய நிறுவனங்கள் ஐ-போன் தயாரித்து ஏற்றுமதி செய்கிறது. விஸ்ட்ரான் நிறுவனத்தை டாடா குழுமம் 125 மில்லியன் டாலருக்கு கடந்த வருடம் அக்டோபர் மாதம் கையகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
- மீடியாடெக் 6300 பிராசசர், 50 மெகா பிச்சல் பிரைமரி கேமரா, 2 மெகா பிக்சல் போர்ட்ரைட் கேமரா, 32 மொகாபிக்சல் செல்பி ஷூட்டர் வசதிகளும் கொண்டது.
- 45W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங் உடன் 5,000mAh பேட்டரியுடன் இயங்கக் கூடியதாகும்.
Oppo ஸ்மார்ட்போன் நிறுவனம் கடந்த ஜூன் மாதம் எஃப் சீரிஸ் போன்கனை இந்தியாவில் வெளியிட்டது. இந்த நிலையில் நாளை F27 போன் விற்பனைக்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
8GB ரேம், 256GB ரேம் ஸ்டோரேஜ் கொண்ட போன் 24,999 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 8GB ரேம், 128GB ஸ்டோரேஜ் கொண்ட போன் 22,999 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
கலர்ஓஎஸ் (ColoreOS) 14 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 14 கொண்டதாகவும், 120HZ ரெப்ரெஷ் மற்றும் 2100 நிட்ஸ் பீக் பிரைட்னெஸ் 6.67 இன்ச், Full-HD+ OLED டிஸ்பிளே வசதி கொண்டதாகவும் இருக்கலாம்.
மீடியாடெக் 6300 பிராசசர், 50 மெகா பிச்சல் பிரைமரி கேமரா, 2 மெகா பிக்சல் போர்ட்ரைட் கேமரா, 32 மொகாபிக்சல் செல்பி ஷூட்டர் வசதிகளும் கொண்டது.
ஏஐ ஸ்டூடியொ, ஏஐ எரேசர் 2.0, ஏஐ ஸ்மார்ட் இமேஜ் மேட்டிங் 2.0 ஆகிய ஏஐ பீச்சர்ஸ் அம்சங்களையும் கொண்டுள்ளதாக இருக்கும் எனத் தெரிகிறது. 45W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங் உடன் 5,000mAh பேட்டரியுடன் இயங்கக் கூடியதாகும். ஆம்பர் ஆரஞ்ச், எமரால்டு க்ரீன் ஆகிய கலர்களில் வர இருக்கிறது.
- சுதந்திர தினத்தை ஒட்டி விசேஷ டூடுல் வெளியிட்ட கூகுள்.
- பல்வேறு விசேஷ நாட்களில் டூடுல் வெளியிடுவதை கூகுள் வழக்கமாக கொண்டுள்ளது.
உலகின் முன்னணி தேடுப்பொறி சேவையை வழங்கும் நிறுவனம் கூகுள். உலக அளவில் விசேஷ நாட்களில் சிறப்பு டூடுலை தனது வலைதளத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது.
அந்த வகையில், இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது. டூடுலில் இந்திய பாரம்பரிய முறைப்படி உருவாக்கப்பட்ட வண்ணங்கள் நிறைந்த கதவுகளில் கூகுள் என்ற வார்த்தை இடம்பெற்று இருக்கிறது.
வழக்கம் போல விசேஷ டூடுலை க்ளிக் செய்ததும் இந்திய சுதந்திர தின சிறப்புகள், அதுபற்றிய வலைத்தள பதிவுகள் அடங்கிய சிறப்பு வலைப்பக்கம் திறக்கிறது.
- ஐடெல் ஸ்மார்ட்போன்கள் மலிவு விலையில் கிடைக்கின்றன.
- ஐடெல் A50 சீரிஸ் மாடல்களுக்கு ஒரு வருட வாரண்டி வழங்கப்படுகிறது.
ஐடெல் நிறுவனம் இந்திய சந்தையில் A50 மற்றும் A50C என இரண்டு புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்தது. இவற்றில் ஐடெல் A50 மற்றும் A50C மாடல்களில் 6.6 இன்ச் HD+ IPS டிஸ்ப்ளே, யுனிசாக் டி603 ஆக்டா கோர் பிராசஸர், 8MP ஏஐ டூயல் கேமரா சென்சார்கள், 5MP செல்பி கேமரா, 3 ஜிபி, 4ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய ஐடெல் A50C மாடலில் மட்டும் ரேம் மற்றும் ஸ்டோரேஜ் மாற்றப்பட்டு இருக்கிறது. இதில் 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மற்றும் 4000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. ஐடெல் A50 மாடலில் 5000 எம்ஏஹெச் பேட்டரி உள்ளது. இவற்றுடன் யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.

இரு மாடல்களிலும் ஆண்ட்ராய்டு 14 கோ எடிஷன் ஓஎஸ் உள்ளது. கனெக்டிவிட்டிக்கு 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களுக்கும் இலவசமாக ஸ்கிரீனை மாற்றிக் கொள்ளும் வசதி மற்றும் ஒரு வருட வாரண்டி வழங்கப்படுகிறது.
ஐடெல் A50C ஸ்மார்ட்போன் பிளாக், புளூ, கோல்டன் மற்றும் கிரீன் என நான்குவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 5 ஆயிரத்து 599 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐடெல் A50 ஸ்மார்ட்போன் பிளாக், புளூ, கோல்டன் மற்றும் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 6,499 ஆகும். இரு மாடல்களின் விற்பனை அமேசான் தளத்தில் நடைபெற உள்ளது.
- இன்ஸ்டாகிராமில் ஒரே நேரத்தில் 10 புகைப்படம், வீடியோக்களை மட்டும் தான் பகிர முடியும்.
- இந்த புதிய அம்சம் உலகம் முழுவதும் அறிமுகமாகியுள்ளது.
உலகின் முன்னணி சமூக வலைதள செயலிகளில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் விளங்குகிறது. இந்த செயலியில் இளம் தலைமுறையை சேர்ந்த ஆண்களும் பெண்களும் தங்களது புகைப்படம் வீடியோக்களை பகிர்ந்து லைக்குகளை குவிப்பார்கள்.
இன்ஸ்டாகிராமில் ஒரே நேரத்தில் 10 புகைப்படம் மற்றும் வீடியோக்களை மட்டும் தான் பகிர முடியும். இந்த எண்ணிக்கையை தற்போது 10ல் இருந்து 20 ஆக மெட்டா நிறுவனம் உயர்த்தியுள்ளது
இதன்மூலம் பயனாளர்கள் ஒரே பதிவில் 20 போட்டோக்கள் அல்லது வீடியோக்களை பதிவிட முடியும். இந்த புதிய அம்சம் உலகம் முழுவதும் அறிமுகமாகியுள்ளது.
- ஐடெல் A50 ஸ்மார்ட்போன் நான்கு நிறங்களில் கிடைக்கலாம்.
- ஐடெல் A50 ஸ்மார்ட்போன் இரட்டை கேமரா சென்சார் கொண்டிருக்கும்.
ஐடெல் நிறுவனம் இந்திய சந்தையில் தனது அடுத்த ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் ஐடெல் A50 என்ற பெயரில் உருவாகிறது. இது அந்நிறுவனத்தின் ஐடெல் A70 மாடலைத் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய ஐடெல் A50 ஸ்மார்ட்போனில் 6.56 இன்ச் HD+ டிஸ்ப்ளே, மெல்லிய டிசைன் டூயல் கேமரா சென்சார்கள், ஃபிளாஷ் வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பெரும்பாலான அம்சங்கள் ஐடெல் A70 மாடலில் இருந்ததை போன்றே வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் கோல்டு, பிளாக், சில்வர் மற்றும் கிரீன் என நான்குவித நிறங்களில் கிடைக்கும் என்று தெரிகிறது. பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள் வரிசையில், புதிய ஐடெல் மாடலும் இணைந்து கொள்ளும். புதிய ஐடெல் ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு இலவசமாக ஸ்கிரீனை மாற்றிக் கொடுக்கும் வசதி வழங்கப்படும் என தெரிகிறது.
இந்த சலுகை பயனர்கள் ஸ்மார்ட்போனை வாங்கிய முதல் 100 நாட்களுக்குள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. புதிய ஐடெல் A50 ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
- ஜனவரி மாதம் வெளியாகும்போது இதன் விலை 74,999 ரூபாய் ஆகும்.
- அமேசானில் 26 சதவீதம் தள்ளுபடியுடன் 55 ரூபாய்க்கு கிடைக்கிறது.
அமேசான் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவெல் (Great Freedom Festival) விற்பனையை தொடங்கியுள்ளது. இந்த விற்பனை ஆகஸ்ட் 6-ந்தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ந்தேதி (நாளை) வரை நடைபெறுகிறது. இந்த காலக்கட்டத்தில் ஸ்டார்ட்போன்களுக்கு மிகப்பெரிய அளவில் தள்ளுபடி வழங்குகிறது.
அதன்படி சாம்சங் கேலக்ஸி S24 ஸ்மார்ட்போனுக்கு 26 சதவீதம் தள்ளுபடி வழங்குகிறது. இதனால் 55 ஆயிரம் ரூபாய்க்கு இந்த போனை வாங்கலாம்.
சாம்சங் கேலக்ஸி S24 சீரிஸ் கடநத் ஜனவரி மாதம் இந்தியாவில் வெளியானது. சுமார் 7 மாதங்கள் முடிவடைந்த நிலையில் இந்த ஆஃபரை வழங்குகிறது. அறிமுகம் ஆனபோது இதன் விலை 74,999 ரூபாயாக இருந்தது.
எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு கூடுதலாக 10 சதவீதம் தள்ளுபடி வழங்குகிறது. சாம்சங் கேலக்ஸி S24 உயர்செயல்பாட்டுடன் கூடிய Exynos 2400 பிராசசர் கொண்டதாகும். 8ஜிபி ரேம், 512ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்டது. 6.2-inch FHD+ Dynamic AMOLED 2X டிஸ்பிளே கொண்டது. ரெப்ரேஷ் ரேட் 120Hz வரை அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும்.
50எம்பி மெயின் கேமரா, 12 எம்பி அல்ட்ரா-வைடு கேமரா, 10எம்பி டெலிபோட்டோ கேமரா உடன் 12எம்பி செல்பி கேமரா கொண்டதாகும். 25W வேக சார்ஜிங் சப்போர்ட் உடன் 4,000 mAh பேட்டரி கொண்டது. wireless சார்ஜிங் வசதியும் உண்டு.
- ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் 5G சுதந்திர தின விற்பனையின்போது சிறப்பு விலையில் கிடைக்கும்.
- சியோமி 43X ப்ரோ டிவி 43 இன்ச் டிஸ்ப்ளே மாடல் ரூ.28,999க்கு விற்பனையாகிறது.
சுதந்திர தினம் அன்று (ஆகஸ்ட் 15) ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்ற பல ஆன்லைன் வலைதளங்கள் பெரிய விற்பனை நிகழ்வை நடத்தும். அதேபோல் சியோமி தனது அதிகாரப்பூர்வ Mi.com இணையதளத்தில் இதேபோன்ற விற்பனையை நடத்துவதாக அறிவித்துள்ளது.
மேலும் இந்த தளத்தில் கிடைக்கும் சலுகைகள் மற்ற ஆன்லைன் தளங்களிலும் (அமேசான் போன்றவை) வழங்கப்படும். சுதந்திர தின விற்பனை இன்று (ஆகஸ்ட் 6) தொடங்கும் சியோமி என்று அறிவித்துள்ளது.
சலுகை விவரங்கள்:
ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் 5G சுதந்திர தின விற்பனையின்போது சிறப்பு விலையில் கிடைக்கும். இதன் 8ஜிபி + 128ஜிபி மெமரி மாடல் ரூ.27,999 விற்பனையாகிறது.
அதேசமயம் 12ஜிபி + 256ஜிபி மாடல் ரூ.29,999 விலையில் விற்பனை செய்யப்படும். 512ஜிபி வேரியண்ட் வாங்க விரும்புவோர் ரூ.31,999 செலவழிக்க வேண்டும்.
உங்கள் பட்ஜெட் ரூ. 15,000க்கு குறைவாக இருந்தால், சியோமி அதன் பட்ஜெட் ரெட்மி 13 5G ஸ்மார்ட்போனுக்கு சூப்பர் சலுகை வழங்குகிறது. இதன் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.12,999 என்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மாடல் விலை ரூ.14,499 என்றும் மாறி இருக்கிறது.
கூகுள் டிவி மூலம் இயங்கும் சியோமி ஸ்மார்ட் டிவி எக்ஸ் சீரிஸ் சிறப்பு சலுகைகளுடன் விற்பனைக்கு கிடைக்கிறது. சியோமி 55X ஜிடிவி 55 இன்ச் டிஸ்ப்ளே மாடல் ரூ.34,999-க்கு விற்பனையாகிறது.
சியோமி 43X ப்ரோ டிவி 43 இன்ச் டிஸ்ப்ளே மாடல் ரூ.28,999க்கு விற்பனையாகிறது. இந்த டிவிக்களில் 4K ரெசல்யூஷன், டால்பி விஷன், HDR10 உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
அமேசானில் ரெட்மி நோட் 13 ப்ரோ, ரெட்மி 12 5ஜி, நோட்13 ப்ரோ+, சியோமி 14 மற்றும் பல அமேசான் சுதந்திர தின (Amazon Great Freedom Festival) விற்பனையின்போது தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.
- ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் 6.9 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வரும் என்று கூறப்படுகிறது.
- ஐபோன் 16 ப்ரோ சீரிசில் ஆப்பிளின் சமீபத்திய A18 ப்ரோ சிப் இடம்பெறும்.
ஆப்பிள் அடுத்த மாதம் ஐபோன் 16 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸை அறிமுகப்படுத்த உள்ளது. இவை டிஸ்ப்ளே, செயல்திறன் மற்றும் கேமரா அமைப்புகளில் குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்களை கொண்டிருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆப்பிளின் அடுத்த பெரிய வெளியீட்டை நெருங்க நெருங்க, தொழில்நுட்ப ஆர்வலர்கள் மற்றும் ஆப்பிள் ரசிகர்களிடையே புதிய ஐபோன் 16 சீரிசின் எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.
புது ஐபோன் மாடல்கள் ஆப்பிள் வழக்கப்படி செப்டம்பர் மாத தொடக்கத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கலாம். புதிய ஐபோன் சீரிஸ் குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்களைக் கொண்டுவரும் என்று தெரிகிறது.
ஐபோன் 16 ப்ரோ மாடல் அளவில் பெரிய மற்றும் பிரகாசமான ஸ்கிரீன், சமீபத்திய A18 ப்ரோ சிப், மேம்படுத்தப்பட்ட கேமரா சென்சார்கள், பெரிய பேட்டரி மற்றும் மேம்படுத்தப்பட்ட கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை கொண்டிருக்கும்.
ஐபோன் 16 ப்ரோ சீரிசின் தனித்துவமான அம்சங்களில் ஒன்று பெரிய OLED டிஸ்ப்ளேக்கள் இருக்கும் என்று தெரிகிறது. ஐபோன் 15 ப்ரோவில் காணப்படும் 6.1 இன்ச் டிஸ்ப்ளேவை விட, ஐபோன் 16 ப்ரோ 6.3 இன்ச் ஸ்க்ரீனை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் 6.9 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வரும் என்று கூறப்படுகிறது. இது ஐபோன் 15 ப்ரோ மேக்ஸின் 6.7 இன்ச் திரையில் இருந்து அதிகரித்துள்ளது. கூடுதலாக, இரண்டு மாடல்களும் மெலிதான பெசல்களைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. ஐபோன் 16 ப்ரோவின் பெசல்கள் வெறும் 1.2 மிமீ அளவிலும், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் 1.15 மிமீ அளவிலும் உள்ளது.
ஐபோன் 16 ப்ரோ சீரிசில் ஆப்பிளின் சமீபத்திய A18 ப்ரோ சிப் இடம்பெறும். இது முந்தைய மாடல்களில் பயன்படுத்தப்பட்ட A17 ப்ரோ சிப்பை விட கணிசமான செயல்திறன் மேம்பாடுகளை உறுதியளிக்கும்.
கூடுதலாக, ஆப்பிள் பயனர்களுக்கு ஏஐ திறன்களை மேலும் வழங்குவதற்கும் சாதனங்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் (Apple Intelligence) உடன் தனிப்பட்ட ஏஐ சேவைகளையும் இந்த பிராசஸர் கொண்டு வரும்.
ஐபோன் 16 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் இன் கேமரா சென்சார்கள் பெரிய மேம்படுத்தல்களைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு மாடல்களும் 48 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமராவைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கனெக்டிவிட்டியை பொறுத்தவரை, ஐபோன் 16 ப்ரோ சீரிஸ் சமீபத்திய வைபை 7 தரநிலையை ஆதரிக்கும் வகையில் அமைக்கப்படுகிறது. இது வேகமான மற்றும் நம்பகமான இணைய இணைப்புகளை வழங்குகிறது.
விலையைப் பொறுத்தவரை குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்கள் இருந்தபோதிலும், ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ்-க்கான ஆரம்ப விலைகள் அவற்றின் முந்தைய வெர்ஷன்களைப் போலவே இருக்கும் என்று கூறப்படுகிறது.
- Arbitrary code execution (ACE) எனப்படும் சைபர் தாக்குதலுக்கு ஆப்பிள் சாதனங்கள் எளிய இலக்காக உள்ளது
- Cause denial of service (DoS) குறைபாடு ஏற்படவும் வாய்ப்புள்ளது
ஐ-போன்கள், ஐ-பாட்கள் உள்ளிட்ட ஆப்பிள் சாதனங்களில் பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசின் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (CERT-In) அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஆப்பிள் சாதனங்களில் உள்ள பயனர்களின் முக்கிய தகவல்கள் கசிய வாய்ப்புள்ளது, Arbitrary code execution (ACE) எனப்படும் சைபர் தாக்குதலுக்கு ஆப்பிள் சாதனங்கள் எளிய இலக்காக உள்ளது, ஆப்பிள் சாதனங்களின் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் எளிதில் bypass செய்து தகர்க்கப்பட வாய்ப்புள்ளது, சேவை மறுப்பு எனப்படும் Cause denial of service (DoS) குறைபாடு ஏற்படவும், பாதுகாப்பைக் தகர்க்கும் spoofing தாக்குதல் மூலமும் ஆப்பிள் சாதனங்கள் எளிதில் குறிவைக்கப்பட வாய்ப்புள்ளதாக அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஆப்பிள் மென்பொருள்களான, 17.6 and 16.7.9 க்கு முந்தைய iOS and iPadOS வெர்ஷன்கள்,13.6.8 க்கு முந்திய macOS Ventura வெர்ஷன்கள்,12.7.6 க்கு முந்திய macOS Monterey வெர்ஷன்கள், 10.6 க்கு முந்திய watchOS வெர்ஷன்கள்,17.6 க்கு முந்திய tvOS வெர்ஷன்கள், 1.3 க்கு முந்தைய visionOS வெர்ஷன்கள், 17.6 க்கு முந்தைய Safari வெர்ஷன்கள் ஆகியவை பயன்பாட்டில் இருக்கும் சாதனங்கள் அதிக ஆபத்தில் இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை குறித்து ஆப்பிள் நிறுவனத்தில் தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. முன்னதாக கடந்தவாரம்தான் ஆப்பிள் சாதனங்களில் செக்கியூரிட்டி அப்டேட் அறிமுகப்படுத்தப்பட்டது குறிபிடத்தக்கது.






