என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    • ரியல்மி நோட் 60 ஆனது ஆன்டிராய்டு 14 அடிப்படையிலான ரியல்மி யுஐ-இல் இயங்குகிறது.
    • ரியல்மி நோட் 60 ஆனது 5,000mAh பேட்டரி மற்றும் 10W சார்ஜிங் பொருத்தப்பட்டுள்ளது.

    ரியல்மி நிறுவனத்தின் சமீபத்திய பட்ஜெட் ஸ்மார்ட்போன் ரியல்மி நோட் 60 இந்தோனேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

    ரியல்மி நோட் 60 யூனிசாக் T612 சிப்செட்டில் இயங்குகிறது. ரியல்மி நோட் 60 2 வண்ணம் மற்றும் 3 வகையான ரேம் மற்றும் ஸ்டோரேஜில் அதிகபட்சமாக 8 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 256 ஜிபி வரை ஸ்டோரேஜுடன் கிடைக்கிறது.

    ரியல்மி நோட் 60 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது மற்றும் ரியல்மி மினி கேப்சூல் 2.0 அம்சத்தைக் கொண்டுள்ளது. ரியல்மி நோட் 60 கடந்த ஆண்டு ரியல்மி நோட் 50 உடன் பல அம்சங்களை கொண்டுள்ளது.

    ரியல்மி நோட் 60 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் விலை இந்திய விலையில் தோராயமாக ரூ. 7,500. 6 ஜிபி + 128 ஜிபி மற்றும் 8 ஜிபி + 256 ஜிபி ரேம் மற்றும் சேமிப்பக ஸ்டோரேஜ் விலை முறையே இந்திய விலையில் தோராயமாக ரூ. 8,500 மற்றும் இந்திய விலையில் தோராயமாக ரூ. 10,000 ஆகும். இது மார்பிள் பிளாக் மற்றும் வோயேஜ் ப்ளூ வண்ணங்களில் கிடைக்கிறது.

    ரியல்மி நோட் 60 ஆனது ஆன்டிராய்டு 14 அடிப்படையிலான ரியல்மி யுஐ-இல் இயங்குகிறது.

    செல்பி கேமரா சுற்றி சில அறிவிப்புகளை காட்டும் மினி கேப்சூல் அம்சத்தை பெற்றுள்ளது. இது 6.74 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே, 90Hz புதுப்பிப்பு வீதம், 180Hz தொடு மாதிரி வீதம் மற்றும் 560நிட்ஸ் பீக் வெளிச்சம் ஆகியவற்றை கொண்டுள்ளது.

    இது ஆக்டா கோர் யூனிசாக் T612 சிப்செட்டில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்டது. விர்ச்சுவல் ரேம் அம்சத்துடன், பயன்படுத்தப்படாத ஸ்டோரேஜை பயன்படுத்தி உள் ரேமை 16 ஜிபி வரை விரிவாக்க முடியும்.

    புதிய ரியல்மி நோட் 60-ல் உள்ள இணைப்பு விருப்பங்களில் வைபை, புளூடூத், ஜிபிஎஸ் மற்றும் யுஎஸ்பி டைப் சி போர்ட் ஆகியவை அடங்கும். இது தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான IP64-மதிப்பிடப்பட்ட கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இது ரெயின்வாட்டர் ஸ்மார்ட் டச் தொழில்நுட்பத்துடன் வருகிறது. இதனால் பயனர்கள் மழைக்காலங்களில் அல்லது கைகள் ஈரமாக இருக்கும்போது கூட ஸ்கிரீனை தொடர்பு கொள்ள முடியும்.

    ரியல்மி நோட் 60 ஆனது 5,000mAh பேட்டரி மற்றும் 10W சார்ஜிங் பொருத்தப்பட்டுள்ளது. இது 7.84 மிமீ தடிமன் மற்றும் 187 கிராம் எடை கொண்டது.

    • ஐபோன் 17 சீரிஸ் விவரங்கள் தற்போதே வெளியாக துவங்கிவிட்டன.
    • ஐபோன் 16 சீரிஸ் மாடல்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

    ஆப்பிள் நிறுவனம் தனது முற்றிலும் புதிய ஐபோன் மாடல்களை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஐபோன் 16 சீரிஸ் மாடல்கள் பற்றி ஏற்கனவே ஏராளமான தகவல்கள் வெளியான நிலையில், அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஐபோன் 17 சீரிஸ் விவரங்கள் தற்போதே வெளியாக துவங்கிவிட்டன.

    அதன்படி ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியூ வெளியிட்டுள்ள தகவல்களில், ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. இது அடுத்த ஆண்டு ஆப்பிள் அறிமுகம் செய்யும் புதிய ஐபோன் சீரிசில் விலை உயர்ந்த மாடலாக இருக்கும்.

    புதிய ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடலில் அதிகபட்சம் 12 ஜிபி ரேம் வழங்கப்படும் என்று கியூ தெரிவித்துள்ளார். இந்த சீரிசில் அதிகபட்சம் ரேம் கொண்ட ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    அடுத்த ஆண்டு அறிமுகமாகும் ஐபோன்கள், மிக மெல்லிய டிசைன் கொண்டிருக்கும். இந்த சீரிசில் ஐபோன் 17, ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் SE4 போன்ற மாடல்கள் இடம்பெற்று இருக்கும். இவற்றில் அனைத்து மாடல்களிலும் குறைந்தபட்சம் 8 ஜிபி ரேம் வழங்கப்படும். இத்துடன் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடலில் வேப்பர் சாம்பர் கூலிங் சிஸ்டம் வழங்கப்படும் என்று கியூ தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரூ.2,048 கோடி ரூபாய் பரிவர்த்தனை முடிவடைந்துள்ளது
    • book now, sell anytime அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

    இந்தியாவில் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமாக திகழும் சொமேட்டோ நிறுவனம் சினிமா டிக்கெட் முன்பதிவுத் தொழிலில் கால்பதித்துள்ளது.

    சொமேட்டோவின் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன் Ltd நிறுவனம் பிரபல ஆன்லைன் பணப்பரிவார்த்தை செயலியான பே.டி.எம். இல் உள்ள சினிமா மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் டிக்கெட் முன்பதிவு பிசினஸ் கட்டமைப்பை ரூ.2,048 கோடி ரூபாய்க்கு வாங்க உள்ளதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த பரிவர்த்தனை முடிவடைந்து வரும் செப்டெம்பர் 30 முதல் சொமேட்டோ செயலியின் மூலம் டிக்கெட் புக்கிங் சேவைகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    சொமேட்டோ செயலியில் அறிமுகமாகும் book now, sell anytime அம்சத்தின் மூலம் சினிமா, விளையாட்டு மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான ஆன்லைன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும்.

    சொமேட்டோ இந்த கட்டமைப்பை வாங்கியிருந்தாலும், பயனர்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் அடுத்த 12 மாதங்களுக்கு பே.டி.எம். செயலியிலும் டிக்கெட் முன்பதிவு நடைபெறும் என்று ஒன் 97 கம்யூனிகேஷன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியாவில் ஆப்பிளின் நேரடி பணியாளர்களின் எண்ணிக்கை மார்ச் 2025-க்குள் 2,00,000-ஐ எட்டும்.
    • எலக்ட்ரானிக்ஸ் துறையில் ஒவ்வொரு நேரடி வேலையும் மூன்று மறைமுக வேலைகளை உருவாக்குகிறது.

    2025-ம் நிதியாண்டின் இறுதிக்குள் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் 6 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க இருக்கிறது. ஐபோன் தயாரிப்பாளரின் அதிகரித்து வரும் செயல்பாடுகள் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளன என்று அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்ட ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

    ஆப்பிள் நிறுவனம் பகிர்ந்துள்ள மதிப்பீடுகளின்படி, இந்தியாவில் ஆப்பிளின் நேரடி பணியாளர்களின் எண்ணிக்கை மார்ச் 2025-க்குள் 2,00,000-ஐ எட்டும். இந்த பணிகளில் 70 சதவீதம் பெண்களே உள்ளனர்.

    நிறுவனத்தின் மூன்று பெரிய ஒப்பந்த உற்பத்தியாளர்களான ஃபாக்ஸ்கான், விஸ்ட்ரான் மற்றும் பெகாட்ரான் ஆகியவை ஏற்கனவே 80,872 நேரடி வேலைகளை உருவாக்கியுள்ளன.

    கூடுதலாக டாடா குரூப் (Tata Group), சால்காம்ப் (Salcomp), மதர்ஸ்சன் (Motherson), பாக்ஸ்லிங்க் (Foxlink), சன்வோடா (Sunwoda), ஏடிஎல் (ATL) மற்றும் ஜபில் (Jabil) போன்ற சப்ளையர்கள் கூட்டாக 84,000 நேரடி வேலைகளை உருவாக்கியுள்ளனர்.

    2020-ம் ஆண்டில் ஸ்மார்ட்போன் உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டத்தை அறிமுகப்படுத்தியதில் இருந்து, ஆப்பிள் மற்றும் அதன் கூட்டாளர்கள் சுமார் 1,65,000 நேரடி வேலைகளை உருவாக்கியுள்ளனர் என்று மற்றொரு அதிகாரி தெரிவித்தார்.

    PLI திட்டம், ஆரம்பத்தில் ஐந்து ஆண்டுகளில் 2,00,000 வேலைகளை இலக்காகக் கொண்டது. இந்த இலக்கை நான்கே ஆண்டுகளில் எட்டியுள்ளது. இது இந்தியாவில் வேலை உருவாக்கத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க பங்கை பிரதிபலிக்கிறது.

    எலக்ட்ரானிக்ஸ் துறையில் ஒவ்வொரு நேரடி வேலையும் மூன்று மறைமுக வேலைகளை உருவாக்குகிறது என்று அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது. இது ஆப்பிளின் விரிவாக்கம் 2025 நிதியாண்டு இறுதிக்குள் 5,00,000 முதல் 6,00,000 மொத்த வேலைகளை உருவாக்கக்கூடும் என்று கூறுகிறது.

    • family Plan சேவைக்கான மாதாந்திர பிரீமியம் கட்டணம் ரூ.189ல் இருந்து ரூ.299 ஆக உயர்வு.
    • தனிப்பட்ட ப்ரீமியம் சேவைக்கான கட்டணம் ரூ.129ல் இருந்து ரூ.149 ஆக உயர்வு.

    வீடியோக்களுக்கான உலகின் முன்னணி வலைத்தளமாக யூடியூப் செயல்படுகிறது. இணையத்தில் விளம்பரங்களை தடுக்க செய்யும் ஆட் பிளாக்கர் (Ad Blocker) சேவைகளை எதிர்கொள்ளும் நோக்கில் யூடியூப் தனது பிரீமியம் சந்தாவில் (Premium Subscription) சேரும் படி பயனர்களை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    இந்நிலையில் யூடியூப் தனது பிரீமியம் சந்தா கட்டணத்தை உயர்த்தியுள்ளது. Family Plan சேவைக்கான மாதாந்திர பிரீமியம் கட்டணம் ரூ.189ல் இருந்து ரூ.299 ஆகவும், மாணவர் மாதாந்திர பிரீமியம் கட்டணம் ரூ.79ல் இருந்து ரூ.89 ஆகவும், தனிப்பட்ட ப்ரீமியம் சேவைக்கான கட்டணம் ரூ.129ல் இருந்து ரூ.149 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    தனிநபருக்கான ப்ரீபெய்ட் மாதாந்திர கட்டணம் ரூ.139ல் இருந்து ரூ.159 ஆகவும், தனிநபருக்கான ப்ரீபெய்ட் காலாண்டு (3 மாதம்) கட்டணம் ரூ.399ல் இருந்து ரூ.459 ஆகவும், தனிநபருக்கான ஆண்டு கட்டணம் ரூ.1290ல் இருந்து ரூ.1490 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    சேவையை தொடங்கி 5 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    • தங்களது மொபைல்களில் மதர்போர்டு [motherboard] செயலிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
    • ஒன் பிளஸ் 10 ப்ரோ 5ஜி மொபைல் ஆன்லனில் 44 ,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது

     இந்தியாவில் பிரபல மொபைல் போன் பிராண்ட் ஆக விளங்கும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் மீது சமீப காலமாக குற்றச்சாட்டுகள் குவிந்து வருகின்றன. குறிப்பாக ஒன் பிளஸ் 9 மற்றும் ஒன் பிளஸ் 10 ஆகிய பழைய பிளாக்ஷிப் வேரியண்ட்களை பயன்படுத்துவோர் தங்களது மொபைல்களில் மதர்போர்டு [motherboard] செயலிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

     

    இதனால் போன்கள் திடீரென எந்த இயக்கமும் ரெஸ்பான்ஸும் இல்லாமல் திரை கருப்பாக மாறி விடுவதாக கூறியுள்ளனர். போன் லேக் ஆவதும் அதிக சூடாவதுமாக இருக்கிறது என்றும் பலர் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் புகார்களை அடுக்கி வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் சமீபத்திய சாப்வேர் அப்டேட் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே நடக்கிறது என்ற கருத்தும் நிலவுகிறது

    இந்த நிலையில்தான், பழுதுபட்ட தங்களது ஒன் பிளஸ் 9 ப்ரோ, ஒன்பிளஸ் 10 ப்ரோ மொபைல் போன்களை சரி செய்ய சர்வீஸ் சென்டர்கள் ரூ. 42,000 வரை கேட்பதாக பயனர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த தொகை அந்த மொபைல்களின் விலையை விட அதிகம் ஆகும்.

    இந்த மாடல்களை விட மேம்பட்ட ஒன் பிளஸ் 10 ப்ரோ 5ஜி மொபைல் ஆன்லனில் 44 ,000 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில் பழைய மாடல் போன்களின் ரிப்பேர் செலவுக்கே 42,000 ஆயிரம் ருபாய் ஆகும் என்று சர்வீஸ் சென்டர்கள் கூறுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

    • ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர நிகழ்ச்சி அடுத்த மாதம் 10-ந்தேதி நடைபெற இருக்கிறது.
    • அப்போது ஐ-போன் 16, புதிய ஏர்பாட்ஸ் மாடல்கள் உள்ளி புதிய தயாரிப்புகளை வெளியிடும்.

    ஆப்பிள் நிறுவனம் ஆண்டுதோறும் பெரிய நிகழ்ச்சி நடத்தி அதில் தனது புதிய தயாரிப்புகள் குறித்த அறிவிப்பை வெளியிடும். அதுபோன்ற இந்த ஆண்டு நிகழ்ச்சி அடுத்த மாதம் 10-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதில் ஐ-போன் 16, புதிய ஏர்பாட்ஸ் மாடல்கள் மற்றும் பல புதிய தயாரிப்புகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒவ்வொரு முறையும் புதிய மாடல்களை வெளியிடும்போது, பழைய மாடல்களின் தயாரிப்புகளை நிறுத்துவது வழக்கம். அந்த வகையில் ஐ-போன் 15 ப்ரோ மற்றும் ஐ-போன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகியவற்றின் தயாரிப்பை நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐ-போன் 15 ப்ரோ மற்றும் ஐ-போன் ப்ரோமேக்ஸ் டைட்டானியம் பீச்சர் கொண்ட முதல் ஆப்பிள் ஐ-போன் ஆகும். இதன் டிஸ்பிளே 6.1 இன்ச் ஆகும். விரைவில் வெளியாக இருக்கும் ஐ-போன் 16 சீரிஸ் போன்களின் டிஸ்பிளே 6.7 இன்ச் ஆக இருக்க வாய்ப்புள்ளது.

    அதேபோல் ஐ-போன் 14 பிளஸ் தயாரிப்பையும் நிறுத்தலாம் எனத் தெரிகிறது. சீரிஸ் 9, அல்ட்ரா 2, எஸ்.இ. 2 வாட்ச்களின் தயாரிப்புகளையும் நிறுத்தலாம். ஏர்பாட்ஸ் 2 மற்றும் 3, ஐ-பேடு மினி 6 மற்றும் ஐ-பேடு 10 ஆகியவற்றின் தயாரிப்புகளையும் நிறுத்தலாம் எனத் தெரிகிறது.

    • காட்சிகளை 356 சென்டிமீட்டர்கள் அளவுக்கு பெரிதாக ஒளிபரப்பும்.
    • ஐஓஎஸ்-இல் ஸ்கிரீன் மிரரிங் வழங்குகிறது.

    ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ப்ரொஜெக்டர் மாடல்: ஜெப் பிக்சாபிளே 54 ஸ்மார்ட் எல்இடி-ஐ அறிமுகம் செய்தது. கடந்த ஜூன் மாதம் ஜெப் பிக்சாபிளே 22 ஸ்மார்ட் எல்இடி ப்ரோஜெக்டர் மாடல் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த மாடல் அறிமுகமாகி இருக்கிறது.

    புதிய பிக்சாபிளே 54 மாடலில் 3800 லூமென்ஸ் பிரைட்னஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இது தரவுகளை அதிக பிரகாசமாக வெளிப்படுத்தச் செய்யும். இதனால் சிறப்பான காட்சி அனுபவம் கிடைக்கும். இந்த ப்ரோஜெக்டர் FHD (1080 பிக்சல்) ரெசல்யூஷன் கொண்டிருக்கிறது. இது காட்சிகளை 356 சென்டிமீட்டர்கள் அளவுக்கு பெரிதாக ஒளிபரப்பும்.

    குவாட்கோர் பிராசஸர் கொண்டிருக்கும் பிக்சாபிளே 54 மாடல் சீராக இயங்குவதோடு, சிறப்பான நேவிகேஷன் வழங்குகிறது. செயலிகளை சப்போர்ட் செய்யும் திறன் கொண்டிருக்கும் புதிய ஜெப்ரானிக்ஸ் ப்ரோஜெக்டர் ஸ்கிரீன் மிரரிங் வசதியை வழங்குகிறது. மிராகேஸ்ட் மற்றும் ஐஓஎஸ்-இல் ஸ்கிரீன் மிரரிங் வழங்குகிறது.

    இந்த ப்ரொஜெக்டருடன் ரிமோட் கண்ட்ரோல் மற்றும் ஆட்டோ கீஸ்டோன் கரெக்ஷன் வசதி உள்ளது. இதனால் ப்ரோஜெக்டரை செட்டப் செய்வது மிகவும் எளிமையான காரியம் தான். இதில் 50,000 மணி நேர எல்இடி லேம்ப் உள்ளது. இது நீண்ட காலம் உழைக்கும் திறன் கொண்டுள்ளது. கனெகிடிவிட்டிக்கு இந்த ப்ரோஜெக்டரில் ப்ளூடூத் 5.1, ஹெச்டிஎம்ஐ, யுஎஸ்பி மற்றும் ஆக்ஸ் அவுட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுகிறது.

    மேலும் இதில் பில்ட்-இன் ஸ்பீக்கர் உள்ளதால் தெளிவன ஆடியோ வழங்குகிறது. இதனை ஜெப்ரானிக்ஸ் சவுன்ட்பார்களுடன் செட்டப் செய்தும் பயன்படுத்தலாம். இவைதவிர டூயல் பேண்ட் வைபை, அட்ஜஸ்ட் செய்யக்கூடிய லென்ஸ் மற்றும் ரிமோட் கண்ட்ரோல் வழங்கப்படுகிறது. 

    • பி.எஸ்.என்.எல். 336 நாள் பிளானை பெற 1499 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
    • ஜியோ 336 நாள் பிளான்க்கு 1899 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

    தனியார் நெட்வொர்க் நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்தியதால், பி.எஸ்.என்.எல். நெட்வொர்க்கிற்கு பெரும்பாலான செல்போன் வாடிக்கையாளர்கள் தங்களது சிம் கார்டை மாற்றினர். மாற்றி வருகின்றனர். அவர்களை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் தனியார் நொட்வொர்க் நிறுவனங்களுக்கு இணையைாக 4ஜி நெட்வொர் சலுகைகளை பி.எஸ்.என்.எல். அளித்து வருகிறது.

    தற்போது 336 நாள் ரீசார்ஜ் பிளான் ஜியோவை விட பி.எஸ்.என்.எல்.-லில் குறைந்த விலையாகும்.

    பி.எஸ்.என்.எல். 336 நாள் பிளான்

    1499 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். 336 நாட்கள் அன்லிமிடெட் அழைப்பு, டெல்லி மற்றும் மும்பையில் எம்.டி.என்.எல். நெட்வொர்க் ரோமிங் ப்ரீ. 24 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் ப்ரீ. இந்த பிளானிற்காக ஒரு நாளைக்கு சராசரியாக 4.5 ரூபாய் வாடிக்கையாளர்கள் செலவிட வேண்டும்.

    ஜியோ 336 நாள் பிளான்

    1899 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். 336 நாட்கள் அன்லிமிடெட் கால் வசதி, 24 ஜிபி டேட்டா, மொத்தம் 3,600 எஸ்.எம்.எஸ். ப்ரீ. சந்தாதாரர்கள் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் ஆகியவற்றை எளிதாக பெறலாம். இந்த பிளானிற்காக வாடிக்கையாளர்கள் ஒருநாளைக்கு சராசரியாக 5.65 ரூபாய் செலவிட வேண்டியிருக்கும்.

    மேலும் ஜியோவில் 448 ரூபாய், 449 ரூபாய்க்கான ரீசார்ஜ் திட்டங்கள் உள்ளன. ஒரு ரூபாய் வித்தியாசத்தில் இரண்டு பிளான்களை அறிவித்துள்ளது.

    448 ரூபாய் திட்டத்தில் 28 நாளைக்கு தினந்தோறும் 2 ஜிபி அதிவேக டேட்டாவை பெறலாம். அத்துடன் அன்லிமிடெட் கால். 100 எஸஎம்எஸ் ப்ரீ். சோனிலைவ், ஜீ5, ஜியோ சினிமா பிரீமியம, லயன்ஸ்கேட் பிளே, டிஸ்கவரி பிளஸ், சன் நெக்ஸ்ட், காஞ்கா லங்கா, பிளானெட் மராத்தி, ஜியோ டி.வி. ஆகியவற்றை இலவசமாக பெறலாம்.

    449 ரூபாய் பிளானில் 28 நாளைக்கு தினந்தோறும் 3 ஜிபி அதிகவே டேட்டா பயன்படுத்திக் கொள்ள முடியும். அன்லிமிடெட் கால், 100 எஸ்.எம்.எஸ். ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் ஆகியவற்றை மட்டும் இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும்.

    • இந்த நிதியாண்டின் தொடக்கத்தில் மேலதிகமாக சுமார் 40 சதவீத வளர்ச்சியை மொபைல் போன் ஏற்றுமதி வணிகம் கண்டுள்ளது.
    • ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் ஐபோன்கள் ஏற்றுமதி முன்னிலையில் உள்ளது

    மொபைல் போன் ஏற்றுமதி வணிகம் 6.5 பில்லியன் டாலராக உயர்துள்ளதாக தழுவல் வெளியாகியுள்ளது.இந்தியாவின் மொபைல் போன் ஏற்றுமதி வணிகம் 6.5 பில்லியன் டாலராக உயர்துள்ளதாக தழுவல் வெளியாகியுள்ளது. இந்த நிதியாண்டில் முதல் பாதியில் [ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில்] இந்த வளர்ச்சியானது ஏற்பட்டுள்ளது. கடந்த 2023 நிதியாண்டின் தொடக்கத்தில் எட்டிய வளர்ச்சியை விட இந்த நிதியாண்டின் தொடக்கத்தில் மேலதிகமாக சுமார் 40 சதவீத வளர்ச்சியை மொபைல் போன் ஏற்றுமதி வணிகம் கண்டுள்ளது.

    இந்த வளர்ச்சியில் ஐபோன்களின் ஏற்றுமதியே முன்னிலையில் உள்ளது. ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் ஐபோன்கள் ஏற்றுமதி முன்னிலையில் உள்ளது. அதவாது, 6.5 பில்லியன் டாலரில் ஐபோன் ஏற்றுமதியின் பங்கு 70 சதவீதம் ஆகும். அதிலும் குறிப்பாக ஐபோன் 15 ஆன்லனில் அதிகம் விற்பனையான மாடலாக உள்ளது. இதற்கு முந்திய மாடல்களில் இருந்து அதிக அப்கிரேடுகளுடன் இவை தயாரிக்கடுவதே இந்த வளர்ச்சிக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

     

    • வாட்ஸ்அப் செயலி உலகளவில் கோடிக்கணக்கான பயனர்களை கொண்டுள்ளது.
    • பயனர் தேவையை பூர்த்தி செய்ய வாட்ஸ்அப் அடிக்கடி புது அம்சங்களை வழங்குகிறது.

    உலகின் முன்னணி குறுந்தகவல் செயலி வாட்ஸ்அப். உலகளவில் பல கோடி பேர் பயன்படுத்தி வரும் தகவல் பரிமாற்ற செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. இந்த செயலியில் பயனர்களுக்கு பயன்தரும் வகையில், அடிக்கடி புது அம்சங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில், வாடிக்கையாளர்கள் நீண்ட நாள் எதிர்பார்த்து காத்திருந்த அம்சம் விரைவில் வழங்க வாட்ஸ்அப் முடிவு செய்துள்ளது. இதற்காக வாட்ஸ்அப் நிறுவனம் விரைவில் புதிய அப்டேட் வெளியிட உள்ளது.

    இந்த அப்டேட், ஆங்கிலம் மொழியில் குரல் பதிவாக அனுப்பப்படும் குறுந்தகவல்களை அதே மொழியில் எழுத்து வடிவமாக மாற்றும் வசதியை வழங்குகிறது. இதன் மூலம் பயனர்கள் இனி மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்தி குரல் பதிவுகளை எழுத்து வடிவில் மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது.

    முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு வெர்ஷனில் இந்த அம்சத்திற்கான அப்டேட் வழங்கப்பட இருக்கிறது. இந்தியாவில் இந்த அம்சம் ஆங்கிலம் மட்டுமின்றி பல்வேறு மொழிகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • உணவு டெலிவரி நிறுவனமாக நிகழ்ந்துவரும் சொமேட்டோ நிறுவனம் சினிமா டிக்கெட் முன்பதிவுத் தொழிலில் கால்பதிக்க உள்ளது.
    • சினிமா, விளையாட்டு மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான ஆன்லைன் டிக்கெட்டிங் பிஸ்னஸ் கைமாறுகிறது

    இந்தியாவில் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமாக நிகழ்ந்துவரும் சொமேட்டோ நிறுவனம் சினிமா டிக்கெட் முன்பதிவுத் தொழிலில் கால்பதிக்க உள்ளது.சொமேட்டோவின் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன் Ltd நிறுவனம் பிரபல ஆன் லைன் பணப்பரிவார்த்தை செயலியான பே.டி.எம். இல் உள்ள சினிமா மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் டிக்கெட் முன்பதிவு பிசினஸ் கட்டமைப்பை ரூ.2,048 கோடி ரூபாய்க்கு வாங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    இந்த பரிவர்த்தனையால் வாடிக்கையாளர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இடைப்பட்ட காலத்தில் 12 மாதங்களுக்கு மட்டும் பே.டி.எம். செயலியிலேயே டிக்கெட் முன்பதிவு நடைபெறும் என்று ஒன் 97 கம்யூனிகேஷன் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஒன் 97 நிறுவனம் மற்றும் பே.டி.எம். நிறுவனத்திற்கு இடையில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

    அதன்படி சினிமா, விளையாட்டு மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான ஆன்லைன் டிக்கெட்டிங் பிசினஸ் கைமாறுகிறது. டிஜிட்டல் யுகத்தில் அதிக லாபம் கொழிக்கும் தொழிலாக ஆன்லன் டிக்டிங் தொழில் உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தத்க்கது.

    ×