என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    78-வது சுதந்திர தினம்: விசேஷ டூடுல்  வெளியிட்ட கூகுள்
    X

    78-வது சுதந்திர தினம்: விசேஷ டூடுல் வெளியிட்ட கூகுள்

    • சுதந்திர தினத்தை ஒட்டி விசேஷ டூடுல் வெளியிட்ட கூகுள்.
    • பல்வேறு விசேஷ நாட்களில் டூடுல் வெளியிடுவதை கூகுள் வழக்கமாக கொண்டுள்ளது.

    உலகின் முன்னணி தேடுப்பொறி சேவையை வழங்கும் நிறுவனம் கூகுள். உலக அளவில் விசேஷ நாட்களில் சிறப்பு டூடுலை தனது வலைதளத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது.

    அந்த வகையில், இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது. டூடுலில் இந்திய பாரம்பரிய முறைப்படி உருவாக்கப்பட்ட வண்ணங்கள் நிறைந்த கதவுகளில் கூகுள் என்ற வார்த்தை இடம்பெற்று இருக்கிறது.

    வழக்கம் போல விசேஷ டூடுலை க்ளிக் செய்ததும் இந்திய சுதந்திர தின சிறப்புகள், அதுபற்றிய வலைத்தள பதிவுகள் அடங்கிய சிறப்பு வலைப்பக்கம் திறக்கிறது.

    Next Story
    ×