search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லஞ்ச ஒழிப்புத்துறை"

    • தடை செய்யப்பட்ட குட்கா, பான் பொருள்கள் தடையை மீறி விற்பனை செய்ய சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது
    • இந்த வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து வந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் சிபிஐக்கு மாற்றபட்டது

    தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் பொருள்கள் தடையை மீறி விற்பனை செய்ய சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து வந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் சிபிஐக்கு மாற்றபட்டது.

    இந்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி விஜயபாஸ்கர், பி வி ரமணா மீதான குட்கா வழக்கை மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஏன் இழுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று சிபிஐக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

    கவர்னர் ஒப்புதல் அளித்தும் சிபிஐ இன்னும் பரிசீலனை செய்து வருவதாக நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளதால் கோபமடைந்த நீதிபதி வழக்கின் நிலை என்ன என்பது தொடர்பாக அடுத்த விசாரணையின் போது பதில் அளிக்க வேண்டும் என்று சிபிஐக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    • பினாமி பெயர்களில் பல இடங்களில் சொத்துக்களையும் வாங்கி குவித்ததாகவும் புகார்கள் எழுந்தது.
    • சார்பதிவாளர் கட்டியுள்ள சொகுசு பங்களாவில் நடைபெற்ற சோதனையால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ஸ்ரீவில்லிபுத்தூர் வன்னியம்பட்டி தாய்நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 55). இவர் கடந்த 2023 ஜனவரி முதல் அக்டோர் வரை 10 மாதங்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளராக பணி புரிந்தார்.

    அவர் பணிபுரிந்த காலங்களில் பத்திரப்பதிவு செய்யவருபவர்களிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு பத்திரம் பதிவு செய்து வந்ததாக புகார் எழுந்தது. அதனை தொடர்ந்து அவர் செங்கல்பட்டுக்கு பணி மாறுதல் செய்யப்பட்டு அங்கு பணிபுரிந்து வருகிறார்.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் பணி புரிந்த காலகட்டங்களில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், பினாமி பெயர்களில் பல இடங்களில் சொத்துக்களையும் வாங்கி குவித்ததாகவும் புகார்கள் எழுந்தது.

    இந்த நிலையில் நேற்று விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசார் தாய் நகரில் கட்டப்பட்டுள்ள அவரது பிரமாண்டமான சொகுசு பங்களாவில் காலை 11 மணி முதல் மாலை 4 வரை சோதனை நடத்தினர்.

    மேலும் பொதுப் பணித்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பொறியாளர் பரமசிவம் தலைமையிலான குழுவினர் சார்பதிவாளர் கட்டியுள்ள சொகுசு பங்களாவை மதிப்பீடு செய்ததாக கூறப்படுகிறது.

    5 மணி நேரம் சார்பதிவாளர் கட்டியுள்ள சொகுசு பங்களாவில் நடைபெற்ற சோதனையால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டது.

    • லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையால் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.
    • லஞ்ச ஒழிப்புத் துறையை ஏவிவிட்டு சோதனை மேற்கொண்டிருக்கும் விடியா திமுக அரசின் இச்செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ., பிரபு வீ்டு மற்றும் தொழில் நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த திடீர் சோதனையால் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.

    இந்நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனைக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கள்ளக்குறிச்சி தொகுதி கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரபு மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, பழிவாங்கும் எண்ணத்தோடு லஞ்ச ஒழிப்புத் துறையை ஏவிவிட்டு சோதனை மேற்கொண்டிருக்கும் விடியா திமுக அரசின் இச்செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

    • கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் இவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை.
    • பிரபுவின் நெருங்கிய உறவினர்கள் வீடு, அவரது தொழில் நிறுவனங்கள் என 9 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    உளுந்தூர்பேட்டை:

    கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பிரபு வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி தொகுதிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக பிரபு கடந்த 2016-21-ல் பதவி வகித்தார். இவரது தந்தை அய்யப்பா அ.தி.மு.க.வின் தியாகதுருகம் முன்னாள் ஒன்றிய செயலாளராக பதவி வகித்தார். இவரது தாயார் தையல்நாயகி அய்யப்பா தியாகதுருகம் ஒன்றியத்தின் முன்னாள் சேர்மனாக பதவி வகித்தார். இதில் பிரபு தமிழ்நாடு, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பல்வேறு பகுதியில் தொழில் நிறுவனங்கள் நடத்தி வருகிறார்.

    கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் இவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. இதனைத் தொடர்ந்து இவர் தினகரன் தலைமையிலான அ.ம.மு.க.வில் இணைந்து போட்டியிட்டார். அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்குமாரிடம் தோல்வி அடைந்தார். இதனைத் தொடர்ந்து அ.ம.மு.க.வில் இருந்து விலகி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வில் மீண்டும் தன்னை இணைத்துக்கொண்டார். இந்த நிலையில் வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள் உள்ளதாக முன்னாள் எம்.எல்.ஏ., பிரபு மீது பல்வேறு புகார்கள் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு வந்தது.

    இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை 5.30 மணி முதல் தியாகதுருகத்தில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ., பிரபு வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

    தொடர்ந்து அவரது பெற்றோர் வசிக்கும் அய்யப்பா வீடு மற்றும் பிரபுவின் நெருங்கிய உறவினர்கள் வீடு, அவரது தொழில் நிறுவனங்கள் என 9 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ., பிரபுவின் வீட்டிலிருந்து கணக்கில் காட்டப்படாத சொத்து ஆவணங்கள், நகை மற்றும் பணம் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.

    லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை தொடர்ந்து நடைபெறும் நிலையில், பெங்களூருவில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ., பிரபுவின் தொழில் நிறுவனங்களிலும் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இந்த திடீர் சோதனையால் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது. மேலும், கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள அ.தி.மு.க. பிரமுகர் பன்னீர்செல்வம் வீட்டில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    • முஹம்மது ஷரீபும் பணத்தை கட்டி விட்டு ரசீதுடன் சென்றபோது சேவுகப்பெருமாள் ஒப்புதல் அளிக்க ரூ.60 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
    • கைதான அதிகாரி சேவுகப்பெருமாளின் வீடு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை விவேகானந்தபுரம் பகுதியில் உள்ளது.

    தேவகோட்டை:

    ராமநாதபுரம் பாரதிநகரை சேர்ந்தவர் முகமது சரீப் (வயது45). இவருக்கு சொந்தமாக கூரியூர் பகுதியில் நிலம் உள்ளது. இதனை வீட்டு மனைகளாக்கி விற்பனை செய்ய முடிவு செய்தார். இதற்காக ராமநாதபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சேவுக பெருமாளிடம் மனு செய்தார்.

    அவர் 8 மனைகளுக்கு வளர்ச்சி கட்டணமாக ரூ.28 ஆயிரத்து 192 மற்றும் வரன்முறை படுத்துதல் கட்டணமாக ரூ.50 ஆயிரத்து 745 ராமநாதபுரம் பாரத ஸ்டேட் வங்கியில் பணம் செலுத்தி ரசீது கொண்டு வரும்படி கூறியுள்ளார்.

    அதன்படி முஹம்மது ஷரீபும் பணத்தை கட்டி விட்டு ரசீதுடன் சென்றபோது சேவுகப்பெருமாள் ஒப்புதல் அளிக்க ரூ.60 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.

    போலீசாரின் அறிவுரைப்படி லஞ்ச பணத்தை கொடுக்க முயன்றபோது சேவுகப்பெருமாளை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

    கைதான அதிகாரி சேவுகப்பெருமாளின் வீடு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை விவேகானந்தபுரம் பகுதியில் உள்ளது. நேற்று இரவு முதல் அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இன்று காலை அங்கு லஞ்ச ஒழிப்பு துறையினர் வருவாய்த்துறை முன்னிலையில் வீட்டில் சோதனை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சேவுகப்பெருமாள் வருகிற அக்டோபர் மாதம் பணியில் இருந்து ஓய்வு பெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • சத்யாவின் கணவர் பன்னீர்செல்வம் மீதான மோடி வழக்கு தொடர்பாக சோதனை நடைபெற்று வருகிறது.
    • 2011-2016 வரை சத்யாவின் கணவர் பன்னீர்செல்வம் பண்ருட்டி நகராட்சி தலைவராக செயல்பட்டு வந்தார்.

    பண்ருட்டி:

    பண்ருட்டி அதிமுக முன்னாள் சட்டசபை உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    சத்யாவின் கணவர் பன்னீர்செல்வம் மீதான மோடி வழக்கு தொடர்பாக சோதனை நடைபெற்று வருகிறது.

    2011-2016 வரை சத்யாவின் கணவர் பன்னீர்செல்வம் பண்ருட்டி நகராட்சி தலைவராக செயல்பட்டு வந்தார்.

    பன்னீர்செல்வம் நகராட்சி தலைவராக இருந்தபோது இருசக்கர வாகன நிறுத்துமிடம் டெண்டரில் ரூ.20 லட்சம் மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    • சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சொத்துக்களை தற்போதைய சூழலில் மீண்டும் முடக்க வேண்டிய அவசியம் இல்லை.
    • சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு தவறாக இருந்தாலும் நீண்ட காலம் ஆகிவிட்டதால் தலையிட முடியாது.

    சென்னை:

    வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் பொன்முடி குற்றவாளி என கடந்த செவ்வாய்கிழமை அறிவிக்கப்பட்ட நிலையில் அவருக்கும், அவரது மனைவிக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.

    மேலும் இருவருக்கும் தலா ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று கூறியும், தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்நிலையில், பொன்முடியின் முடக்கப்பட்ட சொத்துக்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. அதில்:-

    சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சொத்துக்களை தற்போதைய சூழலில் மீண்டும் முடக்க வேண்டிய அவசியம் இல்லை. சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு தவறாக இருந்தாலும் நீண்ட காலம் ஆகிவிட்டதால் தலையிட முடியாது. மீண்டும் முடக்குவதற்கான நடவடிக்கை எடுக்க தள்ளுபடி உத்தரவு தடையாக இருக்காது. இதனால் இந்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதி தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 3 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டதுடன், 50 லட்சம் ரூபாய் அபராதம்.
    • மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்கள் தண்டனை நிறுத்தி வைப்பு.

    வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், 50 லட்சம் ரூபாய் அபாரதம் விதித்து, அபராதம் கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேல்முறையீடு செய்யும் வகையில் ஒரு மாதம் காலஅவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒருமாதம் கழித்து விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

    எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி. பதவிகளில் இருப்பவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றால் அவர்கள் பதவி இழக்க நேரிடும். மேலும் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. மேல்முறையீடு வழக்கில் தீர்ப்பு நிறுத்தி வைத்தால் மட்டுமே பதவி பறிப்பு திரும்ப பெறப்படும்.

    இந்த நிலையில் தமிழகத்தில் அமைச்சராக இருந்து பதவி இழக்கும் 3-வது நபர் இவராவார். இதற்கு முன் அதிமுக முதலமைச்சராக இருந்த மறைந்த ஜெயலலிதா கர்நாடக நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்றார். இதனால் அவரது அமைச்சர் பதவியை இழந்தார்.

    அதேபோல் பாலகிருஷ்ண ரெட்டி அதிமுக ஆட்சியின்போது அமைச்சராக இருந்தபோது சிறைத்தண்டனை பெற்று அமைச்சர் பதவியை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி இன்று தீர்ப்பளித்தார்.
    • தண்டனை மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டதால் பொன்முடியின் எம்.எல்.ஏ. பதவி பறிபோகிறது.

    வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றவாளி என கடந்த செவ்வாய்கிழமை அறிவிக்கப்பட்ட நிலையில் அவருக்கும், அவரது மனைவிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி இன்று தீர்ப்பளித்தார்.

    தீர்ப்பு நிறுத்தி வைக்காமல் தண்டனை மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டதால் பொன்முடியின் எம்.எல்.ஏ. பதவி பறிபோகிறது. தண்டனை விவகாரம் தொடர்பாக சட்டசபை செயலாளருக்கு தகவல் அனுப்பி வைக்கப்படும். இதை தொடர்ந்து பொன்முடி எம்.எல்.ஏ. பதவியை இழந்தார் என அறிவிக்கப்பட்டு அவர் போட்டியிட்டு தொகுதி காலியானதாக அறிவிக்கப்படும். 

    இதனால், உயர்கல்வித்துறை அமைச்சர் என்கிற இலாகாவும் பொன்முடியிடம் இருந்து பறிப்போகிறது. இந்நிலையில், பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருக்கும் அன்பில் மகேஷூக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதன்படி, பள்ளி கல்வித்துறை இலாகாவுடன் கூடுதலாக உயர்கல்வித்துறை பொறுப்பும் அமைச்சர் அன்பில் மகேஷூக்கு வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2015-ம் ஆண்டு விழுப்புரம் லஞ்ச ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது.
    • பொன்முடிக்கும் அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

    * தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியின் போது 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி.

    * பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2011-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு கன்னியப்பன் வழக்கு தொடர்ந்தார்.

    * வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

    * 2015-ம் ஆண்டு விழுப்புரம் லஞ்ச ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. நீதிபதி சுந்தரமூர்த்தி முன்பு வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் ரூ.1 கோடியே 36 லட்சத்திற்கு மேல் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறப்பட்டிருந்தது.

    * சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது. ஆந்திர மாநில பத்திர பதிவுத்துறை தாசில்தார் மற்றும் வங்கி அதிகாரிகள் உட்பட 39 சாட்சிகளிடம் விசாரணை நடந்தது. பொன்முடி மீது போலீஸ் தரப்பில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் வழங்கப்பட்டன. இதை பொன்முடி தரப்பினர் மறுத்தனர்.

    * இருதரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதி கடந்த 2016-ம் ஆண்டு அளித்த தீர்ப்பில், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. அதனால் அவர்களை விடுதலை செய்கிறேன் என்று கூறியிருந்தார்.

    * பொன்முடியின் விடுதலை எதிர்த்து ஐகோர்ட்டில் 2017-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் மேல்முறையீடு செய்தனர்.

    * மேல்முறையீடு மனு மீதான விசாரணை நீண்ட நாள் நிலுவையில் போடப்பட்டு இருந்தது.

    * மீண்டும் வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி ஜெயச்சந்திரன், பொன்முடியும், அவரது மனைவியும் வருமானத்துக்கு அதிகமாக 64.90 சதவீதத்துக்கு சொத்து சேர்த்துள்ளனர். அதனால், அவர்களை விடுதலை செய்து சிறப்பு கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்கிறேன். அவர்கள் இருவரையும் குற்றவாளிகள் என்று முடிவு செய்கிறேன் என கடந்த 19-ந்தேதி தெரிவித்தார்.

    * இதைத்தொடர்ந்து இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. அதில் பொன்முடிக்கும் அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.




    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இருவருக்கும் தலா ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
    • 30 நாட்கள் கழித்து விழுப்புரம் நீதிமன்றத்தில் சரண் அடைய வேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.

    சென்னை:

    வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றவாளி என கடந்த செவ்வாய்கிழமை அறிவிக்கப்பட்ட நிலையில் அவருக்கும், அவரது மனைவிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி இன்று தீர்ப்பளித்தார்.

    மேலும் இருவருக்கும் தலா ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும். மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்கு தண்டனையை நிறுத்தி வைக்க நீதிபதி உத்தரவிட்டார். 30 நாட்கள் கழித்து விழுப்புரம் நீதிமன்றத்தில் சரண் அடைய வேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.

    தீர்ப்பு நிறுத்தி வைக்காமல் தண்டனை மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டதால் பொன்முடியின் எம்.எல்.ஏ. பதவி பறிபோகிறது. தண்டனை விவகாரம் தொடர்பாக சட்டசபை செயலாளருக்கு தகவல் அனுப்பி வைக்கப்படும். இதை தொடர்ந்து பொன்முடி எம்.எல்.ஏ. பதவியை இழந்தார் என அறிவிக்கப்பட்டு அவர் போட்டியிட்ட தொகுதி காலியானதாக அறிவிக்கப்படும்.

    • அமைச்சர் பொன்முடி பயணித்த காரில் தேசியக்கொடி அகற்றப்பட்டது.
    • விசாலாட்சிக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

    சென்னை:

    வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றவாளி என கடந்த செவ்வாய்கிழமை அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார்.

    மேலும், லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கில் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது. பொன்முடியும், அவரது மனைவியும் வருமானத்துக்கு அதிகமாக 64.90 சதவீதத்துக்கு சொத்து சேர்த்துள்ளனர். அதனால், அவர்களை விடுதலை செய்து சிறப்பு கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்கிறேன். அவர்கள் இருவரையும் குற்றவாளிகள் என்று முடிவு செய்கிறேன். அவர்களுக்கு தண்டனை வழங்குவதற்காக நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நேரில் ஆஜராக வேண்டும். ஒருவேளை ஏதாவது இடையூறு இருந்தால், இருவரும் ஆன்லைன் வாயிலாக ஆஜராகலாம் என தெரிவித்தார்.

    அதன்படி, இன்று தண்டனை விவரம் வழங்கவுள்ள நிலையில், சைதாப்பேட்டை இல்லத்தில் இருந்து அமைச்சர் பொன்முடியும், அவரது மனைவியும் நீதிமன்றத்தில் ஆஜராக புறப்பட்டனர். அப்போது அமைச்சர் பொன்முடி பயணித்த காரில் தேசியக்கொடி அகற்றப்பட்டது.


    தீர்ப்பை வாசித்த நீதிபதி, அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், விசாலாட்சிக்கும், பொன்முடிக்கும் தலா ரூ.50 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார்.

    ×