search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேருந்து நிலையம்"

    • 60 வயது பூர்த்தியடைந்த மூத்தக் குடிமக்களுக்கான கட்டணமில்லா பயண அட்டை.
    • மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

    கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில், வரும் பிப்.1ம் தேதி முதல் மாநகர் போக்குவரத்துக் கழக மாதாந்திர சலுகை பயணச்சீட்டு விற்பனை மையம் செயல்படும் என மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், கடந்த 30.12.2023 அன்று புதிதாக திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில், பொதுமக்கள் நலன் கருதி, 01.02.2024 முதல் மாநகர் போக்குவரத்துக் கழக மாதாந்திர சலுகை பயணச்சீட்டு விற்பனை மையம் செயல்பட உள்ளது.

    இப்பயணச்சீட்டு விற்பனை மையத்தில், விருப்பம்போல் பயணம் செய்யக்கூடிய ரூ.1000 மதிப்பிலான பயண அட்டை (ஒவ்வொரு மாதமும் 16-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 15-ஆம் தேதி வரை), மாதாந்திர சலுகை பயண அட்டை (மாதந்தோறும் 1-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை) மற்றும் 50% மாணவர் சலுகை பயண அட்டை (ஒவ்வொரு மாதமும் 11-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 10-ஆம் தேதி வரை) பயணம் செய்யக்கூடிய பயணச்சீட்டுகள் மாதந்தோறும் 1 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை வழங்கப்படும்.

    மேலும், 60 வயது பூர்த்தியடைந்த மூத்தக் குடிமக்களுக்கான கட்டணமில்லா பயண அட்டையுடன் 10 எண்ணிக்கை கொண்ட டோக்கன்கள். மா.போ.கழக கிளாம்பாக்கம் பணிமனையிலும் வழங்கப்படும்.

    எனவே, பயணிகள் இதனை பயன்படுத்தி, கிளாம்பாக்கம் மாநகர் போக்குவரத்துக் கழக மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையத்தில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • பேருந்து நிலையத்தில் வெளிப்படையாக முகம் சுழிக்கும் வகையில் ஆபாசமாக காதல் செய்து வருகின்றனர்.
    • பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆபாசமாக நடந்து கொள்ளும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து தங்களது ஊர்களுக்கு செல்ல பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் ஏராளமானோர் தினமும் பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். மேலும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கல்லூரி மாணவர்களில் சில காதல் ஜோடிகள் பேருந்து நிலையத்தில் வெளிப்படையாக முகம் சுழிக்கும் வகையில் ஆபாசமாக காதல் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் பேருந்து நிலையத்தின் மையப்பகுதியில் காதல் ஜோடிகள் அத்துமீறியதை கண்ட பொதுமக்கள் பாதுகாப்புக்கு நின்ற போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் நேரடியாக சென்று பார்த்த போதும் போலீசார் வருவது கூட தெரியாமல் கல்லூரி காதல் ஜோடி முத்தமழை பொழிந்து கொண்டிருந்தனர். இருவரையும் பிடித்த போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். மேலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆபாசமாக நடந்து கொள்ளும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர். இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    • பொதுமக்கள் திரளானோர் பார்வையிட்டனர்
    • பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கியது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வடசேரி பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொது மக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப் படக்கண்காட்சி நடை பெற்றது.

    இதில் முதல்- அமைச்ச ரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்கும் திட்டம், மக்களை தேடி மருத்துவம், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளு படி திட்டம், நரிக்குரவர்கள் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை யினால் பாதிக்கப்பட்ட இடங்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப் பட்டதை நேரில் பார்வை யிட்டது. இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டம், விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டம், கலை ஞரின் வரும்முன் காப்போம் திட்டம், நமக்கு நாமே திட்டம் மற்றும் நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம், காணி பழங்குடியி னர்களுக்கு நிலஉரிமை ஆணை வழங்கியது உள்ளிட்ட பல்வேறு துறை களின் சார்பில் முதல்-அமைச்சரால் வழங்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியின்போது கால மானவர்களின் வாரி சுதாரர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கியது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கியது. காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம் குறித்தும், பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் காட்சிப் படுத்தப்பட்டது.

    மேலும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் நலத் திட்ட உதவிகள் வழங்கியது. மாநில அளவிலான விளை யாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தது உள்ளிட்ட பல்வேறு திட்டங் கள் குறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக அமைக்கப் பட்டிருந்த புகைப்பட கண் காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்து கொண்டு பயன்பெற்றனர்.

    • பேருந்து நிலையம் அருகே ரவுண்டானாவும் அமைக்கப்பட்டது.
    • புதிய பேருந்து நிலைய வளாகத்தில் அடிப்படை வசதிகளான கழிவறை , குடிநீர் உள்ளிட்ட வசதிகளை செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    உடுமலை:

    உடுமலை நகராட்சி பொள்ளாச்சி- பழனிச்சாலையில் மத்திய பேருந்து நிலையம் அமைந்துள்ளது. தினசரி இங்கு நூற்றுக்கணக்கான பேருந்துகள் வந்து செல்கின்றன.நகரப்பேருந்துகள் மட்டுமின்றி வெளியூர் பேருந்துகள், வெளி மாவட்டங்கள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. கோவை- பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாண மாணவ, மாணவிகள் தினசரி இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தான் செல்கின்றனர்.

    இது தவிர வேலைக்கு செல்பவர்கள், வியாபாரம் நிமித்தமாக வெளியூர்களுக்கு செல்பவர்கள் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தினர், சுற்றுலா பயணிகள் பழனி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் என தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் உடுமலை பஸ் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகளை நிறுத்துவதற்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டதால் அருகில் உள்ள வி.பி.புரத்தில் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது இதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பு அங்கிருந்த குடியிருப்புகள் அகற்றப்பட்டு அங்கு வசித்தவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டது. பின்னர் பல ஆண்டுகளாக எந்த பணியும் மேற்கொள்ளப்படாமல் இருந்தது. பேருந்து நிலையம் அருகே ரவுண்டானாவும் அமைக்கப்பட்டது.

    இந்நிலையில் வி.பி.புரத்தில் கூடுதல் பேருந்து நிலையம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு நிறைவடைந்துள்ளது. பேருந்து நிலைய வளாகத்தில் சாலை அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.அனைத்து பணிகளையும் உடனடியாக முடித்து பேருந்து நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

    இதன் மூலம் மத்திய பேருந்து நிலையத்தில் நெருக்கடி குறையும். மேலும் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் அடிப்படை வசதிகளான கழிவறை , குடிநீர் உள்ளிட்ட வசதிகளை செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   

    • அரூர் பேருந்து நிலைய வளாகத்தில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.3.62 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் மேம்படுத்தப்பட வுள்ளது.
    • மாற்று பேருந்து நிலையம் இல்லாததால் ஆங்காங்கே சாலையில் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம், அரூர் பேருந்து நிலையத்தின் மேம்பாட்டு பணிகள் குறித்து தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி கடந்த மாதம் ஆய்வு மேற்கொண்டார்.

    அரூர் பேருந்து நிலைய வளாகத்தில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.3.62 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் மேம்படுத்தப்படவுள்ளது.

    இந்த பேருந்து நிலைய வளாகத்தில், பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வாடகைக்கு விடப்பட்டிருந்த கடைகள் அனைத்தும் காலி செய்யப்பட்டுள்ளன.

    தற்போது நவீன வசதியுடன் கூடிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவுள்ளன.

    இதையடுத்து, பேருந்து நிலையத்தின் மேம்பாட்டு பணிகள் குறித்து கடந்த மாதம் மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார்.

    பேருந்து நிலையத்தில் கட்டுமான பணிகள் நடைபெறும்போது அரூரில் தற்காலிக பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடம் குறித்தும் கலெக்டர் கேட்டறிந்தார்.

    அதன் பிறகு அரூர் பேரூராட்சி நிர்வாகம் மாற்று பேருந்து அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ளாமல் நேற்று திடீரென்று அரூர் பேருந்து நிலையம் இடிக்கும் பணி துவங்கியதால் சென்னை, வேலூர், சேலம், கோயம்புத்தூர், தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகள் மாற்று பேருந்து நிலையம் இல்லாததால் ஆங்காங்கே சாலையில் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    அதேபோன்று பேருந்தில் வரும் பயணிகள் எங்கே பேருந்து நிலையம் எங்கே செல்வது என்று புரியாமல் தவித்து வருகின்றனர்.

    பயணிகள் அந்தந்த பகுதிகளுக்கு செல்ல ஏதுவாக மாற்று பேருந்து நிலையம் அமைத்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பேருந்துகள் வந்து செல்லாததால் ஆலங்குடி பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது
    • பல லட்சம் ரூபாய் செலவு செய்து கட்டப்பட்டது வீண்

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை மற்றும் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. ஆலங்குடி பேருந்து நிலையத்தில் கடைகள், பயணிகள் இருக்கை வசதி, தண்ணீர் வசதி போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் காத்திருந்து பேருந்துகளில் பயணம் செய்ய ஏதுவாக உள்ளது. ஆனால் அதிகமான பேருந்துகள் பேருந்து நிலையத்திற்கு வருவதில்லை. கறம்பக்குடி, வெட்டன் விடுதி, மழையூர் போன்ற பகுதிகளில் இருந்து புதுக்கோட்டை செல்லும் பேருந்துகள் முற்றிலுமாக பேருந்து நிலையத்திற்கு செல்வதில்லை.

    அதே போல் புதுக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டை, கறம்பக்குடி, பேராவூரணி, கொத்தமங்கலம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளில் பல பேருந்துகள் பேருந்து நிலையத்திற்கு செல்லாமல் பாதி வழியிலேயே பயணிகளை இறக்கி விட்டு சென்று விடுகின்றனர். இதனால் பேருந்து நிலையத்தில் காத்திருந்தால் பேருந்தில் ஏற முடியாது என்று பயணிகள் அரசமரம் பஸ் ஸ்டாப், வடகாடு முக்கம் பஸ்ஸ்டாப் என கடும் வெயிலில் காத்திருந்து , அங்கு வரும் பேருந்துகளில் ஏறி பயணம் செய்கின்றனர்.

    இவ்வாறு பயணிகள் வேறு பகுதிகளுக்கு சென்று பேருந்துக்காக காத்திருப்பதால், ஆலங்குடி பேருந்து நிலையம் பயணிகள் கூட்டம் இன்றி வெறிச்சோடி கிடக்கின்றது. இது குறித்து பலமுறை பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் அரசு போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்களை அழைத்து இரவு பகல் எந்த நேரமும் அனைத்து பேருந்துகளும் ஆலங்குடி பேருந்து நிலையத்திற்கு சென்று வர வேண்டுமென உத்தரவிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ரூ. 17 லட்சம் மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை.
    • பயன்பாட்டிற்கு கொண்டு வருவதுடன் பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்வதையும் உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்தனர்.

    அரூர்,

    அரூர் அடுத்த தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. எனவே தினந்தோறும் அதிக அளவிலான பக்தர்கள் இங்கு வந்து செல்வர்.

    அத்துடன் திருவண்ணாமலை பேருந்துகளும் இந்த வழியாக சென்று வருகிறது. சாலையில் பேருந்தை நிறுத்தி பயணிகளை இறக்கி ஏற்றி செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை கருத்தில் கொண்டு 2013ல் ரூ. 17 லட்சம் மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.

    ஆனால் இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை. இது குறித்த பொதுமக்கள் கூறுகையில், பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை.

    இதனால் அரசு, தனியார் பேருந்துகள் சாலையிலேயே நின்று சென்றுவிடுகிறது, பேருந்திற்கு காத்திருக்கும் பயணிகள் வெயில், மழையில் சாலையிலேயே காத்திருக்க நேரிடுகிறது. இத்துடன் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

    தற்போது அந்த பேருந்து நிலையம் சுற்றுலா வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறியுள்ளது. எனவே பேருந்து நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதுடன் பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்வதையும் உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்தனர்.

    • கறம்பக்குடி பேருந்து நிலையத்தில் 16 கடைகள் ஏலம் விடப்பட்டது.
    • கட்டப்பட்டு 4 வருடம் கழித்து நடந்தது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அறிஞர் அண்ணா பேருந்து நி லையம் கட்டப்பட்டு நான்கு வருடங்கள் ஆன நிலையில் திறக்கப்படா மல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.இது சம்பந்தமாக தமிழக அரசுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வ லர்கள் விரைவில் பேருந்து நிலையத்தை திறக்க கோரிக்கை வைத்தனர்.

    பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப இன்று பேருந்து நிலையத்தி ல் உள்ள 16 கடைகள் பேரூராட்சி அலுவலகத்தில் ஏலம் விடப்பட்டன. ஏல தாரர்கள் டோக்கன் அடிப்படையில் உள்ளே அனுமதிக்கபட்டனர்.

    அரசால் நிர்ணயிக்கப்பட்ட ரூ.3000 வாடகைக்கு குறையாமல் உச்சபட்ச ஏலத்தொகையான ரூ.10,100 வரை ஏலம் விடப்பட்டன. ஏலமானது துவக்கத்தில் சலசலப்புடன் ஆரம்பித்து இறுதியில் சுமூகமாக நிறைவுற்றது.

    இந்நிகழ்ச்சியில் கறம்பக்குடி வட்டாட்சியர் ராமசாமி, பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன், பேரூராட்சி தலைவர் முருகேசன், வருவாய் ஆய்வாளர் ரவிக்குமார், மற்றும் பல அரசு அதிகாரிகள் பங் கேற்றனர்.

    மேலும் பேருந்து நிலையம் எப்பொழுது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் அப்பகுதி பொதுமக்கள். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

    • பேருந்து நிலையத்திலிருந்து பஸ்கள் வெளியில் செல்லும் பகுதிக்கு இடையூறாக இருப்பதாகவும் பொதுமக்களிடமிருந்து பேரூராட்சி நிர்வாகத்துக்கு புகார் வந்த வண்ணம் இருந்தன.
    • பஸ் நிலையத்தில் பஸ்கள் இருந்து வெளியில் வரும் பஸ்கள் பிரதான சாலைக்கு திரும்பும் இடத்தில் வளைவு ஒன்று கட்டப்பட்டுள்ளது.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளியில்அமைந்துள்ள பஸ் நிலையத்தில் பேரூராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் உணவகம் ஒன்று செயல்பட்டு வந்தது.பேரூராட்சியால் ஏலம் விடப்பட்டு ஏலதாரர் நடத்தி வந்த இந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்து இருந்ததாலும், பேருந்து நிலையத்திலிருந்து பஸ்கள் வெளியில் செல்லும் பகுதிக்கு இடையூறாக இருப்பதாகவும் பொதுமக்களிடமிருந்து பேரூராட்சி நிர்வாகத்துக்கு புகார் வந்த வண்ணம் இருந்தன.

    இது குறித்து பேரூராட்சி நிர்வாகம் கட்டிட ஆய்வாளர்களிடம் கட்டிடத்தின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்ய கேட்டுக் கொண்டது. கட்டிடத்தின் உறுதித் தன்மையை ஆய்வு செய்த பொறியாளர் குழு கட்டிடம் பழுதடைந்து நிலையில் உள்ளதாகவும், இந்த இடித்து அகற்றப்பட வேண்டும் என்று அறிக்கை சமர்ப்பித்தது.இதன் அடிப்படையில் கட்டிடத்தில் உள்ள உணவகத்தை மூடுமாறு பேரூராட்சி நிர்வாகம் உத்தரவிட்டு, அதன்படி உணவக கட்டிடம் பூட்டப்பட்டிருந்தது.

    இந்நிலையில் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி பஸ் நிலையத்தில் இருந்த பேரூராட்சிக்கு சொந்தமான கட்டிடம் நேற்று இடித்து அகற்றும் பணி நடைபெற்றது.

    பேரூராட்சி செயல்அலுவலர் நெடுஞ்செழியன், பேரூராட்சி தலைவர் மெய்யழகன், ஆகியோர் மேற்பார்வையில் திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் பாதுகாப்பில் இரண்டு பொக்லின் இயந்திரங்களைக் கொண்டு கட்டிடம் முழுவதுமாக இடிக்கப்பட்டது.

    கட்டிடம் இடிக்கப்படுவதை ஒட்டி நேற்று காலை முதல் பேருந்து நிலையத்திற்குள் பஸ்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை. பயணிகள் பஸ்கள் அனைத்தும் பேருந்து நிலையத்திற்கு எதிரில் இருந்த சாலையில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி சென்றன.இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

    கட்டிட இடிப்பு குறித்து பேரூராட்சிசெயல் அலுவலர்நெடுஞ்செழியனிடம் கேட்ட போது பேரூராட்சிக்கு சொந்தமான கட்டிடம் சிதிலமடைந்த நிலையில் உள்ளதை அடுத்து இடித்து அகற்றப்பட்டது.

    பஸ் நிலையத்தில் உள்ள பயணிகள் காத்திருக்கும் பகுதியில் இனி எந்த ஒரு சிறு வணிக கடைகளுக்கும் வைப்பதற்கு அனுமதி கிடையாது.அதில் தற்போது இருக்கும் அனைத்து கடைகளையும் அகற்ற கூறப்பட்டுள்ளது.

    அகற்றப்பட்டவுடன் அந்த இடங்களில் பயணிகள் அமர்வதற்கான வசதி செய்து கொடுக்கப்படும் என்று செயல் அலுவலர் தெரிவித்தார். திருக்காட்டுப்பள்ளி பஸ் நிலையத்தில் பஸ்கள் இருந்து வெளியில் வரும் பஸ்கள் பிரதான சாலைக்கு திரும்பும் இடத்தில் வளைவு ஒன்று கட்டப்பட்டுள்ளது.

    இதுவும் பஸ்கள் திரும்புவதற்கு சற்று சிரமத்தை ஏற்படுத்தும்வகையில் உள்ளது.எனவே இந்த வளைவையும் இடித்து அகற்றுவதற்கும், அதை வளைவின் அருகில் உள்ள மின்சார கம்பத்தை நகர்த்தி வைப்பதற்கும் பேரூராட்சி நிர்வாகம் ஆவனசெய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குன்னத்தில் ரூ.40 லட்சத்தில் புதிய பேருந்து நிலையம் கட்ட அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
    • திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

    பெரம்பலூர், ஜூலை.15-

    தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் ரூ.40 லட்சம் செலவில் புதிய பேருந்து நிலையம் கட்ட அடிக்கல் நாட்டினார். அதனை உள்ள தொடர்ந்து பெருமத்தூர் குடிகாடு சமத்துவபுரம் தார்ச்சாலை திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

    பின்னர் திருமாந்துறை ஊராட்சி நோவா நகர் பகுதியில் பகுதி நேர நியாய விலைக்கடையினை திறந்து வைத்தார். இதையடுத்து பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான லெப்பைக்குடிகாடு-ஆத்தூர் புதிய வழித்தட பேருந்து சேவையினை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் துவக்கி வைத்தார். அதேபோல் அத்தியூர்- குடிகாடுதார் சாலை திட்டப்பணிகளையும் தொடங்கி வைத்தார்.

    இதேபோல், அகரம் சீகூரில் பகுதி நேர நியாய விலைக்கடை அகரம்சீகூர் ஊராட்சி கருப்பட்டாங்குறிச்சி பகுதியில் பள்ளிக் கட்டிடத்திற்கு அடிக்கல், கீழப்பெரம்பலூர் ஊராட்சி வேள்விமங்கலத்தில் புதிதாக கட்டப்பட்ட சமுதாயக்கூடம் ஆகியவற்றையும் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று காலை திறந்துவைத்தார்.

    நிகழ்ச்சிகளில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ராஜேந்திரன், குன்னம் தாசில்தார் அனிதா, வேப்பூர் யூனியன் தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×