search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜாஸ் பட்லர்"

    • ஐபிஎல் தொடரில் 85 இன்னிங்சில் ஒரு முறை டக் அவுட்டான பட்லர் கடந்த 10 போட்டிகளில் 5 முறை டக் அவுட்டாகியுள்ளார்.
    • நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜோஸ் பட்லர் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

    ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் பிளே ஆஃப் சுற்றுக்காக போராடி வருகின்றன. ஏற்கனவே டெல்லி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிவிட்டன.

    இதையடுத்து கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்த பஞ்சாப் கிங்ஸ் அணி, நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது.

    பின்னர் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜோஸ் பட்லர் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 50 ரன்னில் வெளியேறினார். தேவ்தத் படிக்கல் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் 19.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாத்தில் வெற்றி பெற்றது.

    இந்தப் போட்டியில் ஜாஸ் பட்லர் டக் அவுட்டானது மூலமாக ஒரு சீசனில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்களில் முதல் இடத்தை பிடித்துள்ளார். இந்த சீசனில் 5 முறை டக் அவுட் ஆகியுள்ளார். இந்த சீசனில் அவர் 392 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் 85 இன்னிங்சில் ஒரு முறை டக் அவுட்டான பட்லர், கடந்த 10 போட்டிகளில் 5 முறை டக் அவுட்டாகியுள்ளார்.

    கடந்த ஐபிஎல் சீசனில் ஆரஞ்சு கேப் இவர் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்தது.
    • ராஜஸ்தான் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஐபிஎல் தொடரின் 3-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 203 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ராஜஸ்தான் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி பீல்டிங்கின் போது சஞ்சு சாம்சனிடம் நான் ஓவர் போடவா போடவா என பட்லர் சைகை காட்டிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • நவம்பர் மாத சிறந்த வீராங்கனையாக பாகிஸ்தானின் சித்ரா அமீன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • 20 ஓவர் உலக கோப்பையை இங்கிலாந்து அணி கைப்பற்றுவதற்கு ஜாஸ் பட்லர் ஒரு முக்கிய காரணமாக இருந்தார்.

    துபாய்:

    ஐசிசி ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருது வழங்கி வருகிறது. இந்நிலையில், நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கணையை ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி நவம்பர் மாத சிறந்த வீரராக இங்கிலாந்து அணியின் டி20 கேப்டன் கேப்டன் ஜோஸ் பட்லர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    டி20 உலகக்கோப்பையில் அதிரடி காட்டியதுடன் இங்கிலாந்து அணிக்கு இரண்டாவது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்தார். அந்த தொடர் முழுவதும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பட்லர் இந்தியாவிற்கு எதிரான அரையிறுதி போட்டியில் 49 பந்துகளை சந்தித்து 80 ரன்களை சேர்த்து அணி வெற்றி பெறுவதற்கு காரணமாக அமைந்தார்.

    நவம்பர் மாத சிறந்த வீராங்கனையாக பாகிஸ்தானின் சித்ரா அமீன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் அயர்லாந்து அணியை பாகிஸ்தான் அணி வென்றது. இதற்கு சித்ரா அமீன் முக்கிய காரணமாக அமைந்தார்.

    இதேபோன்று 20 ஓவர் உலக கோப்பையை இங்கிலாந்து அணி கைப்பற்றுவதற்கு ஜாஸ் பட்லர் ஒரு முக்கிய காரணமாக இருந்தார். அதனால் இவர்கள் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஐசிசி நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருது அறிவிக்கப்பட்டது குறித்து ஜாஸ் பட்லர் கூறியதாவது-

    நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை பெற, எனக்கு வாக்கு அளித்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விருது எனக்கு மட்டும் சொந்தமானது அல்ல. இங்கிலாந்து அணி வீரர்களே இதற்கு முக்கிய காரணம். நாங்கள் குழுவாக இணைந்து திறமையை வெளிப்படுத்தியதால் தான் எங்களால் 20 ஓவர் உலக கோப்பை வெல்ல முடிந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

    • பென் ஸ்டோக்ஸின் பொறுப்பான பேட்டிங்கால் இலக்கை 19-வது ஓவரில் அடைந்து இரண்டாவது முறையாக டி 20 சாம்பியன் ஆனது.
    • முதல் ஐசிசி தொடரிலேயே சாம்பியன் பட்டம் வென்ற கேப்டனாக ஜோஸ் பட்லர் மாறியுள்ளார்.

    கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த டி 20 உலகக்கோப்பை தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 137 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 138 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை இழந்தாலும் நிதானமாக விளையாடியது. பென் ஸ்டோக்ஸின் பொறுப்பான பேட்டிங்கால் இலக்கை 19-வது ஓவரில் அடைந்து இரண்டாவது முறையாக டி 20 சாம்பியன் ஆனது.

    இந்த வெற்றியின் மூலம் தன் தலைமையேற்ற முதல் ஐசிசி தொடரிலேயே சாம்பியன் பட்டம் வென்ற கேப்டனாக ஜோஸ் பட்லர் மாறியுள்ளார். இதற்கு முன்னர் இதே சாதனையை 2007 ஆம் ஆண்டு இந்திய அண்யின் முன்னாள் கேப்டன் டோனி படைத்திருந்தார். அதே போல ஐசிசி டி 20 கோப்பையை வென்ற விக்கெட் கீப்பர் கேப்டன்களாக பட்லர் மற்றும் டோனி ஆகிய இருவர் மட்டுமே உள்ளனர்.

    • இங்கிலாந்து அணியின் வெற்றிப் பயணம் தொடரும்.
    • இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 நாளை நடக்கிறது.

    இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில் டி20 மற்றும் ஒருநாள் தொடர் நடக்கவுள்ளது. முதலில் டி20 போட்டிகள் நாளை முதல் தொடங்க உள்ளது. இரு அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி சவுத்தம்டனில் நாளை (7-ந் தேதி) நடக்கிறது.

    இந்நிலையில் இந்திய டி20 அணிக்கு இங்கிலாந்து அணியின் புதிய கேப்டனான பட்லர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

    எட்ஜ்பாஸ்டனில் இங்கிலாந்து அணியின் வெற்றி நம்பமுடியாத வகையில் இருந்தது. இந்த டெஸ்ட் அணியில் இருந்து சிறப்பான ஆட்ட நுணுக்கங்களை பெறுவதுடன் இங்கிலாந்து அணியின் வெற்றிப் பயணம் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இங்கிலாந்து அணியின் ஒருநாள் மற்றும் டி20 அணியின் புதிய கேப்டனாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். நெதர்லாந்து அணிக்கு எதிராக பட்லர் தலைமையில் ஆடிய இங்கிலாந்து அணி ஒருநாள் போட்டியில் 498 ரன்கள் எடுத்து வரலாற்று சாதனை படைத்தது. அந்த போட்டியில் இங்கிலாந்து அணி வீரர்கள் 3 பேர் சதம் விளாசியது குறிப்பிடத்தக்கது.

    கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு முன்பு இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்தது இங்கிலாந்து அணி. எச்சரிக்கை விடுத்தது போல டெஸ்ட் போட்டியை வென்றது. நாளை டி20 போட்டி நடக்கவுள்ள நிலையில் இந்திய டி20 அணிக்கு பட்லர் எச்சரிக்கை விடுத்துள்ளார். எச்சரிக்கையை மீறி ரோகித் சர்மா தலைமையிலான அணி இங்கிலாந்தின் கோட்டையை தகர்க்குமா என இந்திய ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

    • நெதர்லாந்து அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் பட்லர் 86 ரன்கள் குவித்தார்.
    • நெதர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 19 சிக்சர்களை பட்லர் அடித்துள்ளார்.

    நெதர்லாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. இதில் இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் நெதர்லாந்து அணியை ஒயிட்வாஷ் செய்தது.

    3-வது ஒருநாள் போட்டியில் நெதர்லாந்து அணி 244 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 30.1 ஓவரில் 248 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் ஜாஸ் பட்லர் 86 ரன்கள் எடுத்தார். இதில் 5 சிக்சர் அடங்கும்.

    கடைசி போட்டியில் 5 சிக்சர்கள் அடித்ததன் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் டோனியின் சாதனையை ஜாஸ் பட்லர் முறியடித்துள்ளார். ஒருநாள் தொடரில் அதிக சிக்சர்கள் அடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை பட்லர் படைத்துள்ளார்.

    நெதர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 19 சிக்சர்களை அடித்ததன் மூலம் பட்லர் முதல் இடத்தை பிடித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி விக்கெட் கீப்பர்கள் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளார். டோனி 2005-ல் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் 17 சிக்சர் அடித்தார். டோனியை தொடர்ந்து 2015-ம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் 16 சிக்சர்களை ஏபி டி வில்லியர்ஸ் அடித்துள்ளார்.

    ×