என் மலர்
கிரிக்கெட் (Cricket)

டி20 போட்டிகளில் அதிவிரைவாக 3,000 ரன்கள்: வரலாற்று சாதனை படைத்த முகமது வாசிம்
- ஓமனுக்கு எதிரான போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் வெற்றி பெற்றது.
- ஐக்கிய அரபு அணி கேப்டன் முகமது வாசிம் 54 பந்தில் 69 ரன்கள் விளாசினார்.
துபாய்:
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஐக்கிய அரபு அமீரகம் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது. கேப்டன் முகமது வாசிம் 54 பந்தில் 69 ரன்கள் விளாசினார்.
அடுத்து ஆடிய ஓமன் அணி 18.4 ஓவரில் 130 ரன்களில் ஆல் அவுட்டானது. இதனால் ஐக்கிய அரபு அமீரகம் அணி 42 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இப்போட்டியில் அரை சதம் அடித்தன் மூலம், முகமது வாசிம் 83 டி20 போட்டிகளில், 37.71 சராசரி, 154.88 ஸ்ட்ரைக் ரேட்டில் 3,000 ரன்களைக் கடந்தார்.
இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் குறைந்த பந்துகளில் அதிவிரைவாக மூவாயிரம் ரன்களை எட்டிய வீரர் என்ற வரலாற்று சாதனையை முகமது வாசிம் படைத்துள்ளார். மேலும், அவர் 1,947 பந்துகளில் 3,000 ரன்களைக் கடந்த ஜாஸ் பட்லர் சாதனையை முறியடித்துள்ளார்.






