search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஒரே சீசனில் அதிக முறை டக் அவுட்.. மோசமான சாதனை படைத்த ஜோஸ் பட்லர்
    X

    ஒரே சீசனில் அதிக முறை டக் அவுட்.. மோசமான சாதனை படைத்த ஜோஸ் பட்லர்

    • ஐபிஎல் தொடரில் 85 இன்னிங்சில் ஒரு முறை டக் அவுட்டான பட்லர் கடந்த 10 போட்டிகளில் 5 முறை டக் அவுட்டாகியுள்ளார்.
    • நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜோஸ் பட்லர் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

    ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் பிளே ஆஃப் சுற்றுக்காக போராடி வருகின்றன. ஏற்கனவே டெல்லி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிவிட்டன.

    இதையடுத்து கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்த பஞ்சாப் கிங்ஸ் அணி, நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது.

    பின்னர் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜோஸ் பட்லர் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 50 ரன்னில் வெளியேறினார். தேவ்தத் படிக்கல் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் 19.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாத்தில் வெற்றி பெற்றது.

    இந்தப் போட்டியில் ஜாஸ் பட்லர் டக் அவுட்டானது மூலமாக ஒரு சீசனில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்களில் முதல் இடத்தை பிடித்துள்ளார். இந்த சீசனில் 5 முறை டக் அவுட் ஆகியுள்ளார். இந்த சீசனில் அவர் 392 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் 85 இன்னிங்சில் ஒரு முறை டக் அவுட்டான பட்லர், கடந்த 10 போட்டிகளில் 5 முறை டக் அவுட்டாகியுள்ளார்.

    கடந்த ஐபிஎல் சீசனில் ஆரஞ்சு கேப் இவர் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×