சஞ்சு சாம்சனிடம் 'நான் ஒரு ஓவர் போடவா' என கேட்ட ஜாஸ் பட்லர்- வைரலாகும் வீடியோ

ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்தது.ராஜஸ்தான் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சஞ்சு சாம்சனிடம் 'நான் ஒரு ஓவர் போடவா' என கேட்ட ஜாஸ் பட்லர்- வைரலாகும் வீடியோ
Published on

ஐபிஎல் தொடரின் 3-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 203 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ராஜஸ்தான் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி பீல்டிங்கின் போது சஞ்சு சாம்சனிடம் நான் ஓவர் போடவா போடவா என பட்லர் சைகை காட்டிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com