search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேப்பாக்கம்"

    • கடற்கரை-சிந்தாதிரிப்பேட்டை மின்சார ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
    • கிரிக்கெட் ரசிகர்கள் வசதிக்காக கூடுதல் ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.

    சென்னை:

    17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நாளை (22-ந்தேதி) தொடங்குகிறது. இரவு 8 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

    ஐபிஎல் போட்டி நடைபெற இருக்கு நிலையில் சிந்தாதிரிப்பேட்டை முதல் வேளச்சேரி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.

    கடற்கரை எழும்பூர் வரையிலான 4வது பாதைக்கான பணிகள் நடைபெறுவதால் பறக்கும் ரெயில் வழித்தடத்தில் கடற்கரை-சிந்தாதிரிப்பேட்டை மின்சார ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

     

    இந்த சூழ்நிலையில் ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதால் மின்சார ரெயிலில் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் வசதிக்காக கூடுதல் ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.

    அதன்படி ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு 22, 26 ஆகிய தேதிகளில் வேளச்சேரி - சிந்தாதிரிப்பேட்டை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    • மார்ச் 22-ம் தேதி ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கவுள்ளது
    • முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

    வரும் 22-ம் தேதி ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

    சிஎஸ்கே அணி சென்னையில் விளையாடும் போட்டிக்கான டிக்கெட் ஆன்லைனில் மட்டுமே வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு டிக்கெட்டுகள் விற்கப்படுவதை தடுக்கவே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது.

    இந்நிலையில், சேப்பாக்கத்தில் நடைபெறும் சென்னை - பெங்களூர் அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 18-ம் தேதி காலை 9:30 மணிக்கு தொடங்குகிறது. குறைந்தபட்ச டிக்கெட் விலை 1700 ரூபாயாகவும் அதிகபட்ச டிக்கெட் விலை 7500 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. PAYTM மற்றும் Insider மூலமாக டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • நாளை முதல் வருகிற 12-ந்தேதி வரை தமிழ்நாடு- கர்நாடகா போட்டி நடைபெறுகிறது
    • தமிழ்நாடு ஐந்து போட்டியில் மூன்றில் வெற்றி பெற்றுள்ளது.

    ரஞ்சி கோப்பைக்கான போட்டிகள் நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அணி தனது 6-வது லீக் போட்டியில் கர்நாடகா அணியை எதிர்த்து நாளை விளையாட இருக்கிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

    இந்த போட்டியில் ரசிகர்கள் இலவசமாக நேரில் கண்டு ரசிக்கலம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

    2023-24 சீசனில் தமிழ்நாடு அணி இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் தமிழ்நாடு மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது. ஒரு போட்டியில் தோல்வியடைந்துள்ளது.

    எலைட் குரூப் "ஜி" பிரிவில் இடம் பிடித்துள்ள தமிழக அணி புள்ளிகள் பட்டியில் முதலிடம் வகிக்கிறது. கர்நாடகா 2-வது இடத்திலும் திரிபுரா 3-வது இடத்திலும் குஜராத் 4-வது இடத்திலும் உள்ளன.

    • 2023-ம் ஆண்டின் முதல் 3 மாதங்கள் இந்தியாவில் நடக்கும் சர்வதேச போட்டிகள் அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டது.
    • சேப்பாக்கத்தில் மார்ச் 22-ம் தேதி இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் ஒருநாள் போட்டியில் மோதுகின்றன.

    மும்பை:

    2023-ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச போட்டிகளின் அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

    இதில் இந்திய அணி இலங்கை, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளது.

    இலங்கைக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

    நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டியிலும் விளையாடுகிறது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள்போட்டியிலும் இந்திய அணி விளையாடுகிறது. இதில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

    இலங்கைக்கு எதிரான தொடர்:

    முதல் டி20 போட்டி : ஜனவரி 3, மும்பை

    2-வது டி20 போட்டி : ஜனவரி 5, புனே

    3-வது டி20 போட்டி : ஜனவரி 7, ராஜ்கோட் .

    முதல் ஒருநாள் போட்டி: ஜனவரி 10, கவுகாத்தி

    2-வது ஒருநாள் போட்டி: ஜனவரி 12, கொல்கத்தா

    3-வது ஒருநாள் போட்டி: ஜனவரி 15, திருவனந்தபுரம் .

    நியூசிலாந்துக்கு எதிரான தொடர்:

    முதல் டி20 போட்டி: ஜனவரி 18 , ஹைதராபாத்

    2-வது டி20 போட்டி: ஜனவரி 21, ராய்பூர்

    3-வது டி20 போட்டி: ஜனவரி 24, இந்தூர்

    முதல் ஒருநாள் போட்டி: ஜனவரி 27, ராஞ்சி

    2-வது ஒருநாள் போட்டி: ஜனவரி 29, லக்னோ

    3-வது ஒருநாள்: பிப்ரவரி 1, அகமதாபாத்

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்:

    முதல் டெஸ்ட்: பிப்ரவரி 9-13, நாக்பூர்

    2-வது டெஸ்ட்: பிப்ரவரி 17-21,டெல்லி

    3-வது டெஸ்ட்: மார்ச் 1-5, தர்மசாலா

    4-வது டெஸ்ட்: மார்ச் 9-13, அகமதாபாத்

    முதல் ஒருநாள்: மார்ச் 17, மும்பை

    2-வது ஒருநாள்: மார்ச் 19, விசாகப்பட்டினம்

    3-வது ஒருநாள்: மார்ச் 22, சென்னை .

    ×