search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீட்டு"

    • தலைமறைவாக உள்ள உரிமையாளர் ராபர்ட் என்கின்ற ராஜனை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
    • சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் போச்சம்பள்ளி போலீஸ் நிலையம் முன்பு குவிக்கப்பட்டனர்.

    மத்தூர்:

    போச்சம்பள்ளியில் தீபாவளி சிறுசேமிப்பு திட்டம் நடத்தி பொருட்கள் கொடுக்காமல் ஏமற்றியதாக தனியார் பைனான்ஸின் மேலாளரை போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வாக்கடை கிராமத்தை சேர்ந்த தங்கராஜ் என்பவரது மகன் ராபர்ட் என்கின்ற ராஜன் மற்றும் அவரது சகோதரி வனிதா ஆகியோர் தனியார் பைனான்ஸ், தனியார் சிட்பண்ட்ஸ், தனியார் டிராவல்ஸ், தனியார் சிறு சேமிப்பு திட்டம், தனியார் தீபாவளி சிறுசேமிப்பு திட்டம், தனியார் சூப்பர் மார்கெட் என பல்வேறு நிறுவனங்களை போச்சம்பள்ளி தலைமையிடமாக கொண்டு நடத்தி வந்தனர்.

    தீபாவளி சிறுசேமிப்பு திட்டம் என்ற பெயரில் கடந்த ஆண்டு சீட்டு நடத்தினார். அதில் நம்ப முடியாத வாக்குறுதிகளை அளித்து விளம்பரப்படுத்தினார். மாதம் ரூ.300 என ஒரு வருடத்திற்கு ரூ.3600 கட்டினால் சுமார் ரூ.9000 மதிப்புள்ள வீட்டு மளிகை பொருட்கள் வழங்கப்படும் என விளம்பரப்படுத்தியிருந்தார். இதனை நம்பிய பொது மக்கள், இந்த ஆண்டு மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இத்திட்டத்தில் இணைந்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மாவடங்களில் இருந்தும் மற்றும் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து இந்த திட்டத்தில் பொது மக்கள் சேர்ந்தனர். பலர் ஏஜென்டுகளாக மாறி தங்களது கிராமத்தில் உள்ள நண்பர்கள், உறவினர்கள் என அனைவரையும் இந்த திட்டத்தில் இணைத்தனர்.

    இதனால் நிறுவனத்திற்கு சுமார் ரூ.9 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டிய நிலையில், தற்போது தீபாவளி வந்தும் பொருட்களை கொடுக்காமல் ஏமாற்றி வந்த நிலையில், கடந்த ஒரு மாத காலமாக பொதுமக்களுக்கு பதில் அளித்து வந்தனர்.

    தினமும் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் 100-க்கும் மேற்பட்டோர் பைனான்ஸ் நிறுவனம் முன்பு காத்திருந்து சென்ற நிலையில், பணத்தை ஏதாவது ஒரு வகையில் திருப்பி கொடுப்பார்கள் என எதிர்பாத்திருந்த பொது மக்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பொது மக்கள் போச்சம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

    அதன்பேரில் இன்று தனியார் பைனான்ஸ் நிறுவனத்தின் மேலாளர் வனிதாவை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள உரிமையாளர் ராபர்ட் என்கின்ற ராஜனை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் வனிதா கைது செய்யப்பட்ட சம்பவம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெரிய வரவே, போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர்.

    அதிகளவில் திரண்ட பொதுமக்களை கட்டுப் படுத்த பர்கூர் சரகத்திற்கு உட்பட்ட பாரூர், நாகரசம்பட்டி, பர்கூர், பர்கூர் மகளிர், போச்சம் பள்ளி ஆகிய போலீஸ் நிலையங்களில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் போச்சம்பள்ளி போலீஸ் நிலையம் முன்பு குவிக்கப்பட்டனர்.

    பின்னர் கைது செய்யப்பட்ட வனிதாவை போச்சம்பள்ளி நீதிமன்றத்தில் ஒப்படைக்க அழைத்து செல்ல முயன்றபோது போலீஸ் வாகனத்தை தடுத்தனர். வாகனம் சென்ற பின்னர் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட பொது மக்கள் போலீஸ் நிலையம் முன்பு போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். பணத்தை பெற்றுத்தர போலீஸ் நடவடிக்கை எடுக்காமல், மேலாளர் வனிதாவுக்கு பாதுகாப்பு அளித்து வருவதாக குற்றம் சாட்டினர். அப்போது அங்கிருந்த பர்கூர் டி.எஸ்.பி. மனோகரன், அவர்களிடம் சமாதான பேச்சுவாரத்தை நடத்தி, பாதிக்கப்பட்ட மக்கள் ஒவ்வொருவராக மனுக்களை அளிக்க கேட்டார். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டு, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.

    இதைத்தொடர்ந்து வனிதாவை போச்சம்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மகளிர் சிறையில் அடைத்தனர்.

    இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தீபாவளி சீட்டு மற்றும் தங்க நகை திட்டங்களை அறிவித்து மோசடி செய்து ஏமாற்றிய உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோஷமிட்டனர்.
    • கடை ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களையும் அவர்களது செல்போன் எண்களை வைத்து தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    சேலம்:

    சேலம் சீலநாயக்கன்பட்டி மற்றும் அம்மாபேட்டை சிங்கமெத்தை பகுதியில் வீராணம் அருகே உள்ள வலசையூர் பகுதியை சேர்ந்த ஒருவர் நகை கடை நடத்தி வருகிறார்.

    இந்த கடையில் தீபாவளி சீட்டு நடத்தியும், மேலும்தங்க நகை சேமிப்பு திட்டம் மற்றும் தங்க நகை முதலீடு போன்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு வாடிக்கையாளர்களிடம் லட்சகணக்கில் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கடை உரிமையாளர் திடீரென தலைமறைவானார். உரிமையாளர் கடையை திறக்க வராததால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சம்பளம் வரும் என எதிர்பார்த்து காத்திருந்த நேரத்தில் ஏமாற்றம் அடைந்ததால் இதுகுறித்து நேற்று மாலை அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தனர்.

    இதனிடையே சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள கடை பூட்டிய நிலையில் இருப்பதால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் கடை முன்பு இன்று காலை முதலே திரண்டனர். பின்னர் தீபாவளி சீட்டு மற்றும் தங்க நகை திட்டங்களை அறிவித்து மோசடி செய்து ஏமாற்றிய உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோஷமிட்டனர். சிலர் கடை மீது கல்வீசி தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    இதையடுத்து அன்னதானப்பட்டி போலீசார் அங்கு விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அங்கு வரும் வாடிக்கையாளர்களையும் அவர்கள் சமரசப்படுத்தி வருகிறார்கள்.

    கடை ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களையும் அவர்களது செல்போன் எண்களை வைத்து தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த கடையின் உரிமையாளர் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கவர்ச்சி திட்டங்கள் மூலம் பல கோடி வசூல் செய்து பணத்தை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்துவிட்டு தலைமறைவானது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அம்மாபேட்டை போலீஸ் நிலையத்திலும் முதலீட்டாளர்கள் புகார் தெரிவித்து உள்ளதால் போலீசார் சபரிசங்கரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • காட்டுப்புத்தூர் சாலையில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
    • தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.

    நாமக்கல்:

    மோகனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளைய சூரியன் தலைமையில் போலீசாா் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்டுப்புத்தூர் சாலையில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது மோகனூர் முத்துராஜா தெருவை சேர்ந்த கனகரத்தினம் (வயது 50) என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    • கிச்சிப்பாளையம் பகுதியை சேர்த்த 2 பேர் கடந்த 10 ஆண்டுகளாக நிதிநிறுவனம் நடத்தி வருகின்றனர். இவரிடத்தில், கிச்சிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள், ரூ.1 லட்சம், ரூ.2 லட்சம் சீட்டு என சுமார் ரூ.4 கோடி அளவிற்கு பணம் கட்டியுள்ளோம்.
    • இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதத்தில் சீட்டு பணம் தருவதாக கூறியதால், அவர்களை சந்திக்க சென்றபோது, அவர்கள் வீட்டை காலி செய்து விட்டு சென்றுவிட்டதாக தகவல் தெரிவித்தனர்.

    சேலம்:

    சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் வந்து, கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    கிச்சிப்பாளையம் பகுதியை சேர்த்த 2 பேர் கடந்த 10 ஆண்டுகளாக நிதிநிறுவனம் நடத்தி வருகின்றனர். இவரிடத்தில், கிச்சிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள், ரூ.1 லட்சம், ரூ.2 லட்சம் சீட்டு என சுமார் ரூ.4 கோடி அளவிற்கு பணம் கட்டியுள்ளோம்.

    இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதத்தில் சீட்டு பணம் தருவதாக கூறியதால், அவர்களை சந்திக்க சென்றபோது, அவர்கள் வீட்டை காலி செய்து விட்டு சென்றுவிட்டதாக தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நாங்கள், இதுகுறித்து கிச்சிபாளையம் மற்றும் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதனால் மாவட்ட கலெக்டரிடம் புகார் அளிக்க வந்துள்ளோம். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, கூலி வேலை செய்து நாங்கள் சிறுக சிறுக சேமித்த பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

    • பரசு–ராமன் அக்ரஹாரம் பகுதி–யில் சிலர் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • சம்பவஇடத்திற்கு சென்ற போலீஸார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கரந்தை பரசுராமன் அக்ரஹாரம் பகுதியில் சிலர் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக மேற்கு போலீசாருக்குதகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

    போலீசார் வருவதை பார்த்ததும் சீட்டு விளையா–டியவர்கள் தப்பி ஓட முயன்றனர்.

    சுதாரித்துக் கொண்ட போலீசார் அவர்கள் 5 பேரை மடக்கி பிடித்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில், தஞ்சை வடக்கு வாசலை சேர்ந்த சசிகுமார் (வயது 40), ராஜேந்திரன் (41), பரிசுத்தம் நகரை சேர்ந்த சுப்ரமணியன் (58), விக்னேஷ் (27), ராகவேந்திரன் (40) என்பதும், பணம் வைத்து சீட்டு விளையா டியதும் தெரிய வந்தது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சசிகுமார், ராகவேந்திரன் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனர்.

    • சத்தியமங்கலம் அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.
    • மேலும் அவரிடமிருந்து 7 லாட்டரி சீட்டுகள் மற்றும் 13 ஆயிரத்து 750 ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் ராஜா நகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சரத்குமார் (28). இவர் சத்தியமங்கலம் அருகே உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    இந்நிலையில் சரத்குமார் அங்குள்ள பேக்கரி கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு அறிமுகமான செல்வம் என்பவர் வந்து 3 இலக்க எண்கள் பேனாவில் எழுதப்பட்ட வெள்ளை சீட்டுகளை காட்டி மேற்படி சீட்டுகளை வாங்கினால் உங்களுக்கு பரிசு நிச்சயம் கிடைக்கும் என்று சொல்லியுள்ளார்.

    அதற்கு சரத்குமார் தன்னிடம் பணமில்லை என்று கூறி வந்துவிட்டார். இதேப்போல் ஏற்கனவே அவர் பலரிடம் லாட்டரி சீட்டில் பணம் விழும் என்று ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி வந்துள்ளார்.

    இதையடுத்து சத்தியமங்கலம் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 7 லாட்டரி சீட்டுகள் மற்றும் 13 ஆயிரத்து 750 ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    ×