லாட்டரி சீட்டு விற்றவர் கைது

சத்தியமங்கலம் அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.மேலும் அவரிடமிருந்து 7 லாட்டரி சீட்டுகள் மற்றும் 13 ஆயிரத்து 750 ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
லாட்டரி சீட்டு விற்றவர் கைது
Published on

சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் ராஜா நகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சரத்குமார் (28). இவர் சத்தியமங்கலம் அருகே உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் சரத்குமார் அங்குள்ள பேக்கரி கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு அறிமுகமான செல்வம் என்பவர் வந்து 3 இலக்க எண்கள் பேனாவில் எழுதப்பட்ட வெள்ளை சீட்டுகளை காட்டி மேற்படி சீட்டுகளை வாங்கினால் உங்களுக்கு பரிசு நிச்சயம் கிடைக்கும் என்று சொல்லியுள்ளார்.

அதற்கு சரத்குமார் தன்னிடம் பணமில்லை என்று கூறி வந்துவிட்டார். இதேப்போல் ஏற்கனவே அவர் பலரிடம் லாட்டரி சீட்டில் பணம் விழும் என்று ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி வந்துள்ளார்.

இதையடுத்து சத்தியமங்கலம் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 7 லாட்டரி சீட்டுகள் மற்றும் 13 ஆயிரத்து 750 ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com