search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிக்கிம்"

    • சிக்கிம் மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெறுவதால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது
    • சிக்கிம் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டார்

    32 உறுப்பினர்களைக் கொண்ட சிக்கிம் சட்டசபைக்கும், மாநிலத்தில் உள்ள ஒரே ஒரு மக்களவைத் தொகுதிக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

    2019 பாராளுமன்ற தேர்தலில் மாநிலத்தில் உள்ள ஒரே ஒரு மக்களவைத் தொகுதியில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா வெற்றி பெற்றது. சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 32 இடங்களில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 17 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது .

    இந்நிலையில், சிக்கிம் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டார்.

    அதில், சிக்கிம் மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெண்களால் நடத்தப்படும் 'அம்மா உணவகம்' என்ற மலிவு விலை உணவகம் திறக்கப்படும் என அறிவித்துள்ளது.

    பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் விவரம் வருமாறு:-

    * சிக்கிம் மாநிலத்தில் ஐ.ஐ.எம். கல்வி நிறுவனம் தொடங்கப்படும்

    * அடுத்த 5 ஆண்டுகளில் சிக்கிமில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு 25,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

    * பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் கீழ், விவசாயிகள் ஆண்டுக்கு வழங்கப்படும் 6,000 ரூபாயை 9,000 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

    • மக்களவை தேர்தலோடு சில மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளது.
    • ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

    இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என நேற்று தலைமை தேர்தல் ஆணையர்கள் ராஜீவ் குமார் அறிவித்தார்.

    அதன்படி, வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கும் தேர்தல் ஜூன் 1-ம் தேதி முடிவடைகிறது.

    மேலும், மக்களவை தேர்தலோடு சில மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளதால், அம்மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டது.

    மக்களவை, சட்டமன்ற மற்றும் இடைத்தேர்லுக்கு ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், அருணாச்சல பிரதேசம், சிக்கிமில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, சட்டப்பேரவைக்கு ஜூன் 4ம் தேதிக்கு பதிலாக ஜூன் 2ம் தேதியே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    மக்களவை தேர்தலுக்கு ஏற்கனவே அறிவித்தபடி ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

    • தலாய் லாமாவை அம்மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங் வரவேற்றார்.
    • பாரம்பரிய புத்த சடங்குடகளுடன் பெரும் வரவேற்பு அளித்தனர்.

    திபெத்திய ஆன்மிகத் தலைவர் 14வது தலாய் லாமா, டென்சின் கியாட்சோ, 13 வருட இடைவெளிக்குப் பிறகு மூன்று நாள் பயணமாக இன்று காலை சிக்கிம் வந்தார்.

    இவர், மூன்று நாள் பயணத்தில் இமாச்சல பிரதேச மாநிலத்தில் தங்கியிருக்கும் போது "போதிசத்துவர்களின் முப்பத்தி ஏழு நடைமுறைகள்" பற்றிய போதனைகளை வழங்குகிறார்.

    கிழக்கு சிக்கிமில் உள்ள லிபிங் ராணுவ ஹெலிபேடில் இன்று காலை 10.30 மணியளவில் தரையிறங்கிய தலாய் லாமாவை அம்மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங் வரவேற்றார்.

    அவருக்கு மாநிலத்தின் பல்வேறு மடங்களின் துறவிகள் 'ஷெர்பாங்' எனப்படும் நடனம் மற்றும் பிரார்த்தனையின் பாரம்பரிய புத்த சடங்குடகளுடன் பெரும் வரவேற்பு அளித்தனர்.

    இதைதொடர்ந்து, தலாய் லாமாவிடம் ஆசி பெற பல்ஜோர் ஸ்டேடியத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் சுமார் 40,000 பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று காங்டாக் எஸ்பி டென்சிங் லோடன் லெப்சா தெரிவித்தார்.

    தலாய் லாமா கடந்த 2010ஆம் ஆண்டு சிக்கிம் சென்றிருந்தார். அதன் பிறகு, கடந்த அக்டோபரில் சிக்கிம் செல்ல திட்டமிடப்பட்டது. ஆனால், பெரும் வெள்ளம் காரணமாக தலாய் லாமாவின் சிக்கிம் பயணம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • காணாமல் போன சுற்றுலாப் பயணிகளை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    • பீகாரில் இருந்து சுற்றுலா பயணி ஒருவர் தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் விடுமுறை கொண்டாட சிக்கிம் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சிக்கிம் மாநிலத்தில் உள்ள ரிட் சூ பாலத்தின் விளிம்பில் நின்றுக் கொண்டு புகைப்படம் எடுக்க முயன்றபோது உள்ளூரைச் சேர்ந்த ஓட்டுனர் ஒருவரும், சுற்றுலா பயணி ஒருவரும் கால் இடறி அடுத்தடுத்து ஆற்றுக்குள் விழுந்தனர். இதில் இருவரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.

    இந்நிலையில், இந்திய திபெத்திய எல்லைக் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில், ஓட்டுனர் சடலமாக மீட்கப்பட்டார். மேலும், காணாமல் போன சுற்றுலாப் பயணிகளை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    பீகாரில் இருந்து சுற்றுலா பயணி ஒருவர் தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் விடுமுறை கொண்டாட சிக்கிம் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சிக்கிம் மாநிலத்தின் புதிய கவர்னராக பீகாரை சேர்ந்த கங்கா பிரசாத் பதவி ஏற்றுக்கொண்டார். #GangaPrasad
    காங்டோக் :

    சிக்கிம் மாநிலத்தின் 16-வது கவர்னராக பீகாரை சேர்ந்த கங்கா பிரசாத் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். ராஜ் பவனில் நடைபெற்ற நிகழ்சியில் அம்மாநில பொருப்பு தலைமை தலைமை நீதிபதி மீனாக்‌ஷி எம்.ராய் தலைமையில் அவர் பதவியேற்றார்.

    சிக்கிம் முதல்வர் பவன் சாம்லிங், அவரது மந்திரி சபை சகாக்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்நிகழ்சியில் பங்கேற்றனர். 

    பீகார் மாநில சட்ட மேலவை உறுப்பினராக 18 ஆண்டுகள் பதவி வகித்த கங்கா பிரசாத், பாரதிய ஜனதா கட்சி சார்பாக சட்ட மேலவையில் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் போது சட்ட மேலவையின் ஆளும் கட்சி தலைவர் போன்ற பதவிகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #GangaPrasad
    ×