search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருத்துக் கணிப்பு"

    • ம.பி.யில் பா.ஜனதா 100 முதல் 123 இடங்களையும், காங்கிரஸ் 102 முதல் 125 இடங்களையும் பெறும் என தெரிய வந்துள்ளது.
    • 86 முதல் 106 இடங்கள் வரை ஆளும் காங்கிரஸ் பெறும் எனவும் பா.ஜனதா 80 முதல் 100 இடங்கள் வரை கைப்பற்றும்

    5 மாநில தேர்தல் வாக்குப்பதிவு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நேற்று வெளியிடப்பட்டது.

    மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் பா.ஜனதாவுக்கும், தெலுங்கானா, சத்தீஸ்காரில் காங்கிரசுக்கும் வெற்றி வாய்ப்பு இருப்பதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறியுள்ளன.

    இந்த நிலையில் கருத்து கணிப்பு குறித்து தலைவர்கள் என்ன கூறுகிறார்கள் என்று பார்ப்போம்...

    ராஜஸ்தான் மாநில மந்திரி மகோஷ ஜோஷி: முழு மெஜாரிட்டியுடன் காங்கிரஸ் ராஜஸ்தானில ஆட்சியமைக்கும். அதுபோக அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும்.

    சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர்: மற்ற மாநிலங்களில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு சிறப்பாக உள்ளது. மத்திய பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் சூழ்நிலைய நன்றாக இருக்கிறது. தெலுங்கானாவில் நாங்கள் 80 சதவீத இடங்களை பிடிப்போம். காங்கிரஸ் 4 மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கும்.

    பா.ஜனதா சீனியர் தலைவர் சரோஜ் பாண்டே (சத்தீஸ்கர்): பா.ஜனதா ஏராளமான வளர்ச்சியை கொடுத்துள்ளது. நாங்கள் எங்கெல்லாம் ஆட்சி செய்து வருகிறமோ, அங்கெல்லாம் ஆட்சி அமைப்போம். அதேபோல் ஆட்சி செய்யாத மாநிலங்களிலும் ஆட்சியை பிடிப்போம். மோடி மீதான நம்பிக்கை மக்கள் காட்டியுள்ளனர்.

    தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி: இது காங்கிரஸ்- பிஆர்எஸ் இடையிலான தேர்தல் அல்ல. 4 கோடி மக்கள் பிஆர்எஸ்-க்கு எதிராக உள்ளனர். இது தெலுங்கானா மக்களின் வெற்றி. முதல் மந்திரிசபை கூட்டத்தில் 6 வாக்குறுதிகளை நிறைவேற்ற அனுமதி பெற்று செயல்படுத்துவோம். நாங்கள் முழு வெற்றி பெறுவோம். இதைத்தான் கருத்துக் கணிப்பு காட்டுகிறது.

    சத்தீஸ்கர் மாநில பா.ஜனதா தலைவர் அருண் சாயோ: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வரையறுக்கப்பட்ட மாதிரி அளவைக் கொண்டுள்ளன. பா.ஜனதா ஆட்சி அமைக்கும்.

    ராபர்ட் வதேரா: நான் கருத்துக் கணிப்பை பெரிய அளவில் நம்பவில்லை. நான் உண்மையான முடிவை நம்புகிறவன். நான் கடந்த சில மாதங்களாக ஏராளமான மக்களை சந்தித்தேன். அவர்கள் விரக்தியில் இருந்தனர். குறிப்பாக மத்திய பிரதேசத்தில். ஆட்சியை கவிழ்த்தது தொடர்பான விரக்தி தெரிந்தது.

    பா.ஜனதா எம்.பி. சாத்வி பிரக்யா சிங் தாகூர்: அனைத்து மாநிலங்களிலும் பா.ஜனதா ஆட்சி அமைக்கும். பா.ஜனதா செய்த பணிக்காக மக்கள் வாக்களித்துள்ளனர்.

    சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் பிரேம் பிரகாஷ் பாண்டே: கருத்துக் கணிப்பு குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை தெரிவிக்கின்றனர். ஆனால், பா.ஜனதா ஆட்சி அமைக்கும். இதற்கு காரணம் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.

    காங்கிரஸ் தலைவர் திக்விஜய சிங்: கருத்துக் கணிப்பு மிகவும் வித்தியாசமாக உள்ளது. நாங்கள் அது குறித்து எந்த கருத்தையும் சொல்ல முடியாது. மத்திய பிரதேசத்தில் 130 தொகுதிகளுக்கு மேல் பிடிக்கும் என்ற உறுதியை என்னால் உங்களுக்கு கொடுக்க முடியும். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். முதல்வர் சிவ்சராஜ் சிங் சவுகான் மீது மக்கள் வெறுப்படைந்துள்ளனர்.

    பா.ஜனதா எம்.பி. ரதோர் (ராஜஸ்தான்): மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். முழு மெஜாரிட்டியுடன் ராஜஸ்தானில் பா.ஜனதா ஆட்சியமைக்கும். கருத்துக் கணிப்பு வரையறுக்கப்பட்ட பகுதிக்கானது. 3-ந்தேதி முடிவு பா.ஜனதாவுக்கு ஆதரவாக இருக்கும்.

    • 5 மாநில சட்டசபை தேர்தல் இன்றுடன் நிறைவு பெற்றது.
    • வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் இன்று வெளியானது.

    ஐதராபாத்:

    மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவடைந்தது.

    தெலுங்கானாவில் மாலை 5 மணி நிலவரப்படி 64 சதவீத வாக்குப்பதிவாகியுள்ள நிலையில் மொத்த வாக்குப்பதிவு விவரம் இன்னும் வெளியாகவில்லை.

    இதற்கிடையே, 5 மாநில தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானது. அதன்படி, தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு ஓங்கும் என தெரிகிறது.

    இந்நிலையில், தெலுங்கானா மந்திரி கே.டி.ராமாராவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கருத்து கணிப்புகள் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. 70 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். மீண்டும் சந்திரசேகர ராவ் முதல் மந்திரி ஆவார். கடந்த 2018- தேர்தலின் போது இதேபோன்று எங்களுக்கு பாதகமான கருத்து கணிப்புகள் வெளியாயின. ஆனால் முடிவு எங்களுக்கு சாதகமாக அமைந்தது. அதேபோல் இம்முறையும் கருத்து கணிப்புகளை பொய்யாக்கி வெற்றி பெறுவோம் என தெரிவித்தார்.

    • தெலுங்கானாவில் மாலை 5 மணி நிலவரப்படி 64 சதவீத வாக்குகள் பதிவானது.
    • மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    ஐதராபாத்:

    மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவடைந்தது.

    தெலுங்கானாவில் மாலை 5 மணி நிலவரப்படி 64 சதவீத வாக்குப்பதிவாகியுள்ள நிலையில் மொத்த வாக்குப்பதிவு விவரம் இன்னும் வெளியாகவில்லை.

    இந்நிலையில், 5 மாநில தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:

    தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

    நியூஸ் 18: பிஆர்எஸ் 48, காங்கிரஸ் 56, பாஜக 10

    ஆரா: பிஆர்எஸ் 41-49, காங்கிரஸ் 58-67, பாஜக 05-07

    இந்தியா டிவி: பிஆர்எஸ்: 31-47, காங்கிரஸ் 63-79, பாஜக 02-04

    சிஎன்என்: பிஆர்எஸ் 48, காங்கிரஸ் 56, பாஜக 10

    இதையடுத்து, தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஓங்கும் என கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

    கருத்துக் கணிப்பு முடிவு இவ்வாறு இருக்கும் சூழலில் வெற்றி யாருக்கு என்பது வாக்கு எண்ணிக்கை நடைபெறும் டிசம்பர் 3-ம் தேதி 1 மணி அளவிலேயே உறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • தெலுங்கானாவில் இன்று மாலையுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
    • டிசம்பர் 3-ம் தேதி வாக்குகள் எண்ணும் பணி நடைபெறுகிறது.

    போபால்:

    மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவடைந்தது.

    தெலுங்கானாவில் மாலை 5 மணி நிலவரப்படி 65 சதவீத வாக்குப்பதிவாகியுள்ள நிலையில் மொத்த வாக்குப்பதிவு விவரம் இன்னும் வெளியாகவில்லை.

    இந்நிலையில், 5 மாநில தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:

    மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. காங்கிரஸ் கட்சி இடையே போட்டி நிலவுகிறது.

    ரிபப்ளிக்: பாஜக 118-130, காங்கிரஸ் 97-107

    டிவி 9: பாஜக 106-116, காங்கிரஸ் 111-121

    ஜன் டிவி பாஜக: 100-123, காங்கிரஸ் 102-125

    பி மார்க் பாஜக: 103-122, காங்கிரஸ் 103-122

    சிஎன்என் பாஜக முன்னிலை

    இதையடுத்து, மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க., காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது என கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

    • மிசோரம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் வாக்குப்பதிவு இன்று நிறைவடைந்தது.
    • வாக்குகள் எண்ணும் பணி டிசம்பர் 3-ம் தேதி நடைபெறுகிறது.

    ராய்ப்பூர்:

    மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவடைந்தது.

    தெலுங்கானாவில் மாலை 5 மணி நிலவரப்படி 65 சதவீத வாக்குப்பதிவாகியுள்ள நிலையில் மொத்த வாக்குப்பதிவு விவரம் இன்னும் வெளியாகவில்லை.

    இந்நிலையில், 5 மாநில தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:

    சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

    இந்தியா டுடே: பாஜக 36-40, காங்கிரஸ் 40-50

    இந்தியா டிவி: பாஜக 30-40, காங்கிரஸ் 46-56

    ஆஜ் தக்: பாஜக 36-46, காங்கிரஸ் 40-50

    ஜன் டிவி பாஜக: 34-45 காங்கிரஸ் 42-53

    இதையடுத்து, சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி முன்னிலைப் பிடித்துள்ளது என கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி-24, இந்தியா கூட்டணி-24-ல் வெற்றி பெறும்.
    • தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி-9, இந்தியா கூட்டணி-30ல் வெற்றி பெறும்.

    புதுடெல்லி:

    இந்தியா டி.வி. மற்றும் சி.என்.எக்ஸ் டி.வி ஆகியவை இணைந்து நாடு முழுவதும் கருத்துக் கணிப்பு நடத்தின. அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அந்த கருத்து கணிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாடு முழுவதும் 543 மக்களவை தொகுதிகள் உள்ளன. தற்போது மக்களவையில் பா.ஜ.க.வுக்கு 303 எம்.பி.க்கள் உள்ளனர்.

    வருகிற மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வின் பலம் குறையக்கூடும். அந்த கட்சி 290 மக்களவைத் தொகுதிகளை கைப்பற்றும்.

    குறிப்பாக உத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் பா.ஜனதா 73-ல் வெற்றி பெறும். குஜராத்தில் மொத்தம் உள்ள 26 தொகுதிகளையும் பா.ஜ.க. கைப்பற்றும்.

    பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இணைந்து வருகிற பாராளுமன்ற தேர்தலில் 318 தொகுதிகளை கைப்பற்றி 3-வது முறையாக மத்தியில் ஆட்சி அமைக்கும்.

    இந்தியா கூட்டணியின் பிரதான கட்சியான காங்கிரஸ் வருகிற பாராளுமன்ற தேர்தலில் 66 தொகுதிகளை கைப்பற்றும். இந்த கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் திரிணாமுல் காங்கிரசுக்கு தற்போது 22 எம்.பி.க்கள் உள்ளனர். வருகிற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 2 தொகுதிகளில் வெற்றி பெறும்.

    இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க.-19, ராஷ்டீரிய ஜனதா தளம்-7, ஐக்கிய ஜனதா தளம்-7, சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு-11, தேசியவாத காங்கிரசின் சரத்பவார் பிரிவு-4, இடதுசாரி கட்சிகள்-8 உள்பட இந்தியா கூட்டணி 175 தொகுதிகளைக் கைப்பற்றும்.

    உத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 8 தொகுதிகளில் பாரதிய ஜனதா கூட்டணி-73 இந்தியா கூட்டணி-7 தொகுதிகளைக் கைப்பற்றும். பீகாரில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி-24, இந்தியா கூட்டணி-16 தொகுதிகளை கைப்பற்றும்.

    மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி-24, இந்தியா கூட்டணி-24-ல் வெற்றி பெறும்.

    தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி-9, இந்தியா கூட்டணி-30ல் வெற்றி பெறும். மேற்கு வங்காளத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி-12, இந்தியா கூட்டணி-30ல் வெற்றி பெறும்.

    கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் பா.ஜனதா கூடடணி-20, இந்தியா கூட்டணி-7ஐ கைப்பற்றும். குஜராத்தில் மொத்தம் உள்ள 26 தொகுதிகளிலும் பா.ஜனதா கூட்டணியே வெற்றி பெறும். இந்தியா கூட்டணிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது.

    கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளையும் இந்தியா கூட்டணியே கைப்பற்றும். பா.ஜனதா கூட்டணிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது. ராஜஸ்தானில் மெத்தம் உள்ள 25 தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி-21, இந்தியா கூட்டணி-4ல் வெற்றி பெறும்.

    ஆந்திராவில் மொத்தம் உள்ள 25 தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி, இந்தியா கூட்டணிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது. அந்த மாநிலத்தில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 18, தெலுங்கு தேசம் 7 தொகுதிகளைக் கைப்பற்றும்.

    ஒடிசாவில் மொத்தம் உள்ள 21 தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி-8, பிஜு ஜனதா தளம் 13-ல் வெற்றி பெறும். இந்தியா கூட்டணிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது.

    மத்திய பிரதேசத்தில் மொத்தம் உள்ள 29 தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி-24, இந்தியா கூட்டணி-5ஐ கைப்பற்றும்.

    தெலுங்கானாவில் மொத்தம் உள்ள 17 தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி-6, இந்தியா கூட்டணி-2, பாரத் ராஷ்டிரிய சமிதி-8ல் வெற்றி பெறும். அசாமில் மொத்தம் உள்ள 14 தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி-12, இந்தியா கூட்டணி-1ல் வெற்றி பெறும்.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 11 தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி-7, இந்தியா கூடணி-4 தொகுதிகளை கைப்பற்றும். ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 14 தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி-13, இந்தியா கூட்டணி ஒரு இடத்திலும் வெற்றிபெறும். அரியானாவில் மொத்தம் உள்ள 10 தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி-8, இந்தியா கூட்டணி 2 இடங்களை கைப்பற்றும்.

    பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 தொகுதிகளையும் இந்தியா கூட்டணியே கைப்பற்றும். டெல்லியில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி-5, இந்தியா கூட்டணி-2ல் வெற்றி பெறும்.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்தம் 5 தொகுதிகளையும் பா.ஜனதா கூட்டணி கைப்பற்றும். காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களில் பா.ஜனதா கூட்டணி-3, இந்தியா கூட்டணி-2ல் வெற்றி பெறும்.

    இமாச்சல பிரதேசத்தில் மொத்தம் உள்ள 4 தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி-3, இந்தியா கூட்டணி ஒரு இடத்திலும் வெற்றிபெறும். மணிப்பூரில் மொத்தம் உள்ள 2 தொகுதிகளையும் இந்தியா கூட்டணி கைப்பற்றும். இதர வடகிழக்கு மாநிலங்களில் 9 தொகுதிகளிலும் பா.ஜனதா கூட்டணி வெற்றி பெறும். கோவாவில் மொத்தம் உள்ள 2 தொகுதிகளையும் பா.ஜனதா கூட்டணி கைப்பற்றும்.

    இவ்வாறு கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×