search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சரவை கூட்டம்"

    • வரும் 23-ந்தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • பிப்ரவரி மாதம் சட்டசபை கூட்டம் கூட உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

    சென்னை:

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் வரும் 23-ந்தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பிப்ரவரி மாதம் சட்டசபை கூட்டம் கூட உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 23-ந்தேதி காலை 11 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

    • 3 மாநிலங்களிலும் 3 புதிய முகங்களை முதலமைச்சர் பதவிக்கு பா.ஜனதா மேலிடம் தேர்வு.
    • டிசம்பர் 15ம் தேதி முதல் 31ம் தேதி வரை பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபைக்கு நடந்த தேர்தலில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் பா.ஜனதா ஆட்சியை பிடித்து சாதனை படைத்தது.

    இந்த 3 மாநிலங்களிலும் 3 புதிய முகங்களை முதலமைச்சர் பதவிக்கு பா.ஜனதா மேலிடம் தேர்வு செய்திருக்கிறது.

    மத்திய பிரதேசத்தில் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்து வரும் பா.ஜனதா இந்த தடவை அதிக இடங்களை கைப்பற்றி இருக்கிறது. அங்கு மோகன் யாதவ் புதிய முதல்-மந்திரியாக பொறுப்பேற்றார்.

    இந்நிலையில், அம்மாநிலத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான முதல் மாநில அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில், இறைச்சி, மீன், முட்டைகளை திறந்த வெளியில் விற்பனை செய்யத் தடை விதிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.

    மேலும், தடை விதிப்பது தொடர்பாக உணவுத் துறை, காவல்துறை மற்றும் உள்ளூர் நகர்ப்புற அமைப்புகளால் டிசம்பர் 15ம் தேதி முதல் 31ம் தேதி வரை பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    • சித்தராமையா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
    • கிருக ஜோதி, கிரக லட்சுமி உள்ளிட்ட 5 திட்டங்களுக்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. சித்தராமையா முதல் மந்திரியாகவும், துணை முதல்வராக மாநில தலைவர் டி.கே.சிவகுமாரும் இன்று பதவி ஏற்றனர்.

    அவர்களைத் தொடர்ந்து மந்திரிகளாக எம்.பி.பாட்டீல், டாக்டர் ஜி.பரமேஷ்வர், கே.எச்.முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், சதீஷ் ஜாரகிஹோலி, மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே, ராமலிங்கரெட்டி, ஜமீர் அகமது ஆகியோர் மந்திரிகளாக பதவி ஏற்றனர்.

    இந்நிலையில், முதல் மந்திரி சித்தராமையா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது, கிருக ஜோதி, கிரக லட்சுமி உள்ளிட்ட 5 திட்டங்களுக்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    இந்த திட்டங்களை செயல்படுத்தினால் ஆண்டுக்கு 50,000 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.

    • திட்டங்களை செயல்படுத்தும் நடைமுறைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
    • கருணாநிதி நூற்றாண்டு விழாவை தமிழகம் முழுவதும் கொண்டாடுவது தொடர்பாக ஆலோசனை

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் அவற்றை செயல்படுத்தும் நடைமுறைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

    மேலும், பெட்ரோனஸ், கேட்டர்பில்லர் உள்ளிட்ட 5 நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை தமிழகம் முழுவதும் கொண்டாடுவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

    குடியரசு தலைவர் வருகை, மதுரை மற்றும் திருவாரூரில் நடைபெற உள்ள விழாக்களுக்கான ஏற்பாடுகளை செய்வது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதலுக்கான கொள்கை முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
    • வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வெளிநாட்டு பயணம் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது.

    சென்னை:

    தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறுகிறது.

    சட்டமன்ற கூட்டத் தொடர் கடந்த 21-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் கிறிஸ்துவர்களாக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கு இட ஒதுக்கீட்டிற்கான பலன் கிடைக்க செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

    அதுமட்டுமின்றி சட்ட மன்றத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் 12 மணி நேர வேலைக்கான சட்டத்திருத்த மசோதா கொண்டு வந்து நிறை வேற்றப்பட்டிருந்தது. இதற்கு தி.மு.க. கூட்டணி கட்சிகள் உள்பட பல தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்போது இந்த சட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் திருமண மண்டபங்கள், ஸ்டேடியங்களில் மது அருந்த அனுமதித்து முதலில் அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன் பிறகு அதில் மாற்றம் கொண்டு வந்து வணிகப் பகுதிகள் அல்லாத இடங்களில் நடைபெறும் கொண்டாட்டங்கள், விழாக்கள், விருந்துகள் போன்றவற்றில் மதுபானம் வைத்திருந்து பரிமாற சிறப்பு உரிமம் வழங்குவதற்கான முறையையும் திருத்தப்பட்ட அறிவிக்கையில் நீக்கம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

    இதற்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதலுக்கான கொள்கை முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இது தவிர தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள் வருவதற்கான ஒப்புதல் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு கொள்கை முடிவுகள் இந்த அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது.

    இதேபோல் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வெளிநாட்டு பயணம் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது. நாளை காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் கொள்கை முடிவுகள் என்னென்ன என்பதை கூட்டம் முடிந்ததும் அதிகார பூர்வமாக அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×