என் மலர்
இந்தியா

உ.பி.யில் ரூ.3,706 கோடி மதிப்பில் செமி கண்டக்டர் தொழிற்சாலை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது
- இந்தக் கூட்டத்தில் இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
புதுடெல்லி:
பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக ஆலோசனை குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், உள்துறை மந்திரி அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:
உத்தர பிரதேசத்தின் ஜீவர் பகுதியில் ரூ.3,706 கோடி செலவில் 6வது செமிகண்டக்டர் தொழிற்சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
இந்த தொழிற்சாலையை எச்.சி.எல்-பிக்ஸ்கான் இணைந்து அமைக்கின்றன. இந்தத் தொழிற்சாலையில் மொபைல் போன், லேப்டாப், ஆட்டோமொபைல் உள்ளிட்ட சாதனங்களுக்கு தேவையான டிஸ்ப்ளே டிரைவர் சிப்கள் தயாரிக்கப்படும். இந்த தொழிற்சாலை 2027 ம் ஆண்டு செயல்பட தொடங்கும். ஆண்டுக்கு 3.6 கோடி சிப்கள் தயாரிக்கப்படும் என தெரிவித்தார்.






