search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிக கட்டணம்"

    • ஆம்னி பஸ்களுக்கென்று மத்திய மற்றும் மாநில அரசின் மோட்டார் வாகன விதிகளின்படி கட்டணம் நிர்ணயம் கிடையாது.
    • ஆம்னி பஸ்கள் கட்டண விவரம் www.aoboa.co.in என்ற இணைய தளத்தில் இடம் பெற்று உள்ளது.

    அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அ.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆம்னி பஸ்களைப் பொறுத்தவரை குளிர்சாதன வசதியில்லா பஸ்கள், குளிர்சாதன வசதி கொண்ட பஸ்கள், பிரீமியம் வகை பஸ்கள் ஆகியவற்றில் இருக்கை, படுக்கை வசதி கொண்டவை என 6 வகையான பஸ்கள் உள்ளன. எனவே, ஒவ்வொரு வழித் தடத்துக்கும் கட்டணம் வேறுவிதமாக இருக்கும்.

    பஸ்களின் தரம் மற்றும் வசதியை பொறுத்து பயணிகளே ஒவ்வொரு வழித்தடத்திலும் விருப்பப் படி பஸ்களை முன்பதிவு செய்கின்றனர். இந்தப் பஸ்களில் வசூலிக்கும் கட்டணம் ஒரு ஆண்டுக்கு சராசரியாக அந்த பஸ்களைப் பராமரிப்பதற்கும் இயக்குவதற்கும் போதுமானதாக இல்லை. எனவே, இந்த தொழிலுக்கு எந்த பெரிய நிறுவனங்களும் வருவதில்லை. இந்தத் தொழிலில் இருப்பவர்கள் மட்டுமே வேறு வழியில்லாமல் செய்து வருகின்றனர்.

    ஆம்னி பஸ்களுக்கென்று மத்திய மற்றும் மாநில அரசின் மோட்டார் வாகன விதிகளின்படி கட்டணம் நிர்ணயம் கிடையாது. இருந்த போதிலும் பயணிகளின் நலன் கருதியும் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படாத வண்ணமும் சங்கங்களே அதிகபட்ச கட்டணத்தை நிர்ணயித்து உள்ளோம். ஆம்னி பஸ்கள் கட்டண விவரம் www.aoboa.co.in என்ற இணைய தளத்தில் இடம் பெற்று உள்ளது. ஆம்னி பஸ்கள் கட்டணம் சம்பந்தமான புகார்களை 90433 79664 என்ற எண்ணில் தெரியப்படுத்தலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரூ.700 கட்டணம் வசூல் செய்வதற்கு பதிலாக ரூ.2000 வரை வசூல்
    • உரிமையாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை

    ஆலங்காயம்:

    ஆயுத பூஜை மற்றும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்கி வரும் சூழலில் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது.

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி டோல்பிளாசா அருகில் போக்குவரத்து துறை ஆணையர் சண்முகசுந்தரம் உத்தரவின் பேரில் வேலூர் துணை ஆணையர் நெல்லையப்பன் மேற்பார்வையில் வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வெங்கட்ராகவன்( வாணியம்பாடி), அமர்நாத் (ஆம்பூர்) ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது பெங்களூரிலிருந்து சென்னை நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற ஆம்னி சொகுசு பஸ்களை நிறுத்தி திடீர் சோதனை நடத்தினர்.

    வழக்கமாக ரூ.700 கட்டணம் வசூல் செய்வதற்கு பதிலாக ரூ.2000 வரை கூடு தலாக அதிக கட்டணம் வசூல் செய்து வந்ததும்,சரக்கு வாகனங்கள் போல் பஸ்சின் மீது பொருட்கள் ஏற்றிச் சென்றது, சுற்றுலா வாகனம் என அனுமதி பெற்று பயணிகளை ஏற்றி பயன்படுத்தி வந்தது என அனுமதிக்கு புறம்பாக இயக்கி வருவது கண்டறியப்பட்டது. 4 ஆம்னி பஸ்களை பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

    மேலும் பஸ்களின் உரிமையாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி அதன் மீதான நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது.

    • ஏழை, எளிய மக்களுக்காக இந்திய ரெயில்வே துறையால் இயக்கப்பட்டு வரும் ரெயிலாகும்.
    • சென்னை செல்ல வேண்டும் என்றால் அதிக கட்டணம் கொடுத்து பஸ்களில் செல்கின்றனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட ரெயில் உபயோகி ப்பாளர்கள் சங்க தலைவர் வக்கீல் நாகராஜன், மாவட்ட செயலாளர் எடையூர் மணிமாறன் ஆகியோர் மத்திய ரெயில்வே மந்திரி, ரெயில்வே வாரிய தலைவர், தென்னக ரெயில்வே பொது மேலாளர், திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.அதில் கூறியிருப்பதாவது:-

    அந்த்யோதயா ரெயிலானது முன்பதிவு இல்லா பெட்டி களுடன் ஏழை, எளிய மக்களுக்காக இந்திய ரெயில்வே துறையால் இயக்கப்பட்டு வரும் ரெயிலாகும்.

    இந்த ரெயில் நாகை, திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் இயக்கப்பட வில்லை என்பது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த குறையாக உள்ளது.

    இதனால் அந்த மக்கள் சென்னை செல்ல வேண்டும் என்றால் அதிக கட்டணம் கொடுத்து பஸ்களில் செல்கின்றனர்.

    எனவே, அப்பகுதி மக்கள் மிக குறைந்த கட்டணத்தில் சென்னை செல்ல ஏதுவாக திருநெல்வேலியில் இருந்து பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர் வழியாக சென்னைக்கு அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தனியார் பஸ் உரிமையாளர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
    • இது குறித்து நாங்கள் இன்று தனியார் பஸ்களில் ஆய்வு செய்கிறோம்.

    ஈரோடு:

    ஈரோட்டில் நேற்று தினம் முதல் பல்வேறு வழித்தடங்களில் இயங்கும் தனியார் பஸ்களில் ரூ.2 முதல் ரூ.7 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. முன்னறிவிப்புமின்றி உயர்த்தப்பட்ட இந்த கட்டண உயர்வால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இது குறித்து தனியார் பஸ் உரிமையாளர்கள் கூறியதாவது:

    தனியார் பஸ்களில் கட்டணம் உயர்த்தவில்லை. சில பஸ்களில் சில்லறை இல்லை என்பதால் ரூ.1, ரூ.2 தராமல் இருந்திருப்பார்கள். நாங்கள் தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்த முடியாது.

    இது அரசின் கொள்கை சார்ந்த முடிவாகும். அரசு அறிவித்தால் மட்டுமே உயர்த்தலாம். தற்போது ரூ.1, ரூ.2, ரூ.5 சில்லரை தட்டுப்பாடாக உள்ளது. சில்லரையை நாங்கள் கமிஷன் கொடுத்து வாங்குகிறோம்.

    டீசல் ஒரு லிட்டர் ரூ.65 இருந்தபோது பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. தற்போது பெட்ரோல், டீசல் விலை உயரவில்லை என்றாலும் இதர செலவுகள் அதிகரித்து ள்ளதால் தனியார் பஸ் உரிமையாளர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

    தனியார் பஸ் உரிமையாளர்கள் பெரும்பாலும் நஷ்டத்தை தான் சந்தித்து வருகின்றனர். தங்களது கை காசுகளை போட்டு பஸ்களை இயக்கி வருகின்றனர் என்றனர்.

    தனியார் பஸ்களில் கட்டணம் உயர்வு குறித்து கேட்டபோது ஈரோடு மேற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி பதுவை நாதன் கூறியதாவது:

    ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் வந்தது. இதைத்தொடர்ந்து தனியார் பஸ்களில் ஆய்வு செய்யப்பட்டது.

    மேலும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் இது குறித்து தெரிவித்து அரசு உத்தரவு இல்லாமல் பஸ் கட்டணம் நிறுத்தக்கூடாது என்று கூறியுள்ளோம். இன்று முதல் பழைய கட்டணம் வசூலிப்பதாக எங்களிடம் கூறியுள்ளனர்.

    இது குறித்து நாங்கள் இன்று தனியார் பஸ்களில் ஆய்வு செய்கிறோம். அப்போது பயணிகளிடம் அதிக கட்டணம் வசூல் செய்வது கண்டறிய ப்பட்டால் அபராதம் விதிப்பதுடன் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிவகுமார், சுரேந்திரகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
    • இயக்கப்பட்ட 3 ஆட்டோக்கள் என 8 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஈரோடு, 

    ஈரோடு மாநகரில் இயக்கப்படும் ஆட்டோக்களில் பயணி–களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன.

    இதையடுத்து ஈரோடு கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கட்ரமணி, மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் பதுவைநாதன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிவகுமார், சுரேந்திரகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையம், பன்னீர்செல்வம் பூங்கா, அரசு மருத்துவமனை சாலை போன்ற இடங்களில் ஆய்வு செய்தனர். அப்போது பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த–தாக 5 ஆட்டோக்கள், உரிமம், தகுதி சான்று, காப்புரிமை சான்று இல்லாமல் இயக்கப்பட்ட 3 ஆட்டோக்கள் என 8 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அதுபோல ஷேர் ஆட்டோக்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி வந்தது, சீருடை இன்றி வாகனத்தை ஓட்டியது போன்ற காரணத்துக்காக, 7 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    மொத்தம் 70 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்ப–ட்டதாக வடடார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சிதம்பரத்தில் அதிக கட்டணம் வசூலித்த 5 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • பயணிகளிடம் அடாவடியாக வசூல் செய்வதை ஆட்டோ டிரைவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    கடலூர்:

    சிதம்பரம் ரெயில் நிலையத்திலிருந்து பஸ்நிலையத்துக்கு பயணிகளிடம் அதிகமான வாடகை வசூல் செய்வதாக புகார் வந்தது. இதனை தொடர்ந்து மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் 5 ஆட்டோ வாகனங்கள் அதிகமாக வசூல் செய்ததற்காகவும், தகுதி சான்று, ஓட்டுனர் உரிமம், காப்புச் சான்று இல்லாமல் வாகனத்தை இயக்கியதற்காகவும் அதனை பறிமுதல் செய்து வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகத்தில் மேல் நடவடிக்கைக்காக நிறுத்தினார். இனிவரும் காலங்களில் கோவில் நகரமான சிதம்பரத்துக்கு வருகை தரும் பயணிகளிடம் அடாவடியாக வசூல் செய்வதை ஆட்டோ டிரைவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் இச்சோதனை தொடர்ந்து நடைபெறும் என்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம் தெரிவித்துள்ளார்.

    ×