search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "highest charge"

    மெட்ரோ நிர்வாகம் சார்பில் ஷெனாய்நகர் திரு.வி.க. நகர் பூங்கா புதுப்பிக்கப்படுகிறது. இந்த பூங்கா பிரமாண்டமாக உருவாகிறது. #Metrotrain

    சென்னை:

    ஷெனாய் நகர் மெட்ரோ ரெயில் நிலையம், திரு.வி.க. நகர் பூங்கா அருகே, பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ளது.

    இங்கு மெட்ரோ ரெயில் நிலையம் அமைக்கும் பணி 8 வருடங்களுக்கு முன்பு தொடங்கியது. இதனால் திரு.வி.க. நகர் பூங்கா உருமாறியது. பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    தற்போது ஷெனாய்நகர் மெட்ரோ ரெயில் நிலையம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    ஷெனாய் நகர் ரெயில் நிலையத்தில் நவீன வசதிகளுடன் கூடிய வணிக வளாகம் 2 அடுக்கு கொண்ட கட்டிடமாக பூமிக்கு அடியில் உருவாகிறது. இது ரூ.175 கோடி செலவில் அமைக்கப்படுகிறது.

    திரு.வி.க. நகர் பூங்காவுக்கு கீழே இந்த வளாகம் 4 லட்சம் சதுர அடி பரப்பளவில் உருவாகிறது. முதல் தளத்தில் கார்கள், வாகனங்களை நிறுத்த வசதி செய்யப்படுகிறது. இதில் 416 கார்களையும், 856 இரு சக்கர வாகனங்களையும் நிறுத்தலாம். அடுத்த தளத்தில் அனைத்து பொருட்களையும் விற்பனை செய்யும் வணிக வளாகம் அமைக்கப்படுகிறது.

    இதைதொடர்ந்து மெட்ரோ நிர்வாகம் சார்பில் ஷெனாய்நகர் திரு.வி.க. நகர் பூங்கா புதுப்பிக்கப்படுகிறது. இந்த பூங்கா பிரமாண்ட மாக உருவாகிறது.

    பல்வேறு பொழுது போக்கு அம்சங்களுடன் இது உருவாகிறது.

    எழில்மிகு நீரூற்றும் அமைக்கப்படுகிறது. கூழாங் கற்களிலான நடைபாதை, குழந்தைகள் விளையாடுவதற்குரிய வசதிகள், டென்னிஸ் கிரவுண்ட், நடை பயிற்சி பாதை ஆகியவை இந்த பூங்காவில் அமைக்கப்படுகின்றன.

    இவை தவிர நிழல் தரும் மரங்கள், மலர் செடிகள் வைக்கப்படுகின்றன. பொது மக்கள் அமர்ந்த ஒய்வு எடுக்கவும், இயற்கை எழிலை ரசிக்கவும் இருக்கைகள் அமைக்கப்படுகின்றன.

    பொழுது போக்கு அம்சங்களும் இந்த பூங்காவில் இடம் பெறுகின்றன. திறந்த வெளி தியேட்டர் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த பூங்கா புதுவடிவம் பெற்றால் ஷெனாய்நகர் பகுதி மக்களுக்கு சிறந்த பொழுது போக்கு பூங்கா வாகவும், குழந்தைகள் மகிழ்வுடன் விளையாடும் இடமாகவும் இருக்கும். #Metrotrain

    இந்தியாவிலேயே சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் நிர்ணயித்துள்ள கட்டணம்தான் அதிகம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. #Chennaimetrotrain
    சென்னை:

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் பல்வேறு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக 45 கிலோ மீட்டர் தூரத்திற்கு திட்டம் நிறைவேற்றப்படுகிறது.

    உயர்மட்டப்பாதை, சுரங்கப்பாதை வழியாக மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. நேரு பூங்கா முதல் சென்னை விமான நிலையம் வரை இயக்கப்பட்ட மெட்ரோ ரெயில் சேவை நேற்று முதல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

    சென்ட்ரல்- நேரு பூங்கா மற்றும் சைதாப்பேட்டை- ஏஜி-டி.எம்.எஸ். இடையே ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்ட்ரலில் இருந்து மீனம்பாக்கம் வரை மெட்ரோ ரெயிலில் நேரடியாக செல்ல முடியும். சென்ட்ரல், எழும்பூர் ஆகிய முக்கிய ரெயில் நிலையம் இணைந்து தற்போது மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியுள்ளது.

    பஸ் நிலையம், ரெயில் நிலையம், மெட்ரோ ரெயில் நிலையம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் இடையே வரவேற்பு பெருகி வருகிறது. மேலும் வெளியூர் செல்லும் பயணிகளுக்கு மிகவும் பயன்உள்ளதாக அமைந்துள்ளது.

    சென்ட்ரல், எழும்பூர், கோயம்பேடு ஆகிய முக்கிய பகுதிகள் தற்போது இணைக்கப்பட்டு ரெயில் சேவை தொடங்கி இருப்பதால் புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் வரை செல்ல ரூ.70 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எழும்பூரில் இருந்து விமான நிலையத்திற்கு ரூ.60-ம், சென்ட்ரல் -கோயம்பேடு ரூ.40, தேனாம்பேட்டை டி.எம்.எஸ்.- விமான நிலையம் ரூ.50, சென்ட்ரல்- எழும்பூர் ரூ.10 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சாதாரண வகுப்புகளுக்கு இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. விசே‌ஷ வகுப்புக்கு இருமடங்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச கட்டணம் ரூ.20 ஆகவும், அதிகபட்சமாக ரூ.140 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    டோக்கன் அல்லது ஸ்மார்ட்கார்டு மூலம் பயணம் செய்ய வழிவகுக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கார்டு பயணிகளுக்கு 10 சதவீத கட்டண சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

    சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் நிர்ணயித்துள்ள கட்டணம்தான் நாட்டிலேயே அதிகம் என்று தெரியவந்துள்ளது. கொல்கத்தா, டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களை விட சென்னை மெட்ரோ ரெயிலில் அதிக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிர்வாகம் கூறுகையில், “இந்த அளவு கட்டணத்தை நிர்ணயிக்கவில்லை என்றால் மெட்ரோ ரெயில் சேவை வழங்குவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படும். ரெயில்களை இயக்குவதற்கு தேவையான செலவுகளை சமாளிக்க கூடிய வகையில் இக்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தை குறைப்பதற்கு வாய்ப்பு இல்லை. எதிர்காலத்தில் மாற்றி அமைப்பதும் கஷ்டமாகும்.

    தினமும் மெட்ரோ ரெயிலில் விமான நிலையத்தில் இருந்து சென்ட்ரல் வருவதாக இருந்தால் ஒரு பயணி மாதம் ரூ.2000 செலவிட வேண்டும். இது நடுத்தர மக்களுக்கு உகந்த கட்டணமல்ல. வசதி படைத்தவர்கள் செல்வதற்குதான் பயன் உள்ளதாக இருக்கும் என்று பயணி ஒருவர் தெரிவித்தார்.

    எனவே மெட்ரோ ரெயில் கட்டணத்தை சற்று குறைத்தால் நடுத்தர மக்களும் அதிகளவு பயன்படுத்துவார்கள் என்பது பெரும்பாலானவர்களின் கருத்தாக உள்ளது.#Chennaimetrotrain
    ×