search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ms dhoni ravi shastri"

    • நீங்கள் போட்டியில் தோற்பது தவறில்லை ஆனால் போராடாமல் தோற்பது அசிங்கமாகும் என்று சரமாரியாக திட்டினார்.
    • நீங்கள் யாராக இருந்தாலும் அடுத்த போட்டியில் இது போன்ற நிலைமையில் வெற்றிக்கு போராடாமல் விளையாடக்கூடாது.

    3 விதமான உலக கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக இருந்தவர் எம்எஸ் டோனி. இவர் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக சாதனை படைத்து ஓய்வு பெற்றார். மேலும் பினிஷர்களில் ஒருவராகவும் போற்றப்படுகிறார். மிகச் சிறந்த பினிஷர் என்று ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களால் போற்றப்படும் அவர் சில தருணங்களில் சொதப்பலாகவும் செயல்பட்டு தோல்விக்கு காரணமாகவும் அமைந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2 - 1 (3) என்ற கணக்கில் வென்ற இந்திய அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் தொடரை 2- 1 (3) என்ற கணக்கில் தோற்றது.

    இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது போட்டியில் 323 ரன்களை துரத்தும் போது டாப் ஆர்டர் சரிந்த நிலையில் களத்தில் நின்ற தோனி 66 பந்துகளில் 133 ரன்கள் தேவைப்பட்ட போது அதிரடி காட்டாமல் 37 (59) ரன்கள் எடுத்து மெதுவாக விளையாடி 47-வது ஓவரில் அவுட்டானது தோல்விக்கு காரணமாக அமைந்தது.

    அதனால் கடுப்பான அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மெதுவாக விளையாடியதற்காக தோனியை மறைமுகமாக திட்டியதாக அப்போதைய பீல்டிங் பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் கூறியுள்ளார்.

    விராட் கோலி, ரவி சாஸ்திரியுடன் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் 
    விராட் கோலி, ரவி சாஸ்திரியுடன் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் 

    இது பற்றி தனது சுயசரிதை புத்தகத்தில் அவர் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு:-

    விராட் கோலி - சுரேஷ் ரெய்னா ஆகியோர் பேட்டிங் செய்யும் வரை நாங்கள் வெற்றியை நோக்கி நடந்தோம். ஆனால் அதன் பின் விக்கெட்டுகளை இழந்த போது களத்தில் நின்ற டோனிக்கு கடைசி 10 ஓவரில் எதிர்ப்புறம் பேட்ஸ்மேன்கள் இல்லாமல் டெயில் எண்டர்கள் மட்டுமே கைகொடுக்க காத்திருந்தனர்.

    அந்த சமயத்தில் 10 ஓவரில் ஓவருக்கு 13 ரன்ரேட் தேவைப்பட்ட போது 5 - 6 ஓவரில் 20 ரன்கள் மட்டுமே எடுத்தோம். அந்த இன்னிங்சில் தான் டோனியும் ஒருநாள் கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் கடந்தார். அதற்காக நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தாலும் அவர் இலக்கை சேசிங் செய்வதற்கு கொஞ்சமும் முயற்சிக்கவில்லை.

    அதனால் ரவி சாஸ்திரி கோபமடைந்தார். ஏனெனில் நாங்கள் கொஞ்சமும் எதிரணிக்கு அச்சுறுத்தலை கொடுக்காமல் தோற்றோம். அதைத்தொடர்ந்து நடைபெற்ற 3-வது போட்டிக்கு முன்பாக நடந்த அணி மீட்டிங்கில் நீங்கள் யாராக இருந்தாலும் அடுத்த போட்டியில் இது போன்ற நிலைமையில் வெற்றிக்கு போராடாமல் விளையாடக்கூடாது.

    அப்படி விளையாடினால் அதுவே எனது தலைமையில் அவர்கள் விளையாடும் கடைசி போட்டியாக இருக்கும். நீங்கள் போட்டியில் தோற்பது தவறில்லை ஆனால் போராடாமல் தோற்பது அசிங்கமாகும் என்று சரமாரியாக திட்டினார். அந்த இடத்தில் டோனியும் இருந்தார்.

    அப்போது ரவி சாஸ்திரியின் வார்த்தைகள் மொத்த அணிக்கானது என்றாலும் அவரை டோனி தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அங்குமிங்கும் பார்க்காமல் நேராக ரவி சாஸ்திரியை பார்த்த அவர் அந்த வார்த்தைகளை ஏற்றுக் கொண்டார். ஏனெனில் அது போன்ற நேரங்களில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற வைப்பது அவரது திறமைகளில் ஒன்றாகும்.

    இவ்வாறு அவரது சுயசரிதை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளது.

    ×