என் மலர்

  நீங்கள் தேடியது "முக ஸ்டாலின்"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தமிழகத்தில் உள்ள மரபு தானியங்களின் தொகுப்பு அடங்கிய பெட்டகத்தை பிரதமருக்கு வழங்கினார்.
  • டெல்லி சென்றிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றிரவு சென்னை வந்தடைந்தார்.

  சென்னை:

  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நள்ளிரவு டெல்லி சென்றார். இன்று காலை 10.30 மணியளவில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரைச் சந்தித்து புதிதாகத் தோவு செய்யப்பட்டதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள திரவுபதி முா்முவை நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

  இதையடுத்து, மாலை 4 மணியளவில் புதுடெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்திற்குச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவுக்கு வந்த பிரதமருக்கு நேரில் நன்றி தெரிவித்தார். அப்போது தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

  நீட் விலக்கு, மேகதாது விவகாரம், புதிய கல்விக்கொள்கை போன்றவற்றில் தமிழக அரசு நலன் சார்ந்த கோரிக்கைகளை பிரதமரிடம் எடுத்துரைத்தார்.

  இந்நிலையில் டெல்லி சென்று ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமரைச் சந்தித்து விட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றிரவு சென்னை திரும்பினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனாதிபதியை சந்தித்து மலர் கொத்து கொடுத்து பொன்னாடை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
  • துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்து முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.

  புதுடெல்லி:

  டெல்லி சென்றுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு இல்லத்தில் இருந்து இன்று காலை 10.30 மணிக்கு புறப்பட்டு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்து புதிதாக பதவி ஏற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்.

  மலர் கொத்து வழங்கி பொன்னாடை அணிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அவருடன் டி.ஆர்.பாலு எம்.பி., தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் உடன் இருந்தனர்.

  இதன் பிறகு ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்க பகல் 11.30 மணியளவில் ஜனாதிபதி மாளிகைக்கு சென்றார்.

  அங்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனாதிபதியை சந்தித்து மலர் கொத்து கொடுத்து பொன்னாடை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்து சுமார் 20 நிமிட நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

  ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகிய இருவரும் பதவி ஏற்ற பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சம்பிரதாயமாக இப்போது தான் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மிகச்சிறப்பாக நடத்தி முடித்ததற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.
  • டெல்லியில் குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.

  புதுடெல்லி:

  சென்னையில் கடந்த ஜூலை 28-ந்தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நடைபெற்றது. செஸ் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைப்பதற்காக சென்னைக்கு வரவேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று சென்னைக்கு வந்த அவர், நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைத்தார்.

  மாமல்லபுரத்தில் நடந்த இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மிகச்சிறப்பாக நடத்தி முடித்ததற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.

  இந்தநிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு 9.05 மணிக்கு சென்னையில் இருந்து பயணிகள் விமானம் மூலம் டெல்லி சென்றார். முன்னதாக தலைமைச்செயலாளர் இறையன்பு நேற்று விமானத்தில் டெல்லி புறப்பட்டார். முதல்-அமைச்சரின் செயலாளர்கள் மற்றும் உதவியாளர்களும் டெல்லி சென்றுள்ளனர்.

  இந்நிலையில் டெல்லியில் இன்று காலை குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். குடியரசு துணைத்தலைவராக புதிதாக பதவியேற்றுள்ள ஜெகதீப் தன்கருக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திமுகவின் கொள்கைக்கும், பாஜவின் கொள்கைக்கும் எந்த தொடர்பும் கிடையாது.
  • திமுகவின் கொள்கைகளை எந்த காலத்திலும் விட்டுத்தர மாட்டோம்.

  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனின் 60-வது பிறந்த நாள் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமாவளவனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.  முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திருமாவளவன் நினைவு பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது:  


  திமுக - விசிக இடையே உள்ளது அரசியல் நட்பு அல்ல, கொள்கை உறவு. கொள்கையில் உறுதியாக இருப்பதால் பெரியாரை எதிர்ப்பவர்கள் திமுகவையும் எதிர்க்கின்றனர். தேர்தல் வரும், போகும், ஆனால் இயக்கங்களும், கொள்கைகளும் இருக்கும்.

  பெரியார், அண்ணா, கருணாநிதி, திராவிட கருத்துகளை நிறைவேற்றத் தான் திமுக ஆட்சியில் உள்ளது. டெல்லிக்கு நான் காவடி தூக்கவா போறேன்? கை கட்டி, வாய் பொத்தி உத்தரவு கேட்கவா போறேன்? கலைஞர் பையன் நான். தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான உறவு, திமுக பாஜகவுக்கு இடையிலான உறவு அல்ல.

  திமுகவின் கொள்கைக்கும், பாஜவின் கொள்கைக்கும் எந்த தொடர்பும் கிடையாது. திமுகவின் கொள்கைகளை எந்த காலத்திலும் விட்டுத்தர மாட்டோம். பாஜகவுடன் குறைந்த பட்ச சமரச திட்டத்தை கூட திமுக செய்து கொள்ளாது. திராவிட மாடல் ஆட்சி என்ற முழக்கம் தொடர்ந்து ஒலிக்கும் என உறுதி அளிக்கிறேன்.

  சகோதரர் திருமா அவர்களுடைய பிறந்தநாளையொட்டி உறுதிமொழியாக, 'சனாதன சக்திகளைத் தனிமைப்படுத்துவோம்! சனநாயக சக்திகளை ஐக்கியப்படுத்துவோம் என்று உருவாக்கி இருக்கிறார்கள்.

  "சனாதன சக்திகளைத் தனிமைப்படுத்துவோம்!" "சனநாயக சக்திகளை ஐக்கியப்படுத்துவோம்!"  என்ற முழக்கத்தை நானும் உங்களோடு சேர்ந்து வழிமொழிகிறேன். "சமத்துவம் உயர்த்துவோம்! சனாதன சங்கத்துவம் வீழ்த்துவோம்!" என்ற முழக்கத்தை உருவாக்கி இருக்கிறார். இதனை நானும் வழிமொழிகிறேன்.

  இதில் சங்கத்துவம் என்ற சொல் புதிய சொல்லாக அமைந்து இருக்கிறது. நாம் உருவாக்க நினைப்பது, 'யாதும் ஊரே யாவரும் கேளிர் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற சங்ககாலத் தமிழகம்! சங்ககாலத் தமிழகத்துக்கு எதிரானதுதான் சனாதன சக்திகளின் சங்கத்துவம்! அதனை நாம் ஒன்றிணைந்து வீழ்த்துவோம்!  இதுதான் அவருடைய அறுபதாவது பிறந்தநாளில் நான் வழங்கக்கூடிய மிகப் பெரிய கொள்கைப் பரிசு!

  இவ்வாறு அவர் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மின்நுகர்வோர் குறை தீர்க்கும் மையத்தில் முதலமைச்சர் ஆய்வு.
  • தீர்வு காணப்பட்டது குறித்து பொது மக்களிடம் உறுதிப்படுத்தவும் வலியுறுத்தல்.

  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மின்நுகர்வோர் குறை தீர்க்கும் மையமான மின்னகத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

  இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 


  தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய துணை மின் நிலையங்களையும், மின் மாற்றிகளின் செயல்பாட்டினையும் தொடங்கி வைத்த நிகழ்ச்சியின்போது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் மையமான மின்னகத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

  இந்த ஆய்வின்போது, மின்னகத்தில் புகார் அளித்தவர்களில் 10 லட்சமாவது நுகர்வோரான சுவாமிநாதனுடன் மின்னகத்தில் இருந்து அலைபேசி மூலம் தொடர்புகொண்ட முதலமைச்சர், மின்னகத்தினால் வழங்கப்பட்ட குறைதீர் சேவை பற்றி கேட்டறிந்தார்

  மேலும், பொதுமக்களின் அழைப்புகளை ஏற்று, குறைகளை கேட்டறிந்து, அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்ய உத்தரவிட்டார். மின்னகத்திற்கு வரும் பொதுமக்களின் அழைப்புகளுக்கு குறுஞ்செய்தி மூலம் ஒப்புகை அளிப்பதோடு, குறைகள் தீர்வு காணப்பட்டவுடன் அதுகுறித்தும் பொதுமக்களிடம் அலைபேசி வாயிலாக உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். என்று மின்துறை அலுவலர்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.

  இந்த ஆய்வின்போது, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, மின்சாரத்துறை அமைச்சர் வி செந்தில்பாலாஜி, எரிசக்தித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ்சந்த் மீனா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • உயர்தொழில்நுட்ப உபகரணங்களை பயன்படுத்தி அனைத்து தர பரிசோதனைகளும், இந்த நவீன ஆய்வுக்கூடத்தில் மேற்கொள்ளப்படும்.
  • நுகர்வோர்களுக்கு தரமான பால் மற்றும் பால் பொருட்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும்.

  சென்னை:

  தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில், பால் மற்றும் பால் பொருட்களின் தரத்தினை உறுதி செய்யும் விதமாக தேசிய பால் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், சென்னை, மாதவரம் பால் பண்ணை வளாகத்தில் 17,422 சதுர அடி பரப்பளவில் அதிநவீன பகுப்பாய்வு கருவிகளுடன் 8 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆவின் மாநில மைய ஆய்வகக் கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் காணொலி வாயிலாக தரபரிசோதனை செய்து திறந்து வைத்தார்.

  இவ்வாய்வகத்தில் உயர்தொழில்நுட்ப உபகரணங்களை பயன்படுத்தி அனைத்து தர பரிசோதனைகளும், இந்த நவீன ஆய்வுக்கூடத்தில் மேற்கொள்ளப்படும். மேலும், மாவட்ட ஒன்றியங்கள் மற்றும் இணையங்களில் இருந்து பால் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பால் மற்றும் பால் பொருட்களின் தரத்தை ஒழுங்கு முறை ஆணையங்களின் விதிகளுக்குள் இருப்பதை உறுதி செய்வதற்கான தர பரிசோதனைகள் இந்த ஆய்வகத்தின் மூலமாக மேற்கொள்ளப்படும். இதன்மூலம், நுகர்வோர்களுக்கு தரமான பால் மற்றும் பால் பொருட்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும்.

  மேலும், சேலம், கோயம்புத்தூர், கன்னியாகுமரி, தேனி, ஈரோடு, திருவண்ணாமலை, மதுரை, விழுப்புரம், திருச்சி ஆகிய மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்கள் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான 50 பணியாளர்களின் வாரிசுதார்களுக்கு, இளநிலை செயல்பணியாளர் (அலுவலகம்), இலகுரக வாகன ஓட்டுநர், தொழில்நுட்பர் மற்றும் முதுநிலை தொழிற்சாலை உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

  10 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

  நிகழ்ச்சியில், பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • பிரதமர் மோடிக்கும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் இடையே இப்போது அரசாங்க பணிகளில் இணக்கமான சூழல் உருவாகி வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
  • பிரதமரின் பாராட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து பதில் கூறி இருந்தார்.

  சென்னை:

  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு டெல்லி செல்கிறார். ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் மோடி ஆகியோரை நாளை சந்தித்து பேசுகிறார்.

  சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த மாதம் 28-ந்தேதி முதல் இந்த மாதம் 10-ந்தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியை மிகச் சிறப்பாக நடத்தி முடித்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்திருந்தார்.

  இதைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் இடையே இப்போது அரசாங்க பணிகளில் இணக்கமான சூழல் உருவாகி வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  பிரதமரின் பாராட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து பதில் கூறி இருந்தார்.

  இந்த சூழலில் இன்று இரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கும் அவர் நாளை காலை 11 மணிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார். 11.30 மணிக்கு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரை சந்திக்கிறார். அதன் பிறகு நாளை மாலை 4.30 மணிக்கு பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.

  செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்பித்ததற்கு நன்றி தெரிவிப்பதுடன், தமிழக நலன் சார்ந்த திட்டங்களுக்கு அனுமதி அளித்து கூடுதல் நிதி ஒதுக்குமாறு விரிவான மனு கொடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்த உள்ளார்.

  அப்போது தமிழகத்திற்கு தர வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வார்.

  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி செல்வதையொட்டி இன்றே அதிகாரிகள் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளார்.
  • மசோதாக்கள் மீது விரைந்து முடிவெடுக்க அறிவுறுத்த வேண்டுமென பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்த உள்ளார்.

  சென்னை:

  மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த மாதம் 28-ம் தேதி முதல் இம்மாதம் 10-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியை மிகச்சிறப்பாக நடத்தி முடித்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்திருந்தார்.

  இதற்கு நன்றி தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருந்தோம்பலும், சுயமரியாதையும் தமிழர்களின் பிரிக்க முடியாத இரண்டு பண்புகள் ஆகும். தொடர்ச்சியாக உங்களது ஆதரவையும் இது போன்ற இன்னும் பல உலக அளவிலான போட்டிகளை நடத்தும் வாய்ப்புகளை தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

  இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு டெல்லி செல்கிறார். பிரதமர் மோடியை நாளை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளார்.

  தமிழகத்திற்கு தர வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பல சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி இன்னும் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளார். அந்த மசோதாக்கள் மீது விரைந்து முடிவெடுக்க அறிவுறுத்த வேண்டும் என்றும் பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்த உள்ளார்.

  மேலும், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ஆகியோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ளவில்லை.
  • ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் பங்கேற்பு.

  சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் இன்று மாலை ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசியல் தலைவர்களுக்கு தேநீர் விருந்து அளித்தார்.

  இதில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். மேலும், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் பொன்முடி, கே.என். நேரு, தங்கம் தென்னரசு, பழனிவேல் தியாகராஜன், மா.சுப்பிரமணியன், செந்தில் பாலாஜி, மெய்யநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  ஆளுநர் தேநீர் விருந்தில் அதிமுக சார்பில் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்ளவில்லை. ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களான வைத்தியநாதன், மனோஜ் பாண்டியன் ஆகியோருடன் பங்கேற்றார்.

  காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி. த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். மேலும் திமுக வின் தோழமை கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் நிகழ்ச்சியில் பங்கற்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காந்தி சிலையை திறந்து வைத்தார்.
  • அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ. வேலு, சேகர்பாபு, தங்கம் தென்னரசு, மு.பெ.சாமிநாதன், அரசு செயலாளர் மகேசன் காசிராஜன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

  சென்னை:

  தமிழக அரசின் சார்பில் 75-வது சுதந்திர தின விழாவையொட்டி எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் காந்தியடிகளின் முழு உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது.

  இந்த சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காந்தி சிலையை திறந்து வைத்தார்.

  நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ. வேலு, சேகர்பாபு, தங்கம் தென்னரசு, மு.பெ.சாமிநாதன், அரசு செயலாளர் மகேசன் காசிராஜன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கட்டபொம்மனின் மொத்தப் படைக்கும் தளபதியாக இருந்தவர் மாவீரன் சுந்தரலிங்கம். அவனது மாமன் மகள் வடிவு, தற்கொலைப் படைத்தாக்குதலை நடத்தியவள்.
  • பிரிட்டிஷ் ஆட்சியின் வசம் இருந்த சிவகங்கையை எட்டு ஆண்டு போருக்குப் பின்னால் மீட்டு மீண்டும் ராணியாக அமர்ந்தவர் வேலு நாச்சியார்.

  சென்னை:

  சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

  மாபெரும் கோட்டையின் கொத்தளத்தில் மூவண்ணக் கொடியை ஏற்றும்போது தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக நான் அடையும் மகிழ்ச்சி ஒருபக்கம் இருந்தாலும்-தமிழன் என்ற அடிப்படையில் அடையும் உணர்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை.

  இந்த இந்தியத் துணைக் கண்டத்திலேயே விடுதலைக்காக முதலில் குரல் கொடுத்தது தமிழ்நாடுதான்.

  * 1600-ம் ஆண்டு கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் காலூன்றியது என்றால் 'ஒரு நெல் மணியைக் கூட உனக்கு கப்பம் கட்ட முடியாது' என்று 1755-ம் ஆண்டு சொன்னவன் நெல்கட்டாஞ்செவல் பூலித்தேவன்.

  * மண்டியிடாத மானப் போர் புரிந்த மாவீரன் கான்சாகிப் மருதநாயகம் கொல்லப்பட்ட ஆண்டு 1764.

  * 'தானம் கேள் தருகிறேன், வரி என்று கேட்டால் தரமாட்டேன்' என்று சொன்ன மாவீரன்தான் கட்டபொம்மன். அவர் தூக்கிலிடப்பட்ட ஆண்டு 1799.

  * கட்டபொம்மனின் மொத்தப் படைக்கும் தளபதியாக இருந்தவர் மாவீரன் சுந்தரலிங்கம். அவனது மாமன் மகள் வடிவு, தற்கொலைப் படைத்தாக்குதலை நடத்தியவள்.

  * பிரிட்டிஷ் ஆட்சியின் வசம் இருந்த சிவகங்கையை எட்டு ஆண்டு போருக்குப் பின்னால் மீட்டு மீண்டும் ராணியாக அமர்ந்தவர் வேலு நாச்சியார்.

  * தனது உடையில் நெருப்பை வைத்துக் கொண்டு பிரிட்டிஷ் ஆயுதக் கிடங்கில் தாக்குதல் நடத்தியவள் குயிலி.

  * சின்னமருதுவும், பெரிய மருதுவும் பீரங்கிகளுக்கு முன்பு வளரியால் வாகை சூடியவர்கள். இன்றும் வரலாற்றில் பெரும் மலையாக வாழ்பவர் தீரன் சின்னமலை. அந்த மாவீரன் தூக்கு மேடைக்கு சென்ற ஆண்டு 1805!

  அவரது போர்ப்படையிலும் ஒற்றர்படையிலும் செயல்பட்ட தளபதி பொல்லான் ஆங்கிலேயர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

  நான் சொன்னவை அனைத்தும் 1857-ம் ஆண்டுக்கு முன்பே நடந்தவை.

  1857 சிப்பாய் புரட்சியைத் தான் முதலாவது இந்திய விடுதலைப் போர் என்று சிலர் சொல்கிறார்கள். அதற்கு முன்னால் தெற்கில், அதுவும் தமிழ்நாட்டில் நடந்தவைதான் இவை.

  இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo