என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    முன்னாள் முதலமைச்சர் ஓமந்தூராருக்குத் திருவுருவச் சிலை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
    X

    முன்னாள் முதலமைச்சர் ஓமந்தூராருக்குத் திருவுருவச் சிலை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

    • இந்தியா விடுதலையடைந்தபோது நம் மாநில முதலமைச்சராக இருந்த பெருமைக்குரியவருமான ஓமந்தூர் ராமசாமி ஐயா அவர்களின் பிறந்தநாள்.
    • சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்வி வளாகத்தில் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    எளிமையின் உருவம் - விடுதலைப் போராட்ட வீரர் - முன்னாள் முதலமைச்சர் ஓமந்தூராருக்குத் திருவுருவச் சிலை

    உப்புச் சத்தியாகிரகம், சட்டமறுப்பு இயக்கம், தனிநபர் சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு என இந்திய விடுதலைப் போராட்டத்தில் முழுமூச்சாக ஈடுபட்ட தலைசிறந்த காந்தியவாதியும், இந்தியா விடுதலையடைந்தபோது நம் மாநில முதலமைச்சராக இருந்த பெருமைக்குரியவருமான ஓமந்தூர் ராமசாமி ஐயா அவர்களின் பிறந்தநாள்.

    சமூகநீதிச் சாதனையாளராகத் தந்தை பெரியாராலும் பேரறிஞர் அண்ணாவாலும் போற்றப்பட்ட அவருக்குச் சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்வி வளாகத்தில் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன் என கூறியுள்ளார்.

    Next Story
    ×