என் மலர்

  நீங்கள் தேடியது "சேர்க்கை"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அரசு இசைப்பள்ளியில் நடப்பாண்டில் 2 மாணவர்கள் மட்டுமே சேர்க்கை நடைபெறுகிறது.
  • கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் மாணவ, மாணவியா் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து தற்போது 2 போ் என்ற அளவில் இருப்பது இசை ஆா்வலா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  ராமநாதபுரம்

  தமிழகத்தில் கடந்த 2000ம் ஆண்டில் தி.மு.க, ஆட்சியின் போது ராமநாதபுரம் உள்பட 17 மாவட்டங்களில் தமிழ் வளா்ச்சிப் பண்பாட்டு மற்றும் இந்து சமய அறநிலை யத்துறை சாா்பில் அரசு இசைப் பள்ளி தொடங்கப் பட்டது. அந்த பள்ளிகளில் 3 ஆண்டுகளுக்கான சான்றிதழ் படிப்பு அறிமு கப்படுத்தப்பட்டுள்ளது.

  அதில் 12 முதல் 25 வயது வரையில் உள்ள இருபாலரும் சோ்க்கப்பட்டு வருகின்றனா்.ராமநாதபுரம் மாவட்ட அரசு இசைப் பள்ளி அரண்மனை பகுதியில் மாதம் ரூ.11 ஆயிரம் வாடகைக் கட்டி டத்தில் செயல்பட்டு வருகிறது.

  இங்கு குரலிசை, பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில், தேவாரம், மிருதங்கம், வயலின் ஆகியவை கற்பிக்கப் படுகிறது. ஆண்டுக் கட்டண மாக மாணவா்களிடம் ரூ.350 பெறப்படுகிறது. மாதந்தோறும் அரசு உதவி யாக ரூ.400 மாணவா்களுக்கு வழங்கப்படுகிறது.

  பள்ளியில் தலைமை ஆசிரியா் மற்றும் தவில், வயலின் தவிர அனைத்து பிரிவுகளுக்கும் என 5 ஆசிரியா்கள் உள்ளனா். ஒவ்வொரு பிரிவிலும் ஆண்டுக்கு 20 போ் என மொத்தம் 140 போ் வரை சோ்க்கலாம் என கூறப்படுகிறது.

  கடந்த 2011 ம் ஆண்டில் மட்டும் இசைப் பள்ளியில் 112 போ் சோ்ந்துள்ளனா். அதற்குப் பிறகு மாணவ, மாணவியா் சோ்க்கை படிப்படியாகக் குறைந்தது.

  ராமநாதபுரத்தில் உள்ள அரசு இசைப் பள்ளியில் கடந்த 2018-ம் ஆண்டில் 38 பேரும், 2019-ம் ஆண்டில் 12 பேரும், 2020-ம் ஆண்டில் 6 பேரும், கடந்த 2021 ம் ஆண்டில் 16 பேரும் சோ்ந்து உள்ளனா். நடப்பு ஆண்டில் ஜூன் மாதம் 2 போ் மட்டுமே சோ்ந்துள்ளனா். கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் மாணவ, மாணவியா் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து தற்போது 2 போ் என்ற அளவில் இருப்பது இசை ஆா்வலா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பார்வைதிறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிக்கான உதவி உபகரணங்கள், கல்வி உதவித்தொகை, வாசிப்பாளர் உதவித்தொகை ஆகியவை வழங்கப்படுகிறது.
  • 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு கணினி அறிவியல் பாடப்பிரிவுகள் சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுநர்களை கொண்டு பயிற்றுவிக்கப்படுகிறது.

  தஞ்சாவூர்: 

  தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவதுதமிழ்நாடு அரசின் மாற்று திறனாளிக்கான நலத்துறையின் கீழ் இருபாலருக்குமான விடுதியுடன் கூடிய பார்வை திறன் குறையுடையோருக்கான சிறப்பு பள்ளி தஞ்சாவூர் மேம்பாலம் அருகில் இயங்கி வருகிறது.

  இந்த பள்ளியில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை இலவச கல்வி அளிக்கப்படுகிறது. இந்த சிறப்புப் பள்ளியில் சேரும் பார்வைத்திறன் குறைபாடு உடைய மாணவ- மாணவிகளுக்கு ஆண்கள், பெண்கள் என தனித்தனி இலவச விடுதி வசதி, சத்தான உணவு, 4 செட் விலையில்லா சீருடை, விலையில்லா பிரெய்லி பாடப்புத்தகங்கள் ஆகியவை வழங்கப்படுகின்றன.

  மேலும் பார்வைதிறன் குறைபாடு உடைய மாற்று த்திறனாளிக்கான உதவி உபகரணங்கள், கல்வி உதவித்தொகை, வாசிப்பாளர் உதவித் தொகை ஆகியவை வழங்கப்படுகிறது.இப்பள்ளியில் நடைப்பயிற்சி, விளையாட்டு போட்டிகள், பேச்சுப் போட்டிகள், நடனம், யோகா, சிலம்பம் போன்ற கலைகள் கற்பிக்கப்படுகின்றன. மாத ந்தோறும் மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு கணினி அறிவியல் பாடப் பிரிவுகள் சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுநர்களை கொண்டு கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. சமச்சீர் கல்வி பாடத்திட்டம் பிரெய்லி முறையில் கற்பிக்கப்படுகிறது. மேலும் இலவசக் கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுகிறது.

  எனவே தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பார்வை குறைபாடு உடைய மாணவ- மாணவிகளை தஞ்சாவூர் அரசு பார்வைத் திறன் குறையுடையோருக்கான சிறப்பு பள்ளியில் சேர்க்கை பெற சிறப்பு முகாம் நாளை (வியாழக்கிழமை) தஞ்சாவூர் மேம்பாலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பை பார்வைத்திறன் குறைபாடு உடைய மாணவ -மாணவிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வேலைவாய்ப்பை பெற்றுதரும் பி.எஸ்.ஆர். என்ஜினீயரிங் கல்லூரி அனைத்து மாணவ-மாணவிகளுக்கு கல்வி ஆண்டுக்கான சேர்க்கை நடக்கிறது.
  • இங்கு பயிலும் மாணவ-மாணவிகள் ஒவ்வொ ரு வருடமும் மாநில மற்றும் மாவட்ட அளவில் கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்குகின்றனர்.

  தாயில்பட்டி

  விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இயற்கை எழிலுடன் பி.எஸ்.ஆர். என்ஜினீயரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவ-மாணவிகள் சிறந்த கல்வியை பெற்று தங்களது வாழ்வை மேம்படுத்தி க்கொள்ள பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

  இங்கு பயிலும் மாணவ-மாணவிகள் ஒவ்வொ ரு வருடமும் மாநில மற்றும் மாவட்ட அளவில் கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்குகின்றனர்.

  நாக் "ஏ" கிரேடு பெற்றுள்ள இந்த கல்லூ ரியில் என்ஜி னீயரிங் படிப்பு களான சி.எஸ்.இ., இ.சி.இ., இ.இ.இ., மெக்கானிக்கல், சிவில், பயோமெடிக்கல் போன்றவையும் உயர் படிப்புகளான எம்.இ., சி.எஸ்.இ., எலக்ட்ரா னிக்ஸ், ஸ்டெக்சரல் என்ஜினீயரிங், பவர் எலக்ட்ரானிக்ஸ் அண்டு டிரைவ்ஸ், என்ஜினீயரிங் டிசைன் மற்றும் பி.எச்.டி. பாடப்பிரிவுகளும் செயல்பட்டு வருகி ன்றன.பி.டெக்கில் பயோடெக், ஆர்ட்டி பிசியல், இண்ட லிஜண்ட் மற்றும் டேட்டா சயின்ஸ், எம்.பி.ஏ. போன் பாட பிரிவுகள் உள்ளன.

  பி.எஸ்.ஆர். என்ஜினீயரிங் கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் பட்டப்படிப்பை முடித்து வெளியேவரும் மாணவ-மாணவிகளுக்கு நிர்வாகத்தின் ஏற்பாட்டில் கேம்பஸ் இண்டர்வியூ நடத்தப்பட்டு பன்னாட்டு மற்றும் பிரபல நிறுவனங்கள் வேலைவாய்ப்புகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.அதன்படி இந்த ஆண்டு நடந்த கேம்பஸ் இண்டர்வியூவில் பி.சி.எஸ்., சி.டி.எஸ்., இன்போசிஸ், விப்ரோ, ஜோஹோ போன்ற நிறுவனங்களில் 1263 மாணவ-மாணவிகள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இதன் மூலம் தேர்வானவர்களுக்கு ரூ.3 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.8 லட்சம் வரை ஊதியம் பெறுவார்கள். இதற்கான பணி நியமன ஆணையை மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.

  இந்த ஆண்டு (2022-2023) என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. பிளஸ்-2 மாணவர்கள் ஆன்லைனில் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அதன்படி 10-ம் மற்றும் பிளஸ்-2 சான்றிதழ், நிதந்தர சாதி சான்றிதழ், ஆதார் கார்டு, இமெயில்., பதிவு கட்டணம் செலுத்த ஏ.டி.எம்., கிரிடிட் கார்டுகள் கொண்டுவர வேண்டும். மேலும் முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுவதற்கான ஆலோசனையும் வழங்கப்படும்.அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கல்வி கட்டணத்தில் சலுகையும் வழங்கப்படுகிறது.

  உடனடி சேர்க்கை்காக சிவகாசி, கோவில்பட்டி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, சாத்தூர், விளாத்திகுளம், கயத்தாறு, நெல்லை, தூத்துக்குடி, சங்கரன்கோவில், கடயநல்லூர் ஆகிய ஊர்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இதுதொடர்பான விவரங்க ளுக்கு 80125 31336, 78670 47070, 98946 04930 மற்றும் 80125 31321, 04562-239600 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

  இதேபோல் பி.எஸ்.ஆர்.ஆர். என்ஜினீயரிங் கல்லூரி, பி.எஸ்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பி.எஸ்.ஆர். பாலிடெக்னிக் கல்லூரி, பி.எஸ்.ஆர். கல்வியியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சிவகங்கையில் சிறுபான்மையினர் விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.
  • வருகிற 31-ந் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

  சிவகங்கை

  சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

  சிவகங்கை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் 21 பள்ளி மாணவர்கள் விடுதிகளும், 14 பள்ளி மாணவியர்கள் விடுதிகளும், 5 கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, தொழிற் பயிற்சி கல்லூரி மாணவர்கள் விடுதிகளும், 5 தொழிற் பயிற்சி கல்லூரி மாணவியர்கள் விடுதிகளும் செயல்பட்டு வருகிறது.

  பள்ளி விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலுகின்ற மாணவ, மாணவியர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி, தொழிற் பயிற்சி கல்லூரி மாணவர்கள் விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, தொழிற்பயிற்சி மாணவ, மாணவியர்கள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படு த்தப்பட்டோர், சீர்மரபினர், சிறுபான்மையினர் விடுதிகளில் அனைத்து வகுப்பை சேர்ந்த மாணவ, மாணவியர்களும் விகிதாசாரா அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

  விடுதிகளில் சேர பெற்றோர் அல்லது பாதுகாவலாரின் ஆண்டு வருமானம் ரூ.2லட்சத்துக்கு மிகாமலும், இருப்பிடத்திலிருந்து கல்வி நிலையம் குறைந்தபட்சம் 8 கி.மீட்டர் தொலைவிற்கு மேலும் இருக்க வேண்டும். இந்த தொலைவு விதி மாணவிகளுக்கு பொருந்தாது.

  விடுதிகளில் சேருவதற்கான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதிக்காப்பா ளாரிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்தும், மாவட்ட பிற்படுத்த ப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலகத்திலோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பள்ளி மாணவர்கள் வருகிற 30-ந் தேதிக்குள்ளும், கல்லூரி மாணவர்கள் வருகிற 31-ந் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும்.

  விடுதிகளில் முகாம்வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கு தனியாக 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்படும் நிலையில் எக்காலத்திலும் நிபந்தனை இல்லாமல் படிப்பு முடியும் வரை விடுதியில் தங்கிப்பயில அனுமதிக்கப்படுவார்கள் .

  விடுதி மாணாக்கர்களுக்கு உணவும், தங்கும் வசதியும் வழங்கப்படும். 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சீருடைகளும், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டி நூல்களும், மலைப்பிரதேசத்தில் இயங்கும் விடுதிகளில் தங்கிப்பயிலும் மாணவ ர்களுக்கு கம்பளி, மேலாடையும் வழங்கப்படும்.

  எனவே, மாணவ, மாணவிகள் அரசின் சலுகைகளை பயன்படுத்திக் கொண்டு கல்வி பயில வேண்டும்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • குளித்தலை அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகள் சேர்க்கை நடைபெறுகிறது.
  • 14 இளநிலை பாடப்பிரிவுகள் உள்ளன

  கரூர்:

  குளித்தலை அருகே அய்யர்மலையில் உள்ள குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பி.காம், பி.பி.ஏ., பி.காம் (கணினி பயன்பாட்டியல்), பி.எஸ்சி. கணிதம், இயற்பியல், வேதியியல், மின்னணுவியல், கணினி அறிவியல், தாவரவியல், விலங்கியல், உணவு மற்றும் ஊட்டச்சத்துவியல், பி.சி.ஏ. ஆகிய 14 இளநிலை பாடப்பிரிவுகள் உள்ளன.

  இந்த பாடப்பிரிவுகளில் 2022- 2023-ம் கல்வி ஆண்டில் 625 இடங்களுக்கான மாணவ-மாணவிகள் சேர்க்கை நடைபெற உள்ளது. முதலாம் ஆண்டில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவ-மாணவிகள் www.tngasa.org மற்றும் www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக இன்று (புதன்கிழமை) காலை 10 மணி முதல் ஜூலை மாதம் 7-ந் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

  விண்ணப்ப கட்டணம் ரூ.48, பதிவு கட்டணம் ரூ.2. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. பதிவு கட்டணம் ரூ.2 மட்டும் செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணத்தை இணைய வழியாக செலுத்தலாம். மாணவ-மாணவிகள் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணை ஆகியவற்றை மேற்குறிப்பிட்ட இணையதளங்கள் வாயிலாகவும், கூடுதல் விவரங்கள் தேவையெனில் கல்லூரி அலுவலகத்தை அணுகலாம் என்று கல்லூரி முதல்வர் முனைவர் ரவிச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தாளவாடி, அந்தியூர் அரசு கலை கல்லூரியில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பின்னலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  அந்தியூர்:

  ஈரோடு மாவட்டம் தாளவாடி மற்றும் அந்தியூர் பகுதியில் கலை கல்லூரி அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

  இதையடுத்து மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அந்தியூர் ஏ.ஜி. வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. சட்டமன்ற கூட்டத்தொடரில் அந்தியூர் பகுதிக்கு அரசு கலை அறிவியல் கல்லூரி அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனை அடுத்து இந்த கல்வி ஆண்டில்கல்லூரி தொடங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து அந்தியூரில் அரசு கல்லூரி தொடங்கப்பட்டது.

  இதையடுத்து 2022-2023-ம் ஆண்டுக்கான சேர்க்கை இன்று தொடங்கியது. பி.ஏ. தமிழ் பி.ஏ. ஆங்கிலம். பி.எஸ்.சி.கணிதம். பி.எஸ்.சி. கணினி அறிவியல், .பி.காம். இந்த பாடப்பிரிவுகளில் ஒவ்வொரு பாடப் பிரிவிலும் 60 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளார்கள்.

  இதற்கான வகுப்பறைகள் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் செயல்பட உள்ளது.

  இதே போல் தாளவாடி பகுதியில் அரசு கலை கல்லூரி தொடங்கப்பட்டது. கல்லூரியில் 2022-23-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை இனறு தொடங்கி நடந்து வருகிறது. விருப்பமுள்ள மாணவர்கள் கல்லூரியில் சேருவதற்கு விண்ணப்பின்னலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  ×